Saturday, December 13, 2008

விழிப்பது எப்போது?? - 49 ஓ

தோழி வித்யா அவர்கள் 49’ஓ தொடர்பாக என்னையும் எழுத சொல்லி இருக்காங்க.


என் மனதிலும் அடிக்கடி தோன்றி விட்டு போகும் 49 ஓ தொடர்பாக என்னையும் எழுத சொன்னதற்க்கு நன்றி .


வெளிபடையாக சொன்னால் எனக்கு தற்போது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஓட்டுரிமை கிடையாது.

சென்னை மும்பை தில்லி சிங்கப்பூர் அமெரிக்கா என்று சுற்றி விட்டு தற்போது பெங்களூரில் இளைபாறுகிறேன். சொந்த ஊரிலும் என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. என் வாழ்க்கையில் இரு முறை ஓட்டு போட்டு இருக்கிறேன். அதுவும் சொந்த ஊரில் இருந்த போது..சென்ற முறை கர்நாடாக மாநில சட்டசபை தேர்தலில் போது தான் ஓட்டு போடாம தேர்தல் விடுமுறை போது ஊர் சுற்றி கொண்டு இருந்த போது ஏதோ மண்டையில் உறைச்சது.

வாக்காளர் பட்டியலில் எப்படி என் பெயரை சேர்ப்பது எப்படி..
கன்னடா சரளமாக மாத்தாட கொத்தில்லா..

எல்லா அரசு அலவலங்களிலும் சரள இலக்கண சுத்தமான கன்னடா பேசி கூடவே விண்ணப்பம் எல்லாம் ’ஏணு பரத்திதே’ன்னு புரியாம U turn அடிப்பதே வாடிக்கையாக போச்சு.


யாரோ ஒரு புண்ணியவான் ராகு காலம் எம கண்டம் பார்க்காம ஓபிஸில் வாங்கும் சம்பளத்துக்கு ஓவர் டைம்மாக அட்டாச்மெண்ட் மெயில் படிக்கும் போது தெரிந்து கொண்டது இந்த இயகக்தை பற்றி http://jaagore.com/..

டாடா நிறுவனம் இணையம் வழியாக வாக்காளர் பட்டியலில் நம் பெயரை சேர்க்க தோளோடு தோள் சேர்க்க உதவி செய்கிறது. இதன் வழியாக எனக்கும் வாக்காளர் அட்டையும் கிடைச்சாச்சு :)


இப்ப 49 ஓ தொடர்பாக எனக்கு இப்படி ஒரு மேட்டர் இருக்குன்னு தெரிந்ததே ஞானியின் ஓ பக்கங்கள் வழியாக.

வழக்கமாக தேர்தல் வரும் காலங்களில் ம க இ க போன்ற சுவற்றில் கரியால் கிறுக்கும் புனிதர்களும் + இன்னபிற கூடவே ஞானி போன்ற வேதாந்திகளும் சொல்லும் தேர்தல் புறக்கணிப்பின் மற்றும் ஒரு பிரகாசமான முகம் தான் இந்த 49 ஓ49 ஓ என்னதான் சொல்கிறது?


எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை
எல்லாரும் ப்ராடு எல்லாரும் ஊழல் அதனால நான் ஓட்டு போட விருப்பம் இல்லை என்று சொல்லும் ஒரு அரசாங்க படிவம் தான் 49 ஓ

சரி இப்படி எல்லாரும் 49ஓ எழுதி கொடுத்தா என்ன ஆகும்?


தற்போது இருக்கும் நிலையில் நாட்டில் வசிக்கும் சில பேரை தவிர்த்து பல பேருக்கு இந்த 49ஓ மேட்டரே தெரியாது. தெரிந்த சில பேரும் ஓட்டு போட போவார்களா என்பது சந்தேகமே.

அப்படியே நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டு ஏழை பாட்டாளி சாதி சங்கங்கள் அனைத்து கட்சி தொண்டர்கள் பிரியாணி சாப்பிட்டு வாழ்க ஓழிக கோசம் போடுபவர்கள் என்று சமூகத்தின் அனைத்து முகங்களும் ஒருகிணைத்து 49 ஓ கொடுத்தாலும் இன்றைய சட்டத்தின் படி தேர்தல் ஒத்திவைக்கபட்டு மறு தேர்தல் நடை பெறும். அப்பவும் அதே கட்சி அதே கொள்கை (?) அதே கோட்பாடு அதே வாக்குறுதி அதே இலவசங்கள் எல்லாம் அதே அதே ....

அப்ப 49ஓ வைச்சு என்ன தான் செய்வது?

நமக்கு தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. கூடவே தேர்தல் அன்று நாம் வீட்டுல் சும்மா கார்டூன் நெட்வோர்க் பார்த்தாலும் தப்பு.. அதான் ஓட்டு போடுவது போலவும் அதே நேரத்தில் இந்திய அரசின் தேர்தலை புறக்கணிப்பதையும் ஒருங்கே செய்வதே இந்த 49 ஓ

அப்ப யாருக்கு தான் லாபம்?


வேற யாருக்கு இந்தியாவில் எப்பதான் குழப்பம் வரும்.. எப்படி இந்தியாவின் கட்டமைப்பை இந்தியாவின் ஜனநாயகத்தை சீர் குலைக்கலாம் என்று எப்போதும் நூடுல்ஸ் பாம்பு கறி சாப்பிட்டு யோசித்து கொண்டே இருக்கும் சீனா போன்ற சர்வாதிகார கம்யூணிஸ்ட்களுக்கு தான்.


அவங்களுக்கு பிரச்சாரம் செய்வதே இந்த ஞானி போன்ற ஆட்களும் கூடவே மக்கள் கலை இலக்கிய கழகம் போன்ற இயக்கங்களும்.

மக்கள் ஆதரவு இல்லாத மக்களுக்கு நண்மை செய்யாத எந்த வித கொள்கையும் என்ன தான் பிரசாரம் செய்தாலும் எடுபடாது.

உண்மைதான் தற்போதைய இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் ஊழல் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. வன்முறைகளும் கூடவே மக்களை முட்டாளுக்கும் பேரங்களும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.


நெற்பயிருக்கு பாயும் நீர் களைகளுக்கும் போக தான் செய்யும். ஆனால் இன்று களைகளே அதிகமாகி நெற் பயிற்களுக்கு ஏதோ கிடைக்கிறது.


வெள்ள நிவார்ண நிதியோ ரோடு போடும் ஒப்பந்தமோ எல்லாவற்றிலும் ஊழல் இருந்தாலும் ஏதோ ஐந்து பத்தோ மக்களுக்கு கிடைக்கிறது.

இந்த 49 ஓ களால் இதை போல தேர்தல் முறை மறைந்து ரழ்யாவின் ஸ்டாலின் போன்ற சர்வாதிகாரிகள் வந்து குருவி சுடுவதை போல பல்லாயிரம் பேரை ஒரே நாளில் படு குழிக்கு அனுப்பி விடுவார்கள்.

அப்புறம் என்ன.. சினா போல தான்..
வெளியில் பெயிண்ட் அடித்து நறுமண வாசனை திரவியம் பூசி உள்ளே அழுக்கையும் குப்பையும் வைத்து இருக்கும் சீனா போலவே நாமும் மாறுவோம்.

பேச்சுரிமை எழுத்திரிமை எல்லாம் பறிக்கபடும். நமக்கு என்ன தேவை என்பதே மறந்து போகும். ஆறாம் அறிவு தேவை இல்லாமல் போய் எல்லாம் விதிக்கபட்டதே என்று நாமும் மாறி விடுவோம்.

இதை போல வலைபூக்களில் 49ஓ தொடர்பாக எழுத கூட முடியாது.

கம்யூணிசமே உலகின் சொர்க்கம்..
சர்வாதிகாரமே மோட்சம் என்று சழ்டி கவசம் பாட வேண்டியது தான் பாக்கி.


ம் அப்ப என்ன தான் முடிவு?

என்ன தான் ஆயிரம் குறைகள் இருந்தாலும் தற்போதைய ஜனநாயக தேர்தல் முறைக்கு மாற்று ஏதுவும் இல்லை.


தவறு நம்மிடம் இருந்து தான் தொடர்கிறது..
தேர்தலிகளில் சாதி மத மொழி மயக்க போதை , தலைவர்கள் மீதான் காதல் என்ற சக்திகள் தான் நம்மை ஓட்டி செல்கிறது நம்மில் எத்தனை பேர் இதை போன்றவற்றை விட்டு உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்களுக்கு ஓட்டு போடுகிறோம்??

நம்மில் எத்தனை பேருக்கு நமது தொகுதி எம் எல் ஏ பேர் நினைவிற்க்கு வருகிறது அல்லது சென்ற தேர்தலில் ஓட்டு போட்ட வேட்பாளர் பெயர் நினைவிற்க்கு வருகிறது?

சமூகத்தை படி படியாக மாற்றி விடலாம் என்று சிறு சிறு கனவுகளோடு தன் சொந்த சேமிப்புகளை தேர்தலுக்காக செலவழிக்கும் பல சுயேட்ட்சை வேட்பாளர்கள் எனக்கு தெரிந்தே பார்த்து இருக்கிறேன்.
எம் எஸ் உதய மூர்த்தியும் இதை போல நம்புங்கள் நடக்கும் என்று நல்ல மனிதர்களை வேட்பாளர்களாக நிறுத்தினார்.. நம்புங்கள் ஒருத்தருக்கு கூட டெபாசிட் கிடைக்கவில்லை.

நல்ல வேட்பாளர்களும் களத்தில் தேர்தலில் போட்டி இடுகிறார்கள் ஆனால் நாம் அவர்களை விடுத்து கட்சி சார்பாகவோ அல்லது சாதி மதம் சார்பாகவோ தான் நம் ஓட்டுகளை இடுகிறோம்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்தலில் நிற்க்கும் வேட்பாளரை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மீடியாக்களில் முழு ஜாதகமே வந்து விடும். ஆனால் இங்கு ஜெயிக்க போகும் கட்சிகளுக்கு அல்லது தலைவர்களுக்கு ஜால்ரா அடிப்பது தான் நம் மீடியாக்களின் பிழைப்பு. மீடியாக்களும் மாற வேண்டும்.

மீண்டும் ஒரு முறை 49 ஓ என்பது தவறான ஊருக்கு வழிகாட்டும் அழகான அருமையான ஆனால் தவறான வழிகாட்டி.

நம் ஓட்டுரிமையை இதை போல சிதைப்பதை விடுத்து நல்ல வேட்பாளர்களை தேர்ந்து எடுத்து அனுப்புவோம்..
தனி மனிதர்களின் மாற்றமே சமுதாயத்தின் மாற்றம். மாற்றங்களை நம்மிடம் இருந்தே தொடங்குவோம்

8 comments:

வித்யா said...

நல்ல விளக்கமான பதிவு அருண்.
நீங்க சொல்றதுல கொஞ்சம் உடன்பட்டாலும், மாற்றங்கள் செய்யப்பட்ட 49ஓ தேவையென்றே எனக்குத் தோன்றுகிறது. After all opinion differs:)

கபீஷ் said...

நல்லா எழுதியிருக்கீங்க!!!

வால்பையன் said...

ஊழல் மலிந்து கிடக்கும் அரசை என்ன பண்ணலாம்?

Felix Raj said...

நல்ல ஒரு விளக்கமான ஒரு பதிவு , நிறைய விஷயங்கள் ப்லோக் படிப்பதினால் தெரிந்து கொள்கிறேன் வாழ்க ப்லோக் படைபாளிகள்

Arun Kumar said...

// வித்யா said...

நல்ல விளக்கமான பதிவு அருண்.
நீங்க சொல்றதுல கொஞ்சம் உடன்பட்டாலும், மாற்றங்கள் செய்யப்பட்ட 49ஓ தேவையென்றே எனக்குத் தோன்றுகிறது. After all opinion differs:)//

நன்றி வித்யா
மாற்றங்கள் கண்டிப்பாக தேவை மாற்றங்கள் இல்லாத நாமும் உலகும் வெகு சீக்கிரமே போரடித்து விடும்

எனக்கு இந்த தலைப்பில் எழுத வாய்ப்பு கொடுத்தற்க்கு நன்றி :)

Arun Kumar said...

// கபீஷ் said...

நல்லா எழுதியிருக்கீங்க!!!//

நன்றி தலைவா !! அடிக்கடி வந்து போங்க :)

Arun Kumar said...

// வால்பையன் said...

ஊழல் மலிந்து கிடக்கும் அரசை என்ன பண்ணலாம்?//

ஊழல் யாரிடம் தான் இல்லை?
ஊழல் செய்பவர்கள் யார்.. நம்மை போல அவர்களும் சாதாரண் ஆட்க்கள் தான். இங்கு அடிமட்டமே ஊழல் நிறைந்து இருக்கிறது

பெர்த் வேண்டும் என்றால் ரெயில்வே டிடி கிட்ட அன்பாக மிரட்டி எப்படியோ லஞ்சம் வாங்க வைத்து விடுகிறார்கள்

இப்படி தான் அனைத்து துறைகளிலும்.. வேலையில் சேரும் தினம் அன்று யாரும் லஞ்சம் வாங்கி ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்ட வேண்டும் என்ற நினைப்பில் வேலையில் சேர்வதில்லை..

முதலில் தனி மனித சீர் திருத்ததை ஆரம்பிப்போம்..

நமக்கு 1000 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை வந்தாலும் கொடுக்காமல் அதை எதிர்ப்போம்..


சில தினங்கள் கடினமாக இருந்தாலும் வருங்காலம் இனிமையாகவே இருக்கும்

வருகைக்கு நன்றி அருண் :)

Arun Kumar said...

//
Blogger Felix Raj said...

நல்ல ஒரு விளக்கமான ஒரு பதிவு , நிறைய விஷயங்கள் ப்லோக் படிப்பதினால் தெரிந்து கொள்கிறேன் வாழ்க ப்லோக் படைபாளிகள்//

நன்றி Felix Raj .. நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறோம்.. அடிக்கடி வாங்க