Thursday, September 24, 2009

சென்னையில் வீதி உலா

சென்ற வாரம் தொடர்சியாக 4 நாட்கள் விடுமுறை.

கூர்க் மைசூர் தசரா என ஏகப்பட்ட திட்டம் போட்டும் மிக பெரிய தோல்வி..:(

சென்னை பக்கம் விடுமுறைக்கு ஒதுங்கலாம், நண்பர்களை பார்த்து விட்டு வரலாம் என்று சிறு திட்டம்.

பெங்களூரில் இருந்து உலகத்தின் எந்த இடத்துக்கும் weekendல் டிக்கேட் கிடைத்து விடும், ஆனால் சென்னை செல்வது மட்டும் சான்ஸே இல்லை. பகல் இரவு பஸ்ஸோ டிரையினோ எங்கும் மக்கள் வெள்ளம் தான். எப்படியோ பகல் நேர பேருந்தில் இடம் பிடித்து சென்னைக்கு தொடங்கியது.

எனக்கு பகல் நேர பயணம் ரொம்ப பிடிக்கும். அதுவும் ஜன்னலோர சீட் என்றால் கேட்க்கவே வேண்டாம்.

சாலைகளின் ஆங்காங்கே தென்படும் சாதாரண மனிதர்களும் பெயரை படிப்பதற்க்குள் மறைந்து போகும் பெயர் பலகைகளும் எப்போதும் சுவாரசியமானவை.

எங்கோ திடீரென்று சாலையில் ஒதுங்கி இருக்கும் மோட்டல்களும் அதன் மனிதர்களையும் பகல் நேரத்தில் பார்க்க வெகு ஆச்சர்யமாக இருக்கும்..

Bangalore electronic cityயை தாண்டியவுடன் சாலைகளில் தென்படும் தமிழ் எழுத்துகள் மனதுக்குள் சிறிய புன் சிரிப்பை விட்டு செல்லும்.

- * -

நான் சென்னையில் வசித்தது நிரந்தரமாக வசிக்க நினைத்து இருந்தது சில மாதங்கள் மட்டுமே..

அடிக்கடி சொந்த வேலையாக வரும் போது ஒவ்வோரு முறையும் சென்னை நகரம் ஏதேனும் பாடங்களை கத்து கொடுத்து கொண்டே இருக்கிறது.

என்னுடன் பெங்களூரில் வசித்த முக்கால்வாசி நண்பர்கள் என்றோ சென்னையை நோக்கி சென்று விட்டார்கள். அவர்களுக்கு சென்னையில் பிடித்த பல விசயங்கள் எனக்கோ பிரச்சனைகளாக தெரிகிறது..


சென்னை நகரம் மாறி கொண்டே வருகிறது, எல்லைகளை விரித்து கொண்டே செல்கிறது... காஞ்சிபுரம் பைபாஸ் தாண்டியவுடன் புத்தம் புதுசாக ஏகப்பட்ட மருத்துவ கல்லூரிகள் முளைத்து இருக்கிறது. . பெயர் தெரியாத பன்னாட்டு நிறுவனங்கள், இன்னும் சில மாதங்களில் காஞ்சிபுரம் வரை சென்னையின் எல்லை என யாரேனும் சொன்னாலும் சொல்வார்கள்.

என் நண்பன் மிகவும் மும்முரமாக மேல் மருவத்தூரில் வீடு கட்ட இடம் தேடி கொண்டு இருக்கிறான். அங்கேயும் 20 லட்சத்திற்க்கு குறைந்து இடம் இல்லையாம்..

திருமுல்லைவாயில் ஆவடி பக்கம் எல்லாம் சில ஆண்டுகள் முன்னர் வரை பாசனம் செய்து வந்த இடங்கள். இன்றையை நிலை சொல்லவே வேண்டாம்..

சென்னை நடுத்தரவாசிகள் நகரம் என யார் சொன்னது?

- * -

பெங்களூரில் தினமும் 3 கிலோ மீட்டர் ஜாகிங் செல்லும் போது எட்டி பார்க்கும் வியர்வை துளிகள் சென்னையில் இரவு எட்டு மணிக்கு எந்த வித உடல்உழைப்பும் இல்லாமல் எட்டி பார்க்கிறது. இரவில் அட்டகாசமாக வெப்ப காற்று வேறு. பகலில் சொல்லவே தேவை இல்லை..சாலையில் ஏஸி போடாமல் எந்த காரும் செல்வதில்லை. பரவலாக அனைத்து நடுத்தர வர்க வீடுகளிலும் ஏஸி இருக்கிறது. சாதாரண ஷாப்பிங் கடைகளிலும் ஏஸி.. என் நண்பனின் கடையில் தினமும் குறைந்தது 50 ஏஸி சாதனங்கள் விற்பனையாகின்றன. சென்னை கூடிய விரைவில் துபாயை மிஞ்சி விடும்.

-*-
வழக்கம் போல ஆட்டோகாரர்கள் ஏமாற்றினார்கள், பர்ஸை ஜீன்ஸின் புறபாக்கேட்டில் ஒளித்து வைத்து ரங்கநாதன் தெருவில் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த முறை சரவணா ஸ்டோர்ஸை விட போத்திஸில் கூட்டம் அதிகமாக தென்பட்டது. வழக்கம் போலவே சென்னை தி நகர் கடைவாசிகள் கஸ்டமர் சர்வீஸ் கண்டு மனசுக்குள் திட்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

இந்த நவராத்திரியிலும் மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் கொலு வைத்து சுண்டல் கொடுக்கிறார்கள்.

சில புதியவைகள் கண்ணில் பட்டன. தி நகர் பக்கம் சுத்தமாக தமிழ் தெரியாமல் பீகார் வாசிகள் சின்ன சின்ன உணவகங்கள் நடத்துகிறார்கள். மக்களும் அரைகுறை இந்தியில் சளைக்காமல் பேசி சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள். நிறைய UP MP MH DL வண்டிகள் கண்ணில் பட்டது.

திருவான்மியூர் பக்கம் சாதாரண ஷேர் ஆட்டோகாரர் கூட இந்தியில் பேசி கஸ்டமர் பிடிக்கிறார்.

ஆனால் ஒரிஜனல் சென்னைவாசிகளுக்கோ இதனால் பல பிரச்சனைகள்..இந்திகாரர்கள் பேரம் பேசாமல் வீடு வாடகைக்கு பிடிக்கிறார்கள்.. இதனால் விலை வாசி ஏறி போச்சு என்ற கூப்பாடு வேறு...

சில அபார்மெண்ட்களில் சிண்டிகேட் வைத்து வீடு வாடகையை control செய்கிறார்கள் என்று என் நண்பன் சொன்னான். புரோக்கர் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்கிறது.. வீட்டு வாட்ச் மேன் கள் முதல் தெரு குட்டி தாதா வரை எல்லாரும் புரோக்கர் ஆகி விட்டார்கள். சென்னையில் இனி தனியாளக வீடு தேடி பிடிப்பது முடியாத காரியம் ..

-*-

சென்னையில் எதற்க்கும் ஒரு விலை இருக்கிறது போலும். ரொம்ப சாதரணமாக ‘ யாராக இருந்தாலும் பார்த்துகலாம்’ என்ற டயலாக் காதில் விழுந்தது. பேச்சு அதுவும் அதிகாரமாக அதட்டி பேச தெரிந்தால் மட்டுமே வாழ முடியும் போல. சாதாரண சிம் காட்டு வாங்க கூட சிபாரிசு கூட்டி வருகிறார்கள். சாலையில் சின்ன சின்ன போக்குவரத்து தவறுகளுக்கு கூட குடும்பத்தை இழுக்கிறார்கள்.

சாலையில் சிக்னலில் நிற்க்கும் போது கூட கூச்சமே இல்லாமல் ஹாரன் அடித்து கொண்டே இருக்கிறார்கள். சண்டை போட அனைவரும் தயார் என்ற மன நிலையில் இருப்பதை போல பிரமை..

அடையாரில் ஒரு சிக்னலில் ஹெல்மெட் போடாத யாரோ ஒருவரை போலிஸ்காரர் ஓரம் கட்டிய போது உடனே மொபைலில் யாரையோ துணைக்கு அழைத்து மொபைலை போலிஸ்காரரிடம் கொடுத்து பேச சொன்னார். போலிஸ்காரரும் சளைக்காமல் மொபைலை வாங்கி ஸ்விச் ஆப் செய்து பைக் சாவியை எடுத்து வைத்து கொண்டார்.

ம் இந்த நகரத்தில் அவருக்கும் அவர் வேலையை பார்க்க தனி திறமை தெரிந்து இருக்கிறது.

என்னால் ஐந்து நிமிடத்து மேல் சென்னை நகர சாலைகளில் நண்பனின் காரை ஓட்ட முடியவில்லை. ஆனால் நான் பார்த்த பெரும்பாலன சென்னை கார்கள் எந்த வித வெளி காயமும் இல்லாமல் இருக்கிறது.

பெங்களூரில் சர்வசாதரணமாக 200 ரூபாய் ஆகும் lunch buffet சென்னையில் சரவணபவனில் 120 ரூபாய்க்கு கிடைக்கிறது. சூப்பர் இட்லி கடைகள் மலிவான விலைக்கு ருசியான சாப்பட்டை தருகிறார்கள்....என்னதான் ஏஸி வைத்து இருந்தாலும் மின்சார செலவு மாதம் 200யை தாண்டவில்லையாம்.. தண்ணீர் பிரச்சனையும் முன்பு போல இல்லை...மின்சார ரெயில் நேர சிக்கன பயணம் வால்மீகி நகர் பீச்... என்ன சில நொட்டைகள் இருந்தாலும் சென்னை போல வருமான்னு நண்பன் சொன்ன போது சரிதான் என தலையாட்டினாலும் , சென்னைக்கு நானே வர நினைத்தாலும் அங்கு இனி இருக்க இடம் இருக்காது என்று தான் தோன்றியது.





Friday, September 18, 2009

உன்னை போல் ஒருவன் - விமர்சனம்



இந்தியில் சென்ற வருடம் வெளியான “ a Wednesday " படம் தமிழ் சாயம் பூசி வெளி ஆகி இருக்கிறது.


இந்தியில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்தபடம் தமிழில் எப்படி வந்து இருக்கிறது ??


ரொம்ப ரொம்ப சாதாரண கதை ..

அதுவும் சில கதாபாத்திரங்களை மட்டும் சுற்றி வரும் கதை..


சென்னை நகரில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்து போலிஸை மிரட்டும் சாதாரண கமலஹாசன்,

போலிஸ் அதிகாரியாக மோகன்லால்..பின்னர் படத்தில் எனக்கு தெரிந்த ஒரே முகம் லட்சுமி மட்டுமே..


4 மணி நேரங்களில் நடக்கும் சம்பவங்கள், குண்டு வெடித்ததா? ஏன் குண்டு வைத்தார்??

எப்படி சொல்லி இருக்கிறார்கள்..??


நம்மவர் கெட்டப்பில் கமல் ...

பென்ஸ் காரில் சனிக்கிழமைஆபிஸுக்கு வரும் CEO போல இருக்கிறார். ட்ரிம் செய்யபட்ட தாடி ஒரு காஸ்ட்லியான கண்ணாடி வேறு.. common man என கண்கள் நம்ப மறுக்கிறது. உன்னை போல ஒருவன் ரேசன் கடை வரிசையில் கடைசியாக நிற்பவன் என வசனம் பேசும் போது சம்ம காமேடி.

இந்தியில் நஸ்ருதின் ஷா எப்படி அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை உடை நடை பாவனைகளில் தயார் செய்து கொண்டு நடித்தார் என்பதை கமல் கவனிக்கவில்லை போலும். ஒரு நடுத்தர வர்க மனிதனின் கலக குரல் போல் இல்லாமல் corporate company board meetingல் பேசுவதை போல இருக்கிறது..

எல்லா இடத்திலும் அடிபட்ட ஒரு சாதாரண இந்திய குடிமகன் வேடத்திற்க்கு ..சாரி கமல்ஜி உங்களுக்கு சற்றும் பொருத்தமாக இல்லை.

மோகன்லால்..

விறைப்பான காவல் அதிகாரியாக...முகத்தில் பதட்டம் தெரிய படம் முழுக்க மலையாள தமிழில் பேசுகிறார். எதுவும் ஒட்டவில்லை.

மேலும் பல புது முகங்கள் படத்தில் இருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.

இசை

படத்தில் பாடல்கள் இல்லை.. இதை போன்ற கதைக்கு பிண்ணனி இசை வலிமையான பிண்ணனி இசை தேவை..சென்ற வாரம் வந்த ஈரம் படத்தில் தமனின் பிண்ணனி இசை மிகசிறந்த உதாரணம்..

பிண்ணனி இசை மகா சொதப்பல். கதையில் ஒட்டவே இல்லை. சுருதி மேடம் பிண்ணனி இசை என்றால் தெரிந்து கொள்ள இளையராஜா படங்களை பார்க்கவும்..முடியவில்லை என்றால் சென்ற வாரம் வெளி வந்த ஈரம் படத்தையாவது பார்த்து தெரிந்து கொள்ளவும்.

படத்தில் வசனம் சில இடங்களில் எழுந்து உட்கார வைக்கிறது.
வழக்கம் போல கதையில் ஒட்டாத தேவையே இல்லாத கடவுளை பற்றிய விவாதங்கள்.. இந்த முறை கலைஞர் கருணாநிதியின் மிமிக்கிரி குரலில் ..

விறுவிறுப்பான காட்சி அமைக்க நினைத்து எடுத்து இருக்கிறார்கள், கூடவே கமலை மட்டுமே நம்பி படத்தை எடுத்து இருக்கிறார்கள்.

இந்தியில் கடைசி 15 நிமிட காட்சிகள் வசனங்கள் படத்தை பலமாக உச்சத்திற்க்கு கொண்டு சென்று விடும். இங்கே வசனங்களில் அழுத்தம் இல்லை.. முக்கியமாக படத்தை தமிழ் நாட்டு சூழலில் சொல்வதில் பல மாக சறுக்கி இருக்கிறார்கள். சொல்ல வந்த கருத்துகள் மிகவும் சிறப்பானதாக இருந்தாலும் சொன்ன விதத்தில் மனதில் எதுவும் பதியவில்லை..

உன்னை போல ஒருவன் - இந்தி டப்பிங் சீரியல் பார்க்கிற உணர்வு.

Saturday, September 5, 2009

Saturday, August 29, 2009

ஊர் வம்பு -1


யார் வம்புக்கும் போகாம இருந்தா வம்பு நம்மை தேடி வராது

இதேல்லாம் சும்மா டூப்பு.


என்ன நேரமோ காலமோ தெரியலை வம்பு தேடி தேடி ஆளை கொல்லுது.

பொதுவாக நான் இந்தியன் ஆயில் நிறுவனங்களில் தான் பைக்கிற்க்கு பெட்ரோல் ஆகாரம் கொடுப்பது வழக்கம்.


நான் வைத்து இருக்கும் citi bank debit cardகளில் வேறு நிறுவன பங்குகளில் இதே debit card பயன்படுத்தினால் 10 ரூபா கொசுறாக சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் account statementகளில் ஞேஎன்று எட்டி பார்க்கும்..

இந்த கொசுறு எதுக்கு என்று சண்டை போட்டு முடிவு இது வரை இல்லை.

சரி indian oil நிலையதிலேயே பெட்ரோல் போடலாம் என்று அரைமனதாக முடிவு செய்து ஒரே பங்கையே உபயோகித்து வருகிறேன். எல்லாம் நல்லா தான் இருந்தது..

சில நாட்களாக பைக்கில் கணிசமாக மைலேஜ் குறைந்து கொண்டே வந்தது.. ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுத்த வண்டி 40 35 என குறைந்து கொண்டே வந்தது. ஓட்டும் முறையில் ஏதும் மாற்றம் இல்லை.. hose போட்டு பெட்ரோலை உறியவும் வாய்ப்பு இல்லை.. என்னமோ நடக்குது.. பொருமையாக யோசித்து பார்த்தில் பெட்ரோல் போடும் போதே லம்பாக தில்லு முல்லு செய்தே பெட்ரோல் போடுவது பிடிபட்டது.

பெட்ரோல் போட்டு கொண்டு இருக்கும் போதே சார் cardஆ cashஆ , சார் சீக்கிரம் கார்டு கொடுங்க.. பின் நம்பர் கேட்க்குது என எப்படியாவது கவனத்தை திசை திருப்பி தில்லாங்கடி செய்வது தெரிந்தது. ஏற்கனவே அனுபவம் பெற்ற நண்பர்கள் ஆலோசனையோடு பெட்ரோல் நிரப்பும் போது அந்த h1n1 வைரசே வந்தாலும் திரும்ப மாட்டேன் என உறுதி பூண்டு ஜெயித்து விட்டேன்..

ஆனால் இந்த முறை புது மாதிரியான தில்லுமுல்லு.. பெட்ரோல் போடும் போதே மின்சாரம் போய் விடும் ..அல்லது எந்திரத்தில் ஏதாச்சும் கோளாறு ஆகும்.. உடனே ஒரு சூப்பர்மேன் போல ஒருவர் வருவார் ...பட்டனை தட்டுவார்.. மீண்டும் பெட்ரோல் வரும்..

சார் 300 ரூபாக்கு பெட்ரோல் போட சொன்னீஙக கரண்ட் போவதற்க்கு முன்னால் 80 ரூபாவிற்க்கு பெட்ரோல் போட்டாச்சு பாலன்ஸ் 220 ருபாவிற்க்கு போடனும் மீட்டரை பாருங்க.. 80விற்க்கு பெட்ரோல் போடாங்களா இல்லையா மீட்டர் ஓடிச்சா இல்லையா ..??
இந்த முறையும் நல்லா ஏமாந்து சோனகிரியா 300 ரூபா பெட்ரோலில் 80 ரூபா கோவிந்தா கோவிந்தா..

இந்த முறை விட கூடாது..

ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேரையாவது இவர்கள் ஏமாற்றுவார்கள், ஒருத்தருக்கு 50 ரூபா என்றால் நாள் ஒன்றிக்கு 5000 ருபா வேலை பார்க்கும் 5 பேருக்கும் லாபம் பிரிக்கபடும்..

இணையத்தில் நோண்டிய போது இந்தியன் ஆயில் விஜிலென்ஸ் நம்பர் கிடைத்தது.. இந்தமுறையும் விட கூடாது..

சார் இதே பிரச்சனை தான் சார், அளவு சரியா இருககான்னு நாங்க அடிக்கடி சோதனை நடத்துறோம் அதனலால் லிட்டர் அளவை இப்ப யாரும் மாத்துறது இல்லை.. அதுக்கு பதிலா பெட்ரோல் போடமலே பெட்ரோல் போட்ட மாதிரி ப்ராடு பண்றாங்க ..எந்த ஏரியா பங்க சார்..??

கூடவே விஜிலென்ஸ் அதிகாரி வந்தார்..என் பைக்கில் இருக்கும் மொத்த பெட்ரோல் அளவு குறிக்கபட்டது.. சார் நீங்க வழக்கம் போலவே பெட்ரோல் போடுங்க.. தில்லுமுல்லு ஏதாச்சும் செய்தாலும் கண்டுக்காம பெட்ரோல் போட்டு முடியும் வரை wait பண்ணுங்க..

வந்துட்டான்யா வந்துடான்யான்னு என்னை பார்த்ததும் பெட்ரோல் போடுபவற்க்கு ரொம்ப குழியாக இருந்து இருக்கும் போல. 150 ரூபாவிற்க்கு பெட்ரோல் போடுங்க.

.பெட்ரோல் hose controllerயை அழுத்தியது போல இருந்தது.. 50 ரூபாவை மீட்டர் காட்டியது.. மிசின் struck ஆனது.. பின் reset செய்து 100 ருபாவிற்க்கு பெட்ரோல் போடப்பட்டது.. அதன் பின் அத்தனையும் சங்கர் படத்தில் வருவது போலவே இருந்தது... ..1

50 ரூபாவிற்க்கு 3 லிட்டர் பெட்ரோல் போட்டு இருக்கனும்.. ஏற்கனவே பைக்கில் இருந்த 2 லிட்டர் சேர்த்து இப்போ 5 லிட்டர் பெட்ரோல் இருக்கனும்.. ஆனால் கணக்கில் வந்ததோ 4 லிட்டர்..

கையும் களவுமாக பிடிபட்டார்கள்,,,,,
விஜிலென்ஸ் அதிகாரி ..ஓனரை கூப்பிடு ..
அவரு இல்லை சார்..
பெட்ரோல் போடுறதை நிறுத்து...
பின்னால் குறைந்தது 20 பேர் கண்டிப்பாக இருப்பார்கள்..

டேய் ப்ராடு பண்றதை நிறுத்தவே மாட்டீங்களா.. சத்தம் பெரிதானது.. பின்னால் இருந்த கூட்டமும் சேதி தெரிந்து கூட்டம் பெரிதானது..

கேஸ் போடுங்க சார்.. பங்கை இழுத்து மூடுங்க சார்..எனக்கும் இதே பிரச்சனை தான் சார்..பின்னால் இருந்து பல குரல்கள்..

இப்போ விஜிலென்ஸ் அதிகாரி..முதல்ல இவருக்கு சுட்ட பெட்ரோலை திரும்ப கொடு.
பெட்ரோல் மீண்டும் போடப்பட்டது...

பெட்ரோல் போடும் பையனை பார்த்தேன் 17 வயது இருக்கலாம்..கூடவே அவரின் சக பணியாளர்கள்.. யாருக்கும் வயது இருபதை தாண்டாது..

சார் இதுல ஒரு கை எழுத்து போடுங்க. *** *** பங்கில் இந்த நாள் இத்தனை மணி அளவில் முறைகேடு நடந்ததை கண்டு பிடித்தோம். அதற்க்கு சாட்சியாக அருண் குமார் என்ப்படும் இந்த நபர்.. இந்திய அத்யாவச பொருட்கள் சட்டபடி... பின்னர் நிறைய எழுதி இருந்தது..

நான் அவரிடம்...சரி சார் இனிமே இப்படி நடக்காதா?? பங்க் ஓனர்கள் முதல் அனைவரும் தண்டிக்கபடுவார்களா?

அது பெரிய பார்மாலிட்டி சார்.. நாங்க இவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பனும்.. அதுக்கு இவங்க பதில் அனுப்பனும்... அப்புறம் நாங்க ஆதாரத்தை எங்க மேலதிகாரிக்கு அனுப்பனும்.. பார்க்கலாம் சார்..

கண்டிப்பாக பங்க் உரிமம் தடை அல்லது வேலை ஆட்கள் பணி நீக்கம் என ஏதும் நடக்க போவதில்லை என்று தெரிந்தது..

சரி..இப்படி பிரச்சனை செய்து என்ன தான் லாபம்??

தப்பு செய்தா கண்டிப்பாக பிடிபடுவோம்.. பிடிபட்டால் மானம் போகும், பங்க் பெயர் கெட்டு போகும் வியாபாரம் பாதிக்கும் என பயம் கண்டிப்பாக அவர்களுக்கு வரும்.. வரவேண்டும்.. அது வரை திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. அவர்களை இப்படி செய்து தான் திருந்த வைக்க முடியும்..

Friday, August 21, 2009

கந்தசாமி - திரை விமர்சனம்



















அப்பாடா ரொம்ப நாளைக்கு அப்புறம் நேரம் போவதே தெரியாமல் ரசிக்க ஒரு மசாலா படம்.

கதை என்ன ?

அது யாருக்கு வேண்டும்...


போஸ்டர் பார்த்தே கதை சொல்ல தெரிந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படத்தின் கதை என்ன தெரியாமலா இருக்கும்..


இந்தியன் அந்நியன் ஜெண்டில்மேன் டைப் கதைகளுக்கு சங்கர் காப்பிரைட் வாங்கி வைத்தால் ரொம்ப புண்ணியமாக போகும்.

என்ன எல்லாருக்கும் தெரிந்த கதையை அட்டகாசமாக திரைகதை ஆர்பட்டமான பாடல்கள் ஆட்டம் கொண்டு சொல்லி இருக்கிறார்கள்.


முதல் சீனில் ஆரம்பித்து இடை வேளை மூச்சு விட நேரமில்லாமல் ஓடுகிறது
பின்னர் இடை வேளைக்கு அப்புறம் சிறிது தடுமாறி மீண்டும் புயல் வேகம் எடுக்கிறார்கள்..


ஆங்காங்கே வேக தடையாக சில பாடல்கள் அப்புறம் ரொம்ப முக்கியமாக வடிவேல் காமேடி..
வடிவேல் காமேடி படத்தோடு ஓட்டவே இல்லை..

படத்தின் நீளம் 3 : 15 மணி நேரம் , எடிடிங்கில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.. தியேட்டர் ஆபரேட்டர்கள் இனி கவனித்து கொள்வார்கள்..


ரொம்ப ரொம்ப விக்ரம் ஸ்மார்டாக விக்ரம் படு கச்சிதமான நடிப்பு கூடவே உடல் மொழி வசன உச்சரிப்பு ..கலக்கீரீங்க விக்ரம்.. அதுவும் பெண் வேடத்தில் வரும் காட்சி ஏ கிளாஸ்


ஸ்ரேயா என்ன சொல்றது ...பாடல்களில் ஜிம்னாசியம் குச்சிபுடி பாக்சிங் என எல்லாம் கலந்து கட்டி ஆடுகிறார்.

’என் பேரு மீனா குமாரி’ பாடலுக்கு தியேட்டர் ஆபரேட்டரை தவிர எல்லாரும் நடனம் ஆடாத குறைதான்..

தேவி ஸ்ரீபிரசாத் பாடல்களும் பிண்ணனி இசையும் அபாரம் ..


படத்தின் ஒவ்வோரு ப்ரேமிலும் அபார உழைப்பு தெரிகிறது..
லாஜிக் மீறாத காட்சிகள் அதுவும் மெக்ஸிகோ நாட்டில் வரும் காட்சிகளும் அருமை..


பிரபு, ஆசிஷ் வித்யார்த்தி, கிருஷ்ணா என எல்லாரும் வந்து போகிறார்கள் , வந்துட்டு போகட்டுமே .

.
சுசி கணேசன் இரண்டு வருடம் உழைத்து ஒரு நல்ல பொழுது போக்கு படத்தை கொடுத்து இருக்கிறார்..

பல மொக்கை படங்களை பார்த்து
நொந்தசாமிகளுக்கு டைம் பாஸ் இந்த கந்தசாமி..

Saturday, August 15, 2009

கண்டதும் கேட்டதும் - 15 08 2009




இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்




ஒரு மாசமா ஏகப்பட்ட புது படங்கள் பார்த்து பைத்தியம் பிடிக்காத்து தான் மிச்சம்.


love aaj kal என்ற இந்தி படம்.. இந்த படத்தை எடுத்த டைரக்டர் மட்டும் என் கையில் கிடைச்சா..




இப்ப வர இந்திபடங்கள் எல்லாம் ரொம்ப ரொம்பவே torture பண்றாங்க.. ஏதோ பீகார் ஹரியானா உபி மக்கள் எல்லாம் லண்டன் நீயூயார்க்க்கு மொத்தமா shift ஆகிட்டாங்களா?? எல்லா பட கதையில் நேரடியா லண்டன் பாரீஸ் இப்படிதான் ஆரம்பிக்குது..

இந்த வரிசையில் வந்த New york Love Aaj Kal என்று இரண்டு குப்பை படங்கள் .. இதில் Love Aaj Kal படத்தில் என்ன தான் சொல்லவராங்கன்னு ஒரு மண்ணும் புரியலை.. எப்படிதான் கலாசார காவல்கார சிவசேனா ஆர் எஸ் எஸ் கேங்க் ஆட்கள் இந்த படத்தை விட்டு வைச்சாங்களோ..

தமிழ் படங்கள் சற்றும் சளைத்தவை இல்லை..

சென்ற மாதத்தில் பார்த்த அபத்தங்கள்

சிந்தனை செய், வாமணன், மோதி விளையாடு ..

பல அபத்தங்களுக்கு மத்தியில் சரி புழைச்சு போன்னு வந்த படம் அச்சமுண்டு அச்சமுண்டு.. இந்த படமும் 1.30 மணி நேரம் என்றால் தப்பித்தேன்..

வழக்கமான தமிழ்பட விதியான 2 : 30 மணி நேர படம் என்றால் நினைச்சு பார்க்கவே முடியலை..

வாழ்க்கையில் பொறுமை போதும் அளவு கற்று கொண்டேன்.. விடுஙகடா சாமி ..

************************************************************************

பெங்களூரில் சென்ற வாரம் திறக்கபட்ட திருவள்ளுவர் இன்னமும் incubationல் தான் இருக்கிறார். எப்போதும் காவலுக்கு போலிஸ் மேலும் இலவச இணைப்பாக வீடியோ காமேராக்கள் கண்காணிப்போடு ரொம்ப பத்திரமாக இருக்கிறார்.

இதை பார்த்து எனக்கு திருச்சி திருவரங்கம் பெரியார் சிலை தான் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.. இன்னமும் திருவரங்கம் பெரியார் அதிரடி படை காவலோடு தான் காட்சி தருகிறார்.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் முத்துராமலிங்க தேவரும் அம்பேத்காரும் பலத்த பாதுகாப்போடு தான் எழுந்து அருளி வருகிறார்கள்..

பேசாமல் காவல்துறையில் சிலை பாத்துகாப்பு துறை என தனியாக ஆரம்பித்து விடலாம்..

சிலைகள் திறப்பதால் என்ன நண்மை என நான் அறியேன் ஆனா வெட்டி வம்பு பார்டிகளுக்கு வேலை வாய்ப்பு நிறைய கிடைக்கிறது.. வாழ்க வளர்க

******************************************************************************

எப்போதும் தமிழனுக்கு தான் பேசும் மொழி தொடர்பான அரசியல் ஆர்வம் அதிகம் உண்டு. கன்னடர்களுக்கு திருவள்ளுவர் வாழ்க்கை தமிழ் இலக்கியம் என சுய தம்பட்டம் அடிக்கும் பல ஆட்களை தினமும் காண்கிறேன்..

கூடவே கொசுறாக கல் தோன்றா மண் தோன்றா போன்ற பொன் மொழிகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றி தமிழ் பெருமையை நிலை நாட்ட ஏகப்பட்ட பேர் உள்ளனர்.

என்னவோ தெரியலை தமிழ் செல்வன் தமிழ் செல்வி போல இது வரை நான் கன்னட செல்வனோ தெலுங்கு செல்வியோ பெயர்களை கேள்வி பட்டதே இல்லை.. பேர் வைச்சுகிறது சொந்த விஷயம் ..சரி அதவிடுங்க.. இந்த கல் தோன்றா மண் தோன்றா தான் ரொம்பவே லாஜிக் இடிபடும் செய்தி.. யாராச்சும் இதற்க்கு விளக்கம் சொல்வீற்களா??

**************************************************************************

Friday, July 3, 2009

கொஞ்சம் புலம்பல்...




விகடன்....

இந்த விகடன் இதழ்களோடு எத்தனை பசுமையான நினைவுகள்..
வீட்டில் விகடன் வரும் நாள் அன்று சண்டை தொடங்கி விடும். யார் முதலில் படிப்பது அதுவும் 3D சித்திரங்கள் வந்த நாட்களில் யார் முதலில் கண்டு பிடிப்பது என ஜாலியான சண்டையே நடக்கும்.

குடும்பங்களில் வழக்கமாக நிகழும் இறுக்கமான நிகழ்வுகளை நெகிழ வைப்பதில் விகடனுக்கு நிகர் விகடனே..

வைர விழா நாவல் போட்டி முதல் பல ரெகுலர் போட்டிகள் வாசகர்களை விகடனோடு எப்போதும் முன் நிறுத்தி இருந்தன. விகடன் படித்தால் கிடைக்கும் Feel good என்ற மன நிலை யாரையும் புண்படுத்தாத எழுத்துகள் சுஜாதா போன்றவர்கள் தொடர்கள்..

அதிலும் நாவல் போட்டியில் வெற்றி பெற்ற கதையான கொலை வேகம் கதை இன்றைக்கும் என் favorite.

புதுமை என்றால் அது விகடன் தான்

மடிசார் மாமி என்ற தொடரில் வரைபடங்களுக்கு பதில் ஸ்ரீவித்யாவை kinetic honda வண்டியில் வைத்து புகைபடம் எடுத்தே தொடர்கதை ஓட்டத்துக்கு புது வடிவம் கொடுத்தார்கள். இது சாம்பிள் தான்..

இப்படி எத்தனை எத்தனை புதுமைகள்..


விகடன் வெள்ளி கிழமையும் குமுதம் சனிக்கிழமை அன்றும் வெளிவரும்.. சனி ஞாயிறுகளில் இந்த இதழகளை படிக்கவே விடுமுறை விட்டது போல தோன்றும்.


ஆனால் இன்று விகடன் இதழ் மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான தரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நடுநிலைமை feel good போன்ற மேட்டர்கள் என்றோ காற்றில் பறக்க விடபட்டு விட்டன.

கடந்த சில வருடங்களில் விகடனின் தரம் ரொம்பவே படாது பாடு படுகிறது

பாய்ஸ் திரை விமர்சனம்.. ரொம்ப ரொம்பவே கேவலபடித்தி இருந்தார்கள்..
நியூ திரை விமர்சனம்.. படத்தை விகடனார் ரொம்பவும் ரசித்து எழுதி கூடவே செல்ல குட்டும் வைத்து இருந்தார்கள்..

பாய்ஸ் படம் அப்படி ஒன்றும் மோசமான படமாக எனக்கு தெரியவில்லை.. ஆனால் நியூ படம் ஆபாச காட்சிகளுக்காக பின்னர் நீதிமன்றதால் தடை செய்யபட்ட படம்.. ..மக்கள் மனதை படிப்பது என்பது இது தானா??

இதை போல வால்மீகி சிவா மனசுல சக்தி போன்ற மொக்கை படங்களுக்கு சன் டிவி பாணியில் விளம்பரம் கொடுத்து சூப்பரோ சூப்பர் படம் என்று விமர்சனம் வேறு..

வாசன் தன் சொந்த படங்களை விளம்பரத்துகாக கூட விகடனை பயன்படுத்தியது இல்லை என்று எங்கோ படித்த ஞாபகம்..

தனி மனிதனுக்கு பிடிக்கவில்லை பிரச்சனை என்றால் அதை பத்திரிக்கைகளில் வைத்து பஞ்சாயத்து செய்வது வாசகர்களை எரிச்சல் மூட்டவே செய்யும்...

திமுகவையும் அதன் தலைவர்களையும் பிடிக்கவில்லை என்றால் அதை வாசகர்களிடம் திணிக்க கூடாது. சமீபத்திய பாரளுமன்ற தேர்கல் கணிப்புகள் என்று இவர்கள் ஜீவியில் கொடுத்த கணிப்புகளே இதற்க்கு சாட்சி...

அதுவும் தனிபட்ட ஆசிரியர் குழுவின் ஆட்களின் கொள்கை நிலைபாட்டிற்க்காக குப்பைகளை படிக்க வேண்டும் என்று வாசகர்களின் தலை எழுத்து இல்லை..

விகடனை படித்தால் பொது அறிவு வளரும் என்ற நிலை போய் இருப்பதும் ஒன்றும் இல்லாமல் போகும் என்ற நிலைதான் இன்று.

மருதன் எழுதும் கட்டுரைகள் இந்த ரகம் தான். இவரின் சீனா சார்பு எழுத்துகள் ...வீட்டில் சாப்பாடு இல்லை என்றால் கூட அமெரிக்கா தான் காரணம் போன்ற கருத்துகள் விகடன் போன்ற இதழில் வருவது வாசகர்களின் துரதிஷ்டம்..

இவர் ஒரு முறை அமெரிக்க கல்வி முறை தொடர்பாக வழக்கம் போல தப்பும் தவறுமாக எழுதி இருந்தார்..இதை கூட சரி பார்க்காமல் வெளியிடுகிறார்கள்.

இப்படி தான் திபேத் மக்கள் சீனா ஆதிக்கதில் மிகவும் சவுரியமாக இருக்கிறார்கள் என்று எழுதி தனக்கு தானே சந்தோஷபட்டு கொண்டார்.. இதையேல்லாம் கூட சரி பார்க்க மாட்டார்களா??

இணையத்தில் சில நிமிடங்கள் தேடினால் பல உண்மைகள் வெளிப்படும் இந்த காலத்தில் இதை போல ஆட்கள் இப்படி எழுதினால் வாசகர்களை என்ன முட்டாளாக நினைத்து விட்டார்களா??

இலங்கை பிரச்சனையை வைத்து உணர்சியை தூண்ட நினைத்தார்களோ என்னவோ சென்ற சில மாதங்களில் வந்த இவர்களின் கட்டுரைகளை இன்று படித்தால் தெரியும் எவ்வளவு உட்டாலங்கடி என்று..


சுஜாதா போன்ற பல ஆளுமைகள் ஆண்ட விகடன் இதழ் இன்று இணைய சந்தாவிற்க்காக ஈழம் பிரபாகரன் என்று ஜல்லி அடிப்பது மகா எரிச்சலை தருகிறது.. இந்த பிரச்சனையில் உண்மையை எழுதினால் வாசகர்களுக்கு மிக பயன் அளிக்கும் ...

2004 ம் வருடம் மழை பொய்த்து பஞ்சம் வந்த போது விகடன் வாசகர்களிடம் நிதி திரட்டி கூடவே கணிசமான தன் நிதியை வைத்து தஞ்சை மாவட்ட விவாசாயிகளின் வீட்டில் தற்கொலைகளை தடுத்தது.

அன்றைய விகடன் மாறாமல் இருந்து இருந்தால் இன்று இலங்கையில் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு எப்போதோ நிதி திரட்டி கொடுத்து இருக்கும்.


பெரியார் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தற்காக வழக்கு தொடர்ந்தவர் மீது ஆஸிட் அடித்த மேலும் அதை பெருமையாக சொல்லிய ஒருவரின் பேட்டி கவர் ஸ்டோரியில் வேறு...


இப்படி அடுக்கி கொண்டே போகலாம்..

என்னதான் ஆயிரம் இதழகள் வந்தாலும் வீட்டின் சகல மூலைக்குக்கும் செல்லும் இதழ என்றால் எங்கள் வீட்டில் விகடன் தான்.

இன்று விகடன் இதழை வாங்கும் இடத்திலே புரட்டி விட்டு குப்பை தொட்டியில் எறியும் மன நிலை தான் தோன்றுகிறது.

என்னவோ தெரியவில்லை விகடன் குடும்பத்தோடு குடும்பமாக இருந்த இதழ் இன்று இப்படி கெட்டு சீரழிய கண்டு பொறுக்கவில்லை..


Wednesday, July 1, 2009

கண்டதும் கேட்டதும்


ரொம்பவே பிகு செய்து கொண்டே கடைசியில் மழை துளிகள் பெங்களூர் வாழ் ஊர்வன பறப்பன என பேதம் பார்க்காமல் நனைத்து விட்டு செல்கிறது.



மீண்டும் காவேரி பிரச்சனையை கிளப்பலாமா என்று domain specialists ஹோம் வொர்க் செய்து கொண்டு இருக்கும் போதே மக்களையும் கூடவே பல மனங்களையும் சேறடிக்காமல் வந்து விட்டது பருவ மழை..

காலம் தவறிய பருவ மழையால் நிறைய பாதிப்புகள்.. கர்நாடகா மாநிலத்தில் மின் தடை பிரச்சனை ரொம்ப ரொம்ப அதிகமாகி விட்டது

பெங்களூரில் பரவாயில்லை என்று தான் சொல்லனும்..சென்ற வாரம் மைசூர் சென்று இருந்த போது நேரில் அனுபவித்தேன். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின்சாரம் இல்லை..

காரணம் மழை இல்லாமல் விவாசாயிகள் பம்ப் செட்டை நாடி செல்வதால் வந்த எதிர் வினை.

கர்நாடகாவில் எந்த அணையிலும் நீர் இல்லை.. நீர் நிலை மின்சார நிலையங்களும் ஓய்வு எடுக்க ஆரம்பித்து விட்டன. ...


நல்ல வேளை.. இன்னும் ஒரு வாரம் மழை தவறி இருந்தால்...


*-*

மக்கள் தொகை ,பொருளாதாரம் , வாங்கும் சக்தி வளரும் அளவிற்க்கு நாட்டில் மின்சார உற்பத்தி அதிகரிக்கபடவே இல்லை..

அதிக அளவு மின்சார உற்பத்தியும் ஒரு வகையில் சுற்று சூழல் பாதிப்பு தான் .. பெரிதும் எதிர்பார்க்கபட்ட அனு மின்சார நிலையங்களும் இது வரை பெரிய பூஜ்யம் தான்.

இந்த நிலையில் மின்சார உற்பத்தி நிலையங்களிலும் கூடவே மின்சார போக்குவரத்திலும் நடக்கும் முறைகேடுகளை சரி செய்தாலே இன்னும் பல வருடங்களுக்கு புதிதாக எந்த மின்சார உற்பத்தி நிலையங்களும் ஆரம்பிக்க வேண்டாம்.
-*-

அரசு வேலை ஆசை யாரை விட்டது. தற்காலிக வேலையில் சேரும் போதே பணி நிரந்தரம் ஆக வாய்பில்லை என்று தெரிந்தே சேர்கிறார்கள். ஆனால் வேலை நிறுத்தம் என மிரட்டி நிரந்தரம் ஆக வழி தேடிகிறார்கள்..

வேலை நிரந்தரம் ஆக வேண்டும். பங்குகளை வேறு யாருக்கும் விற்க்க கூடாது, அரசே நட்டட்தையும் தாங்க வேண்டும் ..

தீபாவளி போனஸ் பொங்கல் போனஸ் பே கமிசன் எல்லாம் வேண்டும். ஆனா மின்சாரம் உற்பத்தி குறைந்தால் மட்டும் பதில் இல்லை..

-*-

பெரிய ஓட்டை விழுந்த பற்றாகுறையை எப்படி சமாளிக்க போகிறரோ நிதி அமைச்சர்.. என்ன கடைசியில் நம் தலையில் தான் சர்வீஸ் டாக்ஸ் வழியாகவே இல்லை வருமான வரியாகவே கடந்து செல்லும்.

கல்விக்காக CESS வரியாக இலவச இணைப்பு ஒட்டி கொண்டே வருகிறது. இது வரை இந்த வரியினால் வந்த வருவாய் பத்து விரல் கொண்டு எண்ண முடியாது. ஆனால் செலவு செய்தது எத்தனை என்றால் யாருக்கும் தெரியவில்லை.

இதை விவாதிக்க வேண்டிய இடங்களில் மக்கள் தலைவர்கள் கண்டு கொள்வதே இல்லை. பல தலைவர்கள் லீவு போட்டு ஊர் சுத்த போய் விடுகிறார்கள்.

ஏன் எல்லா எம் பிகளையும் பாராளுமன்றம் தொடங்கும் முன்னர் மொத்தமாக வைத்து இலக்கிய கூட்டம் நடத்த கூடாது?? தமிழ் பிளாக்கில் இருக்கும் சில காமேடி பீஸ்களை அவர்களோடு இலக்கியம் பேச வைத்தால் மிக மிக நன்று..

-*-

முழு மெஜாரிட்டியின் முதல் பயனாக பொது மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு வழியாக கிடைத்துள்ளது.


எல்லாம் நல்லதுக்கே என்று வழக்கம் போல கடந்து செல்ல வேண்டியது தான்..

அரிசி பருப்பு மளிகை விலைகள் ஏற்றம் ,மின்சார தொல்லை, மழை இல்லை எல்லாத்துக்கு நடுவே நாமும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறோம்..
-*-

Monday, June 22, 2009

வெட்டி வேலை


காலையில் சன் மியூசிக் இசையருவி சேனல்களை ரிமோட் துணையோடு பொறுமையோடு மாற்றி மாற்றி பார்த்ததில் புரிந்தவை..



சன் மியூசிகில் அயன் பாடல் வந்தால் அங்கே உடனே வாரணம் ஆயிரம்




இப்படியே வேட்டையாடு விளையாடு Vs தசவாதாரம் , சிவாஜி vs குசேலன் , போக்கிரி Vs வில்லு என தமிழ் பேசும் உலகுக்கு நல்ல கலை சேவை செய்கிறார்கள். வாழ்க வாழ்க
-*-

விஜய் டிவியில் விருது கொடுக்கும் நிகழ்ச்சி நல்ல விஷயம் தானே , கமல் சாருக்கு ஏகப்பட்ட விருதுகள் சும்மா அள்ளி கொடுத்தாங்க. எனக்கே டவுட்டு பார்பது கலைஞர் டிவியா இல்லை விஜய் டிவியா கனவா நிஜமா..!!??

எல்லாம் சரிதான் கமல் சாருக்கு தசாவதாரம் சிறந்த கதையாசிரியர் விருது கொடுத்தாங்க.. கமல் சார் பக்கா ஜெண்டில்மேன் ..அந்த விருதை மறக்காம Angles and demon's எழுதிய Dan Brownக்கு அனுப்பி வைச்சுடுவாரு.. உலக நாயகன்னா சும்மாவா....


-*-
சென்ற வாரம் திருச்சிக்கு ஒரு நாள் அவசர பயணம்.. திரும்பி வர KPN travelsல் திருச்சி -> பெங்களூர் மதிய நேர வோல்வோ பஸ்ஸில் புக செய்து திரும்பினேன்..

எல்லாம் நல்லா தான் இருந்தது. நாமக்கலை தாண்டுவதற்க்குள் 10 தடவை பஸ்ஸை நிறுத்தி ஏதோ செஞ்சாங்க. அப்பவே புத்திக்கு உரைச்சு இருக்கனும்.. இல்லையே .

.
பஸ்ஸுல ஏசியே வேலை செய்யலே ..மதிய நேர கொடுமையான வெயில் வேற.. டிரைவர்கிட்ட சொன்னா சார் சேலம் போனவுடன் பஸ்ஸை மாத்திடலாம் சார்ன்னாரு..

மோசமான பயணம். மூட்டைபூச்சி கூட்டணி இன்னக்கு சம்ம வேட்டைன்னு புகுந்து விளையாடுது..

சேலம்த்திலும் பஸ் மாற்றபடவில்லை..புகார் கொடுக்க போன் செய்தால் அதேல்லாம் அப்படி தான் சார் என்று பதில்.. பொறுத்து பார்த்து முடியாமல் எல்லா பயணிகளும் சேலம் தாண்டியவுடன் தொப்பூர் காட்டில் வண்டியை நிறுத்தி வேற வண்டியை கொண்டு வர சொன்னோம்.. இதோ அனுப்பறேன்னு சொன்னாங்க..

வரும் ஆனா வராது கதை தான்..8 மணி ஆச்சு.. பெங்களூருக்கு 9 மணிக்கு போய் சேர வண்டி ...தர்மபுரியை கூட இன்னும் தாண்டலை..

அதே வண்டியில் பயணம் தொடர்ந்தது..
நடு ராத்திரியில் பெங்களூர் வந்து சேர்ந்து அல்லாடியது தனி கதை..

சில வருடங்கள் முன் வரை KPN travels நிறுவனத்தின் சேவை அற்புதமாக இருந்தது. என்ன ஆச்சுன்னு தெரியலை ,இப்பவேல்லாம் அவங்க வண்டியல போவதற்க்கு பதில் பேசாம TVS50யை வாடகைக்கு வைச்சு ஊர் போய் சேரலாம்ன்னு தான் தோணுது. கே பின் என் பேருந்துகளில் அவஸ்தை படுவது இது எனக்கு முதல் முறை இல்லை..

மரியாதையே என்ன வென்று தெரியாமல் பேசும் டிரைவர் க்ளீனர்கள், மூட்டை பூச்சி பண்ணையாக இருக்கு பஸ் ஸீட்டுகள் , பராமரிப்பே இல்லாத பேருந்துகள்..


விகடனில் சில வருடங்கள் முன்னர் கே பி என் உரிமையாளர் , தமிழ் நாட்டில் ப்ளைட் சர்வீஸ் விரைவில் ஆரம்பிப்போம் என்று சொல்லி இருந்தார்.. இதே ரேஞ்சில் போனால் ப்ளைட் என்ன ராக்கேட் சர்வீஸ் கூட ஆரம்பிக்கல்லாம்...
-*-


குடும்பத்தார் பட காமேடி சீன் களை பார்த்து கொண்டு இருந்தேன்.
.சிங்கம் புலி என்ற இயக்குநர் கலக்கி இருந்தார்.
. அவர் தொடர்பாக இணையத்தை நோண்டிய போது கிடைத்த லிங்க்.. ஒரிஜினல் சிங்கம் புலி.. Liger
http://www.liger.org/

நீங்களும் பாருங்க interesting ஆக இருக்கும்

Sunday, June 21, 2009

சமீபத்தில் பார்த்த படங்கள்


எனக்கு தெரிந்து பல பேருக்கு கன்னட சினிமா என்றாலே ராஜ்குமார் + sons ஞாபகம் தான் வரும்.

தமிழ் சினிமாவிற்க்கு கிடைக்கும் அதிக பார்வையாளர்கள் ( புலம் பெயர்ந்த் இலங்கை தமிழர்கள்) கன்னட சினிமாவிற்க்கு கிடைப்பதில்லை. அதனால் தானோ என்னவோ கன்னட சினிமாவில் வரும் பல நல்ல படங்கள் கர்நாடாவை விட்டு வெளியே தெரிவதில்லை..

கன்னட சினிமாவில் மேடை நாடகங்கள் இலக்கியம் நல்ல சினிமா என்று தனியே ஒரு குழு இயங்கி கொண்டு இருக்கிறது. மசாலா படங்களுக்கு நடுவே பல குறிஞ்சி மலர்கள் அடிக்கடி பூக்கும்.

மறைந்த சங்கர் இவர் மட்டும் இன்னும் பல வருடங்கள் உயிரோடு இருந்திருந்தால் தென் இந்திய சினிமாவில் கன்னடாவின் கொடி இன்னும் உயரே பறந்து இருக்கும்..

கிரீஷ் கர்னாட், அதுல் குல்கர்னி , சரத், ஆஷிஷ் வித்யார்த்தி என மசாலா படங்களில் வில்லனாக மிரட்டுபவர்கள் பல மான மேடை நாடக பிண்ண்னி கொண்டவர்கள். இன்னமும் தங்களின் மனதிருப்திக்காக நாடங்களில் நடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களின் கூட்டணியில் 2007ல் வெளியான படம் ..அவ்வப்போது பெங்களூரில் நடந்த பழையை சம்பவங்களை அழகான திரைகதையோடு படமாகவும் எடுப்பார்கள்.

ஆ தினகளு ..( அந்த நாட்கள் )

இரண்டு தாதாக்களுக்கு இடையே 1986ல் சிக்கி தவித்த பெங்களூரு + அந்த தாதாக்களின் உலகம் + அந்த பிரச்சனையில் மாட்டி தவிவிக்கும் ஒரு காதல் ஜோடி ...இவர்களின் பிரச்சனையை பேசும் படம்.. இது 1986ல் பெங்களூரில் நடந்த கதை..படத்தின் திரைகதையை எழுதியது அக்னி ஸ்ரீதர். இவரின் பாத்திரமும் படத்தில் அங்கம்..

கோத்வால் ராமசந்திரா Vs ஜெயராஜ் ..ஒருவரை ஒருவர் அழிக்க துடிக்கும் தாதாக்கள்....
86 மார்ச் மாதம் கோத்வால் கொல்லபடுகிறார்..

கொலையாளிகள் ஒருவர் சேத்தன். வசதிக்கு எந்த வித குறைவும் இல்லாமல் சமூகத்தை பற்றி எதையும் கவலைபடாத சேத்தன் ஏன் எப்படி எதற்க்காக underworld ஆட்களிடம் போய் சேருகிறார் என்பதை அழகாக சொல்கிறார்கள்.

வன்முறையை பேசும் படம் தான் ஆனால் படத்தில் வன்முறை வாசனையே சுத்தமாக இல்லை.கத்தியில் நடக்கும் வித்தை அநாயசமாக செய்கிறார்கள்.

தாதக்களின் வாழ்க்கை யாரையும் நம்ப முடியாத அவர்களின் மன நிலை அவர்களின் குடும்பம் நட்பு என பல பக்கங்களை புரட்டுகிறார்கள். ஒரு காலத்தில் pensioners paradise ஆக இருந்த பெங்களூரின் வனப்பை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.

இசை இளையராஜா -- சான்ஸே இல்லை பிண்ணணி இசை படத்துக்கு மிக பெரிய பலம்..பிண்ணனி இசை என்றால் என்ன என்பதை இந்த படத்தை பார்த்து தான் கத்து கொள்ள வேண்டும்.. அப்புறம் இரண்டு குட்டி குட்டி பாடல்கள்.. இளையராஜாவின் 80 இசை மீண்டும் ஒலிக்கிறது..

http://www.youtube.com/watch?v=nnLvKpYIyPo



இயக்கம் - சைதன்யா , கிரீஷ் கர்னாட்..

இந்த படமும் சுப்ரமணியபுரமும் கதைகளும் 80களில் நடந்த வன்முறைகளை தான் பேசுகிறது. சுப்ரமணியபுரம் படத்தை எப்போது பார்த்தாலும் இரைச்சலான பிண்ணணி இசையும் வன்முறையும் படம் முடிந்த பின் மனதை ஆக்கிரமிக்கும் வன்முறை சார்ந்த பயமும் தான் தெரிகிறது. ஆனால் இந்த படம் அதற்க்கு நேர்மாறாக ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை தருகிறது.

இந்த படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ணாமல் பாருங்க..

பசங்க

எனக்கு விக்கிரமன் படங்கள் ரொம்ப பிடிக்கும்..அவரு படத்தில் கெட்டவங்களே யாரும் இருக்க மாட்டாங்க.. எல்லாருமே லா லா லா இசை ஒலிக்க வரும் நல்லவங்க தான். அவர் படத்தில் தெரியும் ஒரு positive energy , மிதமான நகைச்சுவை ஞாயிறுகளில் மதிய நேரங்களில் எந்த வேலையும் இருந்தால் நிம்மதியாக பார்க்கலாம்.


என்னவோ தெரியலை இந்த படத்தின் இறுதியில் இயக்குநர் பெயர் திரையில் தெரிந்த போது என்னையும் அறியாமல் கை தட்டினேன். பல காரணங்கள் இருக்கல்லாம்..நானும் சிறுவனாக இருந்த போது இதே போல் செய்த சேட்டைகளை மீண்டும் பார்த்த காரணமோ இல்லை படம் முழுதும் அட்வைஸ் என தெரியாமல் அழகாக positive செய்திகளை சொன்னதோ..

எதுவாக இருந்தாலும் தமிழில் வந்த படங்களில் இந்த படம் மிக மிக முக்கியமான படம்.

சிறுவர்களின் உலகம் இது வரை தமிழ் படங்களில் ரொம்ப பேசபடாத ஏரியா..மிக மிக அழகாக படம் எடுத்து இருக்கிறார்கள். மிக்க நன்றி இயக்குநர் பாண்டிராஜுக்கு பின் தயாரிப்பாளர் சசிக்குமாருக்கும்.

படத்தில் என்னை உறுத்தியது ஒரே விஷயம் தான்..படத்தில் ஒரு காட்சியில் தேசிய கீதம் ஒலிக்கிறது.. தியேட்டரில் அங்கங்கே சில பேர் எழுந்து நிற்க்கிறார்கள்.. கையில் வைத்து இருக்கும் பாப் கார்ன் கீழே விழுந்து விடுமோ என்ற பயத்த்தில் சில பேரும் சொரணையே இல்லாமல் சிலரும் பேர் அப்படியே உட்கார்ந்து இருந்தார்கள்..யாரையும் குற்றம் சொல்ல முடியாது. தேசிய கீதம் தொடக்கத்திலும் இறுதியிலுமே கேட்டு பழகி போன நமக்கு இப்படி தடாலடியாக வரும் தெரிந்து இருக்க வாய்பில்லை.. தேசிய கீதத்தை இப்படி படத்தில் காட்சியாக வைப்பதை தவிர்க்கலாமே..

Sunday, June 14, 2009

குளிர் 100 - விமர்சனம்


சும்மா ஜாலியா 2 மணி நேரம் டைம் பாஸ் ஆகணுமா, இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்

புது விதமான இசை, அசத்தலான ஒளிப்பதிவு வேகமான திரைகதை வைச்சு நல்லாவே எடுத்து இருக்காங்க..

இந்த படத்தின் பாடல்கள் வந்து ரொம்ப ரொம்ப நாள் ஆச்சு..

ஹிப் ஹிப் ஹுரே ,பெங்களூர் பார்ட்டி வி ஜேகளின் மனதை கவர்ந்த பாடல் .. பல இடங்களில் இந்த பாடல் கேட்டு இருக்கிறேன்...ம் சும்மா சொல்ல கூடாது ...அருமையான பாடல்.. பாடலுக்கான நடனமும் அருமை..


மனசெல்லாம் பாடலும் மனதை பிழியும் மெலோடி,, சிம்பு பாடுவது தான் கொஞ்சம் உறுத்தல்..

குளிர் பிரதேச ரெஷிடென்ஷியல் ஸ்கூலில் நடக்கும் கதை.. ராக்கிங்..நட்பு கொஞ்சம் செண்டிமெண்ட், லூசு ஹீரோயின் , ரிவென் ஜ் ...அதுக்குல்ல 2 மணி நேரம் ஆச்சு.. க்ளைமேக்ஸ் கொஞ்சம் சொதப்பல்... அதை விட்டு தொலைங்க.. படம் நல்ல interesting ஆக இருந்துச்சு..

படத்தில் 90% புது முகங்களின் ஆதிக்கம் தான்..
ஹிரோ சஞ்சீவ் ஸ்மார்டாக இருக்கிறார்.. அப்புறம் சயித் நிதீஷ் கார்திக் ரியா ம் ஓகே ஓகே..

படத்தை நிஜமாகவே தாங்குவது பாபோ சசி.. இசையும் இவரே.. கோடம்பாக்கத்தில் இனி இவரை அடிக்கடி பார்க்கலாம் அல்லது கேட்க்கலாம்.

படம் ஊட்டி ஏற்காடு அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் சென்னையில் எடுத்து இருக்காங்க..
படம் முழுக்க பசுமையின் ஆதிக்கம்.. கொஞ்சம் க்ராபிக்ஸ் நகாசு வேலையும் செஞ்சு இருக்காங்க.

எழுதி இயக்கியது ”அழகிய அசுரா” பாடிய ‘அனிதாஉதீப்’ ... சோதனை முயற்ச்சி போல..

கேமரா ஒர்க் அருமை... குளிர் மழை காலங்களுக்கே நம்மை அழைத்து செல்கிறார்..என்ன தியேட்டரிலும் எனக்கும் அதே குளிர் கால பீலிங்க்சு...ஒரே குளிர் தாங்க முடியல.. மொத்தமே 10 பேர் தான் தியேட்டரில்....

இதுல இண்டர்வல் கார்டு போட்ட போது இரண்டு பேரு சூப்பர் சம்ம சீன்னு கைதட்டி விட்டு ஓடி போய்டாங்க..

பக்கத்து ஸ்கீரினில் மாசிலாமணி ஹவுஸ் புல். :))) ...

Friday, June 12, 2009

உன்னை போல் ஒருவன்


என்னை போல ஒருவன் .

.இந்தியில் சென்ற ஆண்டு வந்த படங்களில் குறிப்பிடதக்க ஒன்று Wednesday..

அதை நமது ஆஸ்கர் நாயகன் கமலஹாசன் தமிழில் ரீ மேக் செய்கிறார். .

பட கதை விவாதம் அதான் discussion எப்படி தான் செய்வாரோ??



சுட்ட கதையாக இருந்தாலும் உல்டா செய்யும் போது உலக நாயகனின் special touch இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காதே..

என்னால் முடிந்தது கொஞ்சம் இலவச ஐடியாக்கள்

1. என்ன தான் ஆஸ்கர் ரேஞ்சுக்கு படம் எடுத்தாலும் பக்தி துதி பாடல்கள் கண்டிப்பா வேணும் ஆழ்வார்பேட்டை ஆண்டவா ஏற்கனவே போட்டாச்சு..இந்த தபா கோபாலபுரம் கோபாலான்னு புதுசா ஒரு பாட்டு போடுங்க. ’கோபாலபுரம் கோபாலா கலகசனை கொஞ்சம் பாருப்பா’ன்னு ஆர்ம்பிச்சா சூப்பரா இருக்கும்..

அப்படியே ஒரிஜினல் கோபாலபுரம் பெரியவர் ஆளுங்க கடுப்பாகி கோர்ட்ல கேஸ் போடுவாங்க..படத்துக்கு சரியான விளம்பரம்...அப்படியும் கேஸ் போடலாயா விடுங்க சாப்ட்வேர் ஆளுங்களை
அமெரிக்க கை கூலின்னு திட்டறமாதிரி சீன் வைங்க . ..கண்டிப்பாக கேஸ் போடுவாங்க..

2. படம் கதை என்ன, ரொம்ப சிம்பிள் ஒரு வயசான ஆளு குண்டு வைக்கிறாரு..போலிஸ் கன்பியூஸ் ஆகுது. இதை மாத்தி யோசி பார்முலாபடி அதான் ஹேராம் தசாவதாரம் பார்முலா படி நீங்களே குண்டு வைக்கிறீங்க..அதை நீங்களே கண்டுபுடிறீங்க.. இரண்டு வேடம் ஆச்சு.. இரண்டு வேடத்துக்கும் ஒரே மாஸ்க்....
மூணாவது மாஸ்க் கிருஸ்து பிறப்புக்கு முன் இந்தியாவில் நடந்த உண்மை சம்பவம்ன்னு ஏதாச்சும் எடுத்து உடலாம்.. நடுவுல மானே தேனே பொன்மானே அபிராமி உதயம் தியேட்டர்ன்னு டயலாக்..தியேட்டர்ல எவனுக்கும் கதை புரிய கூடாது..புரியற மாதிரி இருந்தா உங்க இமேஜ் என்னாகும்..


உலக நாயகன் படம் நிஜமாகவே உலக தரம்ன்னு அதான் நமக்கு மட்டும்தான் புரியலன்னு அவனவன் தியேட்டர் வாசலில் தலைவா கலக்கீட்ட உலக தரம்ன்னு பில்டப் கொடுத்து கொடுத்து படத்தை ஓட வைச்சுருவாங்க.

3. ஆஸ்கர் உலக தரம் இல்லை அமெரிக்கா தரம் மட்டுமேன்னு ஏ ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் கிடைச்ச வயித்தெரிச்சல்ல ஏதோ பேசிட்டிங்க.. நீங்களும் ஹே ராம் படம் ஆஸ்கர் விருதுக்காகதானே எடுத்தீங்கன்னு எவனாச்சும் வேலை இல்லாதவன் கேள்வி கேக்க போறான்..

கேட்டா பதில் சொல்லியே ஆகனும்...படத்துல பஞ்ச் டயலாக் வைக்கிறோம்.. நானே விருது எனக்கு எதுக்கு விருந்துன்னு ஸ்கீரின்ல நீங்க சொன்னா க்ளாப்ஸ் ல தியேட்டரே அதிரும்..சில பேரு அதை காமேடின்னு நினைச்சு சிரிப்பாங்க விட்டு தொலைங்க நீங்க பார்க்காத தோல்வியா??

இந்தி தசாவதாரம் 5 நாளில் தியேட்டரை விட்டு பறந்து ஓடிய போது அவங்களுக்கு ரசனை இல்லைன்னு நமக்கு நாமே திட்டத்தின் படி தயாரிப்பாளருக்கு நாமம் போடலையா ..லூஸ்ல விடுங்க ஜி..

4. வழக்கம் போல உங்க பட செண்டிமெண்ட் படி சம்பந்தம் இல்லாம நாத்திகம் பெரியாரு இப்படி எல்லாம் டயலாக் வைங்க...வழக்கம் போல படம் வெளியே வருவதற்க்கு முன்னரே ஆளு வைச்சு கோர்ட்ல கேசு போட்ட வைங்க..படம் சூப்பர் டூப்பர் ஹிட்

5. தசாவதாரம் Angels and Demonsல் சுட்ட கதையானாலும் சூப்பரா உட்டாலங்கடி பண்ணி எவனும் கண்டு புடிக்க முடியாதபடி செஞ்சீங்க..எப்படி முடியும்..எவனுக்கும் படத்துல ஒன்னும் புரியல..சரி முத தடவ தான் படம் புரியல..இரண்டாம் தடவை பார்த்தாலவது புரியும்ன்னு தியேட்டருக்கு வருவான்..ரீப்பீட் ஆடியன்ஸ் படம் சூப்பர் ஹிட்...

6. மோகன்லால் போன்ற ஆளுங்க நிஜமாகவே நல்லா நடிப்பாங்க..நடிக்கற மாதிரி ஓவர் ஆக்டிங் போடமாட்டங்க.. ரொம்ப ரொம்ப டேஞ்சரு.. ஹே ராம்ல ஷாருக்கான் மேட்டரை எப்படி டீல் செஞ்சீங்களே அதே போல மோகன்லாலை டீல் செய்யுங்க..

7. Wednesday படத்துல பாட்டே இல்லை.. உங்க படத்துல பாட்டு இல்லைன்னா குருதி புனலுக்கு ஆன கதி தான் இதுக்கும்..வைரமுத்து வாலி ரெண்டு பேரையும் கோபாலபுரம் அழைச்சுட்டு போங்க..அங்க அவங்க ரெண்டு பேரையும் கோபாலபுரம் பெரியவரை வாழ்த்தி கவிதை எழுது சொல்லுங்க.. உலகில் பிறந்த அத்தனை கவிஞர்களும் தோத்துடுவாங்க..

அப்படியே அந்த கவிதையை உல்டா பண்ணி அங்கங்க உலக நாயகனே காலத்தை வென்றவனே செவாய் கிரகத்தில் குரங்கு பிடித்தவனேன்னு வார்த்தைகளை மாத்தி போட்டு ஒரு குத்து பாட்டை போடுங்க.. கே எஸ் ரவிக்குமார் முதல் பல பேரு வலிப்பு டான்ஸ் ஆட ரெடியா இருக்காங்க..


8. மறக்காம உங்க ரெகுலர் மேட்டர்களான தாடி சந்தான பாரத்திக்குக்கு ஒரு ரேப் சீன், நீங்க ஏதாச்சும் ஏதாச்சும் தூணில் இடித்து விழுவற சீன், நீங்க அழுது கிட்டே சிரிக்கற சீன், இதை எல்லாம் வைச்சுடுங்க..என்ன சின்ன குழந்தைங்க அம்மா வீட்டுக்கு போலாம்மான்னு அழுவும்..
அவங்களை சரி பண்ண ஒரு மாஸ்க் கேரக்டர் வைச்சு காமேடின்னு நினைச்சு நீங்களே ஏதாச்சும் டயலாக் பேசுங்க.. காமேடின்னா மெட்ராஸ் பாசையில் பேசுவது தானே..


9.கடைசியா படம் பார்த்துட்டு வந்து எவனாவது கடுப்பாகி ப்ளாக்குல விமர்சனம் எழுதினா உங்க பார்முலா படி என்ன சொல்றீங்கன்னு புரியாம திட்டுங்க.. எல்லாரும் அப்பீட்டு ஆயிடுவாங்க.. நீங்க தான் உலக நாயகன் நீங்க தான் உலகத்தில் சிறந்த நடிகர் எவனாலும் அடிச்சுக்க முடியாது..

இன்னும் ஐடியா ஏதாச்சும் வேணும்ண்ணா உங்க ஹேராம் குணா ஆளவந்தான் போன்ற காவியங்களை நீங்களே பாருங்க...

Sunday, June 7, 2009

கண்டதும் கேட்டதும்

போனவாரம் landmarkல் புத்தம் புதுசா ஒரு புக் வாங்கினேன்.. 'weekend hangouts around Bangalore'.. வழக்கம் போல புக் வாங்கியதோடு நிறுத்தி இருக்கலாம்..விதி யாரை விட்டது..புத்தகத்தில் இருந்த படங்களை பார்த்து எடுறா வண்டியைன்னு மேல்கோட்டை பயணம் முடிவானது.

கூட புதுசா Alto வாங்கிய என் அப்பாவி நண்பன்.

.
மேல்கோட்டை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான இடம். 'தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா'ன்னு சூப்பர் ஸ்டார் சல்யூட் அடிப்பாரே அந்த இடம் தான்.. ரொம்ப ரீஜண்டா ஆனந்த தாண்டவம் படத்தில் ' கனா காண்கிறேன் கண்ணா ' பாடலும் இங்கு தான் படமாக்கபட்டது.



ரொம்ப ரொம்ப அருமையான அழகான இடம்.காவிரி கரையில் அமைதியாக ரிலாக்ஸ் செய்ய ஏற்ற இடம்.
வைழ்ணவ ஆலயம்.. தல வரலாறு சோழ மன்னனோடு ஏற்பட்ட தகராற்றில் ராமானுஜர் 14 வருடங்கள் வனவாசம் இங்கே தான். அவரால் ஏற்படுத்தபட்ட பூஜை நியதிகள் இன்னமும் இந்த ஆலயத்தில் தொடர்கிறது.. குமுதம் பக்தி தொடர்சியாக படிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆலயம்.



தமிழ் படங்களின் ஆஸ்தான பஞ்சாயத்து செய்யும் இடம்....இப்போ பருவ மழை காலம் ..இரண்டு தூண்களுக்கும் நடுவே ஒரு கயிற்று கட்டிலை கட்டி நிம்மதியாக தூங்கலாம்..

my dear tourism department..இந்த கோரிக்கையை கொஞசம் கவனிக்கவும்..

மேல்கோட்டை எங்கே இருக்கிறது..

மைசூர் தும்கூர் சாலையில்..மைசூரில் இருந்து 50 கிலோ மீட்டர் முதல் வழி இல்லையென்றால் பெங்களூர் மைசூர் சாலையில் வலது பக்கம் மாண்டியா வழியாகவும் கன்னடா மாத்தாட தெரிந்தால் சவுரியமாக போகலாம்..

வெறும் கோவில் மட்டும் தானா??

காவிரி ஆற்றில் மீன் பிடிக்க தெரிந்தால் அல்லது மீன் பிடிக்க தெரிந்த மாதிரியாவது சீன் போடலாம்.. பருவ மழை காலத்தில் பயணம் செய்தால் எங்கு காணினும் பச்சை நிறமே.

போகும் வழியில் கண்ணில் பட்ட காட்சிகள்...


***************************************************


forum mall ல் சுற்று சூழல் பாதுகாப்பு தினத்திற்க்காக பேப்பர் கோப்பைகளை வைத்தே ஒரு பெரிய்ய்ய அழகான பட்டாம் பூச்சி செய்து பார்வைக்கு வைத்து இருந்தார்கள்.. நம்ம பொது ஜனம் பக்கத்துல இருக்கும் மெக் டொனால்ஸில் ப்ளாஸ்டிக் பேப்பரில் பர்க்கர் take away வாங்கி இதை பார்த்து கொண்டே ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

Wednesday, May 20, 2009

நாட்டு நடப்பு - 20.05.2009


இந்த வருடமும் வழக்கம் போலவே மே மாதத்தில் பெங்களூரில் pre monsoon ஆரம்பித்து விட்டது, இனி தினமும் மாலை நேர மழை சில நாள் சாரல் மட்டும்..நனைந்து கொண்டே செல்வது எத்தனை சுகம் :)))))))))

*****************************

சர்வம்...
நல்ல கதை ...மோசமான திரைக்கதை...
நல்ல ஒளிப்பதிவு

அப்புறம் சொல்லி கொள்ளும் படியான சில காட்சிகள் சில பாடல்கள்..
அதுக்கு மேல..அவ்வ்வ்வ்வ்வ்
ஆர்யா வசனம் பேசும் போது இப்பவே ஓடி போய்டலாமான்னு பல தடவை தோணிச்சு.....

படம் எடுங்கப்பா வேணாங்கலே அதுக்காக இப்படி எல்லாம் டார்சர் செய்ய கூடாது ...முடியல

****************************************

பங்கு சந்தை எந்த வித பலமான காரணமும் இல்லாமல் மேலே செல்கிறது.. மன்மோகன் ஜெயித்தாரு ...சரி அதுக்காக 100 புள்ளி ஏறினால் நன்றாக இருக்கும்.. 2000 புள்ளி ஏறினால்...

எனக்கு என்னவோ இன்னும் ஒரு correction எப்ப வேண்டுமானலும் வரும் என்றே தோண்றுகிறது,

**********************************************

Thursday, May 7, 2009

புதிய வானம் புதிய பூமி


போன வார கடைசியில் லட்டு மாதிரி மூணு நாளு லீவு வுட்டாங்களா என்னா பண்றது ஏது பண்றதுன்னு தெரியாம முழுச்சிகிட்டு இருந்தேன்..பெங்களூர் ஊரே காய்சல் வந்து காலியானது போல இருக்கும்..சரி பசங்களோட வயநாடு போகலாமன்னு முடிவு செய்து வெற்றிகரமாக போய் வந்தாச்சு.



வய நாடு - வயல் நாடு என்பது வய நாடாக மருவியது.. கர்நாடாகா கேரளா எல்லையில் இருக்கும் அழகான கேரள மாவட்டம். மேற்க்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

எங்கு பார்த்தாலும் அடர்ந்த காடு , தேயிலை தோட்டம் மேற்க்கு தொடர்ச்சி மலைக்கே சிகரம் என இந்த இடத்தை சொல்லாம்.

ஊட்டி கொடைக்கானல் அளவிற்க்கு கோடையில் வெயில் தெரியாத அளவிற்க்கு இங்கு தட்ப வெட்பம் இருப்பதில்லை.. இருந்தாலும் பரவாயில்லை...40 ‘யில் காய்வதற்க்கும் 30’ யில் காய்வதற்க்கும் வித்யாசம் இருக்குல்லே..

ஜின் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நல்ல சீதோஷ்ணமாம் நாங்க போனது மே மாதத்தில் ம்ம் பரவாயில்லை..



எப்படி போகலாம்

மைசூரில் இருந்து 120 கிலோ மீட்டர்.. அல்லது கோழி கோட்டில் இருந்து 60 கிலோ மீட்டர்

என்னதான் பார்க்கலாம்



தேயிலை தோட்டங்கள், பானாசுரா தோட்டம், செம்ப்ரா peak, எடக்கல் குகை,சூச்சிபுறா அருவி, முத்தங்கா சரணாலயம்,பூக்கோடல் ஏரி, லக்கடி அருவி ( இங்கு தான் காவிரியின் கிளை நதியான கபிணி உருவாகிறது)..இப்படி சொல்லிகிட்டே போகலாம்


முன் ஒரு காலத்தில் வீரப்பனின் ஏரியாவ இருந்த பாந்திப்பூர் பக்கம் தான்.. சர்வ சாதரணமாக வீரப்பனிடம் தப்பி பிழைத்த யானைகளை பார்க்கலாம்..

என்ன செல்வாகும்..

இங்கு இருக்கும் ரிசார்ட்டுகள் நம் பர்ஸை பதம் பார்க்கும் அளவிற்க்கும் இன்னமும் வளரவில்லை. இதனால் தைரியமாக போகலாம்..அப்படியே மறந்தும் சேட்டா ரிசார்ட் ரேட் ரொம்ப ரொம்ப குறைவுன்னு சொல்ல வேண்டாம்..

தமிழ்நாடு எல்லையும் அங்க்கே தட்டு படுவதால் சரளமாக அனைவரும் தமிழ் பேசுகிறார்கள்.. மலையாளத்தில் சம்சாரிக்கிறார்கள் கன்னடாவில் மாத்தாடுகிறார்கள்.. so no problem..

south india என்பதால் சாப்பட்டு பிரச்சனையும் இல்லை..



புதுசா கல்யாணம் ஆணவங்க தேனிலவு செல்ல நல்ல இடம்..ஏற்கனவே கல்யாணம் ஆணவங்களும் போய் வயத்தெரிசலை நல்லா கொட்டிகிட்டு வரலாம்..

மலை ஏறுவது பின் இறங்க முடியாம அய்யோடான்னு கதறுபவர்கள் வண்டலூர் சூவோட தங்களின் கோடை பயணத்தை நிறைவு செய்து கொள்ளலாம்..

வேற ஏதாச்சும் டெயில் பீஸ்..

குடிகாரர்கள், டூர் போனால் குடித்தே ஆக வேண்டும் என்ற பாட்டில் விரதம் இருப்பவர்கள் கேரள அரசால் பயங்கரமாக கலாய்க்க படுகிறார்கள்..அங்கே கேரள அரசால் நடத்தபடும் ஒயின் ஷாப்பில் நீண்ட வரிசையில் பொறுமையான நின்று குவார்ட்டர்கள் வாங்குபவர்களை ஆண்டவன் கண்டிப்பாக ரட்சிப்பான்..

எச்சரிக்கை..

கேரளாவில் எல்லா இடத்திலும் குப்பை போடுவது பொது இடங்களில் தம் அடிப்பது சுற்றுலா தளங்களில் பெண்களிடம் வம்பு செய்வது போன்ற வீர தீர காரியங்களுக்கு நன்றாக சுலுக்கு எடுக்கபடுகிறது.



பத்திரமாக பெங்களூர் கொண்டு வந்த சேர்த்த tempo traveler க்கு நன்றி

Saturday, April 25, 2009

பயணங்கள் முடிவதில்லை


புனே - பெங்களூர் பயணம்

..மும்பை - நாகர்கோவில் விரைவு வண்டி..
summer holidays நேரம் ..

வேற எந்த வண்டியிலும் டிக்கேட் கிடைக்கவில்லை..




இந்த வண்டி பெங்களூருக்கு கிருஷ்ணராஜபுரத்திலே ஹாய் சொல்லி விட்டு சேலம் பக்கம் சென்று விடும்..

மும்பை தாராவியோ அல்லது மொத்த திருநெல்வேலியே டிரையினுக்குள் புகுந்து விட்டது போல தோன்றியது.,,

இப்படி தான் அவன் பேச ஆரம்பித்தான்..

இன்னும் 10 வருடங்கள் பின் இந்தியா எப்படி இருக்கும்?
ஏன் அதுக்கு என்ன குறைச்சல் நல்லா இன்னமும் 20 கோடி 30 கோடி மக்கள் சுமையை ஏத்திகிட்டு ஹாயாக மும்பை peak hour sub urban train போல போகும்....

அவர்கள் பேசி கொண்டே சென்று விட்டார்கள்...

கூட்டம் எங்கும் பார்க்கினும் ஒரே மக்கள் கூட்டம்....

எதையும் கண்டுக்காம ஒரு பக்கம் ராம பஜனை மறுபக்கம் சீட்டாட்டம்.. கூட்டத்தோடு திருடர்கள்..எங்கேயும் சேராமல் நடுவில் மக்கள்..

அடுத்த ஸ்டேசன் எப்ப வரும் கொஞ்சம் மூச்சு விடலாம் என்று தவிக்கும் மக்கள்..கொஞ்சம் அசந்தால் நம்மை வண்டிக்கு அடியில் தள்ளி விட தவிக்கும் கூட்டம்...


நினைச்சு பார்க்கவே முடியல..

30,000 - இது ஒரு நாளைக்கு வேலை தேடி பீகாரில் இருந்து தில்லிக்கு வந்து சேரும் கூட்டம்..
25,000 இது உபி + பீகாரில் இருந்து மும்பைக்கு ஒரு நாளைக்கு வேலை தேடி புதிதாக வந்து சேரும் மக்கள் தொகை...

இவங்க வேலைக்கு சாப்பாட்டுக்கு என்ன வழி? தங்க இடம்??
ஏன் சொந்த ஊரை விட்டு பெருநகரை தேடி வருகிறார்கள்??

பீகாரில் தண்ணீருக்கு பஞ்சமில்லை.. ஏன் விளை நிலங்களுக்கும் பஞ்சமில்லை.. ஏன் பீகாரை விட்டு மக்கள் வெளி மாநிலங்களுக்கு படை எடுக்கிறார்கள்???

தில்லியில் கிண்டலுக்காக அடிக்கடி தூ பீகாரி கை க்யா?( நீ என்ன பீகாரியா) என்று சொல்வார்கள்..

புது தில்லியில் இருந்து எதோ ஒரு இடத்துக்கு ஆட்டோவில் சென்றேன்..

ஆட்டோவாலா என்னிடம் மதராஸி சாப்.மீட்டருக்கு மேல போட்டு கொடு என்று சொன்னான்.. நானும் ஏதும் புரியாமல் தூ பீகாரி கை க்யா என்று கேட்டேன்.. ஆட்டோவாலா எதுவும் என்னிடம் பேசவில்லை.. வண்டியை எடுத்து கொண்டு சென்று விட்டான்..

பின் சுற்றம் புறம் என எங்கும் விசாரித்ததில் எந்த பீகார் காரனும் தன்னை பீகாரி என்று சொல்லி கொள்ள பெருமை படுவதில்லை என்று தெரிந்தது.. அதற்க்கு காரணம் ஆயிரம் இருக்கலாம்..

இருந்தாலும் ' தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம் 'என்ற வீர வசனங்கள் ஒலிக்கும் இடத்தில் இருந்து வந்ததால் எனக்கு அவர்கள் செய்கை இன்று வரை பிடிபடவில்லை..

பிரச்சனைகள இல்லாத இடங்களே இல்லை..காவிரி , பாலாறு முல்லை பெரியாறு என தமிழகத்தில் தீர்க்கவே வேண்டாம் எப்போது வேண்டுமானுலும் தூசி தட்டி நாலு பஸ்ஸை எரிக்கலாம் ..உண்ணாவிரதம் இருக்கலாம் தீக்குளிக்கலாம் என்று எப்போதும் கையிருப்பில் இருக்கும் பிரச்சனைகள்..

காவிரி பிரச்சனைக்கு மூல காரணம் - பெருகி வரும் மக்கள் தொகை , உணவு உற்பத்தி அதிகரிக்க கர்நாடகாவில் விளை நிலங்கள் அதிகமாக தண்ணீர் தேவை அதிகரித்தது..

கர்நாடகாவிலும் தமிழ் நாட்டிலும் பல வருடமாக சில பேரு ( காவிரி நதி நீர் குடும்பம் ) சில கோடி செலவு செய்தால்...கர்நாடகாவிலும் தமிழ்நாட்டின் காவிரி நீர் பிடிப்பு இடங்களிலும் நிறைய மழை பொழிய வைக்கலாம்.. தண்ணீர் பிரச்சனை தீரும் என்று கரடி போல கத்தி கொண்டு வருகிறார்கள்..எவனும் கண்டுகிறதே இல்லை..

பிரச்சனை வந்தால் முத்துகுமார் போல மூளை சலவை செய்யபட்ட முட்டாள்கள் தீக்குளிக்க அதை பார்த்து இன்னும் சில பேர் தீக்குளிக்க.... மேடையில் பெரிசா மைக் போட்டு கத்துவார்கள்.. கன்னட வெறியர்களே ...கர்நாடகாவில் அட்ரஸே இல்லாமல் இருக்கும் வட்டாள் நாகராஜ் போன்றவர்களை சூடா பேட்டி எடுத்து ஜீவி விகடன் போடும்.. அப்புறம் கேட்கனுமா?

இங்கே அனைவரையும் அரவணைச்சு மக்களுக்கு நல்லது செயய் தலைவர்கள் இல்லை.. வெறுப்புணர்ச்சியை வைச்சும் மட்டும் அரசியல் செய்யும் ஆட்கள் அதை போலவே மக்களும்..

யாரோ ரெண்டு மலையாளியை பிடிக்கவில்லை என்றவுடன் மலையாளிகளே மோசம் என்று அவர்கள் பரம்பரையை இழுத்து விளையாடும் மக்கள்...

இந்தி பேசுபவர்கள் எல்லாம் வெறியர்கள் என்ற நினைப்பில் தாங்கள் தான் தமிழ் வெறியை முதுகில் சுமக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம்..

மஹாராஷ்டிரா குஜ்ராத்களில் நெடுஞ்சாலைகளில் தார் சாலை போடுவதும் தமிழர்களே..அங்க குப்பை அள்ளறதும் கட்டிட வேலை செய்றதும் தமிழர்களே.

தமிழ்நாட்டில் இருந்து ஏன் கூலி வேலை செய்ய மக்கள் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள் என்ன பிரச்சனை ..தீர்க்க யாருக்கும் நேரம் இல்லை..

இங்க எல்லாம் கூலி வேலை மலையாளியை பார்க்க முடியாது. ..
பிச்சை எடுக்குற மலையாளியை பார்க்க முடியாது பிச்சை எடுக்குற சர்தார்ஜியை பார்க்க முடியாது..

மலையாளி எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர் மக்களை மதிக்கிறாங்க அவங்க கலாசாரத்தை கிண்டல் கேலி செய்வதில்லை.. கூடவே அவங்க மொழியையும் கத்துகிறாங்க...எந்த ஊரில் இருந்தாலும் பிரச்சனையில் சிக்காமல் இருக்காங்க..

இப்படி அவர்களிடம் இருந்து கத்து கொள்ள நிறைய இருக்கும் போது ...சாதி சண்டை மொழி சண்டை என்று படித்தவர்களே வெறுப்பு தேடி அலையும் போது ‘தமிழன் என்பதில் என்ன பெருமிதம் வேண்டி கிடைக்கிறது??...

நேற்று பெய்த மழையில்..

ஜனவரி மாதத்துக்கு அப்புறம் பெங்களூரில் மழையே இல்லை..
ஏப்ரல் மாத வெயில் சென்னைக்கு போட்டிக்கு வரியான்னு கேட்கும் நிலை..

நேற்று பெய்த pre monsoon மழை இந்த மழை போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமான்னு சவால் விட்டு போச்சு..




















பைக்கை சர்வீஸ்க்கு கொடுத்து இருந்தேன்.. ஆட்டோவில் நகர்வலம்..ம் சான்ஸே இல்லை..ரொம்ப சூப்பரா மழையை enjoy பண்ணினேன்..

****************************************************************************

20 நாளாச்சு ..ஒரு இந்தி படம் கூட ரிலிஸ் ஆகவில்லை.. multiplex காரர்களும் சினிமா தயாரிப்பாளர்களும் நீயா நானா விளையாடுவதால் இந்த கதி..

பெங்களூர் பிவிஆர் ஐனாக்ஸ் இன்னபிற multiplexகளில் அயனும் அப்புறம் தெலுங்கு பில்லா படங்களை வைச்சு ஒப்பேத்திகிட்டு இருக்காங்க..

இங்க கேப்டனுக்கு அடிச்சது லக்கி சான்ஸ்..பிவிஆரில் மரியாதை படம் ரிலிஸ் அதுவும் 4 காட்சிகள் வேற..

இன்னைக்கு forum பக்கம் திரிந்த போது சரி மரியாதை பார்க்கலாம் ,,காமேடியா இருக்கும் டைம் பாஸ் செய்யலாம் என்றால் விதி வலியது.. நாளை வரை அனைத்து காட்சிகளும் advanced booked.:)

எத்தனை பேருடா இப்படி கிளம்பி இருக்கீங்க...



Wednesday, April 22, 2009

தேர்தல் வியாபாரம்


ஐந்து வருடம் கடந்து இருக்கலாம்..
ரஜினி ஒரு பிரஸ்மீட்டில் பிஜேபிக்கு தான் என் ஆதரவு..பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்பு நடக்கும் பாலாறும் தேனாறும் ஒன்றாக கலக்கும் என்று சொல்லி விட்டு போனார்.

உடனே முத்தமிழர் அறிஞருக்கு கோபம் பொத்துகிட்டு வந்தது. இதோ பார் என்னோட காங்கிரஸ் கூட்டணியில் கூட இப்படி சொல்லி இருங்கான்ஙன்னு ஏதோ ஒரு துண்டு சீட்டை எடுத்து காட்டினார். முரசொலியில் ஜக்குபாய் மக்குபாய் ஆனது.


யாரும் இபபோது மறந்தும் கூட நதி நீர் இணைப்பு பற்றி மூச்சுகூட விடுவதில்லை.
ஏற்கனவே தண்ணியே இல்லாத காவேரியில் இருந்து ராமநாதபுரம் வரை கமிசன் அடிக்க கால்வாய் கட்டுவதில் காட்டும் ஆர்வம் கூட நதி நீர் இணைப்பில் சுத்தமாக தானே கேள்வி நானே பதில்களில் கூட இல்லை. என்ன நதி நீர் பிரச்சனை எல்லாம் தீர்ந்து போச்ச்சா?

தேர்தல் நேரத்தில் கூட பிரபாகரன் என் ஸ்கூல் மேட்டு நானும் அவரும் ஒரே பொட்டி கடையில் தான் ஒளிந்து நின்று திருட்டு தம் அடித்தோம் என்ற ரேன்சில் தான் பிராசாரமே நடக்கிறது.



தேர்தல் நேரத்தில் ஒரு பந்த் வேற,, அதுவும் அரசே நடத்தும் பந்த்...ஒரு நாள் வேலைக்கு போகாமல் இருந்தால் முழு நாள் பட்டினி என்ற நிலையில் தான் தமிழ்நாட்டில் இன்னும் அரைவாசி மக்கள் இருக்கிறார்கள். இவர்கள வாழ்க்கை நிலையை உயர்த்த யாரும் உண்ணாவிரதம் தீக்குளிப்பு சரி அது கூட வேணாம் டீ கூட குடுக்கறது இல்லை..


தன் வூட்டுக்கு பக்கதுல் சாப்பாட்டுக்கு வழியில்லாம கழ்டபடற மக்களுக்கு ஏதுவும் செய்ய தெரியாத ஆளுங்க எல்லாம் அடுத்த நாட்டுக்கு சவால் உடறதை பார்த்தா சிரிப்பா இருக்கு

நாட்டு மக்களுக்கு என்ன செய்வேன் என்று யாரும் ஏதுவும் சொல்வதாக தெரியவில்லை.. இவங்க பீலிங்க்ஸை எல்லாம் பார்த்தா ஒரு நாளைக்கு பத்து சிவாஜி கணேசன் படம் பார்த்த திருப்தி...



டீவி பொட்டி தரேன் கேஸ் ஸ்ட்வ் தரேன் எலக்சனுக்கு முத நாளு கரன்சியால் அடிக்கிறேன்னு எல்லாம் ஒரே பார்முலாதான்..

இவங்களை திருத்த முடியாது..

ஒரு நல்ல நாட்டுக்கு முக்கிய தேவை நல்ல தலைவர்கள்.
இந்த தேர்தலில் சரத்பாபு, டிராபிக் ராமசாமி போன்ற தன்னலம் இல்லாத தனி நபர்கள் போட்டி இடுவது ஆறுதலாக இருக்கிறது.

இவர்களுக்கு டிபாசிட் கூட கிடைக்க வேண்டாம்.. குறைந்தது 1% வாக்கு வாங்கினால் கூட போதும்.. மாற்றங்கள் ஒரே நாளில் இன்ஸண்ட் காபி போல வந்து விடாது.. நம்மிடம் தான் ஆரம்பிக்க வேண்டும்..
நீங்க சென்னையில் வசிப்பவராக இருந்தால் உங்கள் தொகுதியில் டிராபிக் ராமசாமி அல்லது சரத்பாபு பொட்டி இட்டால் 49ஓ போடும் மூடில் இருந்தால்...இவங்களுக்கு ஓட்டு போட கன்சிடர் செய்யலாமே..

Friday, April 3, 2009

அயன் - விமர்சனம்


ம்.. எத்தனை நாள் ஆச்சு இப்படி புது மாதிரியான கதை தளத்தில் சினிமா பார்த்து...



ப்ளைட் சீசன் டிக்கேட் எடுத்து பறந்து பறந்து கடத்தல் குருவிகள் தான் கதை களம்.. அப்புறம் அடிச்சு தூள் கிளப்பலாம் தானே..





குருவியாக சூர்யா அவரின் பாஸாக பிரபு..அப்புறம் போட்டி தலைவராக ஒரு சேட்..வியாபார சண்டை .. அருமையான 4 பாடல்களுக்கு அழகான தமன்னா..ஆப்பிரிககா சேஸிங்...கடத்தல் ..பழிவாங்கம்.. அம்மா செண்டிமெண் கஸ்ட்ம்ஸ்...

சூர்யா படம் முழுக்க சுறுசுறுப்பாக வருகிறார்..சண்டை காட்சிகளில் நல்ல முன்னேற்றம்.. காங்கோ நாட்டு சண்டை காட்சி அபாரம்...

படத்தின் இன்னோரு ஹீரோ ஹாரிஸ் ஜெயராஜ் ..அருமையான பாடல்கள் சிறப்பான பிண்ணணி இசை...

படத்தின் முதல் பாதி படு வேகம்..... ம் எல்லா புது ஐடியாவையும் போட்டு சூப்பரா எடுத்து இருக்காங்க.. கடத்தல் குருவிகள் உலகம் பேசும் படங்கள் குறைவு என்பதால் ப்ரேஷ்ஷான காட்சிகள்..

அதுவும் கடத்தல்கள் ஒவ்வோன்றும் சாதாரண அப்பாவியான நமக்கு ஜிலீர் ஜிலீர்ங்குது..

கூடவே லைட் காமேடி ..சரி டா நல்ல படம் தான்னு நினைச்சா..
இரண்டாம் பாதி தான்..

செண்டிமெண்ட்..க்ரைம்..எங்க போறதுன்னு தெரியாம சரி இரண்டு பக்கமும் வண்டியோட்ட சூப்பரா கொட்டாவி வருது...
எல்லா ஐடியாவையும் முதல் பாதியிலே மிச்சம் வைக்காம் எடுத்தாசே....

அப்புறம் க்ளைமேக்ஸ் வரும் போது திரும்ப பரபரப்பு..என்ன பண்றது அதுக்கள்ள படம் முடிஞ்சு போச்சே.. இரண்டாம் பாதியில் கத்திரி போட மறந்து போச்சு போல..

விஜய் ’ஒரு புதிய கீதை’ன்னு ஒரு டப்பா படத்துல சூப்பர் டூப்பர் உட்லாலங்கடி அதாவது எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் கேரக்டர் செய்து இருப்பார்.. சம்ம காமடியா இருக்கும்..

இந்த படத்தில் சூர்யாவிற்க்கும் அதே போல கேரக்டர்.. ஆனா சூர்யா சம்ம வெரைட்டி செய்து படத்தை தாங்கி நிறுத்துகிறார்..

அது என்ன டைட்டில் அயன்..படத்தில் சூர்யா அயன் பாக்ஸை தவிர எல்லாத்தையும் கடத்துகிறார்...வுட்டா நம்ம சட்டை பேண்ட்டை கூட கொடியில் இருந்து உருவி கடத்திடுவாங்க போல..

தமன்னா வழக்கம் போல தமிழ் சினிமாவிற்க்கே உரிய இலக்கண அறிவியல் விதிகளை மீறாமல் வருகிறார்..


கடத்தல் பாஸாக பிரபு ..என்ன கொடுமை சார்..கல்யாண் ஜீவல்லர்ஸில் rate card காட்டுபவரா இவரு..


படத்தின் வில்லன் சம்ம வெயிட்தான்..
ஆனா வெயிட்டான கதாப்பாத்திரம் இல்லையே....

ஒவ்வோரு தபாவும் அவரு தோற்க்கும் போது டேய் என்னை perform செய்ய விடுங்கடான்னு அவரு மனசுக்குள்ள கத்தறது போல இருக்கு. ..

சன் டிவி காரங்களுக்கு கொண்டாட்டம்.. டப்பா பாடல்களை வைச்சே ஒப்பேத்தி வந்தவங்களுக்கு சும்மா திருப்பதி லட்டு போல சூப்பர் பாடல்கள்...

படதொகுப்பு..கேமரா எல்லாம் அருமை..அருமையோ அருமை..

ஆண்டனியின் படத்தொகுப்பு வேகம் படத்தை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறது.. கேமராமேன் பிரபுவின் ஆளுமை கனகச்சிதம்

இயக்குநர் கேவி ஆனந்த் திறமை பல இடங்களில் நன்றாக தெரிகிறது.. எழுத்தாளர்கள் ‘சு’’பா’ திரைக்கதையும் அருமை..

இரண்டாம் பாதியை கொஞ்சம் தட்டி சரி செய்து இருந்தால் படம் வெகு அருமையாக வந்து இருக்கும்...இப்பவும் மோசம் இல்லை.. சன் டிவியில் விளம்பரம் போடமல் கூட 100 நாள் ஓடும்..

கோடைக்கு ஏத்த சரியான தீனி..

படத்தின் முதல் பாதி..சூர்யா..இசை ..பாடல்கள்..கதை தளம்ன்னு அடிச்சு தூள் கிளப்பி இருக்காங்க... பல நல்ல மேட்டர்களும் இருக்கு..

ஒரு முறை பார்க்கலாம்...நிறைய நேரமும் பணமும் இருந்தால் பல முறை ரசிக்கலாம்...

Friday, March 6, 2009

நாட்டு நடப்பு

வழக்கம் போல இன்னொரு தேர்தல்..சென்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் என்ன வித்யாசம் என்று கேட்டால்    ஒன்றும் சொல்ல தோண்றவில்லை..

என்ன ஐந்து வருடம் முன்னாடி சொந்த பிரச்சனைகளே அதிகம் இருக்கும்...
செய்திகள் படிக்க நேரம் இருக்காது..
மும்பை அந்தேரியில் இருந்து செம்பூர் செல்லும் ரயில் பயண நேரத்தில் காதில் விழும் செய்திகளே அரசியல்....
தேர்தல் முடிவுகள் வந்த போது ஏதோ எனக்கு முன்னமே தெரிந்தது தானே என்று பெரிதாக ஆர்வம் 
இல்லை..
அன்றையை ரயில் பயணங்கள்... 
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களோடு செல்லும் போது அரட்டைகள் கருத்துகள் முடிவுகள் இப்படி தான் இருக்கும் என யூகிக்க முடிந்தது.

நம்மை சுற்றி இருக்கும் சமூகம் ஒவ்வோரு ஆறு மாதமும் மாறி கொண்டே வரும்..நான் மட்டும் விதி விலக்கு இல்லையே..
அரசியல்வாதிகள், அரசாங்கம் போராட்டம் ஈழம் இலங்கை கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்கள தொடர்பாக அலுவகத்தில் யாரிடமும் பேசிய ஞாபகம் இல்லை.
ஏன் என் நண்பர்கள் யாரும் அது தொடர்பாக பேசியது போலவும் தெரியவில்லை..
ஆனால் எல்லாரும் இந்த முறை கண்டிப்பாக ஓட்டு போட போகிறோம்..ஜாகரன் அமைப்பு வழியாக அனைவருக்கும் ஓட்டு உரிமை கிடைத்து இருக்கிறது..

அதை வீணாக்க கூடாது என்ற கவலையும் கூடவே ..

***********************************************

மை டியர் குட்டிசாத்தான் படம் ஞாபகம் இருக்கா?

ஐஸ் கிரீம், எரோ ப்ளேன், மின் விசிறி என எல்லாம் நம் அருகே தொட்டு விடும் தூரத்தில் வந்து விட்டு போகுமே...

செல்ல குழந்தைகளே என்ற பாடலில் குழந்தைகள் தலைகீழாக நடந்து சென்று மின் விசிறியில் தொட்டு செல்வார்களே

தமிழில் ( மலையாளம்) வந்த முதல் 3டி படம்..ஏன் இந்தியாவில் வந்த முதல் 3டி படம் இதுவே....

குழந்தைகளுக்காவே எடுக்கபட்ட படம் என்றாலும் அந்த படம் பார்க்கும் நேரத்தில் அனைவரும் குழந்தைகளாகவே ஆனது தனி கதை..

அப்பச்சன் தயாரிப்பில் எடுக்கபட்ட படம்... இந்த படத்தில் சில காட்சிகளை தாம்பரம் கிழ்கிந்தா தீம் பார்க்கில் போட்டு காட்டுகிறார்கள்...

இந்த படம் 1997ல் டிடிஎஸ் ஒலி மாற்றி கேரளாவில் மீண்டும் ஒரு முறை வலம் வந்தது..அப்பவும் சூப்பர் ஹிட்டாம்..

இந்த படத்தில் சில காட்சிகள் you tubeல் கிடைக்கிறது.. 25 வருடதிற்க்கு முன் எந்த வித பெரிய தொழில்நுட்பமும் இல்லாமல் இதை போல

ஒரு மாயஜால படம் எடுக்க மிகவும் துணிவு + துட்டு இருக்க வேண்டும்..

மீண்டும் ஒரு முறை இந்த படத்தை தமிழில் இன்று மறு வெளியீடு செய்தால் கண்டிப்பாக 100 நாள் ஓடும்..

******************************************************

லலித் மோடி இந்த வருடமும் IPL கிரிக்கேட் போட்டிகள் நடத்தியே தீருவேன் என்று டிவி சானல்களில் முழுக்கும் போது கிரிக்கேட் நடத்தி 

இந்த பூலோகத்தில் அனைவரின் கிரிக்கேட் பசியை தீர்க்க வந்த மகான் போலவே தோன்றுகிறது..IPL போட்டிகளின் வெற்றிக்கு காரணம் 

தினமும் பரபரப்பு எதிர்பார்க்கும் மக்களின் அறிவு பசியே.. அது இந்த தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளின் மக்களுக்கு கிரிக்கேட்டை விட 
அதிக entertainment குடுப்பார்கள்.. இந்த நேரத்தில் போட்டிகள் நடத்தினால் .. IPL பணால் ஆகும் என்றே தோன்றுகிறது

***********************************************
சென்ற வாரம் ஞாயிற்றுகிழமை  பெங்களூரு தமிழர்கள் முண்ண்னியோ அல்ல்து ஏதோ ஒன்று 200 அல்ல்து 300 பேர் இலங்கை தமிழர்கள்
கொல்லபடுவதை நிறுத்த வேண்டும் என்று ஊர்வலம் சென்று கொண்டு இருந்தார்கள்....பாதி பேர் தர்மபுரியில் இருந்து காலையில் இருந்து பஸ் பிடித்து
வந்து இருப்பார்கள் போல..அப்புறம் இந்த மார்ச் மாத வெயிலில் பெங்களூர் காரன் மதியம் இரண்டு மணிக்கு கண்டிப்பாக ஜாக்கேட் போடமாட்டான்..


கூட்டத்தில் சில பேர் சோனியாவை தரக்குறைவாக திட்டி போர்டுகள் வைத்து இருந்தார்கள் கூடவே பிரபாகரன் படமும் புகழ்மாலையும்..
சிவாஜிலிங்கம் எனற இலங்கை எம்பி பேசி கொண்டு இருந்தார்....

ஊர் விட்டு வேலைக்கு வந்தாலும் திருந்தவே மாட்டாங்கப்பா..
இப்படியே கன்னடர்களை திட்டுவது சீண்டுவது இந்தி, தெலுங்கு மலையாளி என இந்தியாவில் இருக்கும் எல்லாரையும் திட்டுவது..
திருவள்ளுவருக்கு பெங்களூரில் சிலை வைப்பது போன்ற சமூகத்தின் ஏழ்மையை அகற்றும் புணித காரியங்கள் செய்வது என தமிழர்களுக்கு என தனி ஒரு குணம் உண்டு,.

பெங்களூரில் பல இடங்களில் தமிழே உலகின் முதன் மொழி என்று யாரோ ஒரு கிறுக்கன் தாரால் கிறுக்கி வைத்து இருப்பான்.. கண்டிப்பாக அவனும் இந்த கூட்டத்தில்
இருப்பான்...அவனை கண்டிப்பாக ஒரு நாள் பார்க்கனும்.. உடனே அவனை தமிழ் தெரியாத ஒரு பத்து பேர் கூட ஒரு மாசம் அடைச்சு வைக்கனும்..அப்புறம் தார் எடுத்து 
கொண்டு பெங்களூர் நகர சுவர்களை தேடி போவாரா?