Friday, June 27, 2008

சில படங்கள் :)



தற்போது அலுவலக வேலையாக சுவீடன் நாட்டில் இருக்கிறேன்
இந்த நாட்டுக்கு முதன் முறையாக வருகிறேன்..

மிகவும் அழகாகவும் ரம்யமாகவும் இந்த நாடு இருக்கிறது

நாட்டின் பொது மொழி : சுவிடிஷ் ஆனால் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிந்து இருக்கிறது.

சில புகைபடங்கள்

Finally its me :))

Saturday, June 21, 2008

மிலே சூர் மீரா தும் ஹரா - Mile sur mera thumhara

சென்ற முறை சென்னை சென்று திரும்பும் போது கோயம் பேடு நிலையத்தில் வெகு நாட்களுக்கு பின் இந்த பாடலை பார்த்தேன். சிறு வயதில் தூர்தர்ஸநில் அடிக்கடி வந்த பாடல் இது . பழைய நினைவுகளை தட்டி எழுப்பி விட்டு சென்றது



Monday, June 16, 2008

நானும் என் பெங்களூரும் சில கருத்துகள்

ெங்களூரில் ஏதாவது பேருந்தில் கல் எறிந்தாலும் கூடவே ஏதாவது பிரச்சனை நடந்தாலும் உடனே எனக்கு என் வீட்டில் இருந்து போன் வரும்..
அருண் என்ன் ஏதாச்சும் பிரச்சனையா எல்லாம் சரிதானே என்று..இவர்கள் போன் செய்து சொன்னபின்பு தான் இங்கு பெங்களூரில் ஏதோ ஒரு இடத்தில் பிரச்சனை என்று எனக்கு தெரிய வரும்

பெங்களூரில் பல வருடங்களாக இருக்கிறேன்.. எனக்கு தமிழ்நாட்டில் ஏதோ ஒரு இடத்தில் இருப்பதை விட மிகவும் சவுகரியமாக உணர்கிறேன்..

இதை போல மிக சிறிய பிரச்சனைகள் மிக பெரிதாக மீடியாக்கள் மிக மிக பெரிதாக வட்டம் போட்டு அதில் கால் பந்து விளையாட்டே நடத்தி விடுகிறார்கள்.

நேற்று என் அலுவலக நண்பன் என்னிடம் நான் நாளைக்கு அலுவலகம் வரபோவதில்லை என்று சொன்னான்.. என்ன காரணம் என்று கேட்டேன்..
நான் என் நண்பர்களோடு ஊர்வசி தியேட்டரில் தசாவதாரம் படம் பார்க்க முன் பதிவு செய்து இருக்கிறேன் என்று சொன்னான்..

இதை ஒரு தமிழ் பேசும் ஒருவர் சொல்லி இருந்தால் விழயமே இல்லை.. ஆனால் சொன்னது பெங்களூரில் பிறந்து வளரந்த ஒரு கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட நண்பர்..

இன்று அலுவலக உணவு இடைவேளையில் நான் தசாவதாரம் படம் போவதை பற்றி மிகவும் கிண்டல் அடித்து கொண்டு இருந்தார்கள்.. நான் ரஜினி ரசிகன் எனக்கு எதிராக வாதடியவர்கள் அனைவரும் கமல் ரசிகர்கள்.. அனைவரும் கன்னடர்கள்..

என்னிடம் பருத்தி வீரன் டிவிடி கிடைத்தால் உடனே கொடு என்று விரும்பி கேட்டு வாங்கி சென்றதும் ஒரு கனண்ட நண்பன் தான்..

இப்படி பொதுவாக கன்னடர்களும் தமிழர்களும் நண்பர்களாக இருக்கும் இடத்தில் பிரச்சனை செய்வது யார்?

வில்லன் இல்லாத படமா?? கன்னட ரக்ஷண வேதா என்ற அமைப்பு.. இந்த அமைப்பு எப்படி பட்டதென்றால் தமிழ்நாட்டில் எந்த வித ஆதரவும் இல்லாமல் வெறும் வன்முறையை மட்டும் செய்யும் சில தமிழ் அமைப்புகளுக்கு இருக்கும் ஆதரவு தான் கர்நாடகத்திலும்..

இது கூட தெரியாமல் கன்னடர்களை வன்முறையர்கள் என்று சொல்லும் சிலரை பார்த்து நான் கேட்க்க நினைத்தது..

ஒரு சிங்கள இயக்கநரை வன்முறையை கையாண்டு அடித்து உதைத்த நீங்கள் ( சீமான் உட்பட) அடுத்தவர் அதே போல வழியகளை கையாண்டால் ஏன் பதற்றம்? ஏன் கூப்பாடு.. நீங்கள் செய்தது தானே.. அதே மொழி வெறி அதே வன்முறை அதை அடுத்தவர் செய்தால் ஏன் கோப்பம் ஏன் போராட்டம்??

கன்னடர்களால் நடத்தபடும் பள்ளி ,,, ஆனால் படிப்பதோ தமிழ் மக்கள் அங்கு அந்த பள்ளியில் நடத்தபடும் பாடஙகளோ தமிழ் நாட்டு அரசின் சட்ட திட்டங்களௌ உட்படித்தி நடை பெறுதிறது..

அந்த பள்ளியை அடித்து வன்முறையை நடத்தியது விடுதலை சிறுத்தைகள் அமைப்பு.. மாணக்காள் படிக்கும் பள்ளியில் கூட வன்முறையை கையாணட திருமாள்வளவனை மாண்டியாவில் வன்முறை இல்லாமல் கேரோ செய்தது என்ன தவறு??

கன்னடர்கள் நடத்தும் ஓட்டல்கள் என்று இதே மண்ணில் பல வருடங்களாக வாழ்ந்து வந்து மக்களோடு மக்களாக விட்டவர்களை இடத்தை தாக்குவது என்ன நியாயம்??
அப்படியே தமிழர்கள் நடத்தும் ஓட்டல்கள் என்று கர்நாடகாவுக் தாக்கினால் என்ன ஆகும்??

பேருந்தை எரிப்பது .. இது நடந்தது தமிழ்நாட்டின் ஓசூரில்.. இதை எல்லாம் என்ன சொல்வது??? தன் கைகாசில் வாங்கின இந்த வன்முறையர்கள் பொருட்களை ஏதாவெது சேதம் அடைந்தால் உடனே பெரியா ஆளு மாதிரி புகார் கொடுகத்து குடவே சீனும் போடுறீங்களே.. உங்களை எல்லாம்


கன்னட வெறியர்கள் என்று வாய் கிழிய பேசுபவர்களே... நீங்களும் தமிழ் வெறி பிடித்து தானே வன்முறையில் ஈடுபடுகிறீர்கள் .. நீங்கள் செய்வது மட்டும் சரி அடுத்தவர் செய்வது மட்டும் தவறு என்பது என்ன நியாயம்??

நானும் சில பாதிக்கப்ட்ட மனிதர்களும்

நான் இருக்கும் அபார்ட்மெண்டில் நிறைய திபேத்தியர்கள் இடுக்கிறார்கள்.. நான் இருக்கும் அபார்ட்மெண்ட் மட்டும் இன்றி பெங்களூரில் பரவலாக திபேத்தியர்களை பார்க்கலாம். பெங்களூரில் brigade ரோட்டில் திபேத்தியர்களுக்கான சிறு சந்தை உண்டு.. அங்கு அவர்களுக்கு தகுந்தவாறு உடைகள் முதல் அனைத்து பொருட்களும் கிடைக்கும்..பொதுவாக உருவத்தில் குள்ளமான திபேத்தியர்களுக்கு தகுந்தவாறு ஜீன்ஸுகளும் மற்ற ஆடைகளும் அங்கு கிடைக்கும்..

பொதுவாக பெங்களூரில் அவர்களை சிங்கி என்று அழைப்பார்கள்.. அவர்கள் வெகுவாக மற்ற மக்களோடு கலந்து விட மாட்டார்கள். மிகவும் பல தயக்கோதோடு தான் வெளி ஆட்களிடம் பேசவே ஆரம்பிபார்கள்..

அனுதினமும் கேரளா சேட்டா கடையில் காலையில் ஜிம்க்கும் போய் வரும் போது பேருந்து நிறுத்தத்தில் பல ஆட்களை தினமும் பார்பேன்.
.
அனைவரும் பெங்களூரில் நல்ல கல்லூரிகளில் படிக்கிறார்கள்.. நானும் அந்த பெண்களோடு பேச வேண்டும் என்று முயர்ச்சி செய்த நாட்கள் பல உண்டு..சேட்டா கடையில் உடைந்த இந்தியில் பையா 50 ருபாக்கு மொலை சார்ஜ் கரோ என்று அடிக்கடி கேட்டதுண்டு..

பெரும்பாலான திபேத்தியர்கள் இங்கே கால் செண்டர் அல்லது வேறு விதமான வேலை என்று செட்டில் ஆகி விடுவார்கள்.. சில பேர் அமெரிக்கா அல்லது பிரிட்டன் என்று சென்று விடுவார்கள்.. மிகசிலரே தன் தாய் மண்ணுக்கு திரும்ப போவார்கள்..

எனது அபார்ட்மெண்ட்டில் இருக்கும் ஒரு திபேத்திய மாணவன் தன் பெட்டி படுக்களைகளை எடுத்து கொண்டு சென்று கொண்டு இருந்தான்.. வழக்கமாக ஹாய் அல்லது சிறிய புன்முறுவல் கொடுத்த பழக்கம் என்றதால் ” என்ன ஊருக்கு போறியா என்று கேட்டேன் “ ஆம் என்ற வறட்சியான பதில் .. அந்த பையனை இதுவரை நான் என்றுமே இதை போல சோகமாக பார்த்தது இல்லை.. சரி நமக்கு திபேத் கதை தான் தெரிந்தது தான் அதுவும் சீனா போன்ற ஒரு நாட்டினால் கொடுமைபடுத்தபடும் இனம் என்பதால் எனக்கும் வருத்தமாக இருந்தது..

சரி ஏன் ஊருக்கு திரும்ப போறே??

எனக்கு இங்க வேலை கிடைக்க வில்லை..

சரி நான் இங்க வேலை வாங்கி கொடுத்த இங்க்யே இருப்பாயா?

இல்லை ...எனக்கு இங்க வேலை கிடைக்காது

அவன் தன் தாய் நாட்டுக்கு திரும்ப போவதில் தான் உறுதியாக இருக்கிறான் என்பது எனக்கு தெளிவாக புரிந்தது..

அந்த பையனின் முகத்தை இனி நான் பார்பது சந்தேகமே.. என்னால் முடிந்தது.... பெங்களூர் சிட்டி ஸ்டேசனில் புகை வண்டி ஏற்றி அனுப்பி வைத்தது கூடவே..

gate way of north east என அழைக்கபடும் சிலிகுரியில் இருக்கும் என் நண்பணிடம் போன் செய்து இவரை பத்திரமாக திபேத் எல்லையில் சேர்க்க சொன்னேன்

***************

இதை போல பல அகதிகளின் வாழ்க்கையை நேரடியாக என் திருச்சி கே கே நகரி இருக்கும் போது பார்த்து இருக்கிறேன்..

ரமணன் குமணன் என்ற இலங்கை தமிழர்கள் , இரட்டையர்கள் என் கல்லூரி நாட்களில் மிகவும் நெருக்கமான நண்பர்கள்.. தற்போது இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..சென்ற முறை திருச்சி சென்ற போதும் அவர்களின் தற்போதைய முகவரியை தேடி அலைந்தேன்

அவர் தந்தை சுவிஸில் இருக்கிறார் என்று தெரியும்.....அவர்களும் சுவிஸ் போயிருப்பார்கள் என்றே தோன்றுகிறது..

மிக கண்ணியமாக அண்ணா என்று தான் எப்போதும் அழைப்பார்கள்.. எனக்கும் அவர்களுக்கும் வய்து வித்யாசம் ஒரு வருடம் தான் இருக்கும்.
அவர்கள் வீட்டில் அடிக்கடி பல புதிய ஆட்கள் வந்து போவார்கள்.. அந்த அண்ணா நாளைக்கு பிரிட்டன் போகுது என்பார்கள்..வந்த அண்னக்கள் எப்படி வந்தார்கள் எப்படி போனார்கள் என்று தெரியாது ...அந்த வயதில் அவர்கள் எதுவும் புரியாது.... ஒரு நாளைக்கு அவர்களின் அம்மா என்னிடம் சொன்னார்கள்.. வடக்கதையான நம்பாதே என்று என்னிடம் ஊரில் சொல்லி அனுப்பினார்கள்.. அதான் என் பையஙளை யாரிடமும் பழக விடவில்லை.. நீங்கள் தான் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்.. உங்களை அவர்களோடு பழக விட வேண்டாம் என்று நினைச்சினம்.. அந்த கோர்னர் சோப்பில் அடிக்கடி சிகரேட் நீக்க குடிக்கனம்..ஆனாலும் உங்கட அப்பாமார் நல்ல நினைப்போடு இருப்பார் என்ற நிலையால் உங்களோடு பழக விடுகறோம் என்று சொன்னார்..நாங்களும் இயக்கத்தில் பிள்ளைகளை பிடித்து விட்டு போய்டுவாங்க என்ற கணத்தில இங்க வாழ வந்துருக்கோம் எங்கட புள்ளைகளை கெடுதுடாதுன்ங்கோ என்று சொன்னார்...

அது முதல் வெளிபடையாக சிகரேட் குடிப்பதை விட்டு விட்டு எங்கோ கன் காணாத இடத்தில் சிகரேட் பிடித்து விட்டு வருவேன்.. அவர்களிடம் என் கெட்ட பழக்கங்களை அதன் பின் காட்டியது இல்லை.. அப்படியே வாழ்க்கை போராட்டத்தில் இன்று திரும்பி பார்க்கும் போது,,,,,ம்...

காவிரி கரையோரம் ஒரு நாள்

சென்ற வாரம் எங்களின் குடும்ப விவசாய நிலத்தை குத்தகக்கு விட்டவரிடம் பணம் வாங்கி வர சொந்த பூர்விக மண்ணுக்கு சென்று இருந்தேன்..
பல வருடம் கழித்து தஞ்சை தரணிக்கு என் விஜயம்..

தஞ்சை - மன்னார்குடி செல்லும் பாதையில் வடுவூர் தாண்டியவுடன் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற தோற்றத்தை சிறு வயதில் பார்த்த ஞாபகம்.. இந்த காட்சியை பார்பதற்க்காவே சிறு வயதில் தஞ்சாவூர் சென்று வரும் போதேல்லாம் அக்கா அண்ணனோடு சண்டை போட்டு பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையை பிடித்த ஞாபங்கள்..

ஆனால் எனக்கு இந்த முறை பேர் அதிர்ச்சி..

எங்கும் பொட்டல் காடு.
. சென்றது ஜீன் மாதம் என்றாலும் காவிரியில் இந்த முறை தண்ணீர் சரியான நேரத்தில் திறந்த விட படபோகிறது.. ஜீன் மாதத்தில் கால்வாய் மராமத்து , வால்காய்கள் சீரமைப்பு, நீர் அடைப்புகளை சரி செய்யும் வேலைகள் என்று எங்கு பார்த்தாலும் பரபரப்பாக இருக்கும்.

அப்படியே மன்னார்குடி சென்றேன்..

சன்று நேரம் இளைப்பாறி என் பூர்விக கிராமம் சென்றேன்..

வழக்கம் போல குத்தகைகாரர் விளைச்சல் இல்லை அது இல்லை எல்லாம் நழ்டம் என்று சொல்லி சரி கட்ட பார்த்தார்..

சரி என்று அவர் கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு அங்கு ஒரு வாடகை சைக்கிளை எடுத்து கொண்டு சற்று ஊற் மேய்ந்தேன்

எங்கும் கால்வாய்க்காள் தூர் வாரபடவில்லை எங்கு பார்த்தாலும் நெய்வேலி காட்டாமண்க்கும் கூடவே பெயர் தெரியாத சில விழ தாவரங்களும் பாசன கால்வாய்க்களை ஆக்க்ரிமித்து இருந்தன,,,,

ஏன் என்று விவரம் கேட்டு தெரிந்ததில் ..

- விவசாய வேலைக்கு யாரும் வர தயாரிலல்லை.. ஒரு நாள் தினக்கூலியான 100 ரூப்பாக்கு பதிலாக வேறு ஏதும் வேலையை மாத்ததில் 15 நாள் செய்து விட்டு பின் மற்ற 15 நால் 2 ரூபாய்க்கு அரிசி வாங்கி வாழ்கிறார்கள்..

சரி விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை எந்திரங்களை உபயோக்கிலாம் என்றால் அதற்க்கும் தடை.. சிவப்பு சட்டைகளின் ஏரியாவான அங்கு விவசாய வேலைக்கு எந்திரம் என்றால் அடித்து பார்சல் செய்து அனுப்புவார்கள்

கூடவே சிங்கப்பூர் மலேசியாவிற்க்கு தங்களின் சொத்துகளை விற்று செல்லும் கூட்டம் வேறு

இத்தனை பிரச்சனையும் வைத்து கொண்டு வருகிற தண்ணீரை வைத்து ஒழுங்காக விவசாயம் செய்யாத நிலை :(
மழை காலங்களில் வெள்ளத்துக்கு காரணம் கால்வாய்கள் தூர் வாரமை..

இத்தனை ஓட்டைகளை நமக்குள்ளே வைத்து கொண்டு கர்நாடகா தண்ணி தரலே அதான் பஞ்சம் என்று சொல்லி ஜல்லி அடிபப்த்தை என்ன சொல்வது??

நானும் என் பெங்களூரும்

இன்று மாலை நேரம் citi bank ஏடிமில் பணம் எடுக்க சென்று இருந்தேன்.. மழை காரணமாகவோ அல்லது கிரிக்கேட் மாட்ச் காரணமாகவோ ஏடிம் எம் காலியாக இருந்தது.. சாலைகளிலும் ஆள் நடமாட்டம் இல்லை..

பணம் எடுத்து கொண்டு இருக்கும் நேரத்தில் ஒரு பெரியவர் அறுபதுக்கும் மேல் வயதிருக்கும்..ஏடிஎம் இல் வைத்து இருக்கும் காசோலை பெட்டியில் காசோலையை போட்டு விட்டு அங்கு இருந்த காவலாளியிடம் எப்போது இந்த காசோலையை எடுத்து செல்வார்கள் என்று முதலில் கன்னடாவில் கேட்டார்.. காவளாளியிடம் இருந்து பதில் இல்லை..
பின் ஆங்கிலத்தில் கேட்டார் அப்போது காவலாளி 6 PM 8 AM என்று ஏதோ உளறி கொண்டு இருந்தார்.. கடைசியில் இந்தியில் நாளை காலை 9 மணிக்கு வந்து காசோலைகளை எடுத்து செல்வார் என்று சொன்னார்..

பெரியவருக்கு இந்தி பேச வரவில்லை ஆனாலும் காவலாளி சொன்னது அவருக்கு புரிந்தது..

பெரியவர் கன்னடா உங்களுக்கு தெரியுமா என்று உடைந்த இந்தியில் அந்த காவலாளியிடம் கேட்டார்.. பதில் தெரியாது.

அடுத்த கேள்வி நீங்க எந்த மாநிலம் .. பதில் ஒரிஸா..

