Friday, August 21, 2009

கந்தசாமி - திரை விமர்சனம்அப்பாடா ரொம்ப நாளைக்கு அப்புறம் நேரம் போவதே தெரியாமல் ரசிக்க ஒரு மசாலா படம்.

கதை என்ன ?

அது யாருக்கு வேண்டும்...


போஸ்டர் பார்த்தே கதை சொல்ல தெரிந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படத்தின் கதை என்ன தெரியாமலா இருக்கும்..


இந்தியன் அந்நியன் ஜெண்டில்மேன் டைப் கதைகளுக்கு சங்கர் காப்பிரைட் வாங்கி வைத்தால் ரொம்ப புண்ணியமாக போகும்.

என்ன எல்லாருக்கும் தெரிந்த கதையை அட்டகாசமாக திரைகதை ஆர்பட்டமான பாடல்கள் ஆட்டம் கொண்டு சொல்லி இருக்கிறார்கள்.


முதல் சீனில் ஆரம்பித்து இடை வேளை மூச்சு விட நேரமில்லாமல் ஓடுகிறது
பின்னர் இடை வேளைக்கு அப்புறம் சிறிது தடுமாறி மீண்டும் புயல் வேகம் எடுக்கிறார்கள்..


ஆங்காங்கே வேக தடையாக சில பாடல்கள் அப்புறம் ரொம்ப முக்கியமாக வடிவேல் காமேடி..
வடிவேல் காமேடி படத்தோடு ஓட்டவே இல்லை..

படத்தின் நீளம் 3 : 15 மணி நேரம் , எடிடிங்கில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.. தியேட்டர் ஆபரேட்டர்கள் இனி கவனித்து கொள்வார்கள்..


ரொம்ப ரொம்ப விக்ரம் ஸ்மார்டாக விக்ரம் படு கச்சிதமான நடிப்பு கூடவே உடல் மொழி வசன உச்சரிப்பு ..கலக்கீரீங்க விக்ரம்.. அதுவும் பெண் வேடத்தில் வரும் காட்சி ஏ கிளாஸ்


ஸ்ரேயா என்ன சொல்றது ...பாடல்களில் ஜிம்னாசியம் குச்சிபுடி பாக்சிங் என எல்லாம் கலந்து கட்டி ஆடுகிறார்.

’என் பேரு மீனா குமாரி’ பாடலுக்கு தியேட்டர் ஆபரேட்டரை தவிர எல்லாரும் நடனம் ஆடாத குறைதான்..

தேவி ஸ்ரீபிரசாத் பாடல்களும் பிண்ணனி இசையும் அபாரம் ..


படத்தின் ஒவ்வோரு ப்ரேமிலும் அபார உழைப்பு தெரிகிறது..
லாஜிக் மீறாத காட்சிகள் அதுவும் மெக்ஸிகோ நாட்டில் வரும் காட்சிகளும் அருமை..


பிரபு, ஆசிஷ் வித்யார்த்தி, கிருஷ்ணா என எல்லாரும் வந்து போகிறார்கள் , வந்துட்டு போகட்டுமே .

.
சுசி கணேசன் இரண்டு வருடம் உழைத்து ஒரு நல்ல பொழுது போக்கு படத்தை கொடுத்து இருக்கிறார்..

பல மொக்கை படங்களை பார்த்து
நொந்தசாமிகளுக்கு டைம் பாஸ் இந்த கந்தசாமி..

7 comments:

tamilnadunews said...

பல மொக்கை படங்களை பார்த்து நொந்தசாமிகளுக்கு டைம் பாஸ் இந்த கந்தசாமி..//
/
/
/
super

வால்பையன் said...

நீங்க ஒருத்தர் தான் படத்தை பாராட்டியிருக்கிங்க!

SShathiesh said...

இதே கருத்து தன் எனக்கும். ஒரு சிறந்த பொழுதுபோக்கு படத்தை ஏன் இப்படி விமர்சிக்கின்ரார்களோ? http://sshathiesh.blogspot.com/2009/08/blog-post_21.html

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

Arun Kumar said...

நன்றி taminadunews

வால் சார்..
பிளாக்கில் விமர்சனம் எழுதும் போதே படம் நல்லா இருந்தாலும் படத்தை கிழி கிழி என்று கிழிப்பதே வாடிக்கையாக வைச்சு இருக்காங்க..

Arun Kumar said...

சதீஸ்

நன்றாக சொன்னீங்க.. பொழுது போக்கு படத்திற்க்கு இவங்க ஈரான் பட பார்கும் மன நிலையில் போவாங்க..

லூஸ்ல விடுங்க.. நெர்மாறான விமர்சனம் எழுதினாதான் ஹிட்ஸ் அதிகமாகும் என்ற நம்பிக்கை தான் காரணம்

uLLASAM said...

இந்த கந்தசாமி பார்த்து நொந்தசாமி

Mudhal Naal Paarthu vittu Nondhu poi comments kooda padikkallai