Tuesday, July 29, 2008

எனக்கு நானே

இந்தியா வந்தாச்சு... இன்னமும் தூக்க கலக்கமும் பயண களைப்பும் கண்களில் மிச்சம் இருக்கிறது..

என்றும் அமைதியாக இருக்கும் பெங்களூரில் கூட குண்டு வெடிப்பு.. :(
வர வர குண்டு வெடிப்புகள் ஏதோ தீபாவளி பொங்கல் போல சடங்காகி விட்டது. உள்ளேன் அய்யா என்று குண்டு வெடிப்புகள் அவ்வப்போது ஆஜர் சொல்லி விட்டு செல்கின்றன. நாமும் என் டி டிவி முதல் லோக்கல் டிவி வரை அனைத்து இடங்களில் பத்து நாள் சலிக்க சலிக்க பேசி விட்டு பிறகு வழக்கம் போல மெகா சீரியலிலும் அல்லது ஆடி தள்ளுபடியிலும் மூழ்கி விடுகிறோம்..

இறந்தவர்களுக்கு நிவாரண உதவியும் கொடுத்து விட்டோம்..அதில் அரசாங்க அலுவல்கள் தேய்மான கரன்சி போக எத்துனை சதவீதம் பாதிக்கபட்டவர்களுக்கு கிடைக்கும் என்பது யாருக்கு தெரியும்...

குண்டு வெடிப்புகள் பருவ மழை போல காலம் தவறாமல் வருவதற்க்கு காரணம் நமது சமூக அமைப்பு தான்.. எவன் எக்கேடு கெட்டா என்ன நம்ம வேலை முடிய்துதா நமக்கு துட்டு வருதா என்ற நம் குணம் தான் குண்டு வெடிப்பு மட்டும் அல்ல நம் நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்.

மக்கள் தொகையை காரணம் காட்டி யாரும் பிரச்சனைகளை அடுத்தவர் மேல் சுமத்தி விட முடியாது....


பெங்களூரில் வெடிக்காத வெடிகுண்டோடு 24 மணி நேரம் வாழ்ந்த சரவணம் குடும்பத்தை பல முறை பார்த்து இருக்கிறேன்... அந்த கார்னர் டீ கடையில் தம் அடித்து விட்டு ஓசூர் ரோட்டில் காலாற நடந்து இருக்கிறேன்..

இங்கு எல்லாம் கூட குண்டு வைப்பார்களா??


*********************

கடைசியாக பார்த்த தமிழ் படம் சுப்ரமணியபுரம்....படத்தின் முதல் பாதி என் முதல் காதலை அப்படியே தொட்டு செல்வது போன்ற பிரமை.. அந்த ஹீரோயின் பேர் தெரியவில்லை.. அவள் பார்வைகளை மிக மிக அருமையாக பதிவு செய்த அந்த கேமராவிற்க்கு ஒரு வந்தனம்.. ஆனால் கழுத்தை அருப்பதை எல்லாம் இப்படி பதிவு செய்து இருக்க வேண்டாம்..

*****************

No comments: