Monday, June 16, 2008

நானும் சில பாதிக்கப்ட்ட மனிதர்களும்

நான் இருக்கும் அபார்ட்மெண்டில் நிறைய திபேத்தியர்கள் இடுக்கிறார்கள்.. நான் இருக்கும் அபார்ட்மெண்ட் மட்டும் இன்றி பெங்களூரில் பரவலாக திபேத்தியர்களை பார்க்கலாம். பெங்களூரில் brigade ரோட்டில் திபேத்தியர்களுக்கான சிறு சந்தை உண்டு.. அங்கு அவர்களுக்கு தகுந்தவாறு உடைகள் முதல் அனைத்து பொருட்களும் கிடைக்கும்..பொதுவாக உருவத்தில் குள்ளமான திபேத்தியர்களுக்கு தகுந்தவாறு ஜீன்ஸுகளும் மற்ற ஆடைகளும் அங்கு கிடைக்கும்..

பொதுவாக பெங்களூரில் அவர்களை சிங்கி என்று அழைப்பார்கள்.. அவர்கள் வெகுவாக மற்ற மக்களோடு கலந்து விட மாட்டார்கள். மிகவும் பல தயக்கோதோடு தான் வெளி ஆட்களிடம் பேசவே ஆரம்பிபார்கள்..

அனுதினமும் கேரளா சேட்டா கடையில் காலையில் ஜிம்க்கும் போய் வரும் போது பேருந்து நிறுத்தத்தில் பல ஆட்களை தினமும் பார்பேன்.
.
அனைவரும் பெங்களூரில் நல்ல கல்லூரிகளில் படிக்கிறார்கள்.. நானும் அந்த பெண்களோடு பேச வேண்டும் என்று முயர்ச்சி செய்த நாட்கள் பல உண்டு..சேட்டா கடையில் உடைந்த இந்தியில் பையா 50 ருபாக்கு மொலை சார்ஜ் கரோ என்று அடிக்கடி கேட்டதுண்டு..

பெரும்பாலான திபேத்தியர்கள் இங்கே கால் செண்டர் அல்லது வேறு விதமான வேலை என்று செட்டில் ஆகி விடுவார்கள்.. சில பேர் அமெரிக்கா அல்லது பிரிட்டன் என்று சென்று விடுவார்கள்.. மிகசிலரே தன் தாய் மண்ணுக்கு திரும்ப போவார்கள்..

எனது அபார்ட்மெண்ட்டில் இருக்கும் ஒரு திபேத்திய மாணவன் தன் பெட்டி படுக்களைகளை எடுத்து கொண்டு சென்று கொண்டு இருந்தான்.. வழக்கமாக ஹாய் அல்லது சிறிய புன்முறுவல் கொடுத்த பழக்கம் என்றதால் ” என்ன ஊருக்கு போறியா என்று கேட்டேன் “ ஆம் என்ற வறட்சியான பதில் .. அந்த பையனை இதுவரை நான் என்றுமே இதை போல சோகமாக பார்த்தது இல்லை.. சரி நமக்கு திபேத் கதை தான் தெரிந்தது தான் அதுவும் சீனா போன்ற ஒரு நாட்டினால் கொடுமைபடுத்தபடும் இனம் என்பதால் எனக்கும் வருத்தமாக இருந்தது..

சரி ஏன் ஊருக்கு திரும்ப போறே??

எனக்கு இங்க வேலை கிடைக்க வில்லை..

சரி நான் இங்க வேலை வாங்கி கொடுத்த இங்க்யே இருப்பாயா?

இல்லை ...எனக்கு இங்க வேலை கிடைக்காது

அவன் தன் தாய் நாட்டுக்கு திரும்ப போவதில் தான் உறுதியாக இருக்கிறான் என்பது எனக்கு தெளிவாக புரிந்தது..

அந்த பையனின் முகத்தை இனி நான் பார்பது சந்தேகமே.. என்னால் முடிந்தது.... பெங்களூர் சிட்டி ஸ்டேசனில் புகை வண்டி ஏற்றி அனுப்பி வைத்தது கூடவே..

gate way of north east என அழைக்கபடும் சிலிகுரியில் இருக்கும் என் நண்பணிடம் போன் செய்து இவரை பத்திரமாக திபேத் எல்லையில் சேர்க்க சொன்னேன்

***************

இதை போல பல அகதிகளின் வாழ்க்கையை நேரடியாக என் திருச்சி கே கே நகரி இருக்கும் போது பார்த்து இருக்கிறேன்..

ரமணன் குமணன் என்ற இலங்கை தமிழர்கள் , இரட்டையர்கள் என் கல்லூரி நாட்களில் மிகவும் நெருக்கமான நண்பர்கள்.. தற்போது இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..சென்ற முறை திருச்சி சென்ற போதும் அவர்களின் தற்போதைய முகவரியை தேடி அலைந்தேன்

அவர் தந்தை சுவிஸில் இருக்கிறார் என்று தெரியும்.....அவர்களும் சுவிஸ் போயிருப்பார்கள் என்றே தோன்றுகிறது..

மிக கண்ணியமாக அண்ணா என்று தான் எப்போதும் அழைப்பார்கள்.. எனக்கும் அவர்களுக்கும் வய்து வித்யாசம் ஒரு வருடம் தான் இருக்கும்.
அவர்கள் வீட்டில் அடிக்கடி பல புதிய ஆட்கள் வந்து போவார்கள்.. அந்த அண்ணா நாளைக்கு பிரிட்டன் போகுது என்பார்கள்..வந்த அண்னக்கள் எப்படி வந்தார்கள் எப்படி போனார்கள் என்று தெரியாது ...அந்த வயதில் அவர்கள் எதுவும் புரியாது.... ஒரு நாளைக்கு அவர்களின் அம்மா என்னிடம் சொன்னார்கள்.. வடக்கதையான நம்பாதே என்று என்னிடம் ஊரில் சொல்லி அனுப்பினார்கள்.. அதான் என் பையஙளை யாரிடமும் பழக விடவில்லை.. நீங்கள் தான் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்.. உங்களை அவர்களோடு பழக விட வேண்டாம் என்று நினைச்சினம்.. அந்த கோர்னர் சோப்பில் அடிக்கடி சிகரேட் நீக்க குடிக்கனம்..ஆனாலும் உங்கட அப்பாமார் நல்ல நினைப்போடு இருப்பார் என்ற நிலையால் உங்களோடு பழக விடுகறோம் என்று சொன்னார்..நாங்களும் இயக்கத்தில் பிள்ளைகளை பிடித்து விட்டு போய்டுவாங்க என்ற கணத்தில இங்க வாழ வந்துருக்கோம் எங்கட புள்ளைகளை கெடுதுடாதுன்ங்கோ என்று சொன்னார்...

அது முதல் வெளிபடையாக சிகரேட் குடிப்பதை விட்டு விட்டு எங்கோ கன் காணாத இடத்தில் சிகரேட் பிடித்து விட்டு வருவேன்.. அவர்களிடம் என் கெட்ட பழக்கங்களை அதன் பின் காட்டியது இல்லை.. அப்படியே வாழ்க்கை போராட்டத்தில் இன்று திரும்பி பார்க்கும் போது,,,,,ம்...

No comments: