Wednesday, July 30, 2008

எனக்கு நானே - 30.07.2008குசேலன் பட பாடல்கள் அவ்வளவாக என் மனதில் பதியவில்லை.

பேரின்ப பேச்சுகாரன் பாடலை தவிர வேறு எந்த பாடலும் அடிக்கடி கேட்க தோன்றவில்லை.. ஜீ வி பிரகாழ் குமார் மிகவும் திறமையான இசை அமைப்பாளர்.. கண்டிப்பாக ஏமாற்ற மாட்டார் தான்.. திரைபடத்தில் எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்று பார்போம்..

**************

ஜேம்ஸ் வசந்தன்.. சன் டிவியின் ஆரம்ப ஏணிகளில் ஒருவர்.. அழகாக டிரிம் செய்ய பட்ட மீசையில் ஒழுங்கான தமிழ் பேசி பலர் மனதை கவர்ந்தவர்.. அவர் இசையில் கூட இப்படி அதிரடியாக வரவு கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை..


மின நீண்ட நாட்களுக்கு பின் பார்வைக்கும் செவிக்களுக்கும் நிறைவு அளிக்கும் ஒரு அழகான மெலோடி “கண்கள் இரண்டால்” பாடல்..

சுப்ரமணியபுரம் படத்தின் எந்த பாடலும் சோடை போகவில்லை...
பன் முக தன்மை கொண்ட அவரின் ஆக்கங்கள் தொடர என் வாழ்த்துக்கள்..நல்ல இசையை கொடுத்தற்க்கு என் நன்றிகள்

****************


ஏ ஆர் ரகுமான் நான் தமிழ் சினிமாவை விட்டு இன்னமும் போகவில்லை.. நான் இன்னமும் டாப் தான் என்று ஆணி தரமாக சொல்லி இருக்கும் படம் தான் “ சக்கரகட்டி”

படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமை.. ரகுமான் பல புதிய இசைகளை நம் செவிக்கு கொடுத்து இருக்கிறார்..

ரகுமான் பாடல்கள் இரு விதம்...

கேட்ட கணமே மிகவும் பிடித்து போகும்..பொதுவாக ரகுமான் + சங்கர் கூட்டணியில் வந்த பாடல்கள் இதில் சேரும்

சில முறை கேட்ட பின் அந்த இசையில் பிணைந்து இருக்கும் சில பல இசை அதிசயங்கள் தொடர்சியாக வெளி வர மழை காலத்தில் சிங்கள் டீ அடித்து கொண்டே மேலும் மேலும் ரசிக்க அந்த இசையின் பல புதிய பரிணாமங்களை தெரிந்து கொள்ள முடியும்... சக்கரகட்டி இந்த ரகம்..
********************

இரு முறை சத்யம் பாடலை கேட்டேன்... அவசர கதியில் ஸ்டோக் ஹோம் ஏர்போர்டிலும் அடுத்த முறை பெங்களூர் ஏர்போர்டில் இருந்து வீட்டிற்க்கு வரும் வரை,,,இன்னமும் சில முறை கேட்டால் தான் அது தொடர்பாக பேச முடியும் என்ற நிலை..
*************

Tuesday, July 29, 2008

எனக்கு நானே

இந்தியா வந்தாச்சு... இன்னமும் தூக்க கலக்கமும் பயண களைப்பும் கண்களில் மிச்சம் இருக்கிறது..

என்றும் அமைதியாக இருக்கும் பெங்களூரில் கூட குண்டு வெடிப்பு.. :(
வர வர குண்டு வெடிப்புகள் ஏதோ தீபாவளி பொங்கல் போல சடங்காகி விட்டது. உள்ளேன் அய்யா என்று குண்டு வெடிப்புகள் அவ்வப்போது ஆஜர் சொல்லி விட்டு செல்கின்றன. நாமும் என் டி டிவி முதல் லோக்கல் டிவி வரை அனைத்து இடங்களில் பத்து நாள் சலிக்க சலிக்க பேசி விட்டு பிறகு வழக்கம் போல மெகா சீரியலிலும் அல்லது ஆடி தள்ளுபடியிலும் மூழ்கி விடுகிறோம்..

இறந்தவர்களுக்கு நிவாரண உதவியும் கொடுத்து விட்டோம்..அதில் அரசாங்க அலுவல்கள் தேய்மான கரன்சி போக எத்துனை சதவீதம் பாதிக்கபட்டவர்களுக்கு கிடைக்கும் என்பது யாருக்கு தெரியும்...

குண்டு வெடிப்புகள் பருவ மழை போல காலம் தவறாமல் வருவதற்க்கு காரணம் நமது சமூக அமைப்பு தான்.. எவன் எக்கேடு கெட்டா என்ன நம்ம வேலை முடிய்துதா நமக்கு துட்டு வருதா என்ற நம் குணம் தான் குண்டு வெடிப்பு மட்டும் அல்ல நம் நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்.

மக்கள் தொகையை காரணம் காட்டி யாரும் பிரச்சனைகளை அடுத்தவர் மேல் சுமத்தி விட முடியாது....


பெங்களூரில் வெடிக்காத வெடிகுண்டோடு 24 மணி நேரம் வாழ்ந்த சரவணம் குடும்பத்தை பல முறை பார்த்து இருக்கிறேன்... அந்த கார்னர் டீ கடையில் தம் அடித்து விட்டு ஓசூர் ரோட்டில் காலாற நடந்து இருக்கிறேன்..

இங்கு எல்லாம் கூட குண்டு வைப்பார்களா??


*********************

கடைசியாக பார்த்த தமிழ் படம் சுப்ரமணியபுரம்....படத்தின் முதல் பாதி என் முதல் காதலை அப்படியே தொட்டு செல்வது போன்ற பிரமை.. அந்த ஹீரோயின் பேர் தெரியவில்லை.. அவள் பார்வைகளை மிக மிக அருமையாக பதிவு செய்த அந்த கேமராவிற்க்கு ஒரு வந்தனம்.. ஆனால் கழுத்தை அருப்பதை எல்லாம் இப்படி பதிவு செய்து இருக்க வேண்டாம்..

*****************

Monday, July 28, 2008

தீதும் நன்றும்! - நாஞ்சில் நாடன்

150 ஆண்டுகளுக்கு முன்பு கூவம் அழகானதோர் நதி என்பதும், அதிகாலையில் கல்விச் செம்மல் பச்சையப்ப முதலியார் அந்த நதியில் நீராடி, கந்தகோட்டத்தில் தொழுது வீட்டுக்குப் போனார் என்றும் பதிவு உள்ளது எனச் சொன்னால் உங்களால் நம்பக்கூடுமா?

கோவையில் நொய்யல் ஆற்றங்கரை நாகரிகம் எனச் சாற்றிக்கொண்டு பழைமையான ஊர்கள் பல இருந்திருக்கின்றன. பேரூர், வெள்ளலூர் என்பன சான்றுகள் இன்றும். இன்று நொய்யல், ஆறு அல்ல. இருமருங்கிலும் புதரும் முட்செடிகளும் அடைந்து குப்பைக்கூளங்கள், கழிவுகள் மண்டி, நடுவே சாக்கடையாகச் சற்றே தண்ணீர் ஓடுகிறது. கோவையில் சமீபகாலத்தில் தோன்றித் தழைக்கும் 'சிறு துளி' எனும் அமைப்பு, நொய்யலை கோவையின் தாய் எனக் கருதி, அதை மீட்டெடுக்கும் முயற்சியில் அரும்பாடுபடுகிறது. அவர்கள் திக்குக்கு முதல் வணக்கம்!

1968ல் பி.எஸ்சி., கணிதம் படித்து, எஸ்.எஸ்.எல்.சி., தரத்தில் அரசு உதவியாளர் வேலைக்கு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதிய நடைமுறைச் சாமர்த்தியமில்லாத முட்டாள் நான். அன்று தெரியாமற்போனது அரசு வேலைக்குப் படிப்பும் அறிவும் முக்கியத் தகுதிகள் அல்ல என்பது. அப்போது என்னுடன் பதினொன்று வரை படித்துவிட்டு, மோட்டார் கம்பெனி ஒன்றில் உதவியாளனாக என் நண்பன் பாளையங்கோட்டைப் பணிமனையில் தங்கி இருந்தான். அவனுடன் எனக்குச் சில நாட்கள் வாசம். குளிப்பதற்கு முருகன் குறிச்சி கால்வாய்க்கு கூட்டிக்கொண்டு போனான். தாமிரபரணியின் கிளை அது. திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரம் சாலையில் பாளையங்கோட்டை நுழைவு எல்லையில் இடது பக்கம் தூத்துக்குடி, திருச்செந்தூர் திரும்பும் முனையில் அவ்வோடையை இன்றும் நீங்கள் நேர்காணலாம். அன்று அந்த ஓடைத் தண்ணீரை, தண்ணீருக்கு நிறம் இல்லை, மணம் இல்லை, குணம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொல்லலாம். என்னவெல்லாம் உவமை சொன்னோம் அன்று ஆற்று நீருக்கு. பளிங்கு, பாதரசம், கண்ணாடி, பன்னீர், இளநீர், பதநீர், மணி நீர் என்றெல்லாம். இன்று நினைத்துப் பார்த்தால் தோலெல்லாம் உரிய அரிப்பெடுக்கிறது. திருநெல்வேலிக்காரருக்கும் திருநெல்வேலி தாண்டும் கன்னியாகுமரிக்காரருக்கும் தெரியும், அந்த ஓடை இன்று சாக்கடை என்று. இதுபோல் எத்தனையோ!


இதை நாம் திருத்தி எடுக்க முடியாதா? நமக்கு மனதில்லையா? மார்க்கமில்லையா? அண்ணாச்சி நெல்லை கண்ணன் பல முறை சொன்னது நினைவில் உண்டு. தாமிரபரணியின் கிளை ஒன்று அருள்மிகு காந்திமதி அம்மன் சந்நிதி முன்னால் ஓடியது என்றும் வண்ணநிலவன் எழுதிய கம்பா நதி அதிலிருந்து திருமஞ்சன நீர் கோரிக்கொண்டார்கள் என்றும். இன்று அம்மனுக்குத் துணிவு இருக்கிறதா, நகரைச் சுற்றி ஓடும் கிளைகளிலிருந்து நீரெடுத்து நீராட?

பத்த கோடிப் பேரினத்துக்குத் தெரியவில்லையா, சமூக தர்மகர்த்தாக்களுக்குத் தெரியாதா, இந்து அறநிலையத் துறை அதிகாரங்களுக்குத் தெரியாதா, அரசுக்கே அறிதுயிலா, ஆழ்ந்த துயிலா? அல்லது எல்லாம் தெரிந்தும் அலட்சியமா? அல்லது எந்தக் காலத்திலும் வாய் திறந்து ஒரு சொல் பேசி இராத அம்மனுக்கு, சாக்கடையே அதிகமான உபசரிப்புதான் என்பதா?

கன்னியாகுமரிக்கு சூரிய உதயம் காணச் செல்லும், இந்தியா பூராவிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் முகம்சுளித்து நாசி பொத்துகிறார்கள். அதிகாலையில் வரிசையாக அமர்ந்து கடலலைகளை ரசித்தபடியும் பீடி புகைத்தபடியும் மலம் கழிப்பவர் பந்தி பந்தியாகக் குந்தி இருப்பது கண்டு. பாசிக் கடை, ஊசிக் கடை, சங்குக் கடை, பொம்மைக் கடை, தொப்பிக் கடை, வளையல் கடை, பழக் கடை, சர்பத் கடை, தின்பண்டம் விற்றுத் தீராத நோய் வழங்கித் திரிபவர் கடை என ஏகப்பட்டவை கடற்கரையோரம். கடையினுள்ளே சமைத்து, உண்டு, உறங்கி வாழும் ஐந்நூற்றுக்கும் குறைவில்லாத உரிமையாளர், சேவகர், சிப்பந்தி காலைக்கடன் முடிக்க அலையடிக்கும் கடற்கரை.

உலகின் எவ்வுயிரும் சூரியனை வணங்குகிறது. சூரிய உதயத்தில் நூற்றுக்கணக்கானோர் கடற்கரையில் மலங்கழிப்பதைச் சூரிய நமஸ்காரத்தின் ஒரு பகுதிதான் என்றும் 'ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்!' என்ற கொண்டாட்டத்தின் கூறுதான் என்றும் கொள்ளலாமா? கன்னியாகுமரிக்கு மற்றுமோர் இழிவும் உண்டு. கார்த்திகை, மார்கழி மாதங்களில் விரதம் இருந்து, இருமுடி கட்டி, கறுப்போ, நீலமோ உடுத்தி, தாடி வளர்த்து, சரண கோஷம் விளித்து சபரிமலைக்குப் போகும் அல்லது போய்த் திரும்பும் தமிழ்நாட்டு, கன்னடத்து, ஆந்திரத்து ஐயப்பன்மார் தினந்தோறும் மன்னிக்கவும் திரும்பவும் சொல்கிறேன், தினந்தோறும் 60 நாட்களுக்கும் தொடர்ச்சியாக சிற்றுந்துகளிலும் பேருந்துகளிலும் மகிழ்வுந்துகளிலும் அடைந்துகொண்டு கன்னியாகுமரி வருவார்கள். அதிகாலையில் வந்து சேர்வோர், நடுப்பகலில் வருவோர், முன்னிரவில் வருவோர் யாவர்க்கும் திறந்தவெளிக் கழிப்பறை, இயற்கை அற்புதமாய் அமைந்திருக்கும் கடற்கரை. நாட்டில் இளக்காரமான வழக்கொன்று உண்டு, ஐயப்பன்மார் கழிப்பதை, பூச்சாமி என்று. உள்ளூர்வாசிகள் எக்காரணம் கொண்டும் கடற்கரைக்குப் போவதில்லை. தை மாதத்துப் பெருமழை அடித்து அனைத்தையும் கழுவிக் கடலில் சேர்ப்பது வரைக்கும்.

அந்தப் பருவ காலங்களில் காலடி வைக்கக் கூசும் மற்றோர் இடம் குற்றாலம். சமீபத்தில் ராமேஸ்வரம் வந்து திரும்பிய மார்வாரி ஒருவரைச் சந்தித்தேன். கொல்கத்தாக்காரர். இந்துக்களின் புண்ணிய தீர்த்தங்களான துவாரகை, காசி, பூரி, ராமேஸ்வரம் ஆடுவோர், தெற்கே வந்தால் 50 அடி தூரத்தில் சாக்கடை பாய்வதைப் பார்த்துக் குமட்டாமல் நீராட இயலாது என. மேலும், தமிழர்களின் சுத்தம் பற்றி அவர் சொன்ன இன்னொரு வார்த்தை அச்சிடத் தரமன்று. எனக்கு எங்குகொண்டு முகத்தைப் புதைத்துக்கொள்வது என்று தெரியவில்லை.

கன்னியாகுமரி என்றில்லை. திருச்செந்தூர், பூம்புகார் எங்கும் இதே நிலைதான். சபரிமலை சீஸனில் மலையாளி எவரும் பம்பா நதியில் நீராடுவதில்லை. படித்துறையில் கால்வைத்தால் மலம் பொங்கிவரும் அச்சத்தில்.

'தூற முட்டும்போது உட்கார இடம் தேடுபவன்' எனும் பொருளில் மலையாளத்தில் ஒரு பழஞ்சொல் உண்டு. அது மனிதப் பண்பென்று கொண்டாலும் சுற்றுலாப் பயணிகளும் மக்கள் கூட்டமும் புழங்கும் இடத்தில் வாகாகவும் சுத்தமாகவும் போதுமான அளவிலும் கழிப்பிடங்கள் கட்டிப் பராமரிக்க நமக்குத் துப்பில்லையா? நமது பேருந்து நிலையங்களில் சிறுநீர் கழிக்க ஒரு கிலோ அரிசி தர வேண்டியதுள்ளது.

நீங்கள் கேட்பதும் எனது காதுகளில் ஒலிக்கிறது! அரசாங்கம் என்ன தூற முட்டிய ஒவ்வொரு மனிதனின் பின்னாலும் பிரம்பெடுத்தோ அல்லது வாளியும் துடைப்பமுமாகவோ நடக்க முடியுமா என்று!

எனது மறுவினா, இது ஏன் கேரளத்துக் கடற்கரைகளில் நடப்பதில்லை என! திருவனந்தபுரத்துச் சங்குமுகம், கோவளம், குருவாயூரை அடுத்துள்ள சாவக்காடு, கொல்லம், வடகரை, மய்யழி, தலச்சேரி, கோழிக்கோடு, கண்ணனூர் கடற்கரைக்குப் போகும் மக்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்குத் தூற முட்டுவதில்லையா?

மலையாள சினிமா காட்சி ஒன்று... மரத்து மூட்டில் மறைந்து நின்று ஒருவன் ஒன்றுக்குப் போவான். அவன் திரும்பி வந்து தமிழில் டயலாக் பேசுவான். மறைமுகமாக அவர்கள் சொல்ல வருவதென்ன? ஏகவெளியில், மரத்து மூட்டில், மக்கள் நடமாடும்போது மூத்திரம் பெய்பவன் தமிழனாகவே இருப்பான் என்பதல்லவா?

நாம் சாயாக் கடை நாயரைப் பரிகசித்துக்கொண்டு இருக்கிறோம்.

சில ஆண்டுகள் முன்பு, மலையாள சேனல் ஒன்றில் நகைச்சுவைத் தொடர் ஒன்று. மலையாளத்தில் 'சூல்' எனில் விளக்குமாறு என்று பொருள். வரிசையாகப் பாடிக்கொண்டு வந்தார்கள், யார் யாரை விளக்குமாற்றால் புடைக்க வேண்டும் என்று. அதில் ஒரு வரி, 'விர்த்தி கெட்ட தமிழனுக்கு சூல்' என்பது. 'விர்த்தி' எனில் சுத்தம் என்று பொருள்.

எங்கு போயும் எத்தொழில் செய்தும் பிழைப்பது பாவமல்ல, குற்றமல்ல, அவமானமல்ல, இழிவும் அல்ல. ஆனால், நமக்கு சாயா கடை நாயர் கேலிப்பொருள், புரோகிதம் செய்து வயிற்றுத் தீ குளிர்விப்பான் கேலிப்பொருள், 'நம்பள்கி, நிம்பள்கி' என்று வடநாட்டு சேட்டு கேலிப்பொருள்.

கேரளத்தில் இன்றும் சாலையோரம் குழி தோண்டுகிறவர், கட்டுமானத் தொழிலாளர், குப்பை பொறுக்குகிறவர் ஆணும் பெண்ணுமாகத் தமிழர். ஒரு நாள் பயணத்தில் தாராளமாக இதை நீங்கள் கண்டுகொள்ள முடியும். பிச்சை எடுப்போரும் திருடுபவரும் தமிழரே என்றும் அவப் பெயர் உண்டு.

பரத்சந்திரன் I.P.S என்று சுரேஷ் கோபி நடித்த படம் ஒன்று. அதில் ஒரு கீழ்மட்ட போலீஸ் அதிகாரி உயர் அதிகாரியிடம், கொலைபட்ட பிணத்தை முதலில் யார் பார்த்தது எனும் கேள்விக்கு வரும் பதில் 'வேஸ்ட் பெறக்கான் வந்த தமிழன்மாராணு ஆத்யம் கண்டது' என்பது.

கவனியுங்கள், குப்பை பொறுக்க வந்தவன் முதலில் கண்டான் என்று அல்ல. குப்பை பொறுக்க வந்த தமிழன் என்று.

மும்பையில் சாராயம் வாற்றுபவன், வாற்றிய சாராயத்தை நகரெங்கும் விநியோகம் செய்பவன், பிச்சை எடுக்கிறவன், தொழுநோயாளிகள் இவர்களில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் உண்டு என்று சொன்னால் எங்காவது நமக்கு ஏதாவது இடிக்கிறதா?

புலியை முறத்தால் அடித்து
விரட்டியதும், தேர்க்காலில் சொந்த
மகனை முற்றிக்கொன்றதுவும்,
புறமுதுகில் வேல்வாங்கிய மகனுக்குப்
பாலூட்டிய முலைகளை அறுத்து
எறிந்ததுவும், உதித்து எழுந்து உயர்ந்து
வரும் சூரியனை நில்லென்று சொல்லி
நிறுத்தியதுவும், பெய் என்றால்
பத்தினிக்கு மழை பெய்ததுவும், கல்
தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளுடன் முன் தோன்றி வந்ததுவும்,
கனகவிசயர் தலையில் கல்லேற்றிக்
கண்ணகிக்குச் சிலை வடித்ததுவும்,
கடைசியில் பக்கத்து நாட்டில் குப்பை
பொறுக்கத்தானா?

தமிழ் மானம், தமிழ் வீரம், தமிழ் விருந்து உபசாரம், தமிழ்ப் பண்பு, தமிழ்த் தாலி அறுப்பு என்பதெல்லாம் மேடை தோறும் கவிதையிலும், சினிமாவிலும், அரசியல் அறைகூவல்களிலும் அடைந்துகிடக்கும் வெற்று ஒலிக் குப்பைகளா?

விதியே தமிழ்ச் சாதியை என் செயப் படைத்தாய்?


நன்றி விகடன்

Sunday, July 27, 2008

எனக்கு நானே :)

சென்ற வாரம் எனது அக்கா வீட்டிற்க்கு தொலைபேசிய போது அழுவாத குறை தான். ஹைதராபாத்தில் தினமும் 6 மணி நேரம் மின் தொடர்பு கிடையாது. கண்டிப்பான மின்வெட்டு தலைநகரத்தில் இருக்கும் போது மற்ற இடஙளின் கதி இதை விட படு மோசமாக இருக்கும். எனது 10 வயதுஅக்கா பையன் என்னிடம் கேட்ட கேள்வி..” மாமா அதான் நீக்கிளியர் ஒப்பந்தம் வந்தா எங்களுக்கு கரண்ட் கட் வராதா”??

இப்படி தான் நாட்டில் பல பேர் சிந்திக்கின்றனர்...
இந்த ஒப்பந்தம் இனி வரபோகும் நாட்களில் மின்சார தட்டுபாட்டை பெருமளவில் குறைக்க உதவும் திட்டமே !!

நம் நாட்டின் பெரும்பாலான மின் சக்தி அனல் மின்சாரத்தின் மூலம் கிடைக்கிறது. நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கபடும் அனல் சக்தியே மின்சாரமாக மாற்றபடுகிறது. இதுவே பெரும்பாலான நமது மின்சார தேவையை பூர்த்தி செய்கிறது.

அதை தொடர்ந்து அணுக்களை பிளப்பதாலும் நீர் மின் நிலையங்களும் தான் ..

இந்த வருடம் பருவ மழை பொய்த்தால் நீர் மின் நிலையங்களுக்கு ஒய்வு அதை தொடர்ந்து அதனால் ஏற்பட்ட பற்றாகுறை.. பருவ காற்றின் போக்கு மாறியதால் காற்றாலை மின்சாரமும் எதிர்பார்க்கபட்ட அளவு தயாரிக்க முடியவில்லை..

அனு மின் நிலையங்களுக்கு யுரேனியம் பற்றாகுறை..ஏற்கனவே எரிபொருள் பற்றாகுறையால் கல்பாக்கத்தில் இரு உலைகள் செய்லபடாமல் இருப்பதாக படித்தேன். நேரம் கிடைத்தால் இந்த திட்டம் தொடர்பாக நிறைய எழுத வேண்டும் என்றே நினைக்கிறேன் ..

நீர் மின் நிலையஙளும் காற்றாலை மின்சாரமும் சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மிகவும் குறைவான செலவில் தயாரிக்கபடுகின்றன.. ஆனால் இது பருவ நிலையை ஒட்டியே ஆக்கமும் இருக்கும்.

சூரிய ஒளியை பயன்படித்தி எடுக்கபடும் மின்சாரம் இன்னமும் மக்கள் பயன்பாட்ட்க்கு வரவில்லை.. அதன் மூலம் எடுக்கபடும் மின்சாரம் விலை அதிகமாக தற்போது இருக்கிறது.. அதிக பயன்பாட்டு பின் அதிக இடங்களில் தொடர்சியான அதிக அளவிலான தயாரிப்பின் மூலம் சூரிய மின் சக்தியை மிக குறைந்த விலைக்கு கொண்டு வரலாம். ஆனால் அதற்க்கு போகும் தூரம் மிக அதிகம்..இது வரை இந்திய அரசின் சார்பில் எந்த நிறுவனமும் சூரிய மின்சாரத்துக்கு அதிகமாக பணம் செலவழிக்கவில்லை.. எல் & டி நிறுவனமும் பின் ஆதித்யா பிர்லா நிறுவனமும் தற்போது பெரும் அளவில் இதில் முதலீடு செய்து வருகின்றன.. வருங்காலம் சூரிய சக்திக்கான ஆண்டுகளாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை..

சூரிய ஒளியே என்றும் நிரந்தரம்..

**************

மன்மோகன் அரசு தப்பி பிழைத்தது மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது. குதிரை பேரம் 400 கோடி 500 கோடி என்று எல்லாம் படிக்கும் போது நகைசுவையாக இருந்தது.. 8000 கோடி செலவில் தேர்தல் என்று நடத்தும் செலவிற்க்கு இது எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது

மன்மோகன் சிங் தற்போதைய செயலை பார்த்தால் பாட்சா ஞாபகம் வருகிறது.. மாணிக்கமாக இருந்த இவர் தற்போது பாட்சாவாக மாறி இருப்பது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

இவரை போன்ற ஒரு பிரதம மந்திரியை இந்திய நாட்டில் இது வரை கண்டது இல்லை. இந்தியா ஒரு மூண்றாம் தரமக்கள் வாழும் நாடு என்ற மற்ற தேசங்களின் பார்வையை இவர் தன் ஆட்சியின் சில வருடங்களில் மாற்றி விட்டார்.. இவரை சூப்பர் மேன் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை..

இவர் ஆட்சியில் த்வறுகள் இருக்கலாம்.. ஆனால் தவறுகள் ஏதும் இல்லாமல் வாழ்க்கையில் சுவராசியமே இருக்காது..

இந்த நம்பிக்கை ஓட்டு எடுப்பில் என்னை கவர்ந்தவர்கள் மற்ற இருவர்

ஒருவர்
கலைஞர் மற்றவர் லாலு

பொதுவாக இதை போல ஓட்டு எடுப்புகள் தான் அரசியல்வாதிகளின் வாழ்க்கான ஜாக்பாட்.. இந்த இருவரும் எந்த வித பேரங்களும் செவி கொடுக்காமல் எந்த பேரங்களில் ஈடுபடாமல் ஆட்சியை காப்பாற்றி கொடுத்தார்கள்.

லாலு கூட பாரளுமன்ற கூட்டத்தில் வழக்கம் போல பேசி விட்டு சென்றார்.. ஆனால் கலைஞர் இன்று வரை அடக்கம் காப்பது பெருமைகுரியது..

அன்றே இந்திரா சொன்னார்

எதிர்பதாலும் ஆதரிப்பதாலும் கலைஞர் போல உறுதியாக எவரையும் காண இயலாது

உண்மைதான்.. ..

***********

வர வர ஞானி எழுத்துகளை படித்தால் என்ன இந்த மனுசன் இப்படி சின்ன புள்ள தனமா இருக்காருன்னு தான் தோனுது..

அவரிடன் எந்த சரக்கும் இல்லை.. சும்மா வார வாரம் கலைஞர் அப்துல் கலாம்ன்னு சகட்டு மேனிக்கு குறை சொல்வதை விட இவர் பெரிசா ஓ போட்ட மாதிரி தெரியலை..

இவருக்கு பரபரப்பு ஆசை பெரிய ஆளுங்களை தாக்கினா விளபரம் கிடைக்கும் என்ற ஆசை தான் நிலவுது என்பது என் எண்ணம்..

அப்துல் கலாம் போன்ற ஆட்களை எல்லாம் இவர் தாக்கும் போது அய்யோ சாமி இப்படி காசு கொடுத்து மன உளைச்சலை வாங்கி கொள்ள வேண்டுமா என்று தான் தோன்றுகிறது.. ஒரே வித்யாசம் அன்று விகடன் இன்று குமுதம்..

அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்த வீட்டிற்க்கு ஒரு முறை சென்று இருக்கிறேன்.. ராமேஸ்வரம்.. தெரு கவுன்சலிராக ஆனாலெ இன்று பந்தா விடும் ஆட்களுக்கு மத்தியில் இன்று வரை பழைய அதே தார் ஓடு போட்ட வீட்டில் இருக்கும் அவர்களின் உறவினர்களையும் ... தனக்காக எந்த வித சொத்தும் இல்லாமால் ஏன் குடும்பம் கூட இல்லாமல் நாட்டிறாக உழைக்கும் அப்துல் கலாமை விமர்சிப்பவர்களை ஏன் பொடா தடாவில் போட கூடாது??

**************

Monday, July 14, 2008

எதுவும் தொடர்பில்லாமல்
விரும்பியோ விரும்பாமலோ இன்னும் சில மாதங்களுக்கு தனிமை என்னுடன் கூடவே தலைக்கு மேல் ஆணி அடித்து தங்க போகிறது

காலை 8 மணி முதல் மாலை 4 மணி நேரம் வரை பின்பு??

இணையத்தில் சிறிது நேரம் ஆழமில்லாத தேடல்.. இரவு ஒரு மணி வரை சூரிய வெளிச்சம் மாநாடு நடத்துகிறது. தொலைகாட்சியில் புரியாத மொழிகளில் தெரியாத தொடர்கள்.

பெங்களூரில் லாண்ட் மார்க்கிலும் திருச்சி பர்மா பஜாரிலும் அவ்வபோது தேடி வாங்கிய டிவிடிகளே தற்போது துணை..

ஏற்கனவே பார்த்த படங்கள் தான்.. ஆனால் சில வருடங்களுக்கு பின்னர் அந்த திரைபடங்களை பார்க்கும் போது ஏதோ புது வித புரிதல்கள் செய்திகள்..

அந்த வரிசையில்

ஆட்டோ கிராப்
7ஜி ரெயின்போ காலனி
அலைபாயுதே
சாமி
கஜினி படங்களை சென்ற வாரம் ஒரே மூச்சில் பார்த்து முடித்தேன்..

அதன் விமர்சனங்களை எழுதுகிறேன்.. வேற என்ன செய்வது.. :)

Tuesday, July 1, 2008

ஜங்கிள் புக் மோக்ளி

80 களில் துர்தர்சனில் வந்த மோக்ளி ஜங்கிள் புக் பாடல் ..


yeah i miss a lot :(