சென்னையில் வீதி உலா
கூர்க் மைசூர் தசரா என ஏகப்பட்ட திட்டம் போட்டும் மிக பெரிய தோல்வி..:(
சென்னை பக்கம் விடுமுறைக்கு ஒதுங்கலாம், நண்பர்களை பார்த்து விட்டு வரலாம் என்று சிறு திட்டம்.
பெங்களூரில் இருந்து உலகத்தின் எந்த இடத்துக்கும் weekendல் டிக்கேட் கிடைத்து விடும், ஆனால் சென்னை செல்வது மட்டும் சான்ஸே இல்லை. பகல் இரவு பஸ்ஸோ டிரையினோ எங்கும் மக்கள் வெள்ளம் தான். எப்படியோ பகல் நேர பேருந்தில் இடம் பிடித்து சென்னைக்கு தொடங்கியது.
எனக்கு பகல் நேர பயணம் ரொம்ப பிடிக்கும். அதுவும் ஜன்னலோர சீட் என்றால் கேட்க்கவே வேண்டாம்.
சாலைகளின் ஆங்காங்கே தென்படும் சாதாரண மனிதர்களும் பெயரை படிப்பதற்க்குள் மறைந்து போகும் பெயர் பலகைகளும் எப்போதும் சுவாரசியமானவை.
எங்கோ திடீரென்று சாலையில் ஒதுங்கி இருக்கும் மோட்டல்களும் அதன் மனிதர்களையும் பகல் நேரத்தில் பார்க்க வெகு ஆச்சர்யமாக இருக்கும்..
Bangalore electronic cityயை தாண்டியவுடன் சாலைகளில் தென்படும் தமிழ் எழுத்துகள் மனதுக்குள் சிறிய புன் சிரிப்பை விட்டு செல்லும்.
- * -
நான் சென்னையில் வசித்தது நிரந்தரமாக வசிக்க நினைத்து இருந்தது சில மாதங்கள் மட்டுமே..
அடிக்கடி சொந்த வேலையாக வரும் போது ஒவ்வோரு முறையும் சென்னை நகரம் ஏதேனும் பாடங்களை கத்து கொடுத்து கொண்டே இருக்கிறது.
என்னுடன் பெங்களூரில் வசித்த முக்கால்வாசி நண்பர்கள் என்றோ சென்னையை நோக்கி சென்று விட்டார்கள். அவர்களுக்கு சென்னையில் பிடித்த பல விசயங்கள் எனக்கோ பிரச்சனைகளாக தெரிகிறது..
சென்னை நகரம் மாறி கொண்டே வருகிறது, எல்லைகளை விரித்து கொண்டே செல்கிறது... காஞ்சிபுரம் பைபாஸ் தாண்டியவுடன் புத்தம் புதுசாக ஏகப்பட்ட மருத்துவ கல்லூரிகள் முளைத்து இருக்கிறது. . பெயர் தெரியாத பன்னாட்டு நிறுவனங்கள், இன்னும் சில மாதங்களில் காஞ்சிபுரம் வரை சென்னையின் எல்லை என யாரேனும் சொன்னாலும் சொல்வார்கள்.
என் நண்பன் மிகவும் மும்முரமாக மேல் மருவத்தூரில் வீடு கட்ட இடம் தேடி கொண்டு இருக்கிறான். அங்கேயும் 20 லட்சத்திற்க்கு குறைந்து இடம் இல்லையாம்..
திருமுல்லைவாயில் ஆவடி பக்கம் எல்லாம் சில ஆண்டுகள் முன்னர் வரை பாசனம் செய்து வந்த இடங்கள். இன்றையை நிலை சொல்லவே வேண்டாம்..
சென்னை நடுத்தரவாசிகள் நகரம் என யார் சொன்னது?
- * -
பெங்களூரில் தினமும் 3 கிலோ மீட்டர் ஜாகிங் செல்லும் போது எட்டி பார்க்கும் வியர்வை துளிகள் சென்னையில் இரவு எட்டு மணிக்கு எந்த வித உடல்உழைப்பும் இல்லாமல் எட்டி பார்க்கிறது. இரவில் அட்டகாசமாக வெப்ப காற்று வேறு. பகலில் சொல்லவே தேவை இல்லை..சாலையில் ஏஸி போடாமல் எந்த காரும் செல்வதில்லை. பரவலாக அனைத்து நடுத்தர வர்க வீடுகளிலும் ஏஸி இருக்கிறது. சாதாரண ஷாப்பிங் கடைகளிலும் ஏஸி.. என் நண்பனின் கடையில் தினமும் குறைந்தது 50 ஏஸி சாதனங்கள் விற்பனையாகின்றன. சென்னை கூடிய விரைவில் துபாயை மிஞ்சி விடும்.
-*-
வழக்கம் போல ஆட்டோகாரர்கள் ஏமாற்றினார்கள், பர்ஸை ஜீன்ஸின் புறபாக்கேட்டில் ஒளித்து வைத்து ரங்கநாதன் தெருவில் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த முறை சரவணா ஸ்டோர்ஸை விட போத்திஸில் கூட்டம் அதிகமாக தென்பட்டது. வழக்கம் போலவே சென்னை தி நகர் கடைவாசிகள் கஸ்டமர் சர்வீஸ் கண்டு மனசுக்குள் திட்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.
இந்த நவராத்திரியிலும் மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் கொலு வைத்து சுண்டல் கொடுக்கிறார்கள்.
சில புதியவைகள் கண்ணில் பட்டன. தி நகர் பக்கம் சுத்தமாக தமிழ் தெரியாமல் பீகார் வாசிகள் சின்ன சின்ன உணவகங்கள் நடத்துகிறார்கள். மக்களும் அரைகுறை இந்தியில் சளைக்காமல் பேசி சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள். நிறைய UP MP MH DL வண்டிகள் கண்ணில் பட்டது.
திருவான்மியூர் பக்கம் சாதாரண ஷேர் ஆட்டோகாரர் கூட இந்தியில் பேசி கஸ்டமர் பிடிக்கிறார்.
ஆனால் ஒரிஜனல் சென்னைவாசிகளுக்கோ இதனால் பல பிரச்சனைகள்..இந்திகாரர்கள் பேரம் பேசாமல் வீடு வாடகைக்கு பிடிக்கிறார்கள்.. இதனால் விலை வாசி ஏறி போச்சு என்ற கூப்பாடு வேறு...
சில அபார்மெண்ட்களில் சிண்டிகேட் வைத்து வீடு வாடகையை control செய்கிறார்கள் என்று என் நண்பன் சொன்னான். புரோக்கர் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்கிறது.. வீட்டு வாட்ச் மேன் கள் முதல் தெரு குட்டி தாதா வரை எல்லாரும் புரோக்கர் ஆகி விட்டார்கள். சென்னையில் இனி தனியாளக வீடு தேடி பிடிப்பது முடியாத காரியம் ..
-*-
சென்னையில் எதற்க்கும் ஒரு விலை இருக்கிறது போலும். ரொம்ப சாதரணமாக ‘ யாராக இருந்தாலும் பார்த்துகலாம்’ என்ற டயலாக் காதில் விழுந்தது. பேச்சு அதுவும் அதிகாரமாக அதட்டி பேச தெரிந்தால் மட்டுமே வாழ முடியும் போல. சாதாரண சிம் காட்டு வாங்க கூட சிபாரிசு கூட்டி வருகிறார்கள். சாலையில் சின்ன சின்ன போக்குவரத்து தவறுகளுக்கு கூட குடும்பத்தை இழுக்கிறார்கள்.
சாலையில் சிக்னலில் நிற்க்கும் போது கூட கூச்சமே இல்லாமல் ஹாரன் அடித்து கொண்டே இருக்கிறார்கள். சண்டை போட அனைவரும் தயார் என்ற மன நிலையில் இருப்பதை போல பிரமை..
அடையாரில் ஒரு சிக்னலில் ஹெல்மெட் போடாத யாரோ ஒருவரை போலிஸ்காரர் ஓரம் கட்டிய போது உடனே மொபைலில் யாரையோ துணைக்கு அழைத்து மொபைலை போலிஸ்காரரிடம் கொடுத்து பேச சொன்னார். போலிஸ்காரரும் சளைக்காமல் மொபைலை வாங்கி ஸ்விச் ஆப் செய்து பைக் சாவியை எடுத்து வைத்து கொண்டார்.
ம் இந்த நகரத்தில் அவருக்கும் அவர் வேலையை பார்க்க தனி திறமை தெரிந்து இருக்கிறது.
என்னால் ஐந்து நிமிடத்து மேல் சென்னை நகர சாலைகளில் நண்பனின் காரை ஓட்ட முடியவில்லை. ஆனால் நான் பார்த்த பெரும்பாலன சென்னை கார்கள் எந்த வித வெளி காயமும் இல்லாமல் இருக்கிறது.
பெங்களூரில் சர்வசாதரணமாக 200 ரூபாய் ஆகும் lunch buffet சென்னையில் சரவணபவனில் 120 ரூபாய்க்கு கிடைக்கிறது. சூப்பர் இட்லி கடைகள் மலிவான விலைக்கு ருசியான சாப்பட்டை தருகிறார்கள்....என்னதான் ஏஸி வைத்து இருந்தாலும் மின்சார செலவு மாதம் 200யை தாண்டவில்லையாம்.. தண்ணீர் பிரச்சனையும் முன்பு போல இல்லை...மின்சார ரெயில் நேர சிக்கன பயணம் வால்மீகி நகர் பீச்... என்ன சில நொட்டைகள் இருந்தாலும் சென்னை போல வருமான்னு நண்பன் சொன்ன போது சரிதான் என தலையாட்டினாலும் , சென்னைக்கு நானே வர நினைத்தாலும் அங்கு இனி இருக்க இடம் இருக்காது என்று தான் தோன்றியது.
உன்னை போல் ஒருவன் - விமர்சனம்

இந்தியில் சென்ற வருடம் வெளியான “ a Wednesday " படம் தமிழ் சாயம் பூசி வெளி ஆகி இருக்கிறது.
இந்தியில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்தபடம் தமிழில் எப்படி வந்து இருக்கிறது ??
ரொம்ப ரொம்ப சாதாரண கதை ..
அதுவும் சில கதாபாத்திரங்களை மட்டும் சுற்றி வரும் கதை..
சென்னை நகரில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்து போலிஸை மிரட்டும் சாதாரண கமலஹாசன்,
போலிஸ் அதிகாரியாக மோகன்லால்..பின்னர் படத்தில் எனக்கு தெரிந்த ஒரே முகம் லட்சுமி மட்டுமே..
4 மணி நேரங்களில் நடக்கும் சம்பவங்கள், குண்டு வெடித்ததா? ஏன் குண்டு வைத்தார்??
எப்படி சொல்லி இருக்கிறார்கள்..??
நம்மவர் கெட்டப்பில் கமல் ...
பென்ஸ் காரில் சனிக்கிழமைஆபிஸுக்கு வரும் CEO போல இருக்கிறார். ட்ரிம் செய்யபட்ட தாடி ஒரு காஸ்ட்லியான கண்ணாடி வேறு.. common man என கண்கள் நம்ப மறுக்கிறது. உன்னை போல ஒருவன் ரேசன் கடை வரிசையில் கடைசியாக நிற்பவன் என வசனம் பேசும் போது சம்ம காமேடி.
இந்தியில் நஸ்ருதின் ஷா எப்படி அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை உடை நடை பாவனைகளில் தயார் செய்து கொண்டு நடித்தார் என்பதை கமல் கவனிக்கவில்லை போலும். ஒரு நடுத்தர வர்க மனிதனின் கலக குரல் போல் இல்லாமல் corporate company board meetingல் பேசுவதை போல இருக்கிறது..
எல்லா இடத்திலும் அடிபட்ட ஒரு சாதாரண இந்திய குடிமகன் வேடத்திற்க்கு ..சாரி கமல்ஜி உங்களுக்கு சற்றும் பொருத்தமாக இல்லை.
மோகன்லால்..
விறைப்பான காவல் அதிகாரியாக...முகத்தில் பதட்டம் தெரிய படம் முழுக்க மலையாள தமிழில் பேசுகிறார். எதுவும் ஒட்டவில்லை.
மேலும் பல புது முகங்கள் படத்தில் இருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.
இசை
படத்தில் பாடல்கள் இல்லை.. இதை போன்ற கதைக்கு பிண்ணனி இசை வலிமையான பிண்ணனி இசை தேவை..சென்ற வாரம் வந்த ஈரம் படத்தில் தமனின் பிண்ணனி இசை மிகசிறந்த உதாரணம்..
பிண்ணனி இசை மகா சொதப்பல். கதையில் ஒட்டவே இல்லை. சுருதி மேடம் பிண்ணனி இசை என்றால் தெரிந்து கொள்ள இளையராஜா படங்களை பார்க்கவும்..முடியவில்லை என்றால் சென்ற வாரம் வெளி வந்த ஈரம் படத்தையாவது பார்த்து தெரிந்து கொள்ளவும்.
படத்தில் வசனம் சில இடங்களில் எழுந்து உட்கார வைக்கிறது.
வழக்கம் போல கதையில் ஒட்டாத தேவையே இல்லாத கடவுளை பற்றிய விவாதங்கள்.. இந்த முறை கலைஞர் கருணாநிதியின் மிமிக்கிரி குரலில் ..
விறுவிறுப்பான காட்சி அமைக்க நினைத்து எடுத்து இருக்கிறார்கள், கூடவே கமலை மட்டுமே நம்பி படத்தை எடுத்து இருக்கிறார்கள்.
இந்தியில் கடைசி 15 நிமிட காட்சிகள் வசனங்கள் படத்தை பலமாக உச்சத்திற்க்கு கொண்டு சென்று விடும். இங்கே வசனங்களில் அழுத்தம் இல்லை.. முக்கியமாக படத்தை தமிழ் நாட்டு சூழலில் சொல்வதில் பல மாக சறுக்கி இருக்கிறார்கள். சொல்ல வந்த கருத்துகள் மிகவும் சிறப்பானதாக இருந்தாலும் சொன்ன விதத்தில் மனதில் எதுவும் பதியவில்லை..
உன்னை போல ஒருவன் - இந்தி டப்பிங் சீரியல் பார்க்கிற உணர்வு.
சைபர் கிரைம்.
நான் தமிழ் பத்திரிக்கைகளை படிப்பது மிகவும் குறைந்து விட்டது. நேரமும் கிடைப்பதில்லை, மேலும் படிக்கவும் சுவாரசியமில்லை..எப்போவாவது பயணங்களில் ஏதேனும் கைகளில் அகபட்ட புத்தகத்தை படிப்பதே தப்போதைய என் நிலை.
சில வாரங்களுக்கு முன்னர் சேலம் பயணத்தின் போது குமுதம் ரிப்போர்ட்டர் கண்ணில்பட்டது. வழக்கம் போல அரசியல் க்ரைம் என இருந்த ரிப்போர்ட்டர் இதழில் சைபர் கிரைம் என்ற தொடர் எழுதுபவரான யுவகிருஷ்ணா என்னும் லக்கிலுக்கின் பெயரும் எனக்கு மிகவும் பரிச்சயம். என்னுடைய மூன்றாண்டு கால முன்னாள் நண்பர். இப்போது இல்லை. காரணம், இவருடைய வஞ்சகமான சில செய்கைகள்தான்..
இந்தக் கட்டுரையைப் படித்தபோது இது பற்றி எழுதுவதற்கு இவருக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. பின்பு யோசித்து பார்த்தபோது cyber hacking செய்த மாஜி பிஸ்தாக்கள் காலப்போக்கில் cyber security adviser ஆவதில்லையா?? அது போலத்தான் இதுவும் என்று நினைத்து என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.
சென்ற வாரம் உண்மைதமிழனின் இந்த பதிவை படித்த பின் நானும் கட்டாயமாக, முதல் முறையாக அல்லது கடைசி முறையாக நடந்தவகளை ஒரு முறை அசை போட்டு பார்த்தால் நலம் என தோன்றியது.
இதே குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் சில காலம் முன்பு வரை தமிழ் வலைபூக்களில் சைபர் கிரைம், போலி டோண்டு மூர்த்தி என கட்டுரைகள் வந்து இருந்தன.
செந்தமிழ் வார்த்தைகளால் விளையாடுவது மட்டும் அல்லாமல் பல பேரை (நான் உட்பட) தனிபட்ட முறையில் பாதிக்கப்பட செய்த மூர்த்தியின் திருவிளையாடல்கள் இன்று தமிழ் வலைபூக்களில் இல்லை.
செந்தழல் ரவி, உண்மைதமிழன், ஓசை செல்லா, குழலி போன்றோர்களில் தனிபட்ட முயற்சிகளால் மேலும் பல பேர் மேலும் பாதிக்கப்படாமல் காப்பாற்றபட்டுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.
மூர்த்தி ஒரு சைக்கோ என்றால் அவனுக்குப் பிடிக்காத, எதிரணியில் இருந்த பதிவர்களின் தனிபட்ட தகவல்களை சேகரித்து தர இங்கே ஒரு குழுவே இருந்தது. அந்த குழுவில் ஒருவரான லக்கிலுக் எனனும் யுவகிருஷ்ணாதான் இன்று சைபர் கிரைம் தொடரை எழுதுகிறார் என்கிறபோது எனக்கு சிலிர்ப்பாகவே இருக்கிறது.
இரண்டு வருடங்கள் முன் இருக்கலாம், ஒரு காலை வேலையில் ஒரு SMS.. "அருண் போலி உங்களை பத்தி படு மோசமாக போட்டோ போட்டு இணையத்தில் திட்டி இருக்கான்" என்றது.. அவசர அவசரமாக இணையத்தை திறந்து பார்த்தால் என் பெற்றோர் முதல் அனைவரையும் போட்டோ போட்டு மிகவும் மோசமாக மூர்த்தி எழுதி இருந்தான்..
மூர்த்திக்கு போட்டோ எப்படி கிடைத்தது??? எப்படி நான் வேலை பார்த்த இடத்தின் பெயர் தெரிந்தது?? என் புகைப்படம் சுலபமாக கிடைத்து விடும்.. எப்படி என் பெற்றோர் புகைப்படங்கள் கிடைத்தது???
அதிர்ச்சியில் சற்று நேரம் ஏதும் தெரியவில்லை. பின் யோசித்து பார்த்த போது நான் எப்போதோ என்னுடைய geocities தளத்தில் இந்தப் புகைப்படங்களை பதிவிட்டிருந்தது எனக்குத் தெரிந்தது. அங்கிருந்துதான் இந்தப் புகைப்படங்கள் உருவபட்டு இருக்கின்றன என புரிந்தது. யாருக்கும் தெரியாத ஏன் நானே மறந்து விட்ட அந்தத் தளத்தின் முகவரி மூர்த்திக்கு எப்படி கிடைத்தது?? யோசித்து விடையறிய அலசி ஆராய்ந்தபோது அத்தளத்தின் counter-களில் பதிந்து இருந்த தடங்களில் கேள்விக்கு பதில் கிடைத்தது.
Jul 11 8:04 am · Kuala Lumpur, Wilayah Persekutuan, MY
http://philanders.blogspot.com/
http://www.orkut.com/Profile.aspx?uid=5333853459959529415
Jul 6 7:45 pm · Chennai, Tamil Nadu, IN
http://philanders.blogspot.com/
http://www.orkut.com/Profile.aspx?uid=5333853459959529415
« Prev · Page 2 of 2
CreateBlog.com | Home · About · Contact · Privacy · Terms
(ஒரு சின்ன் சாம்பிள்)
யுவகிருஷ்ணா என்னுடன் நட்பாக இருந்த காலக்கட்டத்தில் அவருடன் ஒரு முறை எனது சொந்த தளத்தின் முகவரியைப் பகிர்ந்து கொண்டதும், பாஸ்வேர்டுகளை சொன்னதும் உடனே எனது ஞாபகத்துக்கு வந்தது.. சரி இவரைத் தவிர வேறு யாரும் இதைச் செய்திருக்க முடியாது என்ற எண்ணத்தில் வலுவூட்டியதுபோல ஆதாரங்களும் எனக்குக் கிடைத்தன.
இத்தோடு முடியவில்லை.
ப்ளாக்கும் வேண்டாம் தமிழ் தளங்களும் வேண்டாம் என என் பழைய தமிழ் ப்ளாக்கை(புத்தம் புது பூமி) அழித்து விட்டு வேறு வேலை பார்க்க தொடங்கினேன். நண்பர்கள் மற்ற சொந்தகாரர்கள் விசாரிப்பு வேறு. மறுபுறத்தில் தொல்லை.
முதல் சைபர் கிரைம் அதிர்ச்சி அதுவே. என் தனிபட்ட தகவல்களை பகிரிந்தவர் + பதிந்தவர்கள் யார் என எனக்கு தெரிந்தாலும் ஏதும் செய்ய முடியாத நிலை.. ஆப்பு என்ற பல பதிவர்களில் தனிபட்ட தகவல்களை சுமந்த மூர்த்தியின் அந்த தளம் பின் சென்னை சைபர் க்ரைம் போலிசால் மூர்த்தி பிடிபட்ட பின்னர் அழிக்கபட்டது.
பின் சில மாதங்கள் கழிந்து ஒரு மாலை நேரம்.. மாப்ள உன்னை பத்தி ஆர்குட்டில் கண்படி திட்டி யாரோ scarp போடுறாங்க. யாருடா
டோண்டு ராகவன் என்ற பெயரில் யாரோ scarp போடுறாங்க..
வேறு ஒன்றும் இல்லை. இம்முறையும் டோண்டு ராகவன் பெயரில் போலியாக ஆர்குட் பக்கம் செய்து எனது நண்பர்கள் அனைவருக்கும் ஆபாச மழை. மேலும் வழக்கம் போல எனது புகைபடங்கள் தனிபட்ட தகவல்கள் வைத்து அர்ச்சனை.. என் அலுவல நண்பர்களுக்கும் அர்ச்சணை..
இந்த முறை ரொம்ப நேரம் ஆகவில்லை யார் இதை போல செய்வது, செய்ய தூண்டுவது யார் இப்படி பதிவர்களின் தனி தகவல்களை மூர்த்திக்கு கொண்டு செல்வது?? நான் தேடிப் பார்த்ததில் கிடைத்தவர் இன்றைய பிரபல சைபர் க்ரைம் எழுத்தாளர் யுவகிருஷ்ணாதான். வேவு பார்க்க வந்தவரும் ஆதாரங்களை விட்டு சென்று இருந்தார். இதை வைத்துத்தான் அந்த கிரிமினல் யுவகிருஷ்ணா என்பதைக் கண்டறிந்தேன்..
வழக்கம் போல மீண்டும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அட்வைஸ் மழை.. சைபர் கிரைம் இரண்டாவது தாக்குதல்.. முதல் முறையே படு மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தேன்..
ஏன் இப்படி என்னை தாக்குகிறார்கள்? எனக்கும் இவங்களும் என்ன சம்பந்தம்?? டோண்டு ராகவனுக்கு பின்னோட்டம் போட்டு வந்தேன் அது முதல் காரணம்.
இரண்ட்வாவது ராபின் ஹீட் என்ற புனை பெயரில் யாரோ... மூர்த்தியே போலி டோண்டு என்று எழுதி வந்தான். நானே அந்த ராபின் ஹீட் என்று யுவகிருஷ்ணாவால் சொல்ல வைக்கப்பட்டு மூர்த்தியின் நெற்றி கண் திறந்து பின் ஏற்பட்டதுதான் என் மீதான சைபர் க்ரைம் தாக்குதல் சோகம்:(
இப்படியே ராபின்ஹீட் இவர்தான் என சொல்லி 10-க்கு மேற்பட்ட பதிவர்கள் தாக்கபட்டார்கள். இதில் ராபின்ஹீட் யார் என இன்றுவரையிலும் தெரியவில்லை என்பதுதான் இன்னுமொரு காமெடி.
இப்படி மூர்த்தியை உசுப்பேத்தி அவனை மேலும் மேலும் மிருகமாக மாற்றியது யுவகிருஷ்ணாதான். தனக்கு பிடிக்காத, தனது குழுவில் இல்லாத, தன் அரசியலை விமர்சிப்பவர்களைத் தயவு தாட்சண்யம் இல்லாமல் போட்டு கொடுத்து சிலிர்த்து கொண்டது இவர்தான்.
இப்படி செய்ய வேண்டாம் என சொன்னால் யுவகிருஷ்ணாவிடம் இருந்து ‘எனக்கு மூர்த்தி யார் என்று தெரியவே தெரியாது என்ற ரேஞ்சில் பதில் வரும்'
ஆனால் பாருங்கள்.. ஒரு சமயம் இதே யுவகிருஷ்ணாதான் இரவு கழுகார் என்ற பெயரில் ஆபாச அர்ச்சனைகளை திராவிட பதிவர்களுக்கு எதிரானவர்களைக் குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருந்தார். பல பதிவர்களின் தனிப்பட்டத் தகவல்களை அவரும் தன் பங்குக்கு அத்தளத்தில் மூர்த்திக்கு போட்டியாக பதிவு செய்தார்..
இன்னும் நிறைய என் அனுபவங்களை பக்கம் பக்கமாக எழுதலாம்.. எழுதினால் கடந்த நாட்களின் கருப்பு நாட்களின் சோகம் மீண்டும் தொடர எனக்கு விருப்பம் இல்லை..
எனக்கும் அந்த லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாவுக்கும் அப்படி என்னதான் தொடர்பு?? அவரே முன்பு சொல்லியிருக்கிறார்.
அருண் ரொம்ப நாட்களாக என்னை வலைப்பூ ஒன்று தொடங்கச் சொல்லி அப்போது வற்புறுத்தி வந்தார். எனக்கு தொழில்நுட்ப அறிவு இல்லையென்று சொல்லி தள்ளிப் பொட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அருணின் டார்ச்சர் தாங்காமல் ஒரு பிளாக்கர் அக்கவுண்ட் தொடங்கிவிட்டேன். தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதற்கு டெம்ப்ளேட்டில் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் அருண் தான் சொல்லிக் கொடுத்தார். ஆனால் பிளாக்கர் அக்கவுண்டை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. நிறைய பதிவுகளில் பின்னூட்டங்கள் இருந்ததை கண்டேன். அதுபோல எங்காவது பின்னூட்டம் போடவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
இவர் பதிவுலகிற்கு வருவதற்கு நானும் ஒரு காரணம். என்னவோ தெரியவில்லை பதிவுலகம் இவரை மாற்றி போட்டது. மூர்த்தியை தலைவராக ஏற்று கொண்டு பல பேர் வாழ்க்கையை சீரழிக்க ஆரம்பித்தார்.
மூர்த்தி யாரையாவது திட்டி எழுதினால் அல்லது போலி பதிவு ஆரம்பித்தால் யுவகிருஷ்ணாவிடம் சொன்னால் போலி பதிவு உடனே அழிக்கபடும். பின் மூர்த்தியிடம் சமாதானம் பேச இவரே உதவுவார் :)
பிறகு நல்லதொரு நாளில் மூர்த்தி பிடிபட்டான், அவனின் தொலைபேசி எண் கிடைத்தது. அவனோடு நான் தொலைபேசியில் பேசிய போது அந்த உரையாடலையும் பதிவு செய்து இருந்தேன். பின்னர் அது சைபர் கிரைம் போலிசாரால் மூர்த்தியின் குரலை அடையாளம் செய்ய ஆதாரமாக எடுத்து கொள்ளபட்டது. மூர்த்தி உரையாலடலில் தன் திருவாயால் தனது உண்மை தொண்டர் என யுவகிருஷ்ணாவை புகழ்ந்து கூறியிருக்கிறார். அந்த ஆபாச பேச்சை அன்றைய நிலைமையில் அத்தனை பதிவர்களும் கேட்டிருக்கிறார்கள்.
இன்னும் பல ஆதாரங்கள் இருக்கிறது, இனி பகிரிந்து ஏதும் ஆவபோவதில்லை.
மூர்த்தி பிடிபட்டபோது யுவகிருஷ்ணா மீதும் புகார் கொடுத்து இருக்கலாம்தான்.. காலம் யார் மீதான கோபத்தையும் குறைத்து விடும், அன்றைய நிலையில் பிரபலமாக தொடங்கி இருந்தவர் மீது புகார் கொடுத்து பிரச்சனையை நீடிக்க விரும்பவில்லை.
.நான் மட்டும் அல்ல இன்னும் சில பேரும் இதே போல பாதிக்கபட்டு இருந்தனர் என பின்னர் தெரிந்தது. பாதிக்கபட்டவர்கள் எழுத வேண்டிய தொடரை அனைவருக்கும் ஆப்பு வைத்தவரே எழுதுவதை நினைத்து இப்போதும். மனதுக்குள் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
அனானி கமெண்ட்களால் கண்டபடி திட்டுவது போலி கமேண்ட் போடுவது என எழுத்தாளரின் பல அவதாரங்களை சொன்னால் இந்த பதிவு போதாது.
எழுத்தாளர் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்..
இத்தனை நாட்களாக நான் எங்குமே இந்த பிரச்சனை பற்றி எழுதியது இல்லை.. இனியும் எழுத போவதும் இல்லை.. ஆனால் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்னர் என்றால் பிரச்சனை என்று வந்தால் சமாளிக்க நேர் கொள்ள தயக்கம் இருக்கும்.. இரண்டு ஆண்டுகள் பட்ட அனுபவங்கள் என் தைரியத்தையும் உணமையை எதிர் கொள்ளவும் ரொம்பவே கற்று கொடுத்திருக்கிறது.
இனி இந்த அனுபவங்களை எங்கேயும் தொடர்வதாக இல்லை..
சைபர் க்ரைம் என்றால் நமது வங்கி கண்க்கை திருடுவது மட்டும் அல்ல. இதை போல social networkingல் தேர்ந்து பயமுறுத்துவதுதான். இங்கு யார் வேண்டுமானாலும் சைபர் க்ரைம் செய்யலாம்.
எச்சரிக்கை .. இணையத்தில் அதுவும் தமிழ் பதிவுலகில் யாரிடமும் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொண்டால் கண்டிப்பாக பிரச்சனை வரும். இங்கு எழுத்துகளை வைத்து மட்டுமே யாரையும் கணிப்பட முடியாது. Image build up பிரபலம் எல்லாமே சும்மா உடான்சு
ஊர் வம்பு -1

யார் வம்புக்கும் போகாம இருந்தா வம்பு நம்மை தேடி வராது
இதேல்லாம் சும்மா டூப்பு.
என்ன நேரமோ காலமோ தெரியலை வம்பு தேடி தேடி ஆளை கொல்லுது.
பொதுவாக நான் இந்தியன் ஆயில் நிறுவனங்களில் தான் பைக்கிற்க்கு பெட்ரோல் ஆகாரம் கொடுப்பது வழக்கம்.
நான் வைத்து இருக்கும் citi bank debit cardகளில் வேறு நிறுவன பங்குகளில் இதே debit card பயன்படுத்தினால் 10 ரூபா கொசுறாக சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் account statementகளில் ஞேஎன்று எட்டி பார்க்கும்..
இந்த கொசுறு எதுக்கு என்று சண்டை போட்டு முடிவு இது வரை இல்லை.
சரி indian oil நிலையதிலேயே பெட்ரோல் போடலாம் என்று அரைமனதாக முடிவு செய்து ஒரே பங்கையே உபயோகித்து வருகிறேன். எல்லாம் நல்லா தான் இருந்தது..
சில நாட்களாக பைக்கில் கணிசமாக மைலேஜ் குறைந்து கொண்டே வந்தது.. ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுத்த வண்டி 40 35 என குறைந்து கொண்டே வந்தது. ஓட்டும் முறையில் ஏதும் மாற்றம் இல்லை.. hose போட்டு பெட்ரோலை உறியவும் வாய்ப்பு இல்லை.. என்னமோ நடக்குது.. பொருமையாக யோசித்து பார்த்தில் பெட்ரோல் போடும் போதே லம்பாக தில்லு முல்லு செய்தே பெட்ரோல் போடுவது பிடிபட்டது.
பெட்ரோல் போட்டு கொண்டு இருக்கும் போதே சார் cardஆ cashஆ , சார் சீக்கிரம் கார்டு கொடுங்க.. பின் நம்பர் கேட்க்குது என எப்படியாவது கவனத்தை திசை திருப்பி தில்லாங்கடி செய்வது தெரிந்தது. ஏற்கனவே அனுபவம் பெற்ற நண்பர்கள் ஆலோசனையோடு பெட்ரோல் நிரப்பும் போது அந்த h1n1 வைரசே வந்தாலும் திரும்ப மாட்டேன் என உறுதி பூண்டு ஜெயித்து விட்டேன்..
ஆனால் இந்த முறை புது மாதிரியான தில்லுமுல்லு.. பெட்ரோல் போடும் போதே மின்சாரம் போய் விடும் ..அல்லது எந்திரத்தில் ஏதாச்சும் கோளாறு ஆகும்.. உடனே ஒரு சூப்பர்மேன் போல ஒருவர் வருவார் ...பட்டனை தட்டுவார்.. மீண்டும் பெட்ரோல் வரும்..
சார் 300 ரூபாக்கு பெட்ரோல் போட சொன்னீஙக கரண்ட் போவதற்க்கு முன்னால் 80 ரூபாவிற்க்கு பெட்ரோல் போட்டாச்சு பாலன்ஸ் 220 ருபாவிற்க்கு போடனும் மீட்டரை பாருங்க.. 80விற்க்கு பெட்ரோல் போடாங்களா இல்லையா மீட்டர் ஓடிச்சா இல்லையா ..??
இந்த முறையும் நல்லா ஏமாந்து சோனகிரியா 300 ரூபா பெட்ரோலில் 80 ரூபா கோவிந்தா கோவிந்தா..
இந்த முறை விட கூடாது..
ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேரையாவது இவர்கள் ஏமாற்றுவார்கள், ஒருத்தருக்கு 50 ரூபா என்றால் நாள் ஒன்றிக்கு 5000 ருபா வேலை பார்க்கும் 5 பேருக்கும் லாபம் பிரிக்கபடும்..
இணையத்தில் நோண்டிய போது இந்தியன் ஆயில் விஜிலென்ஸ் நம்பர் கிடைத்தது.. இந்தமுறையும் விட கூடாது..
சார் இதே பிரச்சனை தான் சார், அளவு சரியா இருககான்னு நாங்க அடிக்கடி சோதனை நடத்துறோம் அதனலால் லிட்டர் அளவை இப்ப யாரும் மாத்துறது இல்லை.. அதுக்கு பதிலா பெட்ரோல் போடமலே பெட்ரோல் போட்ட மாதிரி ப்ராடு பண்றாங்க ..எந்த ஏரியா பங்க சார்..??
கூடவே விஜிலென்ஸ் அதிகாரி வந்தார்..என் பைக்கில் இருக்கும் மொத்த பெட்ரோல் அளவு குறிக்கபட்டது.. சார் நீங்க வழக்கம் போலவே பெட்ரோல் போடுங்க.. தில்லுமுல்லு ஏதாச்சும் செய்தாலும் கண்டுக்காம பெட்ரோல் போட்டு முடியும் வரை wait பண்ணுங்க..
வந்துட்டான்யா வந்துடான்யான்னு என்னை பார்த்ததும் பெட்ரோல் போடுபவற்க்கு ரொம்ப குழியாக இருந்து இருக்கும் போல. 150 ரூபாவிற்க்கு பெட்ரோல் போடுங்க.
.பெட்ரோல் hose controllerயை அழுத்தியது போல இருந்தது.. 50 ரூபாவை மீட்டர் காட்டியது.. மிசின் struck ஆனது.. பின் reset செய்து 100 ருபாவிற்க்கு பெட்ரோல் போடப்பட்டது.. அதன் பின் அத்தனையும் சங்கர் படத்தில் வருவது போலவே இருந்தது... ..1
50 ரூபாவிற்க்கு 3 லிட்டர் பெட்ரோல் போட்டு இருக்கனும்.. ஏற்கனவே பைக்கில் இருந்த 2 லிட்டர் சேர்த்து இப்போ 5 லிட்டர் பெட்ரோல் இருக்கனும்.. ஆனால் கணக்கில் வந்ததோ 4 லிட்டர்..
கையும் களவுமாக பிடிபட்டார்கள்,,,,,
விஜிலென்ஸ் அதிகாரி ..ஓனரை கூப்பிடு ..
அவரு இல்லை சார்..
பெட்ரோல் போடுறதை நிறுத்து...
பின்னால் குறைந்தது 20 பேர் கண்டிப்பாக இருப்பார்கள்..
டேய் ப்ராடு பண்றதை நிறுத்தவே மாட்டீங்களா.. சத்தம் பெரிதானது.. பின்னால் இருந்த கூட்டமும் சேதி தெரிந்து கூட்டம் பெரிதானது..
கேஸ் போடுங்க சார்.. பங்கை இழுத்து மூடுங்க சார்..எனக்கும் இதே பிரச்சனை தான் சார்..பின்னால் இருந்து பல குரல்கள்..
இப்போ விஜிலென்ஸ் அதிகாரி..முதல்ல இவருக்கு சுட்ட பெட்ரோலை திரும்ப கொடு.
பெட்ரோல் மீண்டும் போடப்பட்டது...
பெட்ரோல் போடும் பையனை பார்த்தேன் 17 வயது இருக்கலாம்..கூடவே அவரின் சக பணியாளர்கள்.. யாருக்கும் வயது இருபதை தாண்டாது..
சார் இதுல ஒரு கை எழுத்து போடுங்க. *** *** பங்கில் இந்த நாள் இத்தனை மணி அளவில் முறைகேடு நடந்ததை கண்டு பிடித்தோம். அதற்க்கு சாட்சியாக அருண் குமார் என்ப்படும் இந்த நபர்.. இந்திய அத்யாவச பொருட்கள் சட்டபடி... பின்னர் நிறைய எழுதி இருந்தது..
நான் அவரிடம்...சரி சார் இனிமே இப்படி நடக்காதா?? பங்க் ஓனர்கள் முதல் அனைவரும் தண்டிக்கபடுவார்களா?
அது பெரிய பார்மாலிட்டி சார்.. நாங்க இவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பனும்.. அதுக்கு இவங்க பதில் அனுப்பனும்... அப்புறம் நாங்க ஆதாரத்தை எங்க மேலதிகாரிக்கு அனுப்பனும்.. பார்க்கலாம் சார்..
கண்டிப்பாக பங்க் உரிமம் தடை அல்லது வேலை ஆட்கள் பணி நீக்கம் என ஏதும் நடக்க போவதில்லை என்று தெரிந்தது..
சரி..இப்படி பிரச்சனை செய்து என்ன தான் லாபம்??
தப்பு செய்தா கண்டிப்பாக பிடிபடுவோம்.. பிடிபட்டால் மானம் போகும், பங்க் பெயர் கெட்டு போகும் வியாபாரம் பாதிக்கும் என பயம் கண்டிப்பாக அவர்களுக்கு வரும்.. வரவேண்டும்.. அது வரை திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. அவர்களை இப்படி செய்து தான் திருந்த வைக்க முடியும்..
கந்தசாமி - திரை விமர்சனம்
அப்பாடா ரொம்ப நாளைக்கு அப்புறம் நேரம் போவதே தெரியாமல் ரசிக்க ஒரு மசாலா படம்.
கதை என்ன ?
அது யாருக்கு வேண்டும்...
போஸ்டர் பார்த்தே கதை சொல்ல தெரிந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படத்தின் கதை என்ன தெரியாமலா இருக்கும்..
இந்தியன் அந்நியன் ஜெண்டில்மேன் டைப் கதைகளுக்கு சங்கர் காப்பிரைட் வாங்கி வைத்தால் ரொம்ப புண்ணியமாக போகும்.
என்ன எல்லாருக்கும் தெரிந்த கதையை அட்டகாசமாக திரைகதை ஆர்பட்டமான பாடல்கள் ஆட்டம் கொண்டு சொல்லி இருக்கிறார்கள்.
முதல் சீனில் ஆரம்பித்து இடை வேளை மூச்சு விட நேரமில்லாமல் ஓடுகிறது
பின்னர் இடை வேளைக்கு அப்புறம் சிறிது தடுமாறி மீண்டும் புயல் வேகம் எடுக்கிறார்கள்..
ஆங்காங்கே வேக தடையாக சில பாடல்கள் அப்புறம் ரொம்ப முக்கியமாக வடிவேல் காமேடி.. வடிவேல் காமேடி படத்தோடு ஓட்டவே இல்லை..
படத்தின் நீளம் 3 : 15 மணி நேரம் , எடிடிங்கில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.. தியேட்டர் ஆபரேட்டர்கள் இனி கவனித்து கொள்வார்கள்..
ரொம்ப ரொம்ப விக்ரம் ஸ்மார்டாக விக்ரம் படு கச்சிதமான நடிப்பு கூடவே உடல் மொழி வசன உச்சரிப்பு ..கலக்கீரீங்க விக்ரம்.. அதுவும் பெண் வேடத்தில் வரும் காட்சி ஏ கிளாஸ்
ஸ்ரேயா என்ன சொல்றது ...பாடல்களில் ஜிம்னாசியம் குச்சிபுடி பாக்சிங் என எல்லாம் கலந்து கட்டி ஆடுகிறார்.
’என் பேரு மீனா குமாரி’ பாடலுக்கு தியேட்டர் ஆபரேட்டரை தவிர எல்லாரும் நடனம் ஆடாத குறைதான்..
தேவி ஸ்ரீபிரசாத் பாடல்களும் பிண்ணனி இசையும் அபாரம் ..
படத்தின் ஒவ்வோரு ப்ரேமிலும் அபார உழைப்பு தெரிகிறது..
லாஜிக் மீறாத காட்சிகள் அதுவும் மெக்ஸிகோ நாட்டில் வரும் காட்சிகளும் அருமை..
பிரபு, ஆசிஷ் வித்யார்த்தி, கிருஷ்ணா என எல்லாரும் வந்து போகிறார்கள் , வந்துட்டு போகட்டுமே .
. சுசி கணேசன் இரண்டு வருடம் உழைத்து ஒரு நல்ல பொழுது போக்கு படத்தை கொடுத்து இருக்கிறார்..
பல மொக்கை படங்களை பார்த்து நொந்தசாமிகளுக்கு டைம் பாஸ் இந்த கந்தசாமி..
கண்டதும் கேட்டதும் - 15 08 2009

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
ஒரு மாசமா ஏகப்பட்ட புது படங்கள் பார்த்து பைத்தியம் பிடிக்காத்து தான் மிச்சம்.
love aaj kal என்ற இந்தி படம்.. இந்த படத்தை எடுத்த டைரக்டர் மட்டும் என் கையில் கிடைச்சா..
இப்ப வர இந்திபடங்கள் எல்லாம் ரொம்ப ரொம்பவே torture பண்றாங்க.. ஏதோ பீகார் ஹரியானா உபி மக்கள் எல்லாம் லண்டன் நீயூயார்க்க்கு மொத்தமா shift ஆகிட்டாங்களா?? எல்லா பட கதையில் நேரடியா லண்டன் பாரீஸ் இப்படிதான் ஆரம்பிக்குது..
இந்த வரிசையில் வந்த New york Love Aaj Kal என்று இரண்டு குப்பை படங்கள் .. இதில் Love Aaj Kal படத்தில் என்ன தான் சொல்லவராங்கன்னு ஒரு மண்ணும் புரியலை.. எப்படிதான் கலாசார காவல்கார சிவசேனா ஆர் எஸ் எஸ் கேங்க் ஆட்கள் இந்த படத்தை விட்டு வைச்சாங்களோ..
தமிழ் படங்கள் சற்றும் சளைத்தவை இல்லை..
சென்ற மாதத்தில் பார்த்த அபத்தங்கள்
சிந்தனை செய், வாமணன், மோதி விளையாடு ..
பல அபத்தங்களுக்கு மத்தியில் சரி புழைச்சு போன்னு வந்த படம் அச்சமுண்டு அச்சமுண்டு.. இந்த படமும் 1.30 மணி நேரம் என்றால் தப்பித்தேன்..
வழக்கமான தமிழ்பட விதியான 2 : 30 மணி நேர படம் என்றால் நினைச்சு பார்க்கவே முடியலை..
வாழ்க்கையில் பொறுமை போதும் அளவு கற்று கொண்டேன்.. விடுஙகடா சாமி ..
************************************************************************
பெங்களூரில் சென்ற வாரம் திறக்கபட்ட திருவள்ளுவர் இன்னமும் incubationல் தான் இருக்கிறார். எப்போதும் காவலுக்கு போலிஸ் மேலும் இலவச இணைப்பாக வீடியோ காமேராக்கள் கண்காணிப்போடு ரொம்ப பத்திரமாக இருக்கிறார்.
இதை பார்த்து எனக்கு திருச்சி திருவரங்கம் பெரியார் சிலை தான் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.. இன்னமும் திருவரங்கம் பெரியார் அதிரடி படை காவலோடு தான் காட்சி தருகிறார்.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் முத்துராமலிங்க தேவரும் அம்பேத்காரும் பலத்த பாதுகாப்போடு தான் எழுந்து அருளி வருகிறார்கள்..
பேசாமல் காவல்துறையில் சிலை பாத்துகாப்பு துறை என தனியாக ஆரம்பித்து விடலாம்..
சிலைகள் திறப்பதால் என்ன நண்மை என நான் அறியேன் ஆனா வெட்டி வம்பு பார்டிகளுக்கு வேலை வாய்ப்பு நிறைய கிடைக்கிறது.. வாழ்க வளர்க
******************************************************************************
எப்போதும் தமிழனுக்கு தான் பேசும் மொழி தொடர்பான அரசியல் ஆர்வம் அதிகம் உண்டு. கன்னடர்களுக்கு திருவள்ளுவர் வாழ்க்கை தமிழ் இலக்கியம் என சுய தம்பட்டம் அடிக்கும் பல ஆட்களை தினமும் காண்கிறேன்..
கூடவே கொசுறாக கல் தோன்றா மண் தோன்றா போன்ற பொன் மொழிகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றி தமிழ் பெருமையை நிலை நாட்ட ஏகப்பட்ட பேர் உள்ளனர்.
என்னவோ தெரியலை தமிழ் செல்வன் தமிழ் செல்வி போல இது வரை நான் கன்னட செல்வனோ தெலுங்கு செல்வியோ பெயர்களை கேள்வி பட்டதே இல்லை.. பேர் வைச்சுகிறது சொந்த விஷயம் ..சரி அதவிடுங்க.. இந்த கல் தோன்றா மண் தோன்றா தான் ரொம்பவே லாஜிக் இடிபடும் செய்தி.. யாராச்சும் இதற்க்கு விளக்கம் சொல்வீற்களா??
**************************************************************************
கொஞ்சம் புலம்பல்...

விகடன்....
இந்த விகடன் இதழ்களோடு எத்தனை பசுமையான நினைவுகள்..
வீட்டில் விகடன் வரும் நாள் அன்று சண்டை தொடங்கி விடும். யார் முதலில் படிப்பது அதுவும் 3D சித்திரங்கள் வந்த நாட்களில் யார் முதலில் கண்டு பிடிப்பது என ஜாலியான சண்டையே நடக்கும்.
குடும்பங்களில் வழக்கமாக நிகழும் இறுக்கமான நிகழ்வுகளை நெகிழ வைப்பதில் விகடனுக்கு நிகர் விகடனே..
வைர விழா நாவல் போட்டி முதல் பல ரெகுலர் போட்டிகள் வாசகர்களை விகடனோடு எப்போதும் முன் நிறுத்தி இருந்தன. விகடன் படித்தால் கிடைக்கும் Feel good என்ற மன நிலை யாரையும் புண்படுத்தாத எழுத்துகள் சுஜாதா போன்றவர்கள் தொடர்கள்..
அதிலும் நாவல் போட்டியில் வெற்றி பெற்ற கதையான கொலை வேகம் கதை இன்றைக்கும் என் favorite.
புதுமை என்றால் அது விகடன் தான்
மடிசார் மாமி என்ற தொடரில் வரைபடங்களுக்கு பதில் ஸ்ரீவித்யாவை kinetic honda வண்டியில் வைத்து புகைபடம் எடுத்தே தொடர்கதை ஓட்டத்துக்கு புது வடிவம் கொடுத்தார்கள். இது சாம்பிள் தான்..
இப்படி எத்தனை எத்தனை புதுமைகள்..
விகடன் வெள்ளி கிழமையும் குமுதம் சனிக்கிழமை அன்றும் வெளிவரும்.. சனி ஞாயிறுகளில் இந்த இதழகளை படிக்கவே விடுமுறை விட்டது போல தோன்றும்.
ஆனால் இன்று விகடன் இதழ் மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான தரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நடுநிலைமை feel good போன்ற மேட்டர்கள் என்றோ காற்றில் பறக்க விடபட்டு விட்டன.
கடந்த சில வருடங்களில் விகடனின் தரம் ரொம்பவே படாது பாடு படுகிறது
பாய்ஸ் திரை விமர்சனம்.. ரொம்ப ரொம்பவே கேவலபடித்தி இருந்தார்கள்..
நியூ திரை விமர்சனம்.. படத்தை விகடனார் ரொம்பவும் ரசித்து எழுதி கூடவே செல்ல குட்டும் வைத்து இருந்தார்கள்..
பாய்ஸ் படம் அப்படி ஒன்றும் மோசமான படமாக எனக்கு தெரியவில்லை.. ஆனால் நியூ படம் ஆபாச காட்சிகளுக்காக பின்னர் நீதிமன்றதால் தடை செய்யபட்ட படம்.. ..மக்கள் மனதை படிப்பது என்பது இது தானா??
இதை போல வால்மீகி சிவா மனசுல சக்தி போன்ற மொக்கை படங்களுக்கு சன் டிவி பாணியில் விளம்பரம் கொடுத்து சூப்பரோ சூப்பர் படம் என்று விமர்சனம் வேறு..
வாசன் தன் சொந்த படங்களை விளம்பரத்துகாக கூட விகடனை பயன்படுத்தியது இல்லை என்று எங்கோ படித்த ஞாபகம்..
தனி மனிதனுக்கு பிடிக்கவில்லை பிரச்சனை என்றால் அதை பத்திரிக்கைகளில் வைத்து பஞ்சாயத்து செய்வது வாசகர்களை எரிச்சல் மூட்டவே செய்யும்...
திமுகவையும் அதன் தலைவர்களையும் பிடிக்கவில்லை என்றால் அதை வாசகர்களிடம் திணிக்க கூடாது. சமீபத்திய பாரளுமன்ற தேர்கல் கணிப்புகள் என்று இவர்கள் ஜீவியில் கொடுத்த கணிப்புகளே இதற்க்கு சாட்சி...
அதுவும் தனிபட்ட ஆசிரியர் குழுவின் ஆட்களின் கொள்கை நிலைபாட்டிற்க்காக குப்பைகளை படிக்க வேண்டும் என்று வாசகர்களின் தலை எழுத்து இல்லை..
விகடனை படித்தால் பொது அறிவு வளரும் என்ற நிலை போய் இருப்பதும் ஒன்றும் இல்லாமல் போகும் என்ற நிலைதான் இன்று.
மருதன் எழுதும் கட்டுரைகள் இந்த ரகம் தான். இவரின் சீனா சார்பு எழுத்துகள் ...வீட்டில் சாப்பாடு இல்லை என்றால் கூட அமெரிக்கா தான் காரணம் போன்ற கருத்துகள் விகடன் போன்ற இதழில் வருவது வாசகர்களின் துரதிஷ்டம்..
இவர் ஒரு முறை அமெரிக்க கல்வி முறை தொடர்பாக வழக்கம் போல தப்பும் தவறுமாக எழுதி இருந்தார்..இதை கூட சரி பார்க்காமல் வெளியிடுகிறார்கள்.
இப்படி தான் திபேத் மக்கள் சீனா ஆதிக்கதில் மிகவும் சவுரியமாக இருக்கிறார்கள் என்று எழுதி தனக்கு தானே சந்தோஷபட்டு கொண்டார்.. இதையேல்லாம் கூட சரி பார்க்க மாட்டார்களா??
இணையத்தில் சில நிமிடங்கள் தேடினால் பல உண்மைகள் வெளிப்படும் இந்த காலத்தில் இதை போல ஆட்கள் இப்படி எழுதினால் வாசகர்களை என்ன முட்டாளாக நினைத்து விட்டார்களா??
இலங்கை பிரச்சனையை வைத்து உணர்சியை தூண்ட நினைத்தார்களோ என்னவோ சென்ற சில மாதங்களில் வந்த இவர்களின் கட்டுரைகளை இன்று படித்தால் தெரியும் எவ்வளவு உட்டாலங்கடி என்று..
சுஜாதா போன்ற பல ஆளுமைகள் ஆண்ட விகடன் இதழ் இன்று இணைய சந்தாவிற்க்காக ஈழம் பிரபாகரன் என்று ஜல்லி அடிப்பது மகா எரிச்சலை தருகிறது.. இந்த பிரச்சனையில் உண்மையை எழுதினால் வாசகர்களுக்கு மிக பயன் அளிக்கும் ...
2004 ம் வருடம் மழை பொய்த்து பஞ்சம் வந்த போது விகடன் வாசகர்களிடம் நிதி திரட்டி கூடவே கணிசமான தன் நிதியை வைத்து தஞ்சை மாவட்ட விவாசாயிகளின் வீட்டில் தற்கொலைகளை தடுத்தது.
அன்றைய விகடன் மாறாமல் இருந்து இருந்தால் இன்று இலங்கையில் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு எப்போதோ நிதி திரட்டி கொடுத்து இருக்கும்.
பெரியார் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தற்காக வழக்கு தொடர்ந்தவர் மீது ஆஸிட் அடித்த மேலும் அதை பெருமையாக சொல்லிய ஒருவரின் பேட்டி கவர் ஸ்டோரியில் வேறு...
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்..
என்னதான் ஆயிரம் இதழகள் வந்தாலும் வீட்டின் சகல மூலைக்குக்கும் செல்லும் இதழ என்றால் எங்கள் வீட்டில் விகடன் தான்.
இன்று விகடன் இதழை வாங்கும் இடத்திலே புரட்டி விட்டு குப்பை தொட்டியில் எறியும் மன நிலை தான் தோன்றுகிறது.
என்னவோ தெரியவில்லை விகடன் குடும்பத்தோடு குடும்பமாக இருந்த இதழ் இன்று இப்படி கெட்டு சீரழிய கண்டு பொறுக்கவில்லை..
கண்டதும் கேட்டதும்

ரொம்பவே பிகு செய்து கொண்டே கடைசியில் மழை துளிகள் பெங்களூர் வாழ் ஊர்வன பறப்பன என பேதம் பார்க்காமல் நனைத்து விட்டு செல்கிறது.
மீண்டும் காவேரி பிரச்சனையை கிளப்பலாமா என்று domain specialists ஹோம் வொர்க் செய்து கொண்டு இருக்கும் போதே மக்களையும் கூடவே பல மனங்களையும் சேறடிக்காமல் வந்து விட்டது பருவ மழை..
காலம் தவறிய பருவ மழையால் நிறைய பாதிப்புகள்.. கர்நாடகா மாநிலத்தில் மின் தடை பிரச்சனை ரொம்ப ரொம்ப அதிகமாகி விட்டது
பெங்களூரில் பரவாயில்லை என்று தான் சொல்லனும்..சென்ற வாரம் மைசூர் சென்று இருந்த போது நேரில் அனுபவித்தேன். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின்சாரம் இல்லை..
காரணம் மழை இல்லாமல் விவாசாயிகள் பம்ப் செட்டை நாடி செல்வதால் வந்த எதிர் வினை.
கர்நாடகாவில் எந்த அணையிலும் நீர் இல்லை.. நீர் நிலை மின்சார நிலையங்களும் ஓய்வு எடுக்க ஆரம்பித்து விட்டன. ...
நல்ல வேளை.. இன்னும் ஒரு வாரம் மழை தவறி இருந்தால்...
*-*
மக்கள் தொகை ,பொருளாதாரம் , வாங்கும் சக்தி வளரும் அளவிற்க்கு நாட்டில் மின்சார உற்பத்தி அதிகரிக்கபடவே இல்லை..
அதிக அளவு மின்சார உற்பத்தியும் ஒரு வகையில் சுற்று சூழல் பாதிப்பு தான் .. பெரிதும் எதிர்பார்க்கபட்ட அனு மின்சார நிலையங்களும் இது வரை பெரிய பூஜ்யம் தான்.
இந்த நிலையில் மின்சார உற்பத்தி நிலையங்களிலும் கூடவே மின்சார போக்குவரத்திலும் நடக்கும் முறைகேடுகளை சரி செய்தாலே இன்னும் பல வருடங்களுக்கு புதிதாக எந்த மின்சார உற்பத்தி நிலையங்களும் ஆரம்பிக்க வேண்டாம்.
-*-
அரசு வேலை ஆசை யாரை விட்டது. தற்காலிக வேலையில் சேரும் போதே பணி நிரந்தரம் ஆக வாய்பில்லை என்று தெரிந்தே சேர்கிறார்கள். ஆனால் வேலை நிறுத்தம் என மிரட்டி நிரந்தரம் ஆக வழி தேடிகிறார்கள்..
வேலை நிரந்தரம் ஆக வேண்டும். பங்குகளை வேறு யாருக்கும் விற்க்க கூடாது, அரசே நட்டட்தையும் தாங்க வேண்டும் ..
தீபாவளி போனஸ் பொங்கல் போனஸ் பே கமிசன் எல்லாம் வேண்டும். ஆனா மின்சாரம் உற்பத்தி குறைந்தால் மட்டும் பதில் இல்லை..
-*-
பெரிய ஓட்டை விழுந்த பற்றாகுறையை எப்படி சமாளிக்க போகிறரோ நிதி அமைச்சர்.. என்ன கடைசியில் நம் தலையில் தான் சர்வீஸ் டாக்ஸ் வழியாகவே இல்லை வருமான வரியாகவே கடந்து செல்லும்.
கல்விக்காக CESS வரியாக இலவச இணைப்பு ஒட்டி கொண்டே வருகிறது. இது வரை இந்த வரியினால் வந்த வருவாய் பத்து விரல் கொண்டு எண்ண முடியாது. ஆனால் செலவு செய்தது எத்தனை என்றால் யாருக்கும் தெரியவில்லை.
இதை விவாதிக்க வேண்டிய இடங்களில் மக்கள் தலைவர்கள் கண்டு கொள்வதே இல்லை. பல தலைவர்கள் லீவு போட்டு ஊர் சுத்த போய் விடுகிறார்கள்.
ஏன் எல்லா எம் பிகளையும் பாராளுமன்றம் தொடங்கும் முன்னர் மொத்தமாக வைத்து இலக்கிய கூட்டம் நடத்த கூடாது?? தமிழ் பிளாக்கில் இருக்கும் சில காமேடி பீஸ்களை அவர்களோடு இலக்கியம் பேச வைத்தால் மிக மிக நன்று..
-*-
முழு மெஜாரிட்டியின் முதல் பயனாக பொது மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு வழியாக கிடைத்துள்ளது.
எல்லாம் நல்லதுக்கே என்று வழக்கம் போல கடந்து செல்ல வேண்டியது தான்..
அரிசி பருப்பு மளிகை விலைகள் ஏற்றம் ,மின்சார தொல்லை, மழை இல்லை எல்லாத்துக்கு நடுவே நாமும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறோம்..
-*-
வெட்டி வேலை

காலையில் சன் மியூசிக் இசையருவி சேனல்களை ரிமோட் துணையோடு பொறுமையோடு மாற்றி மாற்றி பார்த்ததில் புரிந்தவை..
சன் மியூசிகில் அயன் பாடல் வந்தால் அங்கே உடனே வாரணம் ஆயிரம்
இப்படியே வேட்டையாடு விளையாடு Vs தசவாதாரம் , சிவாஜி vs குசேலன் , போக்கிரி Vs வில்லு என தமிழ் பேசும் உலகுக்கு நல்ல கலை சேவை செய்கிறார்கள். வாழ்க வாழ்க
எல்லாம் சரிதான் கமல் சாருக்கு தசாவதாரம் சிறந்த கதையாசிரியர் விருது கொடுத்தாங்க.. கமல் சார் பக்கா ஜெண்டில்மேன் ..அந்த விருதை மறக்காம Angles and demon's எழுதிய Dan Brownக்கு அனுப்பி வைச்சுடுவாரு.. உலக நாயகன்னா சும்மாவா....
எல்லாம் நல்லா தான் இருந்தது. நாமக்கலை தாண்டுவதற்க்குள் 10 தடவை பஸ்ஸை நிறுத்தி ஏதோ செஞ்சாங்க. அப்பவே புத்திக்கு உரைச்சு இருக்கனும்.. இல்லையே .
. பஸ்ஸுல ஏசியே வேலை செய்யலே ..மதிய நேர கொடுமையான வெயில் வேற.. டிரைவர்கிட்ட சொன்னா சார் சேலம் போனவுடன் பஸ்ஸை மாத்திடலாம் சார்ன்னாரு..
மோசமான பயணம். மூட்டைபூச்சி கூட்டணி இன்னக்கு சம்ம வேட்டைன்னு புகுந்து விளையாடுது..
சேலம்த்திலும் பஸ் மாற்றபடவில்லை..புகார் கொடுக்க போன் செய்தால் அதேல்லாம் அப்படி தான் சார் என்று பதில்.. பொறுத்து பார்த்து முடியாமல் எல்லா பயணிகளும் சேலம் தாண்டியவுடன் தொப்பூர் காட்டில் வண்டியை நிறுத்தி வேற வண்டியை கொண்டு வர சொன்னோம்.. இதோ அனுப்பறேன்னு சொன்னாங்க..
வரும் ஆனா வராது கதை தான்..8 மணி ஆச்சு.. பெங்களூருக்கு 9 மணிக்கு போய் சேர வண்டி ...தர்மபுரியை கூட இன்னும் தாண்டலை..
அதே வண்டியில் பயணம் தொடர்ந்தது.. நடு ராத்திரியில் பெங்களூர் வந்து சேர்ந்து அல்லாடியது தனி கதை..
சில வருடங்கள் முன் வரை KPN travels நிறுவனத்தின் சேவை அற்புதமாக இருந்தது. என்ன ஆச்சுன்னு தெரியலை ,இப்பவேல்லாம் அவங்க வண்டியல போவதற்க்கு பதில் பேசாம TVS50யை வாடகைக்கு வைச்சு ஊர் போய் சேரலாம்ன்னு தான் தோணுது. கே பின் என் பேருந்துகளில் அவஸ்தை படுவது இது எனக்கு முதல் முறை இல்லை..
மரியாதையே என்ன வென்று தெரியாமல் பேசும் டிரைவர் க்ளீனர்கள், மூட்டை பூச்சி பண்ணையாக இருக்கு பஸ் ஸீட்டுகள் , பராமரிப்பே இல்லாத பேருந்துகள்..
விகடனில் சில வருடங்கள் முன்னர் கே பி என் உரிமையாளர் , தமிழ் நாட்டில் ப்ளைட் சர்வீஸ் விரைவில் ஆரம்பிப்போம் என்று சொல்லி இருந்தார்.. இதே ரேஞ்சில் போனால் ப்ளைட் என்ன ராக்கேட் சர்வீஸ் கூட ஆரம்பிக்கல்லாம்...
குடும்பத்தார் பட காமேடி சீன் களை பார்த்து கொண்டு இருந்தேன்.
.சிங்கம் புலி என்ற இயக்குநர் கலக்கி இருந்தார்.
. அவர் தொடர்பாக இணையத்தை நோண்டிய போது கிடைத்த லிங்க்.. ஒரிஜினல் சிங்கம் புலி.. Liger http://www.liger.org/
நீங்களும் பாருங்க interesting ஆக இருக்கும்
சமீபத்தில் பார்த்த படங்கள்

எனக்கு தெரிந்து பல பேருக்கு கன்னட சினிமா என்றாலே ராஜ்குமார் + sons ஞாபகம் தான் வரும்.
தமிழ் சினிமாவிற்க்கு கிடைக்கும் அதிக பார்வையாளர்கள் ( புலம் பெயர்ந்த் இலங்கை தமிழர்கள்) கன்னட சினிமாவிற்க்கு கிடைப்பதில்லை. அதனால் தானோ என்னவோ கன்னட சினிமாவில் வரும் பல நல்ல படங்கள் கர்நாடாவை விட்டு வெளியே தெரிவதில்லை..
கன்னட சினிமாவில் மேடை நாடகங்கள் இலக்கியம் நல்ல சினிமா என்று தனியே ஒரு குழு இயங்கி கொண்டு இருக்கிறது. மசாலா படங்களுக்கு நடுவே பல குறிஞ்சி மலர்கள் அடிக்கடி பூக்கும்.
மறைந்த சங்கர் இவர் மட்டும் இன்னும் பல வருடங்கள் உயிரோடு இருந்திருந்தால் தென் இந்திய சினிமாவில் கன்னடாவின் கொடி இன்னும் உயரே பறந்து இருக்கும்..
கிரீஷ் கர்னாட், அதுல் குல்கர்னி , சரத், ஆஷிஷ் வித்யார்த்தி என மசாலா படங்களில் வில்லனாக மிரட்டுபவர்கள் பல மான மேடை நாடக பிண்ண்னி கொண்டவர்கள். இன்னமும் தங்களின் மனதிருப்திக்காக நாடங்களில் நடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களின் கூட்டணியில் 2007ல் வெளியான படம் ..அவ்வப்போது பெங்களூரில் நடந்த பழையை சம்பவங்களை அழகான திரைகதையோடு படமாகவும் எடுப்பார்கள்.
ஆ தினகளு ..( அந்த நாட்கள் )
இரண்டு தாதாக்களுக்கு இடையே 1986ல் சிக்கி தவித்த பெங்களூரு + அந்த தாதாக்களின் உலகம் + அந்த பிரச்சனையில் மாட்டி தவிவிக்கும் ஒரு காதல் ஜோடி ...இவர்களின் பிரச்சனையை பேசும் படம்.. இது 1986ல் பெங்களூரில் நடந்த கதை..படத்தின் திரைகதையை எழுதியது அக்னி ஸ்ரீதர். இவரின் பாத்திரமும் படத்தில் அங்கம்..
கோத்வால் ராமசந்திரா Vs ஜெயராஜ் ..ஒருவரை ஒருவர் அழிக்க துடிக்கும் தாதாக்கள்....
86 மார்ச் மாதம் கோத்வால் கொல்லபடுகிறார்..
கொலையாளிகள் ஒருவர் சேத்தன். வசதிக்கு எந்த வித குறைவும் இல்லாமல் சமூகத்தை பற்றி எதையும் கவலைபடாத சேத்தன் ஏன் எப்படி எதற்க்காக underworld ஆட்களிடம் போய் சேருகிறார் என்பதை அழகாக சொல்கிறார்கள்.
வன்முறையை பேசும் படம் தான் ஆனால் படத்தில் வன்முறை வாசனையே சுத்தமாக இல்லை.கத்தியில் நடக்கும் வித்தை அநாயசமாக செய்கிறார்கள்.
தாதக்களின் வாழ்க்கை யாரையும் நம்ப முடியாத அவர்களின் மன நிலை அவர்களின் குடும்பம் நட்பு என பல பக்கங்களை புரட்டுகிறார்கள். ஒரு காலத்தில் pensioners paradise ஆக இருந்த பெங்களூரின் வனப்பை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.
இசை இளையராஜா -- சான்ஸே இல்லை பிண்ணணி இசை படத்துக்கு மிக பெரிய பலம்..பிண்ணனி இசை என்றால் என்ன என்பதை இந்த படத்தை பார்த்து தான் கத்து கொள்ள வேண்டும்.. அப்புறம் இரண்டு குட்டி குட்டி பாடல்கள்.. இளையராஜாவின் 80 இசை மீண்டும் ஒலிக்கிறது..
http://www.youtube.com/watch?v=nnLvKpYIyPo
இயக்கம் - சைதன்யா , கிரீஷ் கர்னாட்..
இந்த படமும் சுப்ரமணியபுரமும் கதைகளும் 80களில் நடந்த வன்முறைகளை தான் பேசுகிறது. சுப்ரமணியபுரம் படத்தை எப்போது பார்த்தாலும் இரைச்சலான பிண்ணணி இசையும் வன்முறையும் படம் முடிந்த பின் மனதை ஆக்கிரமிக்கும் வன்முறை சார்ந்த பயமும் தான் தெரிகிறது. ஆனால் இந்த படம் அதற்க்கு நேர்மாறாக ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை தருகிறது.
இந்த படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ணாமல் பாருங்க..
பசங்க

எனக்கு விக்கிரமன் படங்கள் ரொம்ப பிடிக்கும்..அவரு படத்தில் கெட்டவங்களே யாரும் இருக்க மாட்டாங்க.. எல்லாருமே லா லா லா இசை ஒலிக்க வரும் நல்லவங்க தான். அவர் படத்தில் தெரியும் ஒரு positive energy , மிதமான நகைச்சுவை ஞாயிறுகளில் மதிய நேரங்களில் எந்த வேலையும் இருந்தால் நிம்மதியாக பார்க்கலாம்.
என்னவோ தெரியலை இந்த படத்தின் இறுதியில் இயக்குநர் பெயர் திரையில் தெரிந்த போது என்னையும் அறியாமல் கை தட்டினேன். பல காரணங்கள் இருக்கல்லாம்..நானும் சிறுவனாக இருந்த போது இதே போல் செய்த சேட்டைகளை மீண்டும் பார்த்த காரணமோ இல்லை படம் முழுதும் அட்வைஸ் என தெரியாமல் அழகாக positive செய்திகளை சொன்னதோ..
எதுவாக இருந்தாலும் தமிழில் வந்த படங்களில் இந்த படம் மிக மிக முக்கியமான படம்.
சிறுவர்களின் உலகம் இது வரை தமிழ் படங்களில் ரொம்ப பேசபடாத ஏரியா..மிக மிக அழகாக படம் எடுத்து இருக்கிறார்கள். மிக்க நன்றி இயக்குநர் பாண்டிராஜுக்கு பின் தயாரிப்பாளர் சசிக்குமாருக்கும்.
படத்தில் என்னை உறுத்தியது ஒரே விஷயம் தான்..படத்தில் ஒரு காட்சியில் தேசிய கீதம் ஒலிக்கிறது.. தியேட்டரில் அங்கங்கே சில பேர் எழுந்து நிற்க்கிறார்கள்.. கையில் வைத்து இருக்கும் பாப் கார்ன் கீழே விழுந்து விடுமோ என்ற பயத்த்தில் சில பேரும் சொரணையே இல்லாமல் சிலரும் பேர் அப்படியே உட்கார்ந்து இருந்தார்கள்..யாரையும் குற்றம் சொல்ல முடியாது. தேசிய கீதம் தொடக்கத்திலும் இறுதியிலுமே கேட்டு பழகி போன நமக்கு இப்படி தடாலடியாக வரும் தெரிந்து இருக்க வாய்பில்லை.. தேசிய கீதத்தை இப்படி படத்தில் காட்சியாக வைப்பதை தவிர்க்கலாமே..

