Monday, September 22, 2008

Friday, September 19, 2008

நானும் என் ரஜினியும்


இது அடிக்கடி ஏன் தினமும் நிகழ்வது..

ஏண்டா மச்சான் நிறைய இங்கலீஷ் படம் பார்க்கறே கூடவே இந்தி தமிழ்ன்னு கலந்து எல்லா படமும் பாக்குறே..இதுல நீ பார்க்காத நல்ல சினிமாவும் நல்ல நடிப்பையும் எதுவும் இல்லாத ரஜினி படத்தை எப்படிடா ரசிச்சு ரசிச்சு பல முறை பார்க்குறே??

இதை போல பேசுபவர்களிடம் பேசி என்ன பயனும் இல்லை..
கூடியவரை சிறிய சிரிப்பு அல்லது மவுனம்..  

ரஜினி கர்நாடாவுல தான் தன்னோட சொத்து எல்லாத்தையும் வாங்கி போட்டு இருக்காறாம்.. அவரு ஒரு கன்னட வெறியன்..

நீ எத்தனை வருசமா பெங்களூர்ல இருக்கே??

3 வருசமா?

உனக்கு கன்னடா தெரியுமா?

கன்னடா கொத்தில்லா

சரி நீ சம்பாதிக்கிறா காசை எல்லாம் எங்க அனுப்புற??

ஏன்?? எங்க ஊருக்கு தான்.. 

உங்க ஊருன்னா ..பெங்களூரா

சே சே திருநெல்வேலி..

சரி ரஜினி கர்நாடாகாவுல வாங்கின சொத்து விவரம் சொல்லு?

அது வந்து..

அப்புறம் பெரிசா பேசின??

முதல்ல நீ உருப்படியா இருப்பா.. பெங்களூர் வந்து இத்தனை வருசம் ஆகியும் கன்னடா தெரியாது.. சம்பாதிக்கும் பணம் எல்லாம் உன் வீட்டுக்கு அனுப்பி அங்க சொத்து வாங்கி போடலாம்.. ஆனா ரஜினி கர்நாடகாவில் சொத்து வாங்கினாரா இல்லை வாங்கலையான்னு தெரியாது.. ஆனா சும்மா தமிழ் விரோதி கன்னடா விரோதின்னு வாய்க்கு வந்தபடி பேசறது....


என் நெருக்கிய நண்பன் என்னிடம் பல முறை கேட்டு இருக்கிறான்.
அருண்.. எப்போதுமே யாரிடம் சண்டைக்கு போகாத நீ ஏன் ரஜினியை பத்தி யாராச்சும் ஏதாச்சும் சொன்னால் சண்டைக்கு போறே??

நம்மில் பலரின் முதல் காதல் அபத்தமாக தான் இருக்கும். அதற்க்காக என்றாவது நம் முதல் காதலை யாராவது தவறாக சொன்னால் தாங்க முடியுமா??

ரஜினி...

எனக்கே நினைவு தெரியாத வயது..  கும்பகோணம் செல்வம் தியேட்டருக்கு யாரோ என்னை அழைத்து சென்றார்கள்.. படம் நான் சிகப்பு மனிதன்.. ரஜினியை தலை கீழாக கட்டி அடிப்பார்கள். அப்போது அதை அந்த காட்சியை பார்த்து ரஜினியை அடிப்பதை பார்த்து அழ ஆரம்பித்த என்னை சமாளிகக் முடியாமல் திணறினார்களாம்..

ரஜினி அடிக்க ஆரம்பத்த பின் தான் நான் சமாதனம் ஆனேனாம் :)

எனக்கு அப்போது வயது 4 அல்லது 5 இருக்கலாம்..

வீட்டில் அம்மா வைத்து இருந்த தீக்குட்சியை களவாண்டு ஊர் முழுக்க கூடும் நடு திண்ணையில் உட்கார்ந்து ரஜினி ஸ்டைலில் சிகரட் ஊதுவது போல பாவனை காட்ட.. அன்றைக்கு தான் என் அம்மா என்னை முதலில் அடித்த ஞாபகம்..

அப்போது எங்கள் ஊரில் எந்த படமும் ரிலீஸ் ஆகாது. ஆனால் படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் வீடியோ காசேட் வந்து விடும். யாராவது வீட்டில் வீடியோ காசேட் எடுத்து படம் போடுகிறார்கள் என்றால் ஊரே அவர்கள் வீட்டில் தான்.

மாவீரன் படம்.. முதல் நாள் ..வீடியோ காசட்டில் பார்த்தது...பின் மிஸ்டர் பாரத்தில் ரஜினி கள்ளு கடையில் சும்மா பம்பரமாக அடித்து நொறுக்குவது.. இதுவும் என்னை விட்டு நீங்கவில்லை..

வீடியோ காசட் வாடைக்கு வாங்கு வீடு பணக்கார வீடு.. தம்பிக்கு எந்த ஊரு காசட் போட்ட போது அன்று நான் தூக்கி விட்டேன்.. படத்தை பார்க்கவில்லை ..அடுத்த நாள் காலை நான் அழுத அழுகைக்கு பயந்து அந்த வீட்டம்மா எனக்காக மற்றும் ஒரு முறை எனக்கே என்க்காக மற்றும் ஒரு முறை அந்த படத்தை விசிஆரில் காட்டினார்கள்... அப்போது எனக்கு உலகை வென்ற சந்தோசம்.. பள்ளி நண்பர்களுக்கு கதை சொல்வது பெரிய ஒரு சாதனை..

எங்கள் தெருவில் முக்கனி நறபணி மன்றம் என்று ஒரு சிறு படிப்பகம் இருந்தது..
நானும் அங்கு படிகக் போவேன்.. தினதந்தியில் வேலைகாரன் வெற்றிகரமான 60வது நாள் என்ற அந்த விளம்பரத்தை படிக்க மட்டும்..

அப்போது எனக்கு பள்ளிபாடமான திருக்குறள் எல்லாம் வராது.. ஆனால் ரஜினியில் நூறாவது படம் தொடங்கி வரிசை எல்லாம் ரொம்ப இயல்பாக வரும்..

அன்று தொடங்கிய அந்த இனம் புரியாத நட்புதான் இன்று வரை என்னை இழுத்து செல்கிறது.. என் வீட்டிலே அடிக்கடி சண்டை வரும்.. சிலோன் ரேடியோவில் ரஜின் பட பாட்டு வரும் போது யாராவது ரேடியாவை திருகினால் உடனே என் ஆயுதம் அழுகை தான்.. வீட்டுக்கு கடைசி பிள்ளை என்பதால் ரஜினி பட பாட்டு வரும் போது நான் இருக்கும் போது அலைவரிசையை மாற்ற மாட்டார்கள்...

அப்புறம் நான் ஐந்தாவதோ ஆறாவதோ அல்லது  ஏழாவதோ படிக்கும் போது வந்த படம் அண்ணாமலை.. 

மன்னார்குடி சாமி தியேட்டர்.. எங்க ஊரில் புதிதாக திறந்த தியேட்டர்..முதல் படம் அண்ணாமலை.. கரகாட்டம் ஒயில்லாட்டம் பொய்கால் குதிரை எல்லாம் போட்டு  அண்ணாமலை படம் போட்டார்கள்..

எங்கள் ஊரில் அண்ணாமலை 55 நாள் ஓடியது.. எங்கள் ஊரில் அது பெரிய சாதனை.. நானே அந்த தியேட்டரில் நண்பர்களோடு ஒரு முறை குடும்பத்தோடு ஒரு முறை பார்த்தேன்,

பின் எஜமான்.. எங்கள் ஊரில் முதல் ரிலிஸ் படம்.. முதல் நாள் முதல் காட்சி.. சாமி தியேட்டர் உரிமையாளர் மகன் என் வகுப்பு தோழன்.. அவன் உபயத்தால்..


திருச்சிக்கு வந்த பின் ரஜினியின் படங்களை தியேட்டரில் பார்த்தேன்...என்பதை விட தரிசித்தேன் என்று சொல்வதே சரியாக இருக்கும்..

பாட்சா முதல் பாபா வரை,,

பின் மும்பையில் இருந்த போது சந்தரமுகி..ரஜினி அவ்வளவுதான் என்று பல பேர் சொல்லி வந்த காலம் அது..

மாட்டுங்க அரோராவில் ரஜினி தோன்றும் முதல் காட்சியில் எழுந்த கை தட்டல்களும் விசில்களும் தலைவா என்ற குரல்களும் வந்த போது தோன்றியது “நீ விழ்வது திரும்ப முழு சக்தியோடு எழுந்த நிற்கவே”


அப்பொது தொடங்கிய முதல் நாள் முதல் காட்சி இன்று வரை குசேலன் வரை தொடர்கிறது..

சிவாஜி படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்க்கே நினைவில்லை.. பெங்களூர் நடராஜ் மற்றும் பிவிஆரில் 100 நாள் வரை பின் பிவிஆரில் மட்டும் 175 நாள் வரை..  அந்த சாதனையை தசாவாரத்தினால் கூட முறியடிக்க முடியவில்லை.. பெங்களூரில் தசாவதாரம் ஓடியது 25 நாள் மட்டுமே..

அப்போது சனிகிழமைகளில் நண்பர்களோடு சேர்ந்து கெட்ட ஆட்டம் போட்டு 

சிவாஜி பார்த்தது எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்..

என்னவோ தெரியவில்லை.. ரஜினி என் வாழ்வோடு பிண்ணி பிணைந்த ஒரு உணர்வு.. 

சென்ற வாரம் கே டிவியில் படையப்பா போட்ட போது கூட என்னை மறந்து ரஜினி வரும் முதல் காட்சியில் விசில் அடித்தேன்..

ரஜினி படங்களை பார்க்கும் போது என்னையும் அறியாமல் என் குழந்தை பருவ வாழ்க்கை நினைவுக்கு வருகிறது .. ரஜினி என்று சொல்லும் போதே எனக்கு தெரியாமல் என்னுள் பட்டாம்பூச்சி பறக்கிறது..

யோசித்து பார்த்தால் அனைவரும் குழந்தையாகவே இருக்க விரும்புகிறோம்.. அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கும்...குழைந்த பருவ ஆசைகள்..


எனக்கு அது ரஜினியாக இருக்கிறது...

ரஜினியை நேரில் கண்ட போது..

அப்போ நான் சென்னைக்கு புதுசு.. முதல் வேலை.. 

தமிழ்நாடு காவல்துறைக்கு மெட்டல் டிடக்டர்கள் கொடுக்கும் வேலை :)

அந்நாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் நிறுவபடு இருந்த மெட்டல் டிடக்கர்களை பராமரிப்பு சோதனை செய்ய சென்ற போது.. ரஜினி வீட்டின் வாசலில் என்னையும் அறியாமல் நின்றேன்.. எத்தனை நேரம் நின்றேன் என்று எனக்கே தெரியாது.. ரஜினியும் வந்தார்.. 

ஏதோ என்னும் ஒரு இணம் புரியா உணர்ச்சி... அப்படியே பார்த்து கொண்டே இருக்கிறேன்.. ஏதும் பேச தோன்றவில்லை.. ..அவரும் மின்னல் போல வந்து காரில் சென்று விட்டார்.. கடவுளை நேரில் பார்த்த உணர்ச்சி..

அடுத்த ஒருவாரம் மிதப்பாகவே திரிந்து கொண்டு இருந்தேன்.

அன்று ஏதாச்சும் பேசி இருக்கலாம் என்று இன்று வரை நினைக்கிறேன்....பெங்களூரில் அவர் வ்ழக்கமாக தங்கும் சாம்ராஜ்பேட்டை இல்லமும் இந்திரா நகர் ப்ளாட்டும் நன்றாக பரிச்சயம் தான்.. ஆனால் நேரில் என்று இன்று வரை பார்க்க தோன்றவில்லை.

கெட்டதோ நல்லதோ ரஜினி என்ற சக்தி இன்னமும் என்னுள் இருப்பதால் தான்.. சாதாரண மிடில் க்ளாஸ் போர்வையோடு வந்த என்னை அவர் உழைப்பின் கீழ வந்த அந்த் உணர்ச்சியே என்னை இன்னமும் வரை போராட தூண்டி செல்லும் சக்தி.. அது என் உயிர் இருக்கும் வரை என்னோடு கலந்து இருக்கும்.

Wednesday, September 17, 2008

கண்டதும் கேட்டதும் 17-09-2008இன்று மதியம் ஒரு வேலையாக எம் ஜி ரோடு செல்ல வேண்டி இருந்தது.  செல்லும் வழியில் ஐசிஐசிஐ ஏடிஎம் ல் வரலாறு காணாத கட்டு கடங்காத கூட்டம்.  சரி இன்னிக்கு 1ம் தேதி இல்லையே ... ஐசிஐசிஐ ஏடிம்ல் 500 ரூபா கேட்டா 1000 ரூபா தருதான்னு குழப்பம். பஸ்ல கர்சீப் வசதி இல்லன்னா செருப்பு கூட போட்டு சீட் பிடிக்கும் நம்மாளுங்க என்ன இவ்வளவு பெரிய வரிசையில் ரொம்ப ஒழுங்க நிக்கறாங்கன்னு பார்த்தேன்.. அப்பால தான் தெரிஞ்சது.. அங்க ரெண்டு போலிஸ் காரஙக நிக்கறாங்க..  

காதில் விழுந்த செய்தி ஐசிஐசிஐ பாங்கு அம்போவாம்.. நம்ம பணம் எல்லாம் கோவிந்தாவாம்.. அடச்சீ கேண்பசங்க நேரத்தை வீணாக்கி விட்டோம் என்று என்னை நானே திட்டி விட்டு வேலையை பார்க்க சென்றேன்.

ஐசிஐசிஐ வங்கி கோவிந்தா ஆகா வாய்பே இல்லை..
திவாலான லேமேன் பிரதர்ஸில் ஐசிஐசிஐ போட்ட பணம் 250 கோடி.. ஐசிஐசிஐயின் ஒரு வருட் லாபம் 1000 கோடியை தாண்டும். ( அந்த லாபம் எல்லாம் சம்ம ப்ராடு வேலையால வருகிறது என்பது வேறு செய்தி :))

அத்தோடு இது அமெரிக்கா இல்லை.. அங்க தான் மஞ்ச கடிதாசி கொடுத்துட்டு எஸ்கேப் ஆகலாம். இங்கன அப்படி எல்லாம் எஸ் ஆக முடியாது. ரிசர்வ் பேங்க் நம் ஒவ்வோரு ஆட்களின் முதலீட்டுக்கு உத்திரவாதம் தருகிறது. என்ன வங்கி திவால் ஆனா போட்ட பணம் வட்டியோடு கிடைக்க சில மாதங்கள் தாமதம் ஆகலாம்... ஏறகனவே திவால் ஆன சில வங்கிகளில் போட்ட பணத்தை இது வரை பத்து பைசா சேதாரம் இல்லாமல் மக்களுக்கு கிடைக்க செய்து இருக்கிறது ரிசர்வ் வங்கி. 
இப்படி ஐசிஐசிஐ திவால்ன்னு புரளி கிளப்பும் ஆட்களுக்கு என்ன ஆசை.. ஒரே நாளில் பல பேர் முதலீடுகளை திரும்ப வாங்குவதால் எப்படியாவது திவால் 
ஆகாதா என்ற ஏக்கம் தான்..

என்னதான் அமெரிக்கா டாப்பு தான் என்றாலும் இங்கே ஒரே நாளில் நடுதெருவுக்கு அடித்து விடப்படும் அவலவங்கள் குறைவு தான்.. :)

அதுக்காக பைனான்ஸ் கம்பனியில் போட்ட பணம் எல்லாம் திரும்ப கிடைக்குமா என்றால் ??? பேஜாரா போச்சுப்பா..

****************************************************************************************

ஏற்கன்வே நடக்கும் என்று பலரால் ஆர்வமுடம் எதிர்பார்க்க பட்டது தான்.
IT SLOW DOWN.............

அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி நமக்கு சற்று தாமதமாக தெரிகிறது..
சென்ற ஆறு மாதங்களாக அமெரிக்காவில் ஏகப்பட்ட காபி ஷாப்புகள் மூட்ப்பட்டன. காரணம் பண புழக்கம் இல்லாத காரணத்தினால் ஈ கொசு ஓட்ட வேண்டிய கட்டாயத்தினால் அப்படியே கடையை மூடி விட்டு போய் விட்டனர்.

சாதாரண காபி ஷாப்புக்கே இவ்வளவு பிரச்சனை என்றால் .
காபி குடிக்க கூட சிக்கன நிலை மக்களுக்கு வர வேண்டிய நிலை என்றால்...

பொருளாதார ஏற்ற தாழ்வுகள் அனைத்து நாட்டுக்கும் சர்வ சாதாரணம்.. ஏற்றமும் இறக்கமும் நடைமுறையில் சாதாரண ஒன்று.. ஆனால் இறக்கத்தில் அடிபடுவது சாதாரண மக்களே...


விப்ரோ முதல் ரோட்டு முக்கு கடை ஐடி கம்பெனி வரை இது வரை வெளியே சொல்லாமல் அவ்வப்போது ஆட்களை வெளியே அனுப்பி கொண்டு இருந்தார்கள். காரணம்.. அமெரிக்க பொருளாதாரம் அடிபடும் போது அதை சார்ந்து இயங்கும் இந்திய நிறுவனங்களும் ..நேரடி mncகளும்  தங்களின் நட்டத்தை குறைக்க இப்படி செய்வது வழக்கம் தான்..

சென்ற வாரம் சத்யம் நிறுவனம் வெளிடையாக ஆட்களை அனுப்புவதை அறிவித்தது.. கூடவே இன்று ஐபிஎம்மும் விப்ரோவும் சேர்ந்து கொண்டன..

ஏற்கனவே ஒரு முறை 2001ல் இந்திய ஐடி நிறுவனம் இதை போல சரிவை கண்ட  அனுபவத்தால் இந்த முறை பெரிய சலசலப்பு இல்லை. என்ன அன்றைக்கு 2000 பேர் வேலை இழந்தால் இன்று 20000 பேர் வேலை இழக்கிறார்கள்.

ஐடி தொழிலால் எவ்வளவு லாபமோ அதை போல நட்டமும் உண்டு. அதை உணராது அவசர கதியில் ஜாவா தெரியும் sap தெரியும் என்று வந்தவர்கள் இன்று ...இஞ்சி தின்ற குரங்கு போல என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள்....

அமெரிக்கா பொருளாதாரம் வீழ்ந்தால் என்ன .. ஐரோப்பா பொருளாதாரம் கை கொடுக்கும் என்று நினைத்தால் அது பெரும் தவறு. இன்று வரை ஐரோப்பா பொருளாதாரத்தில் இந்திய ஐடி  உற்பத்தியின் பங்கு  வெகு குறைவு தான்.

உள்நாட்டில் ஐடி உற்பத்தி??

பெங்களூர் தெருக்களில் தரை கடைக்களில் விற்க்கபடும் திருட்டு டிவிடி அல்லது திருட்டு கண்ணி சாப்ட்வேர்களை வாங்கும் நம்மை போன்ற ஆட்கள் இருக்கும் வரை இங்கு ஏது வளர்ச்சி..

என்ன இதனால் பல நண்மைகள் நடக்க வாய்ப்பு உண்டு

சாப்ட்வேர் துறை இன்னமும் செம்மை படுத்தபடும்.. அதிக சம்பளம் அதிக ஆடம்பரம் போன்ற தேவை இல்லாத ஆடம்பரங்களும் கட்டுபடுத்த படலாம்..

சென்னை பெங்களூர் பூனே போன்ற இடங்களில் விலை வாசி ஏறி போச்சு என்னும் ஒப்பாரிகள் மட்டுபடலாம். கூடவே ஐடி துறையும் மெக்கானிக்கல் துறை போல சாதாரண ஒரு பொறியல் துறை போல பாவிக்கபலாம்.நான் ஐடியில் வேலை பார்க்கிறேன் போன்ற பந்தாக்கள் காணாமல் போகலாம்..

ஐடி ,பயோ போன்ற துறைகள் லாபம் வந்தால் நடத்தலாம் என்பது உலக நியதி..நட்டம் வந்தால் கடையை மூடி சாத்து...


அமெரிக்கா தான் வாழ்க்கை என்று சென்ற ஐடி,பயோ ஆட்கள் பல பேர் இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்பபடுவார்கள். நான் அமெரிக்கா நான் பல் துலக்க கூட கோக் தான் use செய்வேன் என்ற பல வெட்டி சீன் ஆட்க்கள் காலப்போக்கில் உப்பு நீரில் கூட பல் துலக்குவேன் என்று மாறி போவார்கள்.

திரும்ப 

என்ன ஒரே நன்மை .. வேலையை விட்டு அனுப்ப படும் ஆட்க்கள் இரண்டு அல்லது மூன்று மாத சம்பளதோடு அனுப்பபடுகிறார்கள்..

அமெரிக்கா போல அப்படியே e mail படிச்சுட்டு நடையை கட்டுன்னு இங்க இருக்க முடியாது.. இந்திய சட்டங்கள் அப்படி..

வேலையை வுட்டு அனுப்பினா நான் என்ன செய்வேன்?

இரண்டு மாதத்துக்கு மேல சம்பளம் இல்லாம பெங்களூரில் குப்பை கொட்ட முடியாது. அப்படியே தஞ்சாவூர் பக்கம் இருக்கும் குடும்ப நிலத்தில் விவசாயி விவாசயின்னு ஏர் உழுவலாம்.. இல்லன்னா அப்படியே நான் படித்த மின்னனு துறையில் ஏதாச்சு வேலை கிடைக்குமான்னு துண்டு போட்டு வைக்க வேண்டியது தான்..

தத்துவம் நம்பர் 1999

மாற்றம் என்பது இல்லை என்றால் வாழ்க்கையில் எதுவே யாருக்கும் நிலைக்காது :)
Saturday, September 13, 2008

கண்டதும் கேட்டதும் 13-09-2008


பெங்களூரை விட்டு சில வாரங்கள் வெளியே சென்று விட்டு வந்தால் நாம் வேறு இடத்துக்கு மாறி வந்து விட்டோமோ என்ற பிரமிப்பு ஏற்படுவதில் வியப்பு இல்லை..

கூடவே வாகன நெரிசலும் காலை நேரங்களில் தினமும் சந்திக்கும் டிராபிக் ஜாம்களுக்கும் இது வரை விடிவு ஏதும் இல்லை.

காரணம் பெங்களூர் இயல்பாக ஓய்வு பெற்றவர்கள் வசிப்பதற்க்கான இடம் என 2000ங்களின் ஆரம்பம் வரை கருதபட்ட நகரம்.

நன்றாக திட்டமிட்ட குடியிருப்புகள்..பூலோக சொர்கமாக இருந்த நகரம் இன்று ..??

100 பீட் ரோடுகள் மிக மிக குறைவு.எல்லாம் 60 மற்றும் 80 பீட் தான். 2002 ஆண்டு வரை இந்த சாலைகளில் போக்குவரத்தே மிக குறைவாக இருக்கும்.. கடந்த 8 ஆண்டுகளில் மக்கள் தொகை பெங்களூரில் இரண்டு மடங்காக ஆகி விட்டது. எல்லாம் ஐடி மற்றும் அது சார்ந்த தொழில் வளர்ச்சி தான் காரணம்.

ஒரு கால் செண்டரில் 1000 பேர் வரை வேலை பார்த்தால் மறைமுகமாக 5000 பேர் பயனடைகிறார்கள்.

கால் செண்டர் வாகன ஓட்டுநர் முதல் வரை அங்கு காவலுக்கு இருக்கும் காவலாளி வரை..

இதில் 95% பேர் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தவர்கள் தான்..

இப்படி ஐடியில் 10 லட்சம் வேலை வாய்ப்பு உருவானதால் கூடவே 30 லட்சம் மறைமுக வேலை வாய்ப்பு உருவாகிறது. பெங்களுருக்கு 40 லட்சம் பேர் ( நான் உட்பட) கடந்த 8 வருடங்களில் இந்தியாவின் மற்ற பாகங்களில் இருந்து இடம் பெயர்ந்து இருக்கிறார்கள்.

அரசாங்கமும் தன்னால் முடிந்த வரை போக்குவரத்து நெரிசலை தீர்க்க பாடுபடுகிறது..

புதிதாக சிக்னல்கள் ஒரே இரவில் முளைக்கின்றன.. கூடவே மேம்பாலங்கள் கட்டபடுகின்றன.


இப்படி கட்டபடும் மேம்பாலங்களில் சூப்பர்மேன் மேம்பாலமாக ஓசுர் சாலையில் மடிவாலா - எலக்ட்ரானிக் சிட்டி மேல்பாலம் கட்டபடுகிறது..

12 கிலோ மீட்டர் தூரத்தை அப்படியா அல்லாக மேம்பாலம் வழியாக சில நிமிடங்களில் கடந்து விடலாம். இந்த வருடம் ஜீலை மாதத்துக்கு பயன்பாட்டுக்கு வந்து இருக்க வேண்டிய இந்த திட்டம் அடுத்த வருடம் ஜனவரி வரை தள்ளி போகிறது..

ஓசுர் சாலையில் மீடியஙளுக்கு அமைக்க பட்ட இடத்தை தற்போது பில்லர்கள் ஆக்கிரமித்து மேலே பாலத்தை சுமந்து நிற்க்கின்றன..

இந்த பாலம் இந்தியாவில் தரை வழியில் கட்டபடும் மிக நீளமான பாலம் என்று கருதுகிறேன்.

இந்த பாலம் திறக்கபட்டால் ஓசூரை சென்றடையை அரை மணி நேரத்துக்கும் குறைவாகவே எடுக்கும்.

பெங்களூர் ஓசுர் சாலை 6 வழி பாதையாக ஆக்கபடுகிறது..

ஓசுரில் ஏதாச்சும் க்ரவுண்ட் வாங்கி போட்ட பிற்காலத்துக்கு உதவும் என்று பட்சி சொல்கிறது :)

Friday, September 12, 2008

கண்டதும் கேட்டதும் 12-09-2008


பெங்களூரில் இந்த வருடம் விநாயக சதுர்த்தி விழா மிக சிறப்ப்பாக கொண்டாபட்டது. சென்ற வருடத்தை விட பல இடங்களில் புதிதாக சிலைகள் முளைந்து இருந்தன. (பிஜேபி ஆட்சி உபயம்?)

கூடவே 3000 வாட்ஸ் குரலில் ஏதோ கன்னடா அல்லது தமிழ் பாடல்களை ஒலிபரப்பும் கூம்பு ஒலிபரப்பிகள்.

நீ பாட்டு கேட்டா என்ன கேட்கவில்லை என்றால் என்ன என்ற கண்டு கொள்ளாமல் என்நேரமும் சித்தாரன்னா சித்தாரன்னா (டைலாமே டைலாமோ) வோ அல்லது அடிறா அடிறா நாக்க மூக்காவோ ஒலித்து கொண்டு இருந்தது..

தினமும் மாலை வேளையில் ஏதோ ஒரு கலை நிகழ்ச்சி .. அந்த பகுதி சிறுவர்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் ..என் ஏரியாவில் ஒரு சுட்டி பாப்பா சகானா பாட்டிற்க்கு ஆடிய நடனம் கண்கொள்ளா காட்சி,,

பெங்களூரில் விநாயகர் சதிர்த்தி விழாக்கள் மும்பை அளவிற்க்கு சென்று கொண்டு இருக்கிறதே என்று நினைக்கிறேன்.

நான் வசித்த அந்தேரியில் சிலையை கரைக்கும் நாள் வரை சும்மா அந்த ஏரியாவில் விளையாட்டு போட்டு கலை நிகழ்ச்சி ஆட்டம் என்று தூள் கிளப்புவார்கள். அந்த நாட்கள் தொடர்ந்து தாண்டியா ஆட்டம் ( நவராத்திரி ) என்று தொடர் கொண்டாத்தோடு மக்கள் கொண்டாத்தோடு திளைத்து இருப்பார்கள்.

இதை போல நிகழ்வுகள் இயந்திர மயமாக ஆகி கொண்டு இருக்கும் இன்றைய நகரங்களுக்கு தன்னை ஆசுவாசபடித்தி கொள்ள கிடைத்து இருக்கும் இளநீர் போல என்றே கருதுகிறேன்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் பல கவலைகள் இருக்கும்.. தன்னை மறந்து ஏதோ இடத்தில் கவலைகள் மறந்து செல்வார்கள் என்றால்..

எத்தனை இடத்தில் வேண்டுமானாலும் பிள்ளையார்களும் கூடவே ஒலி பெருக்கிகளும் வைக்கலாம் :)

*************************************************

சில நாட்க்களாக நான் ஏதும் என் வலைபூக்களில் எழுதவில்லை. ஒரு நெருங்கிய நண்பர் ஏன் எழுதவில்லை என்னாச்சு என்று குறுசெய்தி மூலம் கேட்டு கொண்டு இருந்தார்..

அப்படி ஒன்றும் காரணம் இல்லை.. தினமும் ஏதாச்சும் எழுத வேண்டும் எதாசுக்கும் கருத்து சொல்ல வேண்டும் என்றால் அரை லூசாக இருக்க வேண்டும் அல்லது இணைய தளங்களின் அடிமையாக இருக்க வேண்டும்.

நான் ஒன்னும் இது வரைக்கும் பெருசா எழுதி கிழிக்கலை.. இனிமேலும் அப்படி தான். இனிமேலும் அப்படி ஏதும் செய்யபோவதில்லை..


நானும் கருத்து களங்களில் அடிமையாக தான் இருந்தேன். அங்கு செலவு செய்த நேரங்களை எண்ணி பார்த்தால்....??

இணைய தளங்கள் தற்கால வாழ்க்கைக்கு நிகராக என்றோ வந்து விட்டது. இங்கும் துக்கம் சோகம் பின்னால் குத்துவது புறம் பேசுவது அழுகை பிடிவாதம் என்று மனிதர்களின் அணைத்து விதமான குண்ங்களும் சேர்ந்தே தெரிகிறது

முகம் தெரியாது என்ற ஒரே காரணத்தினால் பலவும் பல பலவாக நிகழ்கின்றன.

எனக்கு பொதுவாக என் தொடர்பாக யார் எது சொன்னாலும் கண்டு கொள்ள மாட்டேன்.

அதுவே சற்று மிகையாக சென்ற பின் ,

என்க்கு சம்பந்தம் இல்லாத என் குடும்பம் இணைய தளத்தில் வந்த போதும்,கூடவே என் தொடர்பான கற்பணையான பல செய்திகளும் என்னை தமிழ் இணைய தளங்கள் விட்டு விலக செய்தது..

அவ்வாறு செய்தவர்கள் யார் என்று எனக்கு தெரியும்.. ஏன் அவர்களை கம்பி எண்ண வைக்கவும் முடியும்..

கடைசியில் என்ன தவறு?

நிஜ வாழ்க்கையில் நமக்கு பிடித்தமான நண்பர்களை தேர்ந்து எடுக்கலாம்?
ஆனால் இந்த இணைய வாழ்க்கையில் எல்லாம் போலி தான்.. நன்றாக நடிக்க தெரிந்த போலிகள்.


தமிழ் இணைய தளங்களின் மீது எனக்கு எந்த வித நம்பிக்கையும் இல்லை..

என்னை பொருத்தவை நான் விரும்பி தேர்ந்து எடுத்த துறை இந்த பொறியியல் துறை.. இதில் சாதிக்கவே விரும்புகிறேன்

இங்கு இணைய தளங்களில் பேசி எந்த பயனும் இல்லை...
இந்த நேரத்தை ஏதேனும் புதிதாக தெரிந்து கொள்ள செயல்படித்தினால் மனதுக்கு நிம்மதி..


தமிழ் இணைய தளங்கள் + கருத்து களங்கள் அனைத்திலும் பாலிடிக்ஸ் கூட ஜால்ரா இருந்தால் நம்மை அடித்து கொள்ள யாரும் இல்லை.. ஆனால் கூடவே நமது சொந்த வாழ்க்கையை அது சிறிது சிறிதாக சீரழிப்பதை நாம் புரிந்து கொள்ள புரிந்து கொள்ளும் புத்தியும் இழந்து விடுவோம்..

இதை போல வெட்டி தமிழ் இணையங்களில் நேரத்தை வீணாக்குவதை விட சொந்த வாழ்க்கையிலும் சொந்த வேலை + தொழிலும் நேரத்தை வீணாக்கினால் ஏதாச்சும் உபயோகமாச்சும் இருக்கும்..

இங்கு நான் எழுதுவது வெளிபடாமல் இருக்கும் என் எண்ணங்களை தான்.. இதை எழுதி ஒரு மண்ணும் ஆவ போவதில்லை.. இருந்தாலும் சில நேரங்களில் சில சமரசங்கள் எனக்குள் தேவை படுகின்றன