நாம் என்ன நினைகின்றமோ அதுவே நாம் ஆகிறோம், நம் எண்ணங்களே நம்மை அந்த பாதையில் அழைத்து செல்கிறது.
Friday, December 5, 2008
டிசம்பர் 6+ பின் தொடரும் வன்முறைகளும்
என்னை கேட்டா சுதந்திர தினம் குடியரசு தினம் போல டிசம்பர் 6 ம் தேதியையும் தேசிய விடுமுறை நாளாக அறிவித்து விடலாம்
இந்தியாவே ஊரடங்கு முறை அமலுக்கு வந்தது போல ஒரே மயான அமைதி. மெட்டல் டிடெக்கடர் sniffer dogs கூட போலிசாருக்கு extra duty.
யாரு குண்டு வைப்பாங்கன்னு தெரியலை.
எல்லா ரயில்வே ஸ்டேசன் கூடவே விமான நிலையம் பேருந்து நிலையம் என்று எங்கு பார்த்தாலும் போலிஸ் மயம் தான். இந்த களேபாராத்தில் மெட்டல் டிடெக்டர் துணையோடு தண்டவாளத்தை மோப்பம் பிடித்து கொண்டு இருந்த ஆட்களையும் பார்த்தேன் ..
தண்டவாளத்தில் எங்கு மெட்டல் டிடெகடரை நீட்டினாலும் அதுவும் கர்ம சிரத்தையாக ’பையங்ஞ்க்’ என்று சவுண்ட் கொடுக்கும் ..என்னை கொடுமை சார் இது. தேசிய விடுமுறை கொடுக்க முடியவில்லையா..
பேசமாக இந்திய அரசு உலக வரலாற்றில் முதன் முறையாக அறிவிக்கும் பாரத் பந்த்ன்னு சொல்லிடுங்க.. டிரையின் ஓடாது பஸ் ஓடாது கடைகள் அடைகக்படும்.. அனைவருக்கும் விடுமுறை என்று சொல்லி போட்டா சன் டிவியும் பாரத் பந்த் சிறப்பு நிகழ்சிகள் என்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படம் போடுவாங்க..
யாருக்கும் பிரச்சனை இல்லை.. போலிசாருக்கும் பிரச்சனை இல்லை. யாரும் வெளியூரு போக மாட்டாங்க.. என்ன நான் சொல்றது? *****************************************************************************************************************
டிசம்பர் 6ன் பின் வந்த கோர தாண்டவத்தை நானும் ஒரு முறை பார்த்து இருக்கிறேன். பத்து + வருடங்களுக்கு முன்னர் சென்னை - மதுரை பாண்டியன் விரைவு வண்டியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் வைக்க பட்ட வெடி குண்டு திருச்சி ரயில்வே நிலையத்தில் வெடித்து இறந்த அப்பாவிகள் பல பேர்.
அன்று மட்டும் தமிழ் நாட்டு ரயில்களில் பல இடங்களில் குண்டு வெடித்தது. அந்த குண்டு வெடிப்புக்கு சாட்சியாக அந்த குண்டு வைக்கபட்ட ரயில் பெட்டிமட்டும் அனாதையாக ப்ல வருடமாக திருச்சி ரயில் நிலையத்தில் ஓரமாக கிடத்தி வைக்கபட்டு இருந்தது.
கல்லுகுழி ஆஞ்சநேயர் கோவிலில் பிராகாரம் சுற்றி வரும் போது அந்த ரயில் பெட்டி நானும் இருக்கிறேன் என்று புலப்படும்.. பார்க்கும் போது மனதுக்குள் ஏதோ புரியாத உணர்வுகள் தோன்றும்...
கடைசியாக கல்லுகுழி ஆஞ்சநேயர் கோவில் சென்ற போது அந்த ரயில் பெட்டியை காணவில்லை.. மீட்டர் கேஜ் பாதைகள் விலக்க பட்டதின் காரணமாகவோ அல்லது அந்த கேஸ் முடிந்த விட்ட காரணமாகவோ தெரியவில்லை..
அந்த குண்டு வெடிப்பின் தீர்ப்பு என்னவாச்சு என்று தெரியவில்லை .. என்ன ஆயுள் தண்டனையாக இருக்கும் அல்லது அந்த குற்றவாளிகளுக்கு எவனோ ஒருவன் மரண தண்டனை கொடுக்க கூடாது என்று வெட்டி பெட்டிசன் போட்டு கொண்டு இருப்பான்..
என் கல்லூரி காலத்தில் கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கபட்ட ஒரு அப்பாவி என் சக மாணவன். அவன் தந்தை குண்டு வெடிப்பில் கொல்லபட்டார்..
குடும்பத்தை சுமக்க வேண்டிய அவன் எப்போதும் ஏதையோ பறி கொடுத்தது போலவே இருப்பான்.. செம்ஸ்டர்ஸ் ரிசல்ட் வந்த போது யாரோ அரியர்ஸ் வைக்காமல் பாஸான பிறவி காலேஜில் வைத்த சரவெடிக்கே ஓடி ஒளிந்து மிகவும் பயந்து பின் மயக்கம் அடைந்தான்..
அந்த குண்டு வெடிப்பால் அவனுக்கு வெடி சத்தம் என்றாலே மன தளர்ச்சி அடைகிறது.
புண்ணியம் தேடி கொண்டவர்கள் அல் உம்மா & gang இந்த கோவை + இன்ன பிற வெடி குண்டு வெடிப்பில் சம்பந்த பட்ட ஒரு அரசியல்வாதி இன்று விடுதலையாகி மற்றவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனை என்ற பெயரில் சிறையில் செல்போன் முதல் அனைத்து சகல வசதிகளோடு தண்டனையை அனுபவிக்கின்றனர். கோவை குண்டு வெடிப்பு + இன்ன பிற குண்டு வெடிப்புகளில் பாதிக்கபட்டவர்கள் இன்னமும் பாதிப்பு மாறாமல் தான் இருக்கிறார்கள்.
*****************************************************************************************************************
மும்பையில் இருந்த போது நான் அந்தேரி கிழக்கில் இருந்த வீட்டில் சொந்தகாரர் ஒரு இஸ்லாமியர். அந்தேரி கிழக்கில் நான் இருந்த இடம் சகல செள்பாக்கியங்களும் வாஸ்து சாஸ்து காய்கறி கடை பங்க் கடை எல்லாம் பெற்ற மிகவும் அருமையான இடம்.
என்னிடம் வாடகை பெற்று கொள்ள எப்போதும் அவர் என்னை அந்தேரி மேற்க்கு பேருந்து நிலையத்துதான் வரசொல்வார். ஆனால் அவர் அந்தேரி மேற்க்கில் வசிப்பது வாடகை வீட்டில்.நானும் ஒரு முறை அவரிடம் கேட்டேன்.. ஏன் பாய் இப்படி ஒரு அழகான வீட்டை விட்டு ஏன் வாடகை வீட்டில் இருக்கீங்க.. பதில் கிடைத்தது ..புன்னகை மட்டும் தான்..
நானும் கர்மசிரத்தயாக வாடகை பணத்தை அங்கு கொண்டு கொடுத்து விட்டு வருவேன்.
எனக்கும் பல நாட்களுக்கு பின்னர் தான் உண்மை உறைத்தது. பெரும்பாலான மும்பை இஸ்லாமியர்கள் மும்பை குண்டு வெடிப்புக்கும் கலவரத்துக்கும் பின்னர் தங்கள் பாதுகாப்பு கருதி இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் இடமாற்றம் செய்து வசித்து வருகிறார்கள்..
புண்ணியம் தேடி கொண்டவர்கள் பால்தாக்கரே & சன்ஸ் + தாவூத் இப்ராஹிம் இதில் பால் தாக்கரே இன்னமும் மொழி வெறி + மத வெறியை வைத்து நன்றாக அரசியல் செய்கிறார். அவரின் வாரிசுகளும் அப்படியே..
தாவூத் இப்ராஹிம் இன்னமும் மும்பையில் தன் நிழல் அரசாங்கதை தொடர்வதாக நேற்றைய times of india சொல்கிறது. கராச்சியில் ராஜ போக வாழ்க்கை வாழ்கிறான்.. இவனின் பெண் திருமணம் செய்து இருப்பது பிரபல கிரிக்கேட் ஆட்டகார் ஜாவித் மியாண்டடின் மகனை..
ஆனால் இன்னமும் குண்டு வெடிப்பில் தன் பெற்றோரை இழந்தவர்களும் தங்களில் வாழ்க்கையை இழந்தவர்களும் இன்னும் அதை தேடி கொண்டு தான் இருக்கிறார்கள்..
*************************************************************************************************************
ஐந்து வருடங்கள் முன்னர் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கு என் வேலை நிமித்தமாக சென்று பின் என் அலுவலக தலைமையகமான தில்லி திரும்ப கவுகாத்தி தில்லி ராஜதானி ரயிலில் முன் பதிவு செய்தேன்.
. நான் பயணம் செய்த நாள் ஆகஸ்ட் 15..
கவுகாத்தியில் இருந்து புது தில்லி ரயில்வே ஸ்டேசன் வரை அந்த ரயில் முழுக்க மொத்தமே 5 பேரோடு பயணம் செய்த அந்த தினங்களும் நினைவில் வருகிறது..
புண்ணியம் தேடி கொண்டவர்கள் உல்பா & கோ.. இன்று அஸ்ஸாம் நிலை பல படி முன்னேறி சென்று விட்டது.. தீவிரவாதத்துக்கும் தனி நாடு கோரிக்கைக்கும் அந்த மாநில மக்களே கொடுக்கும் எதிர்ப்பே அந்த உல்பா கோழைகள் அப்பாவி மக்கள் மீது தொடுக்கும் குண்டு வெடிப்புகள்
*********************************************************************************************
ஏன் இந்த தமிழ் விடுதலை புலிகள் கூட எதற்க்கும் குறைந்தவர்கள் இல்லை.. யாழ்பாணத்தில் வசித்த பல இஸ்லாமியர்களை ஒரே நாளில் இடம் பெயர சொன்னார்கள். புலிகளால் இன்று தங்களின் சொத்துகளை + வாழ்க்கையை இழந்த தமிழ் இஸ்லாமியர்கள் பல்லாயிரம்..
இன்று வரை பிரபாகரன் ரொம்ப பாதுகாப்பாதன் இருக்கிறார்(ன்).
***********************************************************************************************************
கழ்மீர் மாநிலத்தில் தற்போது நடை பெறும் தேர்தலில் வாக்கேடுப்பு 67% என சொல்கிறது.. இதை போல அதிக வாக்கு பதிவு அமைதியான தமிழ்நாட்டில் கூட நடை பெறுவதில்லை.. வன்முறையால் அதிகமாக பாதிக்கபட்ட கழ்மீர் மக்களே இன்று ஜனநாயக வழி காந்திய வழி தேடி வருகிறார்கள்..
************************************************************************************************************
என்னை பொருத்தவரை நான் சாதாரண மனிதன்.
ஏன் நானும் நீங்களும் நம்மை சுற்றி இருக்கும் சமுதாயமும் அப்படி தான்.... சற்று யோசித்து பாருங்கள்..
இந்த வன்முறைகளில் நாமோ நம்மை சேர்தவர்கள் யாரோ பலியாகி இருந்தால் நம் குடும்பத்தில் நிலை என்னவாகி இருக்கும்?
குண்டு வைப்பவனும் குண்டு வைக்க தூண்டுபவர்களும் எப்போதுமே பாதுகாப்பாகதான் இருக்கிறார்கள்..
நாம் மட்டும் தான் சாதி மதம் மொழி என்ற வேறுபாட்டில் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருக்கிறோம்.
. படித்தவர்கள் இடையே இதை போல வேறுபாடுகள் இருக்காது என்று நான் பல காலம் முன்பு நினைத்தது உண்டு.
னால் இன்று இணையத்தில் எழுத படும் பல எழுத்துகள் வன்முறை படித்தவர்களால் படிக்காத அப்பாவிகள் மேல் திணிக்கபடுகிறது என்றே நினைக்க தோன்றுகிறது.
ஆமாம் எனக்கு சத்தியமாக புரியலை... இப்படி கேனதனமாக வன்முறைகளை விடுதலை போராட்டம் மக்களின் சுயநிர்ணய போராட்டம் என்று சொகுசாக எழுதுகீறீர்களே.. என்னக்காவது அந்த பாதிக்கபட்ட ஊருக்கு போய் பார்க்க வேண்டியது தானே..
சரி விடுங்க உங்களுக்கு உங்க பிழைப்பு,,,
இனி வரும் டிசம்பர் 6 ம் தேடி வன்முறையை நாம் வெறுப்போம் , எழ்த்தில் கூட வன்முறையை கலைவோம் என்று உறுதி மொழி எடுக்கும் நாளாக இருக்கட்டும்.
ஜாதி மதங்களைப் பாரோம் -
உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
///இஸ்லாமிய தீவிரவாதிகளால் வைக்க பட்ட வெடி குண்டு///
bothaiyil eludhugireergala?
pona padhivil dhan theeviravadham endral theeviravadham.. islam, hindu endru thani thani theeviravadham illai endru sonnirgal.
Hindu terrorism is exaggerated word. I dont agree with that word.It is Hindu resistance movement.
i've taaged u Arun.
http://vidhyascribbles.blogspot.com/2008/12/blog-post_09.html
//ஏன் இந்த தமிழ் விடுதலை புலிகள் கூட எதற்க்கும் குறைந்தவர்கள் இல்லை.. யாழ்பாணத்தில் வசித்த பல இஸ்லாமியர்களை ஒரே நாளில் இடம் பெயர சொன்னார்கள். புலிகளால் இன்று தங்களின் சொத்துகளை + வாழ்க்கையை இழந்த தமிழ் இஸ்லாமியர்கள் பல்லாயிரம்..
இன்று வரை பிரபாகரன் ரொம்ப பாதுகாப்பாதன் இருக்கிறார்(ன்).
//
மிகவும் மேலோட்டமான கருத்து.முஸ்லிம்கள் சிங்களவனோடு சேர்ந்து கொண்டு நடத்திய கொலைகள் காட்டிகொடுப்புகள் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாமல் ஏதோ புலிகள் தவறு செய்து விட்டார்கள் என்று வாய்க்கு வந்த படி (அல்லது சிந்தனைக்கு வந்த படி) எழுதி இருக்கிறீர்கள்.புலிகளின் செயல் ஒரு எதிர் வினையே தவிர அது ஓர் வினை அல்ல.
எதைப் பற்றியும் ஆழமான கருத்துக்கள் இல்ல.ஒரு வித நம்பிக்கை வறட்சியும் இருமை வாதமும் தூக்கலாக இருக்கிறது.சாதரண மனிதன் என்று சொல்லி இருக்கிறீர்கள் அதனால் சாதரண மனிதர்களின் விடயங்களான சுற்றுலா செல்வது,பொருட்கள் வாங்குவது,கோவிலுக்கு செல்வது,அழகான மனைவி,அழகான குழந்தைகள்,அழகான குடும்பம் போன்ற typical middle class sentiments பற்றி நிறைய எழுதுங்கள் அதை விட்டு விட்டு சுய நிர்ணயப் போராட்டம் போன்ற பெரிய வார்த்தைகளைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்.? அந்த உணர்வு உள்ளவர்கள் அதைப் பற்றி சிந்திக்கட்டும்.பாதிக்கப்பட்டவனுக்குத்தான் அதன் வலி புரியும்.நானும் பெங்களுருவில் தான் இருக்கிறேன்.தமிழ்ர்களைப் பற்றிய உங்களுடைய சில கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு உண்டு. அந்த "தமிழே அகின் (உலகின் அல்ல ) என்ற சுவர் வார்த்தைகளை பெங்களுருவுக்கு முதன் முதலில் வந்த போதே பார்த்தேன் எனது நண்பர்கள் என்னிடம் அதைக் காட்டினார்கள்.உங்களது பதிவை நண்பர்களிடம் சொல்லி நீண்ட நேரம் சிரித்தேன்.உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்
வருகைக்கு நன்றி செந்தில் ..
நான் இந்த பதிவை எழுதிய போதும் தற்போதும் கால நிலைகள் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்து விட்டது.
நாம் தற்போது இந்த விசயத்தில் என்ன பேசினாலும் முகாமில் இருக்கும் மக்கள் நிலை மாற போவதில்லை...
இலங்கை பிரச்சனையில் எனக்கு பிரபாகரன் மீது் பலமான கருத்து வேறுபாடு உண்டு.
யாழ்பாண கருப்பு அக்டோபர் மாதமும் (1991), திருச்சியில் கே கே நகரில் என்னோடு வசித்த இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், காஜா மியான் கல்லூரி மைதானத்தில் கிரிக்கேட் விளையாடும் போதும் யாழ்பாணத்தில் இருந்து விரட்டபட்ட பலரோடு பழகி இருக்கிறேன்..
எனக்கு தெரிந்தது எல்லாம் அவர்கள் சொல்லி கேட்டது தான்.
ஆனால் இன்று இன்றைய நிலையில் பேசி பயனில்ல்லை என்றே நினைக்கிறேன்.
என்ன பண்றது சார்.. எப்போதும் சாதாரண
middle class mentality பத்தி தான் எழுதுகிறேன். எப்பவாச்சும் உணர்ச்சி வசபட்டு வேற ஏதாச்சும் எழுதி விடுகிறேன்.
thanks boss, அடிக்கடி வாங்க
நன்றி அருண்.நான் எழுதுனதுக்கு கண்டிப்பா என்னை திட்டுவீங்கன்னு எதிர் பார்த்தேன்.ரொம்ப பொறுமையா பதில் சொல்லி இருக்கீங்க.
பிரபாகரனின் அணுகுமுறையில் தவறுகள் இருக்கலாம் ஆனாலும் அவரை ஆதரித்தவர்களின் எண்ணிக்கை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம்.ஏனென்றால் அவரை எதிர்த்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் முதல் எதிரியான சிங்களவனோடு இருந்தார்கள் அதை அந்த மக்கள் விரும்பவில்லை.நமது சமூகம் எந்த ஒரு பிரச்சினையிலும் அதனுடைய வேர் காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு தராமல் உடனடித் தீர்வுகள் தருவதை தான் விரும்புகிறார்கள் கொசு மருந்து அடிப்பதைப் போல.
பிரபாகரன் முஸ்லிம்களை துரத்தினார் என்றால் அதற்கு காரணம் என்ன என்று யாரும் யோசிப்பதில்லை.எந்த காரணமும் இல்லமல் அதை செய்திருக்க மாட்டார்.ஏதோ ஒருவகையில் இரு தரப்புக்கும் ஒரு தவறான புரிதல் வந்திருக்கலாம்.போர்க்களத்தில் பொறுமையாக செல்ல முடியாமல் அவசரப் பட்டிருக்கலாம் அதற்காக புலிகள்,முஸ்லிம்கள் இருவரும் செய்தது எல்லாம் சரி ஆகி விட முடியாது என்றே கருதுகிறேன்.நாம் இருவரும் ஒரு வகையில் அகிரா குரோசாவா கேரக்டர்கள் மாதிரி அவரவர் அனுபவங்களின் படி அவரவர் பார்வையில் சரி எனப்பட்டதை எழுதுகிறோம்.
எப்படியாகிலும் இனி ஈழத் தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
typical middle class mindset என்று எழுதியதற்கு வருந்துகிறேன்.
Post a Comment