Saturday, September 13, 2008

கண்டதும் கேட்டதும் 13-09-2008


பெங்களூரை விட்டு சில வாரங்கள் வெளியே சென்று விட்டு வந்தால் நாம் வேறு இடத்துக்கு மாறி வந்து விட்டோமோ என்ற பிரமிப்பு ஏற்படுவதில் வியப்பு இல்லை..

கூடவே வாகன நெரிசலும் காலை நேரங்களில் தினமும் சந்திக்கும் டிராபிக் ஜாம்களுக்கும் இது வரை விடிவு ஏதும் இல்லை.

காரணம் பெங்களூர் இயல்பாக ஓய்வு பெற்றவர்கள் வசிப்பதற்க்கான இடம் என 2000ங்களின் ஆரம்பம் வரை கருதபட்ட நகரம்.

நன்றாக திட்டமிட்ட குடியிருப்புகள்..பூலோக சொர்கமாக இருந்த நகரம் இன்று ..??

100 பீட் ரோடுகள் மிக மிக குறைவு.எல்லாம் 60 மற்றும் 80 பீட் தான். 2002 ஆண்டு வரை இந்த சாலைகளில் போக்குவரத்தே மிக குறைவாக இருக்கும்.. கடந்த 8 ஆண்டுகளில் மக்கள் தொகை பெங்களூரில் இரண்டு மடங்காக ஆகி விட்டது. எல்லாம் ஐடி மற்றும் அது சார்ந்த தொழில் வளர்ச்சி தான் காரணம்.

ஒரு கால் செண்டரில் 1000 பேர் வரை வேலை பார்த்தால் மறைமுகமாக 5000 பேர் பயனடைகிறார்கள்.

கால் செண்டர் வாகன ஓட்டுநர் முதல் வரை அங்கு காவலுக்கு இருக்கும் காவலாளி வரை..

இதில் 95% பேர் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தவர்கள் தான்..

இப்படி ஐடியில் 10 லட்சம் வேலை வாய்ப்பு உருவானதால் கூடவே 30 லட்சம் மறைமுக வேலை வாய்ப்பு உருவாகிறது. பெங்களுருக்கு 40 லட்சம் பேர் ( நான் உட்பட) கடந்த 8 வருடங்களில் இந்தியாவின் மற்ற பாகங்களில் இருந்து இடம் பெயர்ந்து இருக்கிறார்கள்.

அரசாங்கமும் தன்னால் முடிந்த வரை போக்குவரத்து நெரிசலை தீர்க்க பாடுபடுகிறது..

புதிதாக சிக்னல்கள் ஒரே இரவில் முளைக்கின்றன.. கூடவே மேம்பாலங்கள் கட்டபடுகின்றன.


இப்படி கட்டபடும் மேம்பாலங்களில் சூப்பர்மேன் மேம்பாலமாக ஓசுர் சாலையில் மடிவாலா - எலக்ட்ரானிக் சிட்டி மேல்பாலம் கட்டபடுகிறது..

12 கிலோ மீட்டர் தூரத்தை அப்படியா அல்லாக மேம்பாலம் வழியாக சில நிமிடங்களில் கடந்து விடலாம். இந்த வருடம் ஜீலை மாதத்துக்கு பயன்பாட்டுக்கு வந்து இருக்க வேண்டிய இந்த திட்டம் அடுத்த வருடம் ஜனவரி வரை தள்ளி போகிறது..

ஓசுர் சாலையில் மீடியஙளுக்கு அமைக்க பட்ட இடத்தை தற்போது பில்லர்கள் ஆக்கிரமித்து மேலே பாலத்தை சுமந்து நிற்க்கின்றன..

இந்த பாலம் இந்தியாவில் தரை வழியில் கட்டபடும் மிக நீளமான பாலம் என்று கருதுகிறேன்.

இந்த பாலம் திறக்கபட்டால் ஓசூரை சென்றடையை அரை மணி நேரத்துக்கும் குறைவாகவே எடுக்கும்.

பெங்களூர் ஓசுர் சாலை 6 வழி பாதையாக ஆக்கபடுகிறது..

ஓசுரில் ஏதாச்சும் க்ரவுண்ட் வாங்கி போட்ட பிற்காலத்துக்கு உதவும் என்று பட்சி சொல்கிறது :)

No comments: