Sunday, December 14, 2008

பொம்மலாட்டம் - திரை விமர்சனம்



பொம்மலாட்டம்

பாரதிராஜா படங்களில் எனக்கு என்றும் பெரிய ஆர்வம் என்றும் இருந்ததில்லை.. அண்ணன் தங்கை செண்டிமெண்ட் அல்லது மதுரை தமிழில் கண்டபடி திட்டி கொண்டு அடித்து கொண்டும் பேசும் மொழிகள் எனக்கு பரிச்சயம் இல்லை .

கல்லூரி காலங்களில் தாஜ்மகால் என்ற அப்பத்தமான படம் பார்த்த விளைவோ தெரியவில்லை. ..

சினிமா எனபது டீம் ஒர்க். இதில் இயக்குநர் இமயங்களும் சிகரங்களும் எங்கு இருந்து முளைத்தார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இந்த படம் மிக மிக வித்யாசமான படம்..

பாராதிராஜா ஆரம்ப காலங்களில் எடுத்த திரில்லர்களை மீண்டும் ஒரு முறை மிகவும் அருமையாக புது புது சமாசாரங்களோடு கொடுத்து இருக்கிறார்.

கதை மிக எளிமையாக ..

நானா படேகர் பிரபலமான இயக்குநர் கூடவே வித்யாசமான மனிதரும் கூட.சினிமா இயக்குநர்களுக்கே உரிய அவரின் மனைவியாக ரஞ்சிதா..

சிபிஐ ஆபிசராக அர்ஜீன்..அவரின் காதலியாக காஜல் அகர்வால்.

தமிழ் பதிப்புகாக விவேக் + மணிவண்ணன்

நானாவின் படத்தின் பட பிடிப்புகளில் சில கொலைகள் நிகழ்கின்றது.. அதை விசாரிக்கும் அதிகாரியாக அர்ஜீன்.

கடைசியில் முடிச்சுகள் அவிழ்கின்றன.. கொலையாளி யார் என்று யாராலும் ஊகிக்க முடியாத க்ளைமேக்ஸ்.

வாவ் சூப்பர் கதை.,கண்டிப்பாக யாராலும் எதிர்பார்க்க முடியாத ஒரு முடிச்சு.

திரைகதை சில இடங்களில் சொதப்பினாலும் பல இடங்களில் பாரதிராஜா நம்மை படத்தோடு ஒன்றி போக வைத்து இருப்பதில் ஜெயித்து இருக்கிறார்.

என் இனிய தமிழ் மக்களே என்று தங்க ப்ரேஸ்லேட் வாட்ச் மோதிரம் கூடவே பாரதிராஜா முதல் காட்சியில் காட்சி தருவதை இன்னமும் எத்தனை நாள் தான் தமிழ் சமூகம் பொறுத்து கொண்டு இருக்குமோ தெரியவில்லை.. :)

படத்தின் உண்மையான கதாநாயகன் நானா படேகர் தான். மிகவும் அற்புதமான அலட்டி கொள்ளாத நடிப்பு. அவரின் அலட்சியமான சிரிப்புகள் முக பாவனைகள் கூடவே நிறைவான நடிப்பு.. ம் இந்த படத்தை நானா படேகருக்காவே பல முறை பார்க்கலாம்.

நானா , தமிழில் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும்.

அர்ஜீன் நடிப்பில் பிரகாசிக்க வேலை இல்லை படத்தில் ஆக்சனுக்கும் வழி இல்லை கொடுத்த காரியத்தை செய்து விட்டு போகிறார்.

காஜல் அகர்வால் ரஞ்சிதா கூடவே அந்த நடிகை எல்லாரும் பாத்திரத்தில் கச்சிதம்..

பாடல்கள் இசை ஹிமேஷ் ரேழ்மைய்யா.. பாடல்கள் ஏதோ வந்து போகிறது.,,

ஒளிப்பதிவு - கண்ணன்.. கலக்கல்

விவேக் சில நிமிடங்களே வந்தாலும் காமேடியில் கலக்குகிறார்.. மணிவன்னனும் அதே.

இந்தி படத்தின் பதிப்பு என்பதால் இந்தி வாசனை சற்று தூக்கலாக இருந்தாலும் உறுத்தவில்லை.

குத்து பாட்டு அடிதடி மசாலாக்கள் இல்லாமல் ஒரு நல்ல திரில்லர் பார்க்க வேண்டுமா.. இந்த படம் மினிமம் கியாரண்டி.

பொம்மலாட்டம்- ஆட்டம் இல்லாத நடனம்

Saturday, December 13, 2008

விழிப்பது எப்போது?? - 49 ஓ

தோழி வித்யா அவர்கள் 49’ஓ தொடர்பாக என்னையும் எழுத சொல்லி இருக்காங்க.


என் மனதிலும் அடிக்கடி தோன்றி விட்டு போகும் 49 ஓ தொடர்பாக என்னையும் எழுத சொன்னதற்க்கு நன்றி .


வெளிபடையாக சொன்னால் எனக்கு தற்போது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஓட்டுரிமை கிடையாது.

சென்னை மும்பை தில்லி சிங்கப்பூர் அமெரிக்கா என்று சுற்றி விட்டு தற்போது பெங்களூரில் இளைபாறுகிறேன். சொந்த ஊரிலும் என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. என் வாழ்க்கையில் இரு முறை ஓட்டு போட்டு இருக்கிறேன். அதுவும் சொந்த ஊரில் இருந்த போது..



சென்ற முறை கர்நாடாக மாநில சட்டசபை தேர்தலில் போது தான் ஓட்டு போடாம தேர்தல் விடுமுறை போது ஊர் சுற்றி கொண்டு இருந்த போது ஏதோ மண்டையில் உறைச்சது.

வாக்காளர் பட்டியலில் எப்படி என் பெயரை சேர்ப்பது எப்படி..
கன்னடா சரளமாக மாத்தாட கொத்தில்லா..

எல்லா அரசு அலவலங்களிலும் சரள இலக்கண சுத்தமான கன்னடா பேசி கூடவே விண்ணப்பம் எல்லாம் ’ஏணு பரத்திதே’ன்னு புரியாம U turn அடிப்பதே வாடிக்கையாக போச்சு.


யாரோ ஒரு புண்ணியவான் ராகு காலம் எம கண்டம் பார்க்காம ஓபிஸில் வாங்கும் சம்பளத்துக்கு ஓவர் டைம்மாக அட்டாச்மெண்ட் மெயில் படிக்கும் போது தெரிந்து கொண்டது இந்த இயகக்தை பற்றி http://jaagore.com/..

டாடா நிறுவனம் இணையம் வழியாக வாக்காளர் பட்டியலில் நம் பெயரை சேர்க்க தோளோடு தோள் சேர்க்க உதவி செய்கிறது. இதன் வழியாக எனக்கும் வாக்காளர் அட்டையும் கிடைச்சாச்சு :)


இப்ப 49 ஓ தொடர்பாக எனக்கு இப்படி ஒரு மேட்டர் இருக்குன்னு தெரிந்ததே ஞானியின் ஓ பக்கங்கள் வழியாக.

வழக்கமாக தேர்தல் வரும் காலங்களில் ம க இ க போன்ற சுவற்றில் கரியால் கிறுக்கும் புனிதர்களும் + இன்னபிற கூடவே ஞானி போன்ற வேதாந்திகளும் சொல்லும் தேர்தல் புறக்கணிப்பின் மற்றும் ஒரு பிரகாசமான முகம் தான் இந்த 49 ஓ



49 ஓ என்னதான் சொல்கிறது?


எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை
எல்லாரும் ப்ராடு எல்லாரும் ஊழல் அதனால நான் ஓட்டு போட விருப்பம் இல்லை என்று சொல்லும் ஒரு அரசாங்க படிவம் தான் 49 ஓ

சரி இப்படி எல்லாரும் 49ஓ எழுதி கொடுத்தா என்ன ஆகும்?


தற்போது இருக்கும் நிலையில் நாட்டில் வசிக்கும் சில பேரை தவிர்த்து பல பேருக்கு இந்த 49ஓ மேட்டரே தெரியாது. தெரிந்த சில பேரும் ஓட்டு போட போவார்களா என்பது சந்தேகமே.

அப்படியே நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டு ஏழை பாட்டாளி சாதி சங்கங்கள் அனைத்து கட்சி தொண்டர்கள் பிரியாணி சாப்பிட்டு வாழ்க ஓழிக கோசம் போடுபவர்கள் என்று சமூகத்தின் அனைத்து முகங்களும் ஒருகிணைத்து 49 ஓ கொடுத்தாலும் இன்றைய சட்டத்தின் படி தேர்தல் ஒத்திவைக்கபட்டு மறு தேர்தல் நடை பெறும். அப்பவும் அதே கட்சி அதே கொள்கை (?) அதே கோட்பாடு அதே வாக்குறுதி அதே இலவசங்கள் எல்லாம் அதே அதே ....

அப்ப 49ஓ வைச்சு என்ன தான் செய்வது?

நமக்கு தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. கூடவே தேர்தல் அன்று நாம் வீட்டுல் சும்மா கார்டூன் நெட்வோர்க் பார்த்தாலும் தப்பு.. அதான் ஓட்டு போடுவது போலவும் அதே நேரத்தில் இந்திய அரசின் தேர்தலை புறக்கணிப்பதையும் ஒருங்கே செய்வதே இந்த 49 ஓ

அப்ப யாருக்கு தான் லாபம்?


வேற யாருக்கு இந்தியாவில் எப்பதான் குழப்பம் வரும்.. எப்படி இந்தியாவின் கட்டமைப்பை இந்தியாவின் ஜனநாயகத்தை சீர் குலைக்கலாம் என்று எப்போதும் நூடுல்ஸ் பாம்பு கறி சாப்பிட்டு யோசித்து கொண்டே இருக்கும் சீனா போன்ற சர்வாதிகார கம்யூணிஸ்ட்களுக்கு தான்.


அவங்களுக்கு பிரச்சாரம் செய்வதே இந்த ஞானி போன்ற ஆட்களும் கூடவே மக்கள் கலை இலக்கிய கழகம் போன்ற இயக்கங்களும்.

மக்கள் ஆதரவு இல்லாத மக்களுக்கு நண்மை செய்யாத எந்த வித கொள்கையும் என்ன தான் பிரசாரம் செய்தாலும் எடுபடாது.

உண்மைதான் தற்போதைய இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் ஊழல் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. வன்முறைகளும் கூடவே மக்களை முட்டாளுக்கும் பேரங்களும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.


நெற்பயிருக்கு பாயும் நீர் களைகளுக்கும் போக தான் செய்யும். ஆனால் இன்று களைகளே அதிகமாகி நெற் பயிற்களுக்கு ஏதோ கிடைக்கிறது.


வெள்ள நிவார்ண நிதியோ ரோடு போடும் ஒப்பந்தமோ எல்லாவற்றிலும் ஊழல் இருந்தாலும் ஏதோ ஐந்து பத்தோ மக்களுக்கு கிடைக்கிறது.

இந்த 49 ஓ களால் இதை போல தேர்தல் முறை மறைந்து ரழ்யாவின் ஸ்டாலின் போன்ற சர்வாதிகாரிகள் வந்து குருவி சுடுவதை போல பல்லாயிரம் பேரை ஒரே நாளில் படு குழிக்கு அனுப்பி விடுவார்கள்.

அப்புறம் என்ன.. சினா போல தான்..
வெளியில் பெயிண்ட் அடித்து நறுமண வாசனை திரவியம் பூசி உள்ளே அழுக்கையும் குப்பையும் வைத்து இருக்கும் சீனா போலவே நாமும் மாறுவோம்.

பேச்சுரிமை எழுத்திரிமை எல்லாம் பறிக்கபடும். நமக்கு என்ன தேவை என்பதே மறந்து போகும். ஆறாம் அறிவு தேவை இல்லாமல் போய் எல்லாம் விதிக்கபட்டதே என்று நாமும் மாறி விடுவோம்.

இதை போல வலைபூக்களில் 49ஓ தொடர்பாக எழுத கூட முடியாது.

கம்யூணிசமே உலகின் சொர்க்கம்..
சர்வாதிகாரமே மோட்சம் என்று சழ்டி கவசம் பாட வேண்டியது தான் பாக்கி.


ம் அப்ப என்ன தான் முடிவு?

என்ன தான் ஆயிரம் குறைகள் இருந்தாலும் தற்போதைய ஜனநாயக தேர்தல் முறைக்கு மாற்று ஏதுவும் இல்லை.


தவறு நம்மிடம் இருந்து தான் தொடர்கிறது..
தேர்தலிகளில் சாதி மத மொழி மயக்க போதை , தலைவர்கள் மீதான் காதல் என்ற சக்திகள் தான் நம்மை ஓட்டி செல்கிறது நம்மில் எத்தனை பேர் இதை போன்றவற்றை விட்டு உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்களுக்கு ஓட்டு போடுகிறோம்??

நம்மில் எத்தனை பேருக்கு நமது தொகுதி எம் எல் ஏ பேர் நினைவிற்க்கு வருகிறது அல்லது சென்ற தேர்தலில் ஓட்டு போட்ட வேட்பாளர் பெயர் நினைவிற்க்கு வருகிறது?

சமூகத்தை படி படியாக மாற்றி விடலாம் என்று சிறு சிறு கனவுகளோடு தன் சொந்த சேமிப்புகளை தேர்தலுக்காக செலவழிக்கும் பல சுயேட்ட்சை வேட்பாளர்கள் எனக்கு தெரிந்தே பார்த்து இருக்கிறேன்.
எம் எஸ் உதய மூர்த்தியும் இதை போல நம்புங்கள் நடக்கும் என்று நல்ல மனிதர்களை வேட்பாளர்களாக நிறுத்தினார்.. நம்புங்கள் ஒருத்தருக்கு கூட டெபாசிட் கிடைக்கவில்லை.

நல்ல வேட்பாளர்களும் களத்தில் தேர்தலில் போட்டி இடுகிறார்கள் ஆனால் நாம் அவர்களை விடுத்து கட்சி சார்பாகவோ அல்லது சாதி மதம் சார்பாகவோ தான் நம் ஓட்டுகளை இடுகிறோம்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்தலில் நிற்க்கும் வேட்பாளரை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மீடியாக்களில் முழு ஜாதகமே வந்து விடும். ஆனால் இங்கு ஜெயிக்க போகும் கட்சிகளுக்கு அல்லது தலைவர்களுக்கு ஜால்ரா அடிப்பது தான் நம் மீடியாக்களின் பிழைப்பு. மீடியாக்களும் மாற வேண்டும்.

மீண்டும் ஒரு முறை 49 ஓ என்பது தவறான ஊருக்கு வழிகாட்டும் அழகான அருமையான ஆனால் தவறான வழிகாட்டி.

நம் ஓட்டுரிமையை இதை போல சிதைப்பதை விடுத்து நல்ல வேட்பாளர்களை தேர்ந்து எடுத்து அனுப்புவோம்..
தனி மனிதர்களின் மாற்றமே சமுதாயத்தின் மாற்றம். மாற்றங்களை நம்மிடம் இருந்தே தொடங்குவோம்

Friday, December 5, 2008

டிசம்பர் 6+ பின் தொடரும் வன்முறைகளும்



என்னை கேட்டா சுதந்திர தினம் குடியரசு தினம் போல டிசம்பர் 6 ம் தேதியையும் தேசிய விடுமுறை நாளாக அறிவித்து விடலாம்

இந்தியாவே ஊரடங்கு முறை அமலுக்கு வந்தது போல ஒரே மயான அமைதி. மெட்டல் டிடெக்கடர் sniffer dogs கூட போலிசாருக்கு extra duty.

யாரு குண்டு வைப்பாங்கன்னு தெரியலை.


எல்லா ரயில்வே ஸ்டேசன் கூடவே விமான நிலையம் பேருந்து நிலையம் என்று எங்கு பார்த்தாலும் போலிஸ் மயம் தான்.
இந்த களேபாராத்தில் மெட்டல் டிடெக்டர் துணையோடு தண்டவாளத்தை மோப்பம் பிடித்து கொண்டு இருந்த ஆட்களையும் பார்த்தேன் ..

தண்டவாளத்தில் எங்கு மெட்டல் டிடெகடரை நீட்டினாலும் அதுவும் கர்ம சிரத்தையாக ’பையங்ஞ்க்’ என்று சவுண்ட் கொடுக்கும் ..என்னை கொடுமை சார் இது.
தேசிய விடுமுறை கொடுக்க முடியவில்லையா..


பேசமாக இந்திய அரசு உலக வரலாற்றில் முதன் முறையாக அறிவிக்கும் பாரத் பந்த்ன்னு சொல்லிடுங்க..
டிரையின் ஓடாது பஸ் ஓடாது கடைகள் அடைகக்படும்.. அனைவருக்கும் விடுமுறை என்று சொல்லி போட்டா சன் டிவியும் பாரத் பந்த் சிறப்பு நிகழ்சிகள் என்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படம் போடுவாங்க..

யாருக்கும் பிரச்சனை இல்லை.. போலிசாருக்கும் பிரச்சனை இல்லை. யாரும் வெளியூரு போக மாட்டாங்க.. என்ன நான் சொல்றது?
*****************************************************************************************************************



டிசம்பர் 6ன் பின் வந்த கோர தாண்டவத்தை நானும் ஒரு முறை பார்த்து இருக்கிறேன். பத்து + வருடங்களுக்கு முன்னர் சென்னை - மதுரை பாண்டியன் விரைவு வண்டியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் வைக்க பட்ட வெடி குண்டு திருச்சி ரயில்வே நிலையத்தில் வெடித்து இறந்த அப்பாவிகள் பல பேர்.

அன்று மட்டும் தமிழ் நாட்டு ரயில்களில் பல இடங்களில் குண்டு வெடித்தது.
அந்த குண்டு வெடிப்புக்கு சாட்சியாக அந்த குண்டு வைக்கபட்ட ரயில் பெட்டிமட்டும் அனாதையாக ப்ல வருடமாக திருச்சி ரயில் நிலையத்தில் ஓரமாக கிடத்தி வைக்கபட்டு இருந்தது.

கல்லுகுழி ஆஞ்சநேயர் கோவிலில் பிராகாரம் சுற்றி வரும் போது அந்த ரயில் பெட்டி நானும் இருக்கிறேன் என்று புலப்படும்.. பார்க்கும் போது மனதுக்குள் ஏதோ புரியாத உணர்வுகள் தோன்றும்...


கடைசியாக கல்லுகுழி ஆஞ்சநேயர் கோவில் சென்ற போது அந்த ரயில் பெட்டியை காணவில்லை.. மீட்டர் கேஜ் பாதைகள் விலக்க பட்டதின் காரணமாகவோ அல்லது அந்த கேஸ் முடிந்த விட்ட காரணமாகவோ தெரியவில்லை..



அந்த குண்டு வெடிப்பின் தீர்ப்பு என்னவாச்சு என்று தெரியவில்லை .. என்ன ஆயுள் தண்டனையாக இருக்கும் அல்லது அந்த குற்றவாளிகளுக்கு எவனோ ஒருவன் மரண தண்டனை கொடுக்க கூடாது என்று வெட்டி பெட்டிசன் போட்டு கொண்டு இருப்பான்..


என் கல்லூரி காலத்தில் கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கபட்ட ஒரு அப்பாவி என் சக மாணவன்.
அவன் தந்தை குண்டு வெடிப்பில் கொல்லபட்டார்..

குடும்பத்தை சுமக்க வேண்டிய அவன் எப்போதும் ஏதையோ பறி கொடுத்தது போலவே இருப்பான்..
செம்ஸ்டர்ஸ் ரிசல்ட் வந்த போது யாரோ அரியர்ஸ் வைக்காமல் பாஸான பிறவி காலேஜில் வைத்த சரவெடிக்கே ஓடி ஒளிந்து மிகவும் பயந்து பின் மயக்கம் அடைந்தான்..


அந்த குண்டு வெடிப்பால் அவனுக்கு வெடி சத்தம் என்றாலே மன தளர்ச்சி அடைகிறது.


புண்ணியம் தேடி கொண்டவர்கள் அல் உம்மா & gang
இந்த கோவை + இன்ன பிற வெடி குண்டு வெடிப்பில் சம்பந்த பட்ட ஒரு அரசியல்வாதி இன்று விடுதலையாகி மற்றவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனை என்ற பெயரில் சிறையில் செல்போன் முதல் அனைத்து சகல வசதிகளோடு தண்டனையை அனுபவிக்கின்றனர். கோவை குண்டு வெடிப்பு + இன்ன பிற குண்டு வெடிப்புகளில் பாதிக்கபட்டவர்கள் இன்னமும் பாதிப்பு மாறாமல் தான் இருக்கிறார்கள்.

*****************************************************************************************************************


மும்பையில் இருந்த போது நான் அந்தேரி கிழக்கில் இருந்த வீட்டில் சொந்தகாரர் ஒரு இஸ்லாமியர். அந்தேரி கிழக்கில் நான் இருந்த இடம் சகல செள்பாக்கியங்களும் வாஸ்து சாஸ்து காய்கறி கடை பங்க் கடை எல்லாம் பெற்ற மிகவும் அருமையான இடம்.


என்னிடம் வாடகை பெற்று கொள்ள எப்போதும் அவர் என்னை அந்தேரி மேற்க்கு பேருந்து நிலையத்துதான் வரசொல்வார். ஆனால் அவர் அந்தேரி மேற்க்கில் வசிப்பது வாடகை வீட்டில்.நானும் ஒரு முறை அவரிடம் கேட்டேன்.. ஏன் பாய் இப்படி ஒரு அழகான வீட்டை விட்டு ஏன் வாடகை வீட்டில் இருக்கீங்க.. பதில் கிடைத்தது ..புன்னகை மட்டும் தான்..


நானும் கர்மசிரத்தயாக வாடகை பணத்தை அங்கு கொண்டு கொடுத்து விட்டு வருவேன்.

எனக்கும் பல நாட்களுக்கு பின்னர் தான் உண்மை உறைத்தது. பெரும்பாலான மும்பை இஸ்லாமியர்கள் மும்பை குண்டு வெடிப்புக்கும் கலவரத்துக்கும் பின்னர் தங்கள் பாதுகாப்பு கருதி இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் இடமாற்றம் செய்து வசித்து வருகிறார்கள்..



புண்ணியம் தேடி கொண்டவர்கள் பால்தாக்கரே & சன்ஸ் + தாவூத் இப்ராஹிம்
இதில் பால் தாக்கரே இன்னமும் மொழி வெறி + மத வெறியை வைத்து நன்றாக அரசியல் செய்கிறார். அவரின் வாரிசுகளும் அப்படியே..

தாவூத் இப்ராஹிம் இன்னமும் மும்பையில் தன் நிழல் அரசாங்கதை தொடர்வதாக நேற்றைய times of india சொல்கிறது. கராச்சியில் ராஜ போக வாழ்க்கை வாழ்கிறான்.. இவனின் பெண் திருமணம் செய்து இருப்பது பிரபல கிரிக்கேட் ஆட்டகார் ஜாவித் மியாண்டடின் மகனை..

ஆனால் இன்னமும் குண்டு வெடிப்பில் தன் பெற்றோரை இழந்தவர்களும் தங்களில் வாழ்க்கையை இழந்தவர்களும் இன்னும் அதை தேடி கொண்டு தான் இருக்கிறார்கள்..


*************************************************************************************************************

ஐந்து வருடங்கள் முன்னர் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கு என் வேலை நிமித்தமாக சென்று பின் என் அலுவலக தலைமையகமான தில்லி திரும்ப கவுகாத்தி தில்லி ராஜதானி ரயிலில் முன் பதிவு செய்தேன்.

.
நான் பயணம் செய்த நாள் ஆகஸ்ட் 15..

கவுகாத்தியில் இருந்து புது தில்லி ரயில்வே ஸ்டேசன் வரை அந்த ரயில் முழுக்க மொத்தமே 5 பேரோடு பயணம் செய்த அந்த தினங்களும் நினைவில் வருகிறது..


புண்ணியம் தேடி கொண்டவர்கள் உல்பா & கோ.. இன்று அஸ்ஸாம் நிலை பல படி முன்னேறி சென்று விட்டது.. தீவிரவாதத்துக்கும் தனி நாடு கோரிக்கைக்கும் அந்த மாநில மக்களே கொடுக்கும் எதிர்ப்பே அந்த உல்பா கோழைகள் அப்பாவி மக்கள் மீது தொடுக்கும் குண்டு வெடிப்புகள்

*********************************************************************************************

ஏன் இந்த தமிழ் விடுதலை புலிகள் கூட எதற்க்கும் குறைந்தவர்கள் இல்லை.. யாழ்பாணத்தில் வசித்த பல இஸ்லாமியர்களை ஒரே நாளில் இடம் பெயர சொன்னார்கள். புலிகளால் இன்று தங்களின் சொத்துகளை + வாழ்க்கையை இழந்த தமிழ் இஸ்லாமியர்கள் பல்லாயிரம்..


இன்று வரை பிரபாகரன் ரொம்ப பாதுகாப்பாதன் இருக்கிறார்(ன்).


***********************************************************************************************************

கழ்மீர் மாநிலத்தில் தற்போது நடை பெறும் தேர்தலில் வாக்கேடுப்பு 67% என சொல்கிறது.. இதை போல அதிக வாக்கு பதிவு அமைதியான தமிழ்நாட்டில் கூட நடை பெறுவதில்லை.. வன்முறையால் அதிகமாக பாதிக்கபட்ட கழ்மீர் மக்களே இன்று ஜனநாயக வழி காந்திய வழி தேடி வருகிறார்கள்..

************************************************************************************************************

என்னை பொருத்தவரை நான் சாதாரண மனிதன்.

ஏன் நானும் நீங்களும் நம்மை சுற்றி இருக்கும் சமுதாயமும் அப்படி தான்.... சற்று யோசித்து பாருங்கள்..

இந்த வன்முறைகளில் நாமோ நம்மை சேர்தவர்கள் யாரோ பலியாகி இருந்தால் நம் குடும்பத்தில் நிலை என்னவாகி இருக்கும்?

குண்டு வைப்பவனும் குண்டு வைக்க தூண்டுபவர்களும் எப்போதுமே பாதுகாப்பாகதான் இருக்கிறார்கள்..

நாம் மட்டும் தான் சாதி மதம் மொழி என்ற வேறுபாட்டில் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருக்கிறோம்.

. படித்தவர்கள் இடையே இதை போல வேறுபாடுகள் இருக்காது என்று நான் பல காலம் முன்பு நினைத்தது உண்டு.

னால் இன்று இணையத்தில் எழுத படும் பல எழுத்துகள் வன்முறை படித்தவர்களால் படிக்காத அப்பாவிகள் மேல் திணிக்கபடுகிறது என்றே நினைக்க தோன்றுகிறது.

ஆமாம் எனக்கு சத்தியமாக புரியலை... இப்படி கேனதனமாக வன்முறைகளை விடுதலை போராட்டம் மக்களின் சுயநிர்ணய போராட்டம் என்று சொகுசாக எழுதுகீறீர்களே.. என்னக்காவது அந்த பாதிக்கபட்ட ஊருக்கு போய் பார்க்க வேண்டியது தானே..

சரி விடுங்க உங்களுக்கு உங்க பிழைப்பு,,,

இனி வரும் டிசம்பர் 6 ம் தேடி வன்முறையை நாம் வெறுப்போம் , எழ்த்தில் கூட வன்முறையை கலைவோம் என்று உறுதி மொழி எடுக்கும் நாளாக இருக்கட்டும்.

ஜாதி மதங்களைப் பாரோம் -
உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே