Sunday, August 31, 2008

கண்டதும் கேட்டதும்



வர வர சன் மியூசிக் சானலை பார்க்கவே எரிச்சல் மூட்டுகிறது.

திவ்யா என்ற ஒரு நிகழ்ச்சி நடத்துனர் அநியாயத்துக்கு வால்த்துக்கள் என்று ழ விற்க்கு ல விற்க்கு வித்யாசம் இல்லாமல் பேசுவது படு முட்டாள்தனம்


'ழ ' சொல்ல வரவில்லை என்றால் அதற்கான முயர்ச்சியாவது எடுக்கலாம் .. அதை கூட சொல்லி தர தெரியாத நிர்வாகம்..

சென்ற வாரம் திருச்சிக்கு சென்று இருந்த போது சேனல் மாற்றி கொண்டு இருக்கும் நேரத்தில் “ கலைஞர் டிவியின் இசையருவி” சேனல் கண்ணில் பட்டது.. சன் மியூசிக்கின் க்ளோன் தான் ..அங்கிருந்து வந்த அதே ஆட்கள். இருந்தாலும் பல நல்ல பாடல்களை ஒளிப்பரப்பினார்கள்...

சன் மியூசிக்கை காலையில் நேரத்தில் தினமும் அதே பாடல்கள் தான். இரண்டு பாடல்களுக்கு இடையில் கணக்கில்லாத ஆடி ஆவணி தள்ளுபடி வாங்கிக்கோ போய்கோ என்ற சுரத்தில்லாத விளம்பரங்கள்..

சன் மியுசிக் இதே மாதிரி வண்டி ஓட்டி கொண்டு இருந்தால் பின்னால் வந்த வண்டிகள் எல்லாம் ஓவர் டேக் செய்து விட்டு போய்கொண்டே இருக்கும்..

நான் வைத்து இருக்கும் டாடா ஸ்கை யில் இசையருவி வருவதில்லை...விரைவில் வருகிறதாம்...:)

******************
மண்ணை இருள் சூழ்ந்த பின்்
இயற்கையின் அழகு மறைந்து விடுவதில்லை
சந்திர ஒளியில் தெரியாத அழகை
கண்கள் காண மறுப்பது
இயற்கையின் தவறா?
கண்களின் தவறா?



இயற்க்கை தான் எப்போதுமே பலசாலி என்று பல முறை மனிதகுலத்துக்கு சொல்லி வருகிறது.. மனிதான் கேட்க்க மறுத்து வருகிறான்..

சமீபத்திய பீகார் வெள்ளத்துக்கு காரணம் கோசி என்ற சூராவளி ஆறு தான். நேபாளித்தில் உருவாகி பீகாரில் கங்கையோடு சேரும் முன்னே ஓவ்வோரு வருடமும் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறது.



கடந்த 100 வருடங்களில் தன் பாதையை பல முறை மாற்றி கொள்கிறது.. இதுவரை மேற்க்கிலிருந்து கிழக்காக 250 கிலோ மீட்டர் தூரம் தன் பாதையை மாற்றி கொண்டு வருகிறது... பாதை மாற்றும் போது கூடவே செல்லும் இடங்களை எல்லாம் சூன்யமாக மாற்றி செல்கிறது.

திடீரென்று காவிரி மேட்டூர் வழியாக செல்லாமல் அப்படியே பாதை மாற்றி ஈரோடு - > கடலூர் என்று சென்றால் என்ன ஆகும்???

அதே கதை தான் அங்கும் நடக்கிறது..

நேபாளம் மிக சுலபமாக தண்ணீரை திறண்து விட்டு விடுகிறது.. இந்திய பகுதியில் கட்டுகடங்கா வேகத்தோடு பாயும் இந்த ஆறு கங்கையை சேறும் வரை செய்யும் நாசங்கள் கணக்கில் இல்லை..

ஏற்கனவே சோகமான பீகார் மாநிலம் இதனால் சர்வமும் நாசமாகி கிடக்கிறது..

இதை தடுக்க முடியாதா??

1955 ஆண்டில் இருந்து முயர்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால் கட்டபட்ட தடுப்பணைகள் அனைத்தும் இதன் வேகத்துக்கு எதிரே நிற்க்க முடியவில்லை. தடுப்பணை கட்டிய திசையில் செல்லாமல் தன் இழடத்துக்கு பாதை மாறி செல்கிறது..

*****************


பெங்களூரில் மழைகள் புதிது இல்லை.. மழை சென்ற வருடங்களை விட தற்போது குறைவு தான். ஆனால் ஒவ்வோரு மழைக்கும் சாலைகள் ஏரிகளாக ஆகி விடுகின்றன.

சென்ற வாரம் whitefield பகுதியில் புதிதாக கட்டபட்ட குடியிருப்பு வெள்ளத்தில் மாட்டியது.. காரணம் அங்கு இருந்த ஏரியை அப்படியே பட்டா போட்டு கான்க்ரீட் காடுகளாக ஆக்கி விட்டனர்..

இயற்க்கை பாதை மாறுவது ஒரு புறம் தெரிந்தே இயற்க்கை பாதையை அடைப்பது மறுபுறம்.. என்ன சொல்வது..

Saturday, August 30, 2008

தாம் தூம் திரை விமர்சனம்



மறைந்த இயக்குநர் ஜீவாவின் கடைசி படைப்பு.. படத்தை பார்த்து விட்டு வந்த போது தமிழில் ஒரு மிக சிறந்த கேமராமேனை மட்டும் அல்ல மிக சிறந்த இயக்குநரையும் இழந்து விட்டோம் என்று மனதில் ஒலித்து கொண்டே இருக்கிறது..

சாதாரண கதை தான்.. ரழ்யாவிற்க்கு செல்லும் ரவி ஒரு கொலை வழக்கில் மாட்டி கொள்கிறார்.. அதில் இருந்து தப்பித்து வருகிறார்..

எப்படி தப்பித்தார் என்று சொல்வதில் கில்லி மாதிரி அடிச்சு கலக்கி இருக்காங்க...


முதல் சீனில் கதாநாயகி அறிமுகத்தில் இருந்து சும்மா அலுப்பு தட்டாம அப்படியே கதையை நகர்த்தி கொண்டு செல்கிறார்கள்.. சவுண்ட் கொடுக்கலாம் என்று என்னோடு வந்த என் நண்பர்கள் அப்படியே இரண்டரை மணி நேரமும் வாய் மூடி மவுனமாக சில காட்சிகளில் தன்னை மறந்து கைதட்ட ஆரம்பித்து விட்டார்கள்..

ஜெயம் ரவி.. மிகவும் நல்ல நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார்.... அவ்வளவாக சண்டை காட்சிகள் இல்லாத இவருக்கு நடிப்பில் திறமையை வெளிபடுத்த நல்ல வாய்ப்பு.. வெல்டன் ரவி..


புது கதாநாயகி கங்கா ரானத்.. தமிழில் ஒரு ரவுண்ட் வருவார்.. அவரின் காட்சிகள் மிகவும் கலகலப்பாக செல்கின்றன.

கிராம புற காட்சிகளில் இவரின் மேக்கப் சற்றே இடிக்கிறது....



கூடவே ரழ்ய காட்சிக்ளில் லட்சுமிராய்.. அழகாய் இருக்கிறாய்.. பயமாக இருக்கிறது :)

கூடவே ஒரு லவ் டிராக் ..தொட்டு கொள்ள அலுப்பு தட்டாத காமேடி..

ஒளிப்பதிவு.. பேஷ் பேஷ் பிரமாதம்.. ஒளிப்பதிவும் ஜீவாதான்..ரழ்ய சேஸிங்க் காட்சிகள் அபாரம்

ஜெயராம் அடுத்த டிராக்கிற்க்கு தன் கேரியரை நகத்தி கொண்டு செல்கிறார் ..தமிழுக்கு புது வில்லன் தயார்.

பல காட்சிகள் தமிழுக்கு ரொம்ப புதுசு..அதுவும் அந்த சேஸிங்க் காட்சிகள்.. பலே பலே

பாடல்கள் ஏற்கனவே ஹிட் தான்.. படத்துக்கு பாடல்கள் மட்டும் அல்ல.. பிண்ணணி இசையும் பெரும் பலம்.... இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் தாம் தூம் தான்

எதுவும் உறுத்தாத குடும்ப மசாலா சேர்த்த திரில்லர் டிக்காலா.. இனிப்பு காரம் தூக்காத வாசனை எல்லாம் சேர்ந்த சுவை..

தாம் தூம் தூள் தூள்..

Thursday, August 28, 2008

சர்வேக்கு சர்வே

விகடன் பத்திரிக்கை தொடர்பான சர்வேயில் கலந்து கொள்ள வேண்டுமா?

இந்த வலைபூவுக்கு சென்று தங்களின் பொன்னான வாக்குகளை அளிக்கவும்

இங்கே அழுத்தவும்

Monday, August 18, 2008

பெங்களூரில் ஒரு மழை நாளில்



மழை இந்த சொல்லும் சரி அதன் ஆக்கமும் சரி எப்படி எனக்கு பிடித்து போனது என்று தெரியவில்லை. எனக்கு என்னவோ எனக்கு பின்னே நிழலை போல தொடர்ந்து வரும் தோழனாக மழையை எண்ணுகிறேன்


என்னவோ தெரியவில்லை.. பொறியியல் படிப்பை முடித்து விட்டு வேலை தேட ஊர் உலகம் சுற்ற கிள்ம்பிய போது ”பொத்துகிட்டு ஊத்துதடி வானம் “ என்ற அந்த பாடலின் முழுமையான அர்த்தைதை அப்போது தான் உணர்ந்தேன்..

பெங்களூரில் வேலை தேடும் படலை தொடர்ந்து போது தான் மழையின் உண்மையான சக்தியை உணர்ந்தேன்.. காலையில் எல்லா அண்ணாக்களும் அறையை காலி செய்த போன பின்பு என் அண்ணன் வாங்கி கொடுத்த ஷூவை அணிந்து கொண்டு இருந்த சில நல்ல ஆடைகளை உடுத்தி கொண்டு resume கொடுக்க செல்லும் படலத்தில் சொல்லி கொள்ளாமல் என்னையும் என் resumeகளையும் மொத்தையும் நனைத்து விட்டு சென்று விடும்.. என்னதான் இருந்தாலும் நன் சொந்த ஊரில் பெய்யும் மழைக்கும் அதன் மண் வாசனையின் சுவையே தனி..


இருந்தாலும் பெங்களூரில் பெய்யும் மழை எப்படி இருந்தாலும் நான் பிறந்த தஞ்சை மாவட்டத்துக்கும் நான் வளர்ந்த திருச்சிக்கும் தானே செல்கிறது என்று நாள்பட நாள்பட பெங்களூரில் மழை துளி சிதறும் போதே அதை ரசிக்க தொடங்கி விட்டேன்..
அதே மழையை மிகவும் உக்கிரத்துடம் மும்பையில் பார்த்த போது .... அதன் மேல் சற்று பயமும் வந்தது.. மும்பையில் இதேல்லாம் சகஜம்டா என்று சொல்லி இரண்டு நாட்கள் வீட்டை விட்டு கீழ் இறங்காமல் எங்கு காணிணும் தண்ணீரே என்று என்னை வியக்க வைத்த தருணமும் உண்டு.. பெங்களூரில் எப்போது மழை வரும்?? எப்போது மழை வராது என்று திருப்பி கேட்கலாம்.. நேரம் காலம் இல்லாது நெருங்கிய தோழனிடம் இருந்து வரும் இரவு நேர செல்பேசி செய்திகள் போல .. மழைக்கு பிறகு எனக்கு மிகவும் சினேகிதன் ஆட்டோ டிரைவர்கள்.. பெங்களூரில் முதல் வேலை கிடைத்த போது நான் வாங்கிய சம்பளத்துக்கு என்ன பைவ் ஸ்டார் ஓட்டலிலா தங்க முடியும்?? அப்போது நான் தங்கி இருந்த மேன்சனும் அல்லாத தனி வீடும் அல்லாத ஒரு கிரகத்தில் இருந்த போது பல ஆட்டோ ஓட்டுநர்கள் பழக்கம்..


பெங்களூரில் பல ஆட்டோ டிரைவர்கள் தமிழர்களாக தான் இருக்கின்றனர்.. அல்லது கொச்சை தமிழை பேசுபவர்களாக இருக்கின்றனர்..

கன்னடாவும் அறியாமல் இந்தியிம் தெரியாமலும் வாழ்ந்த அந்த காலங்களில் அவர்களே துணை..

மாத கடைசியில் பைக்க்கு பெட்ரோல் போட காசில்லாமல் தவித்த அந்நாட்களில் என் நிலை அறிந்து எனக்கு தெரியாமல் என் பைக் டாங்கை நிரப்பி வைத்தவர்கள் அவர்கள்...


சென்ற வாரம் திருச்சிக்கு போகலாம் என்று வீட்டை விட்டு கிளம்பிய போது மழையின் வேகம் அதிகமாகவே இருந்தது.. ஏற்கனவே முன் பதிவு செய்து இருந்த ksrtc பேருந்தை பிடிக்க வேண்டும்..

எங்கு பார்த்தாலும் மழை மழை மட்டுமே.. மடிவாலா செல்ல ஆட்டோ ஏதும் கிடைக்கவில்லை.. அரை மணி நேர காத்திருப்புக்கு பின் ஒரு ஆட்டோ வந்தது.

.
எங்கே போகனனும் .
..Christ college
தமிழில் ஒன் அண்டு ஹாப் சார்ஜ் சார்.
. மணி பத்தரைக்கு மேல் ஆச்சு
சரி வண்டிய எடுங்க ...
திருச்சி பேருந்து 10 : 50க்கு வரும்..
கோரமங்களா 80 feet road முழ்வதும் தண்ணீர் தண்ணீர் எங்கு பார்தாலும் தண்ணீர்.
.
டிரைவர் சார் அப்படியே விவேக் நகர் வழியாக போங்க..

என் பேச்சை கேட்டு விவேக் நகர் வழியாக சென்ற ஆட்டோ ஒரு பள்ளத்தில் மாட்டி தண்ணீர் குடித்து நிம்மதியாக உறங்க சென்றது.

..
என்ன சார் உங்க பேச்சை கேட்டு இங்க வந்தா வண்டி ஆச்சே??

உங்களுக்கு மழையை ரசிக்க தெரியாதா??


ம் ரசிக்கலாம் சார்.. இப்படியே ரசிச்சுகிட்டு இருந்தா ஊட்ல சாப்பட்டுக்கு பதிலா வேற ஏதாச்சும் இருக்கும்..

நேரம் 10: 45 இனி நினைத்தாலும் பேருந்தை பிடிக்க போவதில்லை.. அம்மா அப்பாவை அடுத்த வாரம் பார்த்து கொள்ள்லாம்..

சரி ஸ்பார்க் ப்ளக்கை கழட்டி துடைச்சு மாட்டினா ஸ்டார்ட் ஆகிடும்.. செய்யலாமா?


சார் அதேல்லாம் பெட்ரோல் வண்டிக்கு தான்..இது காஸ் வண்டி..
காஸ் வண்டின்னா ஸ்பார்க் ப்ளக் கிடையாதா?

வேறு ஏதும் நான் பேசவில்லை..பேசவும் தோன்றவில்லை.. சரி சொல்லி பாக்கலாமா?

டிரைவர் சார்.. நான் engineer...என்னால சரி செய்ய முடியும் ..
போங்க சார் உங்க தோளில் தொங்குதே லாப்டாப்பு உங்கள மாதிரி ஆளுங்க இதேல்லாம் சரி செய்ய முடியுமா?? என்ன சார் காமேடி கீமடி பண்றீங்களா??


முடியும்.. லாப்டாப் பேக்கை அப்படியே புறத்தில் வைத்தேன்.. தினமும் ஜிம்முக்கு சென்று வருவதால் உருவான தேகம்.. ம் முயற்சி செய்வோமே.. வுடுங்க சார்...
இல்லை பார்த்துடுவோம்..

இல்லை சார் நீங்க போயி...

இதை செய்வதில் என்ன குற்றம்?? ஸ்பானர் என் கை மாறியது.. ஆட்டோவின் பின் பாகத்தை திறந்து சற்று ஸ்பார்க் ப்ளக்கை சுத்தம் செய்து என் சக்தியை எல்லாம் பயண்படித்து ஆட்டோ ஸ்டார்ட் லீவரை இழுத்தேன்..

ம்... ஸ்டார்ட் ஆகி விட்டது.. சார்.. சொல்லுங்க.. எனக்கு கூட மழைன்னா ஆசை தான் சார்..

ஆனால் என்ன செய்யறுது.. நம்ம வாழ்க்கையில மழை வந்துச்சுனா புழைப்பு வீணா போகுதே...


எந்த ஊரு உங்களுக்கு? வேலூர் சார்.. அப்பாவுக்கு காட்பாடி.

எத்தனை வருசமா பெங்களூர்ல இருக்கீங்க??

பொறந்தது எல்லாம் இங்க தான் சார்.. அப்படியே போன பேச்சு தமிழ் நாட்டின் அனைத்து பிரச்சனைகளையும் தொட்டு சென்றது..

நேரம் 11 30..
ksrtc கவுணடரில்..
excuse me..what time to bus to trichy will arrive? volvo? yes its already left..

ஊருக்கு போக தற்போது விருப்பம் இல்லை.. அப்படியே மழையோடு இன்னம் ஒரு ஆட்டம் போட ஆசை,..
ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போகலாமா??

டிரைவர் சார் ..கோரமங்களா 4th block போகனும்..ஓசூர் ரோடு ஜெங்கசனில் டிராபிக் ஜாம் விவேக் நகர் வழியாக போகலாமா? நான் வழி சொல்கிறேன்...

Friday, August 15, 2008

சத்யம் திரை விமர்சனம்



இன்று காலை சன் டிவி முதல் விஜய் டிவி வரை எந்த சேனைலை திருப்பினாலும் விஷால் புராணம் தான்.. தான் மொட்டையடித்தது ஏன் என்பது முதல் நயன் தாரா ஜிம்முக்கு போனது ஏன் வரை உலக முக்கியதுவம் வாய்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டே இருந்தார்..ஒரே செய்தியை எல்லா பேட்டிக்கும் சொல்வது போரடிக்காது???

சும்மா இருந்த எனக்கும் சரி நாமும் இந்த படத்தை பார்போமோ என்ற ஆசை.. என் நண்பன் ஒருவனையும் தயாராக சொல்லி விட்டு மாலை நேரம் பெங்களூர் பிவிஆர் சினிமாஸ்க்கு நுழைந்தோம்..

***************



சத்யம் திரைபடத்தில் கன்னட ஹீரோ உபேந்திரா நடித்து இருப்பதால் பல கன்னடா முகங்கள்.. அவர் பெயரை திரையில் வரும் போதே ஏகப்பட்ட கைதட்டல்கள் விசில் சத்தங்கள்..

ஆரடி உசர என்று புகழ்பாடும் பாடலோடு படம் தொடங்குகிறது..
விழால் உடலை பார்த்தால் நமக்கும் சற்று ஏக்கம் பொங்குகிறது.. கூடவே படம் நெடுக யாரையாவது மாற்றி மாற்றி காலால் அல்லது கையால் அடித்து கொண்டே அடித்து கொண்டே இருக்கிறார். இல்லையென்றால் ஏதாச்சும் வசனம் பேசி கொண்டு இருக்கிறார்.

அவ்வ் ரொம்ப ஓவர் டோஸ்.

படத்தின் பல காட்சிகள் மிகவும் சிரமபட்டு எடுத்து இருக்கிறார்கள்.. பல வருடங்களாக தயாரிப்பில் இருந்த படம்..

ஆனால் எல்லாம் துண்டு துண்டாக பார்த்தால் நன்றாக இருக்கும்.. எல்லாவற்றையும் இணைத்து பார்த்தால் ஏதும் சுவராசியமாக இல்லை..

படத்தின் கதை வெகு சிம்பிள்..காலம் காலமாக நாம் பார்த்து வரும் அதே கதை தான்..

அரசியல்வாதிகளால் பாதிக்கபடும் ஒரு போலிஸ் எப்படி அவர்களை பழிவாங்குகிறான் என்பதே..

கதையின் அவுட் லைன்..

அரசியல்வாதிகளால் பாதிக்படும் உபேந்திரா நாட்டை சுத்தபடுத்த பழி வாங்கும் நடவடிக்கைகள ஆரம்பிக்க அவரை தேடி கண்டு பிடிக்கும் பொறுப்பில் இருக்கும் விஷால் ..

உபேந்திராவை கண்டு பிடித்து சிறையில் அடைக்கும் விஷாலுக்கும் அவருக்கும் இருக்கும் பூர்வ ஜென்ம பந்தங்கள் காரணமாக உபேந்திரா இந்த அரசியலவாதிகளை உன்னால் அடக்க முடியுமா என்று விஷாலுக்கு சவால் விட அதை விஷால் எப்படி எதிர் கொள்கிறார் என்பதே கதை..

கதை அவுட் லைன் எப்படி சூப்பர் தானே..

ஆனால் இந்த கதையில் நயந்தாரா, அம்மா செண்டிமெண்ட், குத்து பாட்டு , விழால் இமேஜை ஏற்ற திணிக்கபட்ட காற்றில் பறக்கும் சண்டைகள் என்று எல்லவறையும் திணித்தால் என்னவாகும்???

படம் படு கேவலமாக ஏதோ பல படங்களின் ரீ மிக்ஸ் தொகுப்பாக மாறி விட்டது..

அம்மா செண்டி மெண்ட் - மன்னன் படத்தின் ரீ மிக்ஸ்
நயண்தாரா -- ஏன் வருகிறார் எதற்க்கு வருகிறார் என்பது தெரியவில்லை
குத்து பாட்டு - ஆவ்... கொடுமைடா சாமி

காற்றில் பறக்கும் சண்டைகள் - ஓவர் டோஸ்

ஹாரிஸ் ஜெயர்ராஜ் பாடல்கள் படு மோசம்.. தனது 25வது படத்தில் மோசமாக சொதப்பி இருக்கிறார்..

பட தொகுப்பு நிறைவு காட்சியில் படு வேகமாக வேலை செய்து இருக்கிறது.. தீபாவளி கேப் துப்பாக்கி சுடுவது போல ..

பாடல்களை மட்டும் ரீமிக்ஸ் செய்யும் போக்கு மாறி பழைய படங்களின் காமேடிகளை கூட ரீ மிக்ஸ் செய்கிறார்கள்..


சிட்டிசன் படத்தை ஞாபகம் வருகிறது..
அது மட்டும் அல்ல காக்க காக்க , இந்தியன், மன்னன் என்று எல்லாம் கலந்து விட்ட சரக்கு போல இருக்கும் கதை

ஆம்.. சூப்பரான கதையை வைத்து விளையாடுவதை விட்டு விட்டு குத்தி குதறி விட்டு இருக்கிறார்கள்..

படத்தின் கத்தி உபேந்திரா ரோலுக்கு அதிகம் கொடுக்கபட்டு இல்லாமல் இருந்தால் இந்த படம் பிழைத்து இருக்கும்..

உப்பி தான் வரும் சில் நிமிடங்களில் சூப்பர் நடிப்பால் மனதை கொள்ளை அடித்து விடுகிறார்.

படத்தில் அடிக்கடி வரும் டயலாக் ” தமிழ் நாடே கொந்தளிக்கும்”” படத்தை பார்த்த எனக்கும் மூன்று மணி நேரத்தை வீணாக்கி விட்டோமே என்று தான் மனம் கொந்தளித்தது..

பல நல்ல காட்சிகள் ஆனால் கடைசியில் எல்லாம் கோவிந்தா கோவிந்தா..

தற்போது கூட மோசம் இல்லை.. வெட்டி விஷால் புராணம் பாடும் காட்சிகளை வெட்டி விட்டு உபேந்திரா காட்சிகளை அதிகம் வைத்தால் இந்த படம் பிழைக்க வாய்ப்பு மிக அதிகம்

Wednesday, August 13, 2008

எனக்கு நானே - 13-08-2008

ம் வலைபதிவுகள் எண்ணிக்கை தினம் தினமும் பல மடங்கு அதிகரித்து செல்கிறது.அதற்க்கு தகுந்தவாறு திரட்டிகளும் அதிகமாக செல்கின்றன.

எனது எந்த வலைபூவும் எந்த திரட்டியிலும் நான் வகைபடுத்தவில்லை. தமிழ் மணம் என்ற ஒரே திரட்டி தான் வகைபடுத்தலை கட்டாயபடுத்துகிறது. ஆனால் தமிழ்மணம் போன்ற திரட்டிகள் மிகவும் outdated ஆன தளம். எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் ஒரே குப்பையை அரைப்பதால் அங்கு இருப்பவர்களும் ஒரே குப்பையை அரைப்பதோடு அல்லாது அதன பயனாளிகளுக்கு தகுந்தவாறு அதே குப்பையை அரைத்து கொண்டே இருக்கிறார்கள்..

ஏய் ஜார்ஜ் புழ் என்னோடு நேருக்கு நேர் மோதி பார்க்க முடியுமா என்று சிலுக்குவார்பேட்டை சிங்காரங்கள் சொல்வதும்...அதே தினுசில் வெளிநாட்டு தின கூலி வேலையாட்கள் வேலை நேரத்தில் தான் தான் உலகத்தில் இருக்கும் சில சிந்திக்க தெரிந்தவர்களில் ஒருவர் என்ற ரேன்சில் எழுதுவதும் பார்த்து பார்த்து கசந்து போய் விட்டது.. தமிழ்மணம் என்ற ஆரம்ப திரட்டி இன்று வெறும் பல சிறு குழுக்களான குழுமம் என்று ஆகி விட்டது..

http://www.tamilish.com என்ற தளம் இன்னும் சில காலங்களில் அனைத்து அரைத்த மாவை அரைக்கும் திரட்டிகளை ஓரம் கட்டி விடும் என்று நினைக்கிறேன்..கருத்துகளம் + வலைபூ திரட்டி + வாசகர்கள் கருத்தின் படி முறைபடுத்தல் என்ற பல முக தன்மைகள் கொண்ட இதை போல திரட்டிகள் தான் இனி வருங்காலத்தில் செய்ல்படும்.

எந்த புண்ணியவானோ என் பதிவுகளை அங்கு இணைத்து விட்டார்

என் தமிழ் பதிவுகளை ஒரு நாளைக்கு ஒருவர் எட்டி பார்பதே அபூர்வம்.. இதில் ஒரே நாளைக்கு 1000 பேருக்கு மேல் வந்தால்??


படத்தை பார்க்கவும்.. சென்ற வாரம் என் தமிழ் வலைபூவில் சில scriptகளை சேர்க்க வேண்டி வந்ததால் மொத்தமாக அனைத்து scriptகளையும் நீக்கி இருந்தேன்.. சனிக்கிழமை தான் என் சொந்த சரகோடு third party சரக்கையும் சேர்த்தேன்.. எத்தனை பேர் என் குப்பைகளை படித்து விட்டு போய் இருக்கிறார்கள்??



என் எழுத்துகள் எல்லாம் எனக்கு நானே என்று விட்டு விலகி இருக்கலாம் என்றால் மீண்டும் மீண்டும் இப்படி அதிர்ச்சி கொடுத்தால் என்ன செய்வது??

Sunday, August 10, 2008

கமலஹாசனும் தங்க காசு மோசடி நிறுவனமும்

தங்க காசு மோசடி கோல்ட் கொஸ்ட் நிறுவனம் நடிகர் திலகம் சிவாஜி பெயரில் தங்க காசை அறிமுகபடுத்தியது

அதை வெளியிட்டவர் யார் தெரியுமா?

அன்பே சிவம் ஏழைகளின் பங்காளி நாத்திகர் மற்றும் பல பல பட்டங்களை பெற்று இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் தான்..

வீடியோவை பாருங்கள்



ஒரு மோசடி நிறுவனம் என்று தெரியாமல் காசு வெளியிட்டுக்கு வந்து மோசடிக்கு விளம்பரம் தருவாரா?

எது எப்படியோ கமல் விளம்பரம் கொடுத்தால் எத்தனயோ குடும்பங்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து தற்போது கழ்டபடுவார்கள்.இவர்களுக்கு எல்லாம் உலக நாயகன் என்ன சொல்வார்.. ஆளவந்தான் எடுத்து தாணு கதை தான்..

இந்த கமலஹாசனை எல்லாம் ஏதோ பெரிய உலக நலம் விரும்பி ரேன்ஞ்சுக்கு சிலர் தூக்கி வைத்து ஆடுவது தான் சிரிப்பை தருகிறது


குசேலன் வசூல் நிலவரம் - பெங்களூர்

விகடன் குசேலன் படம் பெங்களூரில் சரியாக ஓடவில்லை என்று தெரிவித்துள்ளது. விகடன் எண்ணம் தெரிந்த ஒன்று தான். இருந்தாலும் விகடனின் பொய் செய்திகளை ஆதராத்தோடு முறியடிக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

இன்று குசேலன் படத்தின் டிக்கட்டகளை ஆன் லைன் மூலமாக பதிவு செய்ய முயற்ச்சி செய்த போது எனக்கு கிடைத்தது ஏமாற்றமே.. அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ் புல்.

ஊர்வசி, ஐநாக்ஸ், பிவிஆர் தியேட்டர்களின் நிலவரம்



inox chennai evening show is full

INOX night 10PM show ticket is blocked...reason bulk booking

Inox Bangalore evening show is full


bangalore urvashi theater balcony (seat capacity 800 seats ) is full


PVR Cinemas Evening 4 PM and 7 PM shows full



PVR Cinemas Evening 10 PM show is almost full.

Remember kuselan is running in 17 theatres in Bangalore

ஞாநிக்கு சில கேள்விகள்

ஞாநிக்கு சில கேள்விகள்

ருத்து சார்ந்த நிலைப்பாட்டை தாண்டிய தனிமனித காழ்புணர்ச்சியின் அடிப்படையில் ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கும் ஞாநி, அதை நிரூபிக்கும் வகையில் ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்.


உங்கள் மேல் பரிதாபப் படுகிறேன், இன்றோடு நீங்கள் காலி, -இப்படிப்பட்ட வாசகங்களுடன் ரஜினிக்கு முடிவுரை எழுத முயன்ற முயற்சி எத்தனை காலமாக நடந்து வருகிறது. அதையும் மீறிதானே இருந்து வருகிறார் ரஜினி.உங்களுக்கு புரிபடாத இந்த ரசிக அபிமானத்தைதானே உங்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.


ரஜினி உதைப்பேன் என்று சொன்னவுடன் பூச்செண்டு கொடுத்தீர்கள். இன்று வருத்தம் தெரிவித்தவுடன் குட்டு வைக்கிறீர்கள். ரஜினியின் நிலைப்பாட்டை ஒரு சினிமா நடிகருக்கான பலவீனம் .சுயநலத்திற்காக அப்படிசெய்தார் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்க நான் முயலவில்லை. ஆனால் மேன்மைமிகு பத்திரிக்கை தொழில் நடத்தும் தங்களது நிலைப்பாடு என்ன..ரஜினி உதைப்பேன் என்பதற்கு பூச்செண்டு கொடுத்தீரே? உதைப்பது வன்முறைச் செயல்- நீங்கள் வன்முறையை ஆதரிக்கும் தீவிரவாதியா? ஏற்பில்லா கருத்தை சொல்லும் மனிதர்களை உதைப்பதுதான் உங்கள் நியாயமா?.


கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் காணாமல் போய்விட்டது என்பது உங்களது அடுத்த கண்டுபிடிப்பு. இவ்வகையான நப்பாசையுடன் உங்களை போல எத்தனை பேர் எத்தனை வருடங்களாக அலைகிறார்கள் தெரியுமா? விடிஞ்சா கல்யாணம் விமர்சனத்தில் ஆனந்த விகடன் “அடுத்த வருட சூப்பர் ஸ்டார் சத்தியராஜ்
என்று எழுதியது. இன்று 2008- சத்தியராஜின் நிலைமை என்ன? சத்தியராஜ் மேடைகளில் கைத்தட்டல் வாங்க “கேணக் கூ---என்று பேசிக்கொண்டிருக்கிறார். நீங்களெல்லாம் இவ்வாறு எழுதுவது ரஜினி சூப்பர் ஸ்டார் ஆன பின்னணியை அறியாததால்தான்.


தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவர் பேசிய அரசியல் வசனங்கள்தான அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கி தந்தது என்று நம்பினால் உங்களை காட்டிலும் ஏமாளி வேறு யாருமில்லை. கடந்த இரு படங்களில் (சிவாஜி, சந்திரமுகி) அரசியல் வசனமே கிடையாது. அப்படங்கள் மகத்தான வெற்றி பெற்றன. அதற்கும் சில சப்பைகட்டுகள் உங்களிடம் இருக்கின்றன- ஜோதிகா நடிப்புக்காகவும், ஸ்ரேயாவின் இடுப்புக்காவும் படம் ஓடியது என்று.


இந்த வாதத்தை முன்வைக்கும் அறிவு ஜீவிகளிடம் கேட்கிறேன். எழுபதுகளில் வந்த எம்.ஜி.ஆர் படங்களில் (உலகம் சுற்றும் வாலிபன் முதல் மீனவ நண்பன் வரை) அதீத கவர்ச்சி காட்சிகள் உண்டு. அந்த படங்களெல்லாம் ராதா சலூஜா,லதாவிற்காக ஓடியதா? எம்.ஜி.ஆரின் பங்கு ஒன்றுமேயில்லையா?


எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மனிதர்களின் வெற்றியை அலசும்போது, அதன் பிண்ணனியில் உள்ள உளவியல் காரணங்களை நீங்கள் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். ரஜினியின் வெற்றி, கறுப்பு நிற்த்தையும், வேகமான வசன உச்சரிப்பையம் மீறி,சினிமாவில் பிரகாசிக்க முடியும் என்று நிரூபித்ததில் துவங்கியது. எவ்வித பின்புலம் இல்லாமல், எதிர்ப்புகளை மீறி ஒரு சாதாரண மனிதன் தொடர் வெற்றிகளை பெற்ற போது சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது. ஒரு நடிகனாவதற்கு காலகாலமாக இருந்து வந்த இலக்கணங்களை உடைததவர் ரஜினி. இந்த ரஜினிக்கு ரசிகர்களானவர்கள்தான் உண்மையான ரஜினி ரசிகர்கள். இவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம்.


இந்த ரஜினி ரசிகனுக்கு, ரஜினி என்ற மனிதனை பிடிக்கும். அவனுடைய பலம் மற்றும் பலவீனங்களையும் பிடிக்கும். அவனுக்கு வேண்டியது தீபாவளி மற்றும் பொங்கலுக்கு ரஜினி படம்.முதல்நாள் டிக்கெட். அதன் பின்னால் அவன் பிழைப்பு அவனுக்கு. இத்தகைய ரஜினி ரசிகர்கள்தான் இன்று வரை ரஜினியின் வெற்றிக்கு காரணம். அரசியல் ஆசையில் பேனர் கட்ட வந்தவர்கள் எல்லாம், விஜயகாந்த் கட்சிக்கு போய் விட்டார்கள். ரஜினியின் அரசியல் நிலைப்பாடு உண்மையான ரஜினி ரசிகனை பாதிக்கலாம். ஆனால் அதன் கோபதாபங்கள் ரஜினி என்ற திரைநட்சத்திரத்தை ரசிப்பதிலிருந்து தடுக்காது. இல்லாவிடில் 1997 பாராளுமன்ற தேர்தலில் ரஜினி கருத்து தெரிவித்த போதே அவரது சூப்பர்ஸ்டார் பட்டம் காணாமல் போயிருக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினியின் திரை ஆளுமைக்கு கிடைத்தது. அரசியல் நிலைப்பாடுகள் அதனை பாதிக்காது. இதனால்தான் பாபாவிற்கு பின்னால் ரஜினியால் மற்றுமொரு வெற்றியை பெற முடிந்தது.


தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற ஜனநாயக நிலைப்பாட்டை எடுக்க சொல்கிறீர்கள்( 49 ஓ). ஆனால் ரஜினி மற்றும் பொதுப்பிரச்சனைகளில் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன? தமிழ்நாட்டு மக்களை வைத்து சம்பாதித்ததால் அவர் கருத்து தெரிக்க வேண்டுமென்றால், ரிலையனஸும், டாடாவும் கூடத்தான் தமிழர்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஏன் நீங்கள் கேட்கவில்லை. எல்லாப் பொது விசயங்களிலும் ரஜினியை கருத்து தெரிவிக்க நிர்பந்தித்து அவரை அரசியல்வாதி ஆக்குவது உங்களை போன்ற பத்திரிக்கைகாரர்கள்தான். ரசிகர்களல்ல.


பிரகாச்ராஜ், அர்ஜுன் ஆகியோருக்கு பிரச்சனை வருவதில்லையாம். ரஜினியின் திரை ஆளுமையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லாத இந்நடிகர்களுடன் ஒப்பிடுவதிலிருந்தே உங்களது காழ்புணர்ச்சி புரிகிறது. இவர்களை போன்ற ஒரு சாதாரண நடிகனாக ரஜினியை மாற்ற வேண்டும் என்பதுதானே உங்கள் ஆசை.


ரஜினி படத்தின் ஆபாச காட்சிகளை பற்றிய உங்கள் விமர்சனம் சிரிப்பை வரவழைக்கிறது. நீங்கள் முன்பு எழுதிய விகடனிலும் சரி, தற்பொழுது எழுதும் குமுதத்திலும் சரி, இருக்கும் அரை/முக்கால் நிர்வாணப்படங்கள் உங்கள் கண்ணில் படவில்லையா? இத்தகைய பத்திரிக்கைகள் ஏற்படுத்தும் பாதிப்பை குறித்து உங்களுக்கு அக்கறை இல்லையா? நீங்கள் எழுதுவதை மட்டும் வைத்து பத்திரிக்கை விற்க முடியாது என்பதால்தானே இப்படங்களையும் பத்திரிக்கைள் வெளியிடுகின்றன.


நீங்கள் குசேலனை முழுவதும் போட்டுத் தாக்காமல் இருப்பதற்கு மறைமுகக் காரணங்கள் உண்டு. இப்படம் பிரமிட் சாய்மீராவால் விநியாகிக்கப் படுகிறது. தங்களுடைய ஒற்றைரீல் இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நிறுவனம் பிரமிட் என்ற காரணத்தால் மட்டுமே நீங்கள் படத்தை பாராட்டுவது போல் பாசாங்கு செய்துள்ளீர்கள்.


ரஜினி என்ற சக்தியின் வீழ்ச்சியை வேடிக்க பார்க்கும் ஆசை உங்களிடம் அதீதமாயிருக்கிறது. தங்களுக்கு தற்காலிக வெற்றியும், மகிழ்ச்சியும் கூட கிடைத்து விட்டதைப் போல் தோன்றலாம். ஆனால் அது மாயை.


ரஜினியின் வேலையை அறிவு ஜீவித்தனமான வாதங்களால் சிதைக்க வேண்டும் என்பதே உங்கள் முயற்சி. நீங்கள் வேண்டுமானால் மற்றவர் தொழில் நடத்துவதில் தவறு காணலாம்.. நாங்கள் அப்படியில்லை.


பாவம் நீங்கள்! உங்கள் தொழிலை நடத்துங்கள்!


M.Rajkumar

http://poetraj.blogspot.com

சீ விகடன்




விகடன் பத்திரிக்கையை பல வருடங்களாக படித்து வருகிறேன்..
தரம் என்பது படு கேவலமாக கொண்டு இருக்கிறது..

சென்ற வாரம் ரஜினியை விமர்சித்து வந்த கட்டுரை விகடனின் மோசமான தரத்தை காட்டுகிறது.

தினமலர், குமுதம் போன்ற பத்திரிக்கைகளை படிப்பதை நிறுத்தி வெகு நாட்காளாகி விட்டது. நக்கீரன் என்ற புத்தகத்தை படிப்பதே கிடையாது. இனி என் வாழ்நாளில் விகடன் என்ற பத்திரிக்கையை படிக்க போவதில்லை.

எனது on line subscription யை விலக போகிறேன். எனது subscriptionல் இன்னமும் மீதம் இருக்கும் தொகையை கொடுக்க சொல்லி கேட்டு இருக்கிறேன்..

சீ விகடன்

Saturday, August 9, 2008

எனக்கு நானே 09-08-2008

மாற்றங்கள் என்றும் மாறியும் தொடர்ந்தும் வரும்.
பெங்களூரை விட்டு ஒரு வாரம் வேரு இடத்துக்கு சென்று விட்டு வந்தால் நாம் சென்ற பாதைகள் எல்லாம் கிராபிக்ஸ் உபயம் இல்லாமல் புது உலகம் காட்டுகிறது

சிட்டி ரயில்வே ஸ்டேசனில் தினமும் நூற்றுகணக்கான வேற்று மாநில பைக்குகள் பெங்களூர் போக்குவரத்தோடு கலந்து விட இறக்கிவிட படுகின்றன.

BIAL ஏர்போர்ட்டில் தினமும் பல வேறு மாநில கார்கள் விமானத்தின் வயிற்று பகுதியில் இருந்து வழுக்கி வெளியே சென்று நான் ஊருக்கு புதுசு என்று சத்தமாக ஹாரன் அடித்து விட்டு செல்கின்றன

ம் பெங்களூர் எவ்வளவோ மாறி விட்டது..

பெங்களூர் வந்த புதுதில் ஏர்போர்ட் சாலையில் கெம்ப் போர்ட் தாண்டினால் சாலை இரு திசையிலும் pubகள் தான் வழி காட்டும்.. அந்த இடத்துக்கு தகுந்தவாறு அங்கே பலான படம் காட்டும் ஒரு பெயர் தெரியாத தியேட்டர் இருக்கும்..

தற்போது அந்த pubகளும் இல்லை கூடவே kempfortயும் இல்லை.. எல்லாம் சிவாஜியில் ரஜினி நடந்து வரும் போது கூடவே எழுந்து வரும் கட்டிடங்களாக ஆகி விட்டது....

வார விடுமுறைகளில் எனது காருக்கு ஓய்வு கொடுத்து விட்டு பைக்கில் பயணப்பது எனது வழக்கம் என்பதை விட பிடித்தமானது என்று கூட சொல்லாம்..

எனது பழைய சமுராயில் HAL தாண்டிய பின்னர் 80kms/hr குறையாமல் ஓட்டிய ஞாபங்கள்.. தற்பொது எனது apacheயில் 30 kms/hr தாண்ட முடியாமல் கியர் மாற்றி மாற்றி நொந்து நூடுல்சாகி பின் வழக்கம் போல கார்னர் கடை தேடி அலையும் போது பின்னர் தான் பின் மண்டையில் உறைத்தது

கார்னர் தம் கடை எல்லாம் மாறி அங்கு ஹை டெக் காபி ஷாப்பி விட்ட கதை..

நான் ரசித்த பெங்களூர் எங்கே போனது?? இதே பெங்களூர் தான் வேண்டும் என்று தானே அமெரிக்கா சிங்கப்பூர் முதல் மும்பை வரை வந்த வாய்ப்புகள் எல்லாம் வேண்டாம் என்று சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பி வந்தேன்..

சென்னையில் இருந்த காலத்தில் பெங்களூருக்கு ஒரு இண்டர்வியுகக்கு வரும் போது ஒரு ஆட்டோ டிரைவர் என்னிடம் சொன்னது

சார் இந்த ஊரு காந்தம் மாதிரி ஒரு முறை வந்துட்டா திரும்ப திரும்ப இழுக்கும்

உண்மை தான்..உதாரணம் நானே..

இன்னமும் மலிவான விலையில் கிடைக்கும் வடா சாம்பார், சாப்பாடு
என்னதான் பிரச்சனை என்றாலும் சன்னாகிதே என்று புன் முறுவலுடன் எதிர் கொள்ளும் அன்பான கன்னடர்கள்

மாலையில் வரும் மழை

ம் பெங்களூர் போல வேறுங்கும் வருமா??

Saturday, August 2, 2008

குசேலன்-பட விமர்சனம்

மைதா மாவு கமல் ரசிகர்களும் தமிழ் விரோதிகளும் தமிழ் வெறியர்களும் சத்யராஜ் போன்ற மனநிலை தவறியவர்களின் ஆதரவாளர்களும் இணையத்தில் குசேலன் படத்தின் நெகடிவ் செய்திகளை பரப்பி வருகிறார்கள். இந்த திட்டமிட்ட சதியை முறியடிக்க வேண்டியது ரஜினி ரசிகர்களின் கடமை.

எனது ஆங்கில இணையத்தின் பார்வையாளர்கள் அதிகம். எனவே குசேலன் தொடர்பான விமர்சனங்களை அங்கு தொகுத்து தருகிறேன்.. தமிழ் விமர்சனங்க்ள் வேண்டுபவர்கள் இந்த விமர்சனத்தை படிக்கவும்

எனது ஆங்கில தளம்

நன்றி தட்ஸ் தமிழ்
குசேலன்-பட விமர்சனம்


நடிப்பு- ரஜினிகாந்த், பசுபதி, வடிவேலு, மீனா, நயன்தாரா, லிவிங்ஸ்டன், பிரபு

ஒளிப்பதிவு-அரவிந்த் கிருஷ்ணா

இசை-ஜி.வி.பிரகாஷ் குமார்

திரைக்கதை, வசனம், இயக்கம் – பி.வாசு

தயாரிப்பு-ஜி.பி. விஜயகுமார், புஷ்பா கந்தசாமி

நல்ல சினிமா விரும்பிகளுக்காகவும் தன்னால் ஒரு படம் கொடுக்க முடியும் என சூப்பர்ஸ்டார் ரஜினி நிரூபித்திருக்கும் படம் குசேலன்.

ரஜினியின் தரமான படங்கள் எனப் பட்டியல் போடுபவர்கள் தாராளமாய் இந்தப் படத்துக்கு முதலிடம் கொடுக்கலாம்.

மலையாள ரீமேக்காக இருந்தாலும், குசேலனை தன் சிறந்த படமாகச் சொல்லி மார்த் தட்டிக் கொள்ளலாம் இயக்குநர் பி.வாசு.
இரண்டு நண்பர்களுக்கிடையிலான நட்புதான் இந்தக் கதையின் அடிநாதம்.

மறையூர் கிராமத்தில் ஒரு ஓட்டை சலூன் வைத்திருக்கும் நேர்மையான ஏழை பாலு (பசுபதி). அன்றாட பிழைப்புக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டாலும், காதல் மனைவி ஸ்ரீதேவி (மீனா) மற்றும் மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிக்கிறான்.

தனது பழைய சலூனைப் புதுப்பிக்க எங்கெங்கோ கடன் கேட்கிறார். அவனது நேர்மை யாருக்கும் அவனை லஞ்சம் கொடுக்க விடாமல் தடுக்கிறது. அதன் விளைவு எந்த அரசு வங்கியிலும் கடன் கொடுக்க மறுக்கிறார்கள்.

ஆனால் அவரிடம் உதவியாளராக இருந்த சலூன் சண்முகம் (வடிவேலு), நடைமுறையைப் புரிந்து தகிடுதத்தம் செய்து பெரிய நவீன சலூனைத் திறந்து ஏராளமாய் சம்பாதிக்கிறார்.

ஒருநாள் அந்த கிராமத்தின் இயல்பே தலைகீழாக மாறிப்போகிறது. காரணம் நாடே போற்றும் சூப்பர்ஸ்டார் அசோக்குமார் (ரஜினி) அந்த ஊருக்கு படப்பிடிப்புக்காக வருகிறார்.

இந்தப் படப்பிடிப்பால் கிராமத்திலுள்ள பலருக்கும் இதனால் வேலை கிடைக்கிறது. எல்லோர் கையிலும் பணம் புரள ஆரம்பிக்கிறது. அப்போதுதான் சலூன் பாலு, சூப்பர்ஸ்டார் அசோக்குமாரின் நெருங்கிய நண்பன் என்ற உண்மை கிராமத்தினர் மத்தியில் கசிகிறது. இதையடுத்து பாலுவை, ஊரே கொண்டாடத் துவங்குகிறது.

ஊரே சூப்பர்ஸ்டாரை தரிசிக்க அவரது கெஸ்ட் அவுஸ் முன் தவம் கிடக்கிறது. ஆனால், தன் பழைய நண்பன் தன்னை இன்னுமா ஞாபகம் வைத்திருக்கப் போகிறான் என்ற அவநம்பிக்கையில் அவரைப் பார்க்கப் போகாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் பாலு.

நிர்பந்தம் காரணமாக ஒருமுறை பார்க்கப் போக, அங்குள்ள கடும் காவல் அவரை மெளனமாய் திரும்ப வைக்கிறது.

ஷூட்டிங் முடிந்து அசோக்குமார் ஊரைவிட்டுக் கிளம்பும் கடைசிநாள் ஒரு பள்ளியின் விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவுக்கு நீண்ட தயக்கத்துக்குப் பின் மனைவியுடன் புறப்படுகிறார் பாலு.

அடுத்த சில நிமிடங்களில் யாருமே எதிர்பார்க்காத உணர்ச்சிப் பிரவாகமான காட்சிகள் அரங்கேற, விழா நடக்கும் பள்ளியே உருகி உறைந்து போகிறது. இரு நண்பர்களும் எப்படிச் சேர்ந்தார்கள் என்பது இறுதிக் காட்சி.

படத்தின் ஆரம்பத்தில் ரஜினியின் ஆவேச ரசிகர்களாய் உள்ளே நுழையும் அத்தனைபேரும் ஒருவித நெகிழ்வுடன் வெளியேறும் காட்சியை ரொம்ப நாளைக்குப் பிறகு குசேலனில் பார்க்கலாம்.

நல்ல படத்துக்கு உயரிய தொழில் நுட்பமோ, வெளிநாட்டு சூட்டிங்கோ, பஞ்ச் டயலாக்கோ, பஞ்சர் டயலாக்கோ, கோடிகளைக் கொட்டி செட் போடுவதோ தேவையே இல்லை என்பது இந்தப் படம் உணர்த்தும் முக்கியப் பாடம்.

குசேலனில் ரஜினி தோன்றுவது வெறும் 40 நிமிடங்கள்தான் இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தப் படத்திலும் அவரே நிறைந்திருப்பது போன்ற மேஜிக்கை நிகழ்த்தியிருப்பது கதை எழுதிய சீனிவாசன் மற்றும் இயக்கிய வாசுவின் தனித் திறமை.

அதிரடி, ரகளையான அறிமுகப் பாடல் கிடையாது. காற்றில் பறந்து பறந்து அடிக்கும் ஸ்டண்டுகள் கிடையாது. தனியான பஞ்ச் வசனங்களும் கிடையாது. வெளிநாட்டு லொக்கேஷன்களில் பாடல் காட்சிகள் கிடையாது. ஆனாலும் படத்தின் கதையால் விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் ரஜினி.

'மாதா, பிதா, குரு, நல்ல நண்பன், தெய்வம் – இதுதான் இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்லும் புதிய மந்திரம்' எனும் ரஜினி, தனது வாழ்க்கைக்கு விளக்கேற்றிய நண்பனைப் பற்றிச் சொல்லும் காட்சி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சரியான பாடம்.

கிளைமாக்ஸுக்கு முந்திய பள்ளி விழாவில் கலங்கிய விழிகளுடன் ரஜினி தன் நண்பனை நினைவு கூறும்போது கல்லும் கரையும்.

ரஜின் ஏன் இமயமலைக்குப் போகிறார்... அரசியலில் ஏன் அடிக்கடி குழப்புகிறார், சூப்பர் ஸ்டாராக இருந்து கொண்டே சந்நியாசி வாழ்க்கையை ஏன் வாழ்கிறார்? என்று கேள்வி-பதில் காட்சியும் படத்தில் உண்டு. ஆர்.சுந்தர்ராஜன் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு ரஜினியே அதற்கு பதில் சொல்கிறார்.

பசுபதி... இந்தப் பாத்திரத்துக்கென்றே வார்க்கப்பட்டவர் போல அப்படியொரு கச்சிதம். 'அந்தப் பெரிய நடிகர் வந்ததால என் தூக்கம் போச்சி, அந்த விளக்கை அணைச்சிடு... அதுவாவது நிம்மதியா தூங்கட்டும்', என்று அவர் மனைவியுடன் பேசும்போது தம்மை மறந்து கைதட்டுகிறார்கள் ரசிகர்கள்.

நயன்தாராவுக்கு ஒரு வேலையும் கிடையாது. இரு பாடல் காட்சிகளில் வந்து போகிறார். குறைந்த காட்சிகளில் மிகக் குறைந்த உடையுடன் வந்து தந்த வேலையை நிறைவு செய்கிறார்.

கதபறயும் போளில் செய்த அதே வேடம் தான் இதில் மீனாவுக்கு. திரும்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார் கண்ணழகி.

படத்தில் பின்னி எடுக்கும் இன்னொரு கேரக்டர் வடிவேலு. வாவ்... வடிவேலுக்குள் எத்தனை பெரிய, அரிய நகைச்சுவைக் கலைஞர்..? பிரமிக்க வைக்கிறார்.

வாசுவின் படத்துக்கே உரிய ஏராளமான நட்சத்திர பட்டாளம் இதிலும் உண்டு. பிரபு, லிவிங்ஸ்டன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, விஜயகுமார் என திரை நிறைய ஏகப்பட்ட பேர். அவரவர் பாத்திரங்களில் நச்சென்று நடித்திருக்கிறார்கள்.

ஆனாலும் படத்தில் மகா வெட்டியாக வந்து போவது 'சின்னதம்பி' பிரபு. ( சந்திரமுகி செண்டிமெண்ட் போல..)

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம். பிரகாஷ் குமாரின் இசையும் குறைசொல்லும்படி இல்லை. பேரின்பப் பேச்சுக்காரன்..., போக்கிரி ராஜா... பாடல்கள் அருமை.

நயன்தாரா தனியாகப் பாடும் அந்த மழைப் பாடல் படு செயற்கை.

குசேலன்- கதை தரத்தில் குபேரன்!