Saturday, January 31, 2009

இப்படிக்கு செய்திகள்

சென்ற ஞாயிறு பெங்களூர் போரம் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் food court முழுவதும் எரிந்து விட்டது. எத்தனை பேர் சாபமோ :))

வீணா போன நெய் ரொட்டிக்கு 500 ரூபா சொல்லி எத்தனை பேர் பர்ஸை பதம் பார்த்து இருப்பாங்க..

தீ விபத்தில் யாருக்கும் காயம் கூட இல்லை. தீ அணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் நன்றாக இருந்ததால் எல்லாரும் happy.. என்ன PVR ல் பாதி படத்தோடு எல்லாரையும் திரும்ப அனுப்பி விட்டார்களாம். முழு படமும் பார்க்க முடியவில்லையாம்..

இது இன்றைய நிலை.. சனி கிழமைகளில் நடக்கவே முடியாத அளவிற்க்கு பரபரப்பாக இருக்கும் போரம் இன்றைக்கு பொது வேலை நிறுத்தம் செய்த்தது போல இருந்தது..

எல்லாம் அக்னி பகவான் திருவிளையாடல் தான்.


landmarkல் இன்றைக்கு தான் மிதிபடாமல் பெரிய Qவில் நிற்க்காமல் எல்லா சிடியையும் புரட்டி பார்த்துட்டு அப்படியே வெளியே வரமுடிந்தது :)

*- *

பொதுவாக கர்நாடகா பதிவெண் வண்டிகளில் சிலவற்றில் கர்நாடகா மாநில கொடி இருக்கும்.. இன்றைக்கு முதல் முறையாக ஒரு தில்லி பதிவு வண்டியில் கர்நாடகா கொடி இருந்ததை பார்த்தேன்.. பெஙளூரில் கர்நாடகா கொடி இல்லை என்றால் காரை உடைத்து விடுவார்கள் என்று யாராவது புரளி கிளப்பி இருப்பாங்களோ !!


Tuesday, January 27, 2009

நாட்டு நடப்பு


ஸ்லம் டாக் மில்லியனர் -

சாதாரணமாக இதை போல படங்களை போஸ்டரில் கூட பார்க்க மாட்டேன்.
ஏ ஆர் ரகுமான் பின் ஆஸ்கர் கனவுகள் அலுவலகத்தில் அரட்டையில் கேட்டது இணையத்தில் படித்தது என பல சக்திகள் இந்த படத்தை பார்க்க தூண்டியது.

மும்பை சேரி வாழ்க்கையை படமாக காட்டியதில் சில மிகை இருந்தாலும் பலவும் உண்மையே. மும்பையில் ஒவ்வோரு முறை விமானம் தரையிரங்கும் போது இரு பக்கமும் நெருக்கமான கூடுகளை போல சேரிகளும் ஆஸ்படாஸ் கூரை வேய்ந்த குடிசைகளுமே இரு புறமும் தென்படும்.

மாகிம் தாராவி என மும்பையில் சேரிக்களுக்கு பஞ்சமில்லை. தனி தேசம் தனி வாழ்க்கை..

இந்த சேரி மக்களின் வாழ்க்கையை இது வரை நான் எந்த இந்திய படத்திலும் பார்த்தது இல்லை.


இந்தியாவின் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை இதை விட சிறப்பாக காட்ட முடியாது.

- ஜெய் ஹோ

_*_

பொருளாதார மந்த நிலையால் பெங்களூரில் வீடு வாடகை முதல் புது வீடு விலை வரை எல்லாம் மலிவாகி விட்டது என டைம்ஸ் ஆப் இந்தியா முதல் சிக்னலில் பேப்பர் விற்பவர் வரை அனைவரும் கூவி கூவி சொல்றாங்க..