பெரியவரிம் இருந்து ஏதோ வறட்சியான புன்னகை.. ஏதோ தனக்குள் முனு முனுத்து கொண்டே வெளியே சென்றார்.. அந்த நேரத்தில் எனக்கும் பணம் எடுக்கும் வேலை முடிந்து விட்டு இருந்தது.. இருவரும் பேசி கொண்டது தெளிவாக புரிந்தது.. பெரியவரை நோக்கி சினேகமாக புன்னைகத்தேன்..

நீங்களும் ஒரிச்சாவா இல்லை பஞ்சாப்பா என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

நான் தமிழ்நாடு என்று கன்னடத்தில் பதில் சொன்னேன்..அவர் முகத்தில் ஆயிரம் வோல்ட் பிரகாசம்..
எனக்கு கன்னடா நன்றாக தெரியும் என்று மீண்டும் கன்னடத்தில் அவரிடம் சொன்னேன்.

உடன் அவருக்கு ஏதோ குற்ற உணர்ச்சி...

தமிழ்நாட்டில் எந்த ஊரு என்று கேட்டார்.. நான் திருச்சி என்று சொன்னேன்..

உடன் அவர் சொன்னது அந்த காவளாளியை கன்னடா தெரியுமா என்று கேட்டது சும்மா தான் ஏதும் பெரிய காரணமில்லை என்று சமாளித்து விட்டு சென்றார்..

சரி எங்கு செல்கிறீர்காள் என்று கேட்டேன்.. என் வீட்டுக்கு அருகில் தான் வசிக்கிறார்.. காரில் வாங்க போகலாம் உங்களை இறக்கி விடுகிறேன் என்று சொன்னேன்.. மிகவும் பிகு பண்ணி கடைசியில் ஏறி கொண்டார்.. காரில் முங்காரு மலே (கன்னட படம் ) பாடலை ஓட விட்டேன்.. கண்ணாடி வழியாக அவரை பார்த்தேன் ,அவர் முகத்தில் பரம் சந்தோழம்.. அவர் வீடு வந்த வுடம் வாங்க ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும் என்று சொன்னார்.. ஆனால் கண்டிப்பாக காலையில் வந்து அவர் வீட்டில் காப்பி சாப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டு வந்தேன்..

யோசித்து பார்த்தேன்..
சென்னையில் தமிழ் தெரியாத ஒரு ஆள் வந்தால் எப்படி எல்லாம் அவர்களை சென்னைவாசிகள் தொந்தரவு செய்கிறார்கள் torture செய்கிறார்கள்.. எப்படி எல்லாம் தங்களின் ஆதிக்த்தை நிலை நிறுத்த நினைக்கிறார்கள் என்று நினைத்தேன்..

எனது ஒரு டில்லி நண்பணை செண்டரில் இருந்து மெரினா பீச் செல்ல மீட்டர் போட்டு ஊர் உலகம் சுத்தி காண்பித்து 500 ரூபாய் கறந்த அந்த ஆட்டோகாரர் நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது..

தன் சொந்தமாநிலத்தில் சொந்த மாநில தலைநகரத்தில் தன் சொந்த தாய் மொழியை பேச கூட முடியாமல் ஆனால் பெருந்தன்மையாக வந்தாரை வாழ வைக்கும் கன்னடர்களை நினைத்து நிஜமாகவே பெருமைபடுகிறேன்.. அந்த பெரியவர் தன் மொழியை பேச முடியாமல் சாதாரண வங்கி வேலைக்கு கூட கன்னடத்தை உபயோக்கிக்க முடியாமல் இருந்தாலும் மிகவும் பெருந்தன்மையாக செயல்பட்ட விதம் என்னை மிகவும் நெகிழ வைத்தது..


கண்டிப்பாக தங்களின் மொழி சிறுமைபடும் போது எந்த மக்களாக இருந்தாலும் போராடதான் செய்வார்கள்.. பெங்களூரில் கன்னடா மொழி சிறுமைபடும் போது கன்னட அமைப்புகள் போராடுவது சரி என்றே தோன்றுகிறது..

அதுவும் பெங்களூர் தமிழர்கள் ( தற்போது சமீப காலமாக இடம் பெயர்ந்தவர்கள்) செய்யும் கூத்து சொல்லில் அடங்காது.. கன்னடா கொத்தில்லா என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரிப்பதும்.. கன்னடர்களை மிக கேவலமாக பேசுவதும் நெடும் காலமாக பெங்களூரில் வாழ்ந்து வரும் தமிழர்களை மிகவும் பாதிப்பு ஆளாக்கி இருப்பது நிதர்சனம்,

என்னை பொருத்தவரை தமிழர்கள் மிகவும் மொழி வெறியர்களாக இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.. சில பேரை தவிர பலரும் தென்னகத்தின் மற்ற மொழிகளை கற்பதில் ஆர்வம் இன்றி எப்படி இந்தி மற்ற இந்திய மொழிகளை ஆதிக்கம் செலுத்துகின்றதோ அதை போல தமிழ் மற்ற திராவிட மொழிகளை ஆதிக்கம் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள் என்பது என் கருத்து மட்டும் அல்ல நடப்பதும் அப்படி தான்..

தேசிய ஒற்றுமை ஒகேக்கனல் காவிரி என்று சில அரசியல்வாதிகளால் தூண்டி விடபடும் போது உணர்ச்சி வச பட்டு கர்நாடாகவில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அவர்கள் கன்னட வெறியர்கள் என்று சொல்பவர்கள் முதலில் தாங்கள் எந்த லேபிலில் குத்த படும் வெறியர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்..

திருவள்ளுவருக்கு அல்சூரில் சிலை அமைத்து என்ன ஆக போகிறது..??
இதனால் உலக புகழ பெற்ற திருக்குறக்கும் திருவள்ளுவருக்கும் மேலும் என்ன புகழ் சேர போகிறது??

இந்த கழக பழக்க வழக்கமான சிலை வைப்பது , இறந்தவரை வாழ்க என்று சொல்வது வெறித்தனமாக தலைவர்களை ஏதோ மண்ணில் பிறந்த கடவுள் அளவிற்க்கு ஆராபிப்பது போன்ற வழக்கங்களை தமிழ்நாட்டை விட்டு தாண்டும் போதே நிறித்தி கொள்ளாலாமே??

எந்த இடம் சென்றாலும் அந்த இடத்தின் மொழி மற்றும் கலாச்சாரங்களை மதித்து நடப்பது சான்றோர் செயல்..

காவிரியும் தமிழ்நாட்டு மழையும்

பெங்களூரில் இரவு 11 மணிக்கு பஸ் ஏறினா திருச்சிக்கு காலை ஐந்து மணிக்கு போன காலம் எல்லாம் போயே போய் விட்டது

கிருழ்ணகிரி முதல் நாமக்கல் வரை சாலை விரிவாக்கம் காரணமாக பேருந்துகள் மெதுவாக தான் சென்ல்கிறது..

ஒரு நவம்பர் மாதம்.. காவிரியில் கரைட் புரண்டு ஓடிய நேரம்.. அப்போது தான் நான் தூக்கத்தில் இருந்து கண் முழிந்து இருந்தேன்.. இடம் காவிரி கரையான குளித்தலை..ச்

தூக்க கலக்கத்தில் ஜன்னல் பேருந்தின் ஜன்னல் திரையை விளக்கி பார்த்தேன்..ட

சொட்ட சொட்ட நீரோடு மாட்டி வண்டிகள் பல மணலை ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தன..
அகணட காவிரியில் அதோடு கரை புரண்டு ஓடும் நேரத்தில் நீர் உள் சென்று அதுவும் ஆழத்தில் சென்று மணல் அள்ளி எடுத்து செல்கிறார்களே

அது எப்படி ??? அவர்கள் திறமை ஒரு புறம் அதன் காரணமாக மங்கும் நீர் சேமிப்புகள் வெள்ள அபாயங்கள் என பல பல...

இந்த மாதம் ஆரம்பம்.. வழக்கம் போல குளித்தலை வரும் போதே முழித்து கொண்டேன்.. இப்போது காவிரி சீற்றம் கொண்டு வர மாட்டாள் ஏன் சொல்ல போன்னால் வரவே மாட்டாள்..

அப்படியும் மாட்டு வண்டிகள் பல வரிசை வரிசையாக காவிரி ஆற்று மண்லோடு திருச்சியை நோக்கி....

மக்கள் பெருக்கம் கூடவே , வீட்டு கனவு என்ற சராசரி மனிதனின் கனவுக்களுக்கு மணல் திருட்டு பெரியது இல்லை..வீடு என்பது மனித குலத்தின் சொத்து என்று கூட சொல்லாம்.. நாம் இயற்க்கையை சுரண்டாமல் இருக்கும் வரை இயற்க்கையும் அமைதி காக்கும்



இந்த புகைபடம்.. தமிழ்நாட்டில் அகத்தியல் மலை எல்லையில் எடுக்கபட்டது.. அகத்தியர் மலை என்பது தமிழ் நாட்ட்கும் கேர்ளாவிற்க்கும் எல்லைக்குள் இருப்பது..
பருவ மழை காலங்களில் அகத்தியர் மலைக்கு அப்பால் அதிக மழை பெய்வதும் தமிழ் நாட்டு எல்லையில் மழை இல்லாமல் போவதும் வாடிக்கையாக நடககும் ஒன்று.


கேரளா எல்ல்லை தாண்டி தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டதின் சில பகுதிகளுக்கு தலை காட்டும் மழை ஏன் மற்ற பகுதிகளுக்கு
இல்லை என்று யார் சொன்னது??

எப்படி இந்த மழை மறைவு பிரதேசங்கள் மணல் திருட்டால் பாதிக்கபடுகின்றன?

மணல் இல்லா இடங்களுக்கு மரங்களுக்கு வேலை இல்லை
மரம் இல்லா இடஙகளுக்கு மழைக்கு அறிகுறியே இல்லை...

தமிழக கேரளா எல்லையில் பயணிக்கும் போது கவனிக்கலாம்

ஒரு எல்லையில் அதிகமாக தண்ணீர் உறிஞ்சும் யூகலிட்ப்டஸும் மறு எல்ல்லையும் தண்ணீர் குறைவாக உறிந்துச்ம் தேக்கு மறங்குளும் இருக்கும்

தேக்கு மரங்கள் இருப்பது கேரளா எல்லையில்..

மழை மறைவு பிரதேசம் என்பது என்னை பொருத்தவை ஏதும் இல்லை..

மேற்க்கு தொடர்ச்சி மலையை தாண்டி வரும் தென் மேற்க்கு பருவ காற்றை தமிழநாட்ட்க்கும் பயன் அடையை செய்ய நம்மால் முடியும்

மேற்க்கு தொடர்ச்சி மலைகள் மேகங்களை தடுத்து ஒரு பக்கம் மழை பெய்ய செய்கிறது..
அப்படியும் தாழ்வான மேகங்களை தவிர மழை தரு மேகங்கள் தென் மேற்க்கு திசையில் சென்று கொண்டு தான் இருக்கின்றது

ஆடி காத்தில் அம்மியும் பறக்கும் என்று சொல்வார்கள்..

அதாவது தென்மேற்க்கு பருவமழை மேகங்களை இங்கு வீசும் காற்று எப்படியாவது மழை பெய்ய செய்ய மிகவும் கடினமான வேலை செய்கிறது

இந்த நிலையை சரி செய்ய மரங்கள் அதிகமாக நடப்பட வேண்டும். குறிப்பாக தண்ணீரை மிகவும் குறைவாக எடுத்து ஆனால் மிகவும் அதிகமாக பயன் அளிக்கும் வேப்ப மரங்களை அதிகமாக வறட்சி பகுதியில் நட வேண்டும்.. தற்போது இரண்டு வருடங்களில் அதிக வளர்ச்சியை அடையும் hybrid விதைகளை கொண்ட வேம்பு விதைகள் கிடைப்பாத படித்தேன்..

இதை போல விதைகளை வறட்சி பகுதியில் அதிகமாக பயிரிட்டு வளர்த்து வந்தால் வரும் வருடங்களில் மாற்றங்கள் கணடிப்பாக இருக்கும்

எனக்கு நானே - 2

சரி பெட்ரோல் விலை தான் உயர்ந்து கொண்டே இருக்குதே

இதற்க்கு மாற்றாக பேட்டரியில் ஓடும் வாகனங்கள் கொண்டு வந்தா எப்படி இருக்கும்..

பேட்டரியில் ஓடும் இரு சக்கர வாகனத்தை ஹீரோ ஹோண்டா அறிமுக படித்தி 6 மாசம் ஆகுது
இந்தியா முழுக்க இது வரை விற்றது என்னவோ 200 தான்..

அது என்னவோ சீனா பைக்குன்னா இன்னமும் நம்மூரு ஆளுங்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கதான் செய்யுது..

எந்த வித தரமும் இல்லாத அடிச்சிக்கோ புடிச்சிகோ என்ற தரத்தில் தமிழநாட்டில் ஒரு அவசர பெயர் மறந்து போன நிறுவனம் பேட்டர் ஸ்கூட்டர்களை 2000 யூணிட்களை விற்றது.. இப்ப அந்த கம்பேனி எங்க போச்சுன்னு தெரியலை.. அந்த கம்பேனி விளம்பரத்துல வந்த சன் டிவி மகேஸ்வரி ஹேமா சின்ஹா எல்லாம் இன்னமும் இருக்காங்க ஆனா அந்த ஸ்கூட்டர்களை வாங்கிய ஆட்கள் கதி.. பஞ்சாரான கூட இது சைனா ஸ்கூட்டர்ன்னு சொல்லி தனியா ரேட் கறக்குறாங்களாம்.

ஏற்கனவே சைனாவில் இந்தியாவின் இந்திய ஆட்களின் உழைப்பால் உருவான பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பல்சர் ஏன் டிவிஏஸ் 50 கூட எந்த வித பேடண்ட் இல்லாம அப்படியே காப்பி அடிச்சு விக்கறாங்களாம்..

அப்ப பஜாஜ் டிவிஏஸ் கதி... அதோ கதி தான்.. சீனா பிராண்ட் கோபால் பல் பொடி வந்தால் கூட நம்ம சனம் அப்படியே எல்லா வேலையும் விட்டி வரிசையில் நின்று வாங்கும்.

இதை போல தரம் இல்லாத சீன பொருட்களால் ,,, இந்திய நிறுவனங்கள் பல தடுமாறிகின்றன.. அடுத்தவர் தொழில் நுட்பத்தை காப்பி அடித்து தில்லி செங்கோட்டை அருகே விற்க்கும் ஆட்களுக்கும் சீன பொருட்களுக்கு வித்யாசம் ஏதும் இல்லை..

நானும் என் பெங்களூரும்

ம்.. தம் அடிக்கனும் போல இருக்கு

ஒரு 3.50 கொடுத்து அண்ணே ஒரு கிங்ஸ் பில்டர் கொடுங்க .

தம்பி ஒரு அம்பது பைசா கூட கொடப்பா கிங்ஸ் ரேட்அதிகமாச்சு ஒரு சிகரேட் 4 ரூபா..

பர்ஸில் அம்பது பைசா தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை.. 50 பைசாவை தடை செய்து விட்டார்களா இல்லை 5,10,20 பைசாக்களை அதன் அலுமனியத்தற்க்காக மொத்தமாக கைபற்றி உறுக்கி விட்டார்களா??? நடக்காது 50 பைசா சில்வர் ஸ்டீல் காசு.. திருச்சி சென்று வரும் போது அகப்படும் 25,50 பைசாக்களை பெங்காளூரில் தள்ளி விடுவதே பெரும் பாடு,, பெங்களூரில் உகாண்டா ஜாம்பியா ஏன் தான்சானியா நாட்டு காயின்க்ளை கூட தள்ளி விடலாம் ஆனால் 25,50 பைசா காசு என்றால் சார் இது செல்லாது என்று அப்படியே நம் பர்சுக்கு திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.. இந்திய அரசு இது வரை 25 ,50 பைசாக்களை செல்லாது என்று அறிவிக்கவில்லை .. ( இன்னமும் கூட 10 பைசா 20 பைசாவை கூட செல்லாது என்று சொல்லவில்லை)

சரிங்கண்ணா ஒரு பாக்கேட் கொடுங்க (மொத்தமா ஒரு பாக்கேட் வாங்கினா ரெண்டு நாளைக்கு ஓடும், அப்படியே 2 ரூபா மிச்சபடுத்தலாம் )

ரெண்டு ரூபா சில்லறை இல்லை அதுக்கு இந்தாங்கோ பிடிங்கோ மெண்டாஸ் ( எப்படி தான் நம்பளை குறி வைச்சு ஏமாத்துறாங்க)

*****************************************


பெட்ரோல் விலை உயர போகுதாமே !! மாசம் கணிசமான தொகை பெட்ரோலுக்கே போகுதே..சரி உலகத்தின் பெட்ரோல் தேவையை கருத்தில் கொண்டு நாமும் அதற்க்காக ஒத்துழைப்போம்..

நடந்தே செல்ல கூடிய தூரத்தில் இருக்கு அலுவகத்துக்கு நடந்து சென்றால் என்ன ஆகும்..எப்படி இப்படி தான்..



எண்ண அருண் டயட்ல இருக்கீங்களா? என்ன சார் கார் பஞ்சரா?
அதான் அப்பவே சொன்னேன் சாண்ட்ரோவில் டயர் சரியில்லைன்னு கேட்டிங்களா?
என்ன வீக்கேண்ட் மப்புல வண்டிய ஏதாச்சும் மீடியண்ல மோதிட்டிங்களா?
உடம்புக்கு ஏதும் இல்லையே நடந்து வரீங்களே அதான் கேட்டேன் கவலை படாதீங்க எனக்கு தெரிந்து நல்ல ஒரு insurance ஆள் இருக்கான் . நம்ம ஆளு
சம்ம ப்ளான் எடுத்து கொடுப்பான். மொபைல் நம்பர் தரட்டுமா


சரி நடை வேண்டாம் பைக்கில் போனால் என்ன ஆகும்

என்ன சார் காரை எங்கயாச்சும் குத்திடீங்களா?
நேத்து சேர்ந்தவன் கூட ஹோண்டா சிட்டில வரான் நீங்க என்ண்டன்னா பைக்கில வரீர்ங்க உங்களை யாராச்சும் மதிப்பானா?
அருண் பைக்சாவி கொடு என் கசின் ஊர்ல இருந்து வந்து இருக்காங்க அவங்களை பிக்கப பண்ணிட்டு வந்துடறேன்.. ( அவங்க கியர் மாத்தும் போது என் இத்யம் பல மடங்கு அதிமாகன வேகத்தில் ஓடும்..)


என்ன தான் செய்யிறது??

பெட்ரோல் விலை பெங்களீரில் 53.00 ருபா இதில் சரிபாதி மத்திய மாநில அரசின் வரிகளுக்கு செல்கிறது.. பெங்களூர் மட்டும் அல்ல இந்தியாவின் அனைத்து இடங்களுக்கும் இதே நிலை தான்..

பெட்ரோல் டீசல் போன்ற பொருட்களில் ஏகப்பட்ட உள் வரி போட்டு அதை ஏகப்பட்ட விலையில் ஏற்றி வைத்து இருக்கும் அரசுக்குகளுக்கு இந்த விலை ஏற்றதை காரணம் காட்டி வரிகளை திரும்ப பெறாது.. காரணம்.. வருமானம்..வருமானம்..

இந்த வருமானங்கள் இலவச டிவியாகவும் இலவச கேஸ் அடுப்பாகவும் மேலும் இலவசம் இலவசமாக போகும் வரை மிஸ்டர் பொது ஜனம் இப்படிதான் மனசாட்சியோடு பேசியே காலத்தை ஓட்ட வேண்டும்..