விசாரித்து பார்த்தால் 10,000 வாடகை வேண்டாம் ,,9,500 மட்டும் போதுமாம்..
double bedroom apartment கூட விலை குறைப்பும் இதே கதை தான்.. பெரிதாக விலை குறைந்தது போல தெரியவில்லை.. ஆனால் விலை குறைப்பு ஏற்பட்டது போல ஒரு hype அவ்வளவுதான்..

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் உண்மையான தாக்கம் இது வரை இந்தியாவில் அவ்வளவாக உணரபடவில்லை என்பதே நிஜம்.

இனி வரும் மாதங்களில் கூட பெரிதாக மாற்றம் இருக்காது என்றே நினைக்கிறேன்..

_*_


விகடன் இதழ் + அதன் இணை இதழ்களின் தரம் படு கேவலமாக சென்று கொண்டு இருக்கிறது. முன்பு ஆனந்த விகடனை படித்தால் சில புதிய விழயங்களை கற்று கொள்ளலாம் ஆனால் இப்போதோ அதை படித்தால் இருப்பதும் கழண்டு விடுமோ என்ற பயமாக இருக்கிறது.. மருதன் என்பவர் எழுதும் பாஸ்போர்ட் என்ற கட்டுரைகள்.. தமிழில் பிளாக் எழுதுகிறேன் என்று சாதி சண்டை போடும் எழுத்துகளே மேல் என இவர் எழுதுவதை படிக்கும் போது தோன்றுகிறது..

ஜீவி ..எப்பவுமே உடான்ஸ் தான்.. இப்ப இலங்கை பிரச்சனை வேற.. சில வாரமாகவே பிரபாகரன் புகழ் பாடல்தான்...கூடவே அவரின் மகன் கதை வேறு!!

இனி வீரப்பன்(ர்) , நொச்சி குப்பம் வீரமணி ஆட்டோ சங்கர் போன்ற மறைந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை விகடன் தொடராக வெளியிடலாம்..

அதை எழுத வெல்டிங் சங்கர் போன்ற எழுத்தாளர்களை எழுத சொல்லாம்..

இதை எல்லாம் பரவாயில்லை ஏதோ டைம் பாஸ் என்று பொறுத்து கொள்ளலாம்..

. தேவை இல்லாமல் இந்தியா ராணுவத்தை வம்புக்கு இழுத்து இந்திய விமான படையையும் கேவலமாக எழுதி இருக்கிறது விகடன்.

தமிழ் வெறியை தூண்டி விடுவது ஏதோ தமிழர்கள் மட்டும் தான் உலகில் அனைத்து பேராலும் அடிமை படுத்தபடுவதை போல மாயையை ஏற்படுத்துவது போல சில்லறை வேலைகளை அரசியல்வாதிகள் தான் செய்து கொண்டு இருந்தார்கள்.

இப்ப ஜீவி முறை போலும்..

Friday, January 16, 2009

அவன நிறத்த சொல்லு ...

வர வர உண்ணாவிரதம் எல்லாம் மாட்னி ஷோ பார்பது போல ரொம்ப சுலபமாக போச்சு.. காந்தி பயன்படுத்திய மிக பெரிய ஆயுதத்தை ரொம்ப ரொம்ப கேவலபடுத்துகிறார்கள்.

உண்ணாவிரதம் என்பது அடுத்தவரை மிரட்டியோ அல்லது தான் நினைத்தது நடக்க வேண்டும் என்று பிளாக் மெயில் செய்யும் ஒரு வழி முறை அல்ல.

தான் நினைத்த காரியத்தை சாதிக்க ஆயிரம் வழிககள் இருக்கின்றன.

அரசியல்வாதிகளே தயவு செய்து உண்ணாவிரதம் போன்ற சாத்வீக முறைகளை கேவலடுத்தாதீர்கள்...

அஹிம்சை சாத்வீகம் எல்லாம் முதலில் நம்மில் இருந்தே தொடங்க வேண்டும்.

அஹிம்சை போராட்டம் மட்டும் அல்ல வாழ்க்கை முறையும் கூட..

காந்தியின் போராட்டத்துக்கு வெற்றி தன் வாழ்க்கையாக மட்டும் அல்ல பல பேரின் வாழ்க்கையாக மாற்றி காட்டினார்.

மேலும் எந்த ஒரு சாத்வீக போராட்டத்துக்கும் நியாமான காரணம் இருக்க வேண்டும்.

தவறான காரியங்களை எந்த வித போராட்டமும் நியாயபடித்தி விடாது..

கண்ணில் பட்ட மாற்று தமிழ் இயக்கதினர்களை எல்லாம் கொன்று குவித்த திலீபன் அன்று instant அஹிம்சை வாதி ஆனார் இன்று 'அடங்க மறு' என மேடைகளில் துடிக்கும் திருமாவளவன் அஹிம்சாவாதி ஆகி விட்டார்..

உலகம் ரொம்பதான் மாறி போச்சு...

80களின் கடைசியில் இந்தியாவே தலையிடாதே..
20 வருடம் கழித்து இந்தியாவே தலையிடு..

2004ல் தலைவரே பொறுத்தது போதும் போரை உடனே தொடங்கு...
2009ல் இந்தியா பொறுத்தது போதும் போரை உடனே நிறுத்து..

என்ன இந்தியா உங்க பேச்சுக்கு எல்லாம் ஆடி கொண்டு இருக்கும் தலையாட்டி பொம்மையா? இல்லை இந்திய நாட்டுக்கு இவங்களுக்கு பஞ்சாயத்து செய்வதை தவிர வேற வேலையே இல்லையா?

என்ன இவங்க சொன்னது போல நடக்கவில்லை என்றால் வழக்கம் போல இந்திய ரானுவத்தையும் இந்திய தலைவர்களையும் திட்டி விட்டு போவார்கள்.

அப்படியே லூஸ்ல விடனும்..

________________________________________________

3400 கோடி - இது 1987 -89ல் இந்திய அரசு இலங்கையில் அமைதி படை + இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதியில் தேர்தல் நடத்த + தமிழர் பகுதியில் அடிப்படை கட்டுமாணம் வளப்படுத்த செலவழித்த தொகை...

இன்றைய மதிப்பில் இது 10,000 கோடி ,,இந்த பணம் இருந்தால் atleast தென் இந்திய நதிகளையாவது இணைத்து இந்த நதீ நீர் அரசியலை ஒழித்து இருக்கலாம்

ஒரு வேளை சாப்பிடும் பல கோடி இந்தியர்களுக்கு வாழ்க்கையில் பல நாள் 3 வேளை சாப்பிட வைத்து இருக்கலாம்.. இப்படி பல சொல்லி கொண்டு போகலாம்..

1400 - இது அமைதிபடையில் உயிர் இழந்த ரானுவவீரர்களின் எண்ணிக்கை..

1400 குடும்பங்கள் சிதைந்து போனது.. இதில் சோகமானது -- அமைதிபடையில் இறந்தவர்களுக்கு சண்டையில் இறந்தால் அவர்கள் குடும்பத்திற்க்கு கிடைக்கும் உதவிகள் ஏதும் கிடையாது.. காரணம்...அமைதி படை போர் categoryயில் வராதாம்..

கிடைத்தது - கற்பனையான செய்திகளும் ஒப்பாரிகளும்..

பட்டது போதும்.. சிங்களவர்களும் நாங்களும் சகோதரர்கள்.. இந்தியர்கள் வந்தேறிகள்..எங்கள் விசயத்தில் தலையிட வேண்டாம் என்று கேவலபட்டது போதும்....

Sunday, January 11, 2009

கோவிந்தா கோவிந்தா...


ஹைதராபாத் அமீர்பேட்டையில் எல்லாத்தும் duplicate கிடைக்கும். சாதாரண AA size பாட்டரி முதல் கல்லூரி டிகிரி சான்றிதழ் வரை.. சென்ற வாரம் முதல் புதுசா கம்பேனி annual report கூட விற்பனையில் கொடி கட்டி பறக்கிறதாம்..

அது என்னவோ தெரியலை.என்ன மாயமோ புரியலை...ப்ராடு, 420 கேசுங்க தான் ...போலிகளை நம்பாதீர்கள் எங்களுக்கு கிளைகள் கிடையாதுன்னு ஜீவி நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளில் பின் அட்டையில் முழு பக்கதுக்கு பேமிலி போட்டோ போட்டு விளம்பரம் கொடுப்பாங்க..

இங்க என்னடான்ன சத்யம்ன்னு பேரை வைச்சு அநியாயம் செய்றாங்க....

எல்லாரும் சத்யம் பிரச்சனையை பத்தி பேசி டயர்டா இருப்பாங்க..
ரிலாக்ஸ் பீளீஸ்...

இனி வருங்காலத்தில் இப்படி எல்லாம் நடக்கலாம்.

என் 10,000 கோடி பணத்தை 12b பஸ்ஸில் போகும் போது எவனோ மொள்ளமாரி பிட்பாக்கேட் அடிச்சுட்டான்.. பிட்பாகேட் கொடுத்தது என் தவறுதான். தவறை வெளிபடையாக ஒத்து கொள்கிறேன்.

பார்த்து உசாராக இருந்துகோங்க.. என் பணம் செவ்வாய் கிரகத்துல் இருந்து வந்தவங்க லவட்டிகிட்டு போய்டாங்கன்னு கூட சொல்வாங்க...


*********************************************************************************

தற்போது சன் ஞாயிறுகளில் பெங்களூர் தெருக்கள் முன்பு போல ஹாரன் அடித்து டிராபிக் ஜாம் ஆக்குவதில்லை.. forum garuda mall களில் வேடிக்கை பார்க்க வருபவர்கள் கூட குறைவாகவே இருக்கிறார்கள்... 99.99 % off என்று விளபரம் போட்ட கூட மக்கள் எதையும் வாங்குவது போல தெரியவில்லை..

எல்லாம் ஐடி படுத்தும் பாடு..

என் கதை மட்டும் என்ன வாழுதாம். :( நாமும் சிக்கனம் தான். கிரைடிட் கார்டை வீட்டில் ஒளிச்சு வைச்சாச்சு.. ஆனா வழக்கம் போல Bose audio shopகளில் வாங்குவதை போல சீன் போட்டு ஓஸியில் பாட்டு கேட்பதை இது வரை விடவில்லை :)

***********************************************************************************

சமீபத்தில் பார்த்த சினிமா
சமீபத்தில் பார்த்த தமிழ் படம் ..அபியும் நானும்.

ஒரு நிறைவான தமிழ் படம். அழகான கதைக்கு நல்ல நடிகர்கள் கூடவே நகைசுவை தோரணங்கள். Feel good என்ற உணர்வை ஏற்படுத்தும் தமிழ் படங்கள் மிக மிக குறைவு. Life is beautifull என்ற நேர் எண்ணங்களை நம் மனதில் விதைப்பது மிக கடினம்.. இந்த படத்தை பார்த்து வந்த சில மணி நேரம் வரை அந்த அலைகள் என்னை தொடர்ந்து வருவது போலவே இருந்தது,.

சென்ற வருடம்(2008) வந்து தமிழ் சினிமாக்களில் நல்ல படங்கள் என்ற பல சொல்லாம் ஆனால் மிக சிறந்த படம் என்று எதையும் சொல்ல தோன்றவில்லை.

சுப்ரமணியபுரம் என்ற வன்முறை மொழியை பேசும் படம் போற்றபடுவது அச்சுறுத்துகிறது.

இந்தியில் சென்ற வருடம் பல நல்ல படங்கள் வந்து இருந்தன.குறிப்பாக Wednesday,mumbai meri jaan..


இரண்டு படங்களுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. மும்பை ரயில் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து சமூகத்தின் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அலசும் படங்கள்.

நாம் வாழும் சமூகத்தில் தினமும் நம் அடிக்கடி நேருக்கு நேர் சந்திக்கும் மனிதர்களை பற்றி பேசும் படம்.

இதில் Wednesday படத்தின் முடிவு வித்யாசமாக இருந்தாலும் அந்த படம் பேசியவை அனைத்தும் உண்மையே. நம்மூரில் செல்லமாக அழைக்கபடும் ஒரு பெரிசு ( நஸ் ரீதின் ஷா ) தீவிரவாததையும் மக்களை பாதுக்காக்க தவறிய காவல்துறையும் ஒரு புதன்கிழமை அன்று அலைகழைத்து பாடம் சொல்லி தருவதே படத்தின் கதை. அனுபம் கேர் Vs நஸ் ரூதின் ஷா இருவரின் மிக சிறப்பான நடிப்பில் வந்த அருமையான படம்

mumbai meri jaan .. மும்பை ரயில் குண்டு வெடிப்பில் நேரடியாக மறைமுகமாக பாதிக்கபட்ட ஐந்து பேரை சுற்றி பிண்ணப்பட்ட கதை..

* மாதவன் ஒரு கண்ணி பொறியாளராக
* இர்பான் கான் மும்பையில் சைக்களில் டீ விற்க்கும் ஒரு தமிழனாக
* சோகா அலிகான் பரபரப்பு செய்தி சொல்லும் ஒரு ரிப்போர்டாராக
* பரேஷ் ராவல் வயதான காவல் அதிகாரியாக
* கே கே மேனன் ஒரு இந்துதுவ ஆதரவாளராக

அற்புதமான நடிப்பு தெளிவான திரைக்கதை இதற்க்கு மேலும் உண்மையும் பேசும் கதை. படத்தின் முடிவு Feel good என்ற பட்டாம்பூச்சிகளை மேலும் மேலும் பறக்க விடுகிறது.

இந்த இருபடத்தின் டிவிடிகள் சல்லிசாக மோசர்பியர் டிவிடிகளில் கிடைக்கிறது. இந்தி மாலும் நஹி என்று எஸ்கேப் ஆக வேண்டாம்.சப் டைட்டில் இலவசமாக கொடுக்கிறார்கள் :).. நேரம் கிடைத்தால் இந்த இரண்டு படங்களையும் பார்க்க தவறாதீர்கள்..

அப்புறம் இந்தி கஜினி .. தமிழ் கஜினிக்கும் இந்தி கஜினிக்கும் ஆறு வித்யாசங்கள் கூட கண்டு பிடிக்க முடியாது போல.:) .. படம் 3 மணி நேரம் போனதே தெரியவில்லை. திரைகதை பிணைப்பு அருமை.

இந்தி கஜினி ரிலீசுக்கு 10 நாள் முன்னாடியே பல பேரு ( வட இந்தியர்கள் ) landmarkல் தமிழ் கஜினி டிவிடியை தேடி பிடித்து வாங்கி கொண்டு இருந்தனர். ம்ம் இந்தி கஜினி விளம்பரங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு.

flash news :

2009ல் கூட தமிழ் சினிமா மாறுவது போல தெரியவில்லை... . வருங்கால முதல்வர் விஜய்யின் வில்லு பார்வையாளர்களை எல்லாம் அம்பு விட்டு கொல்லுதாம்..

ஏண்டாப்பா அந்த படத்துக்கு போனோம்.. பேசாம குருவி படத்தை திருட்டி டிவிடியில் இன்னும் ஒரு முறை பார்த்து இருக்கலாம்னான்.

நல்லவேளை நாளை இரவு காட்சிக்கு டிக்கேட் புக் செய்யலாம் என்று இருந்த என்னை காப்பாறிய என் நண்பனுக்கு மிக்க நன்றி :)