Thursday, November 27, 2008

மும்பை - தீவிரவாதம் - இந்தியர்கள்

ம் எல்லாம் முடிந்து விட்டது.
என் இந்தியா என்ற தேசம் மிகவும் அருமையான நாடு

எல்லாரும் ஓர் குலம்
எல்லாரும் ஓர் இனம்
நாம் எல்லாரும் இந்திய மக்கள்

என்று பள்ளிகூட பிரார்த்தனைகளில் பாடிய பாடல்கள் மனதில் தோன்றி உடன் மறைந்து சென்றது.

இந்தியாவில் அனைத்து புறங்களிலும் நான் பயணம் செய்து உள்ளேன்.. பல மொழி பல கலாச்சாரம் வித விதமான உடை பல விதமான உணவு..

இத்தனை பெரிய நாடு மிகப்பெரிய கலாச்சாரம் பல மதங்கள் சாதிகள் என்று இந்தியா பிளவு படும் போது கூடவே பள்ளிகூடத்தில் சொல்லி கொடுத்த வேற்றுமையிலும் ஒற்றுமை காணமால் போகிறது

வெளிபடையாகவே பேசலாம்..
இந்தியாவிற்க்கு இதை போல குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணம் ஆனது பாபர் மசூதி இடிப்பு முதல் தான்.

மக்களுக்கு நல்லது செய்வோம் நாட்டுக்கு நல்லது செய்வோம் என்று அரசியல் செய்தவர்கள் அன்று முதல் மத பிரிவினை காட்ட ஆரமித்தது அதன் முதல் தான்.

அதற்க்கு முன்னர் இதை போல குண்டு வெடிப்புகள் அப்பாவி மக்கள் பாதிப்புகள் கேட்டு இருப்போமா? இப்படி கோடுரங்களை பார்த்து இருப்போமா?


பாக்கிஸ்தான் என்பது இன்று தனி தேசம்..

இன்று இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் நம்மோடு நம்மாக கலந்து மகிழ்ச்சி துண்பம் துக்கம் சந்தோசம் என அனுபவிக்க நினைக்கும் நம்மை போல சாதாரண மனிதர்கள் தான்.

இந்த குண்டு தீவிரவாத தாக்குதல்களுக்கு பின் உடனே இஸ்லாமியரை கை காட்டும் மனிதர்களே மாலேகான் குண்டு வெடிப்பின் பின் எங்கு போனீர்?

தீவிரவாதம் அடுத்த மனித உயிர்களை குடிக்கும் வெறி சாதி மத இன பேதம் அற்றது.

சாதி மதங்களை இங்கு தயவு செய்து விட்டு விடவும்..இங்கு இழப்பது மனித உயிர்கள்.இதற்க்கு இந்து முஸ்லீம் கிருஸ்துவ பேதம் கிடையாது..


கொஞ்சம் யோசித்து பார்த்தால் இதை போல தாக்குதல்கள் மதம் சாதி இனம் மொழி என்ற குறுகிய சிந்தனையில் வாழும் சில கேடு கெட்ட மனிதர்களால் வளர்க்கபடுகின்றன.

இன்றைய மும்பை தாக்குதல் நடை பெறும் போது பால் தாக்கரே + sons எங்கு இருந்தனர்? எங்கு ஓடி போனார்கள்? ராஜ் தாக்கரே தனது தொண்டர்களை வைத்து இந்த தீவிரவாதிகளிடம் இருந்து அப்பாவி மக்களை காபாற்ற முடியவில்லையா? எங்கே போனது அந்த வீரம்?

இதை வரை அப்பாவி மக்களை பகடை காயாக்கி விளையாண்ட போது இருந்து வீரம் இன்று ஏன் காணமால் போனது?

ஏன் நம் கண் முன்னே கூட இதை போல மொழி உணர்ச்சியை தூண்டி அப்பாவி மக்கள் வாழ்க்கையை துண்டாடாக்கிய வரலாறு கண் முண்ணே நடக்கிறது....

பிரபாகரன் என்ற பங்கரில் ஒளிந்து இருந்து அப்பாவி மக்களை பலி கொடுக்கும் ஆளுக்கும் ராஜ் தாக்கரேக்கும் எனக்கு பெரிதாக வேறுபாடு தெரியவில்லை...ஏன் இதை போல தீவிரவாதிகளுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு ஏதும் இல்லை...


வன்முறை என்பது இரு முனையும் கூரான கத்தி..


நமக்கு பிடித்த கருத்துகளாக்க வன்முறை செய்பவன் ஹீரோ என்பதும் நமக்கு பிடிக்காத கருத்துகளை கொண்டு இருப்பவனை துரோகி என்று சொல்வது அயோக்கியதனம்...அதுவும் அப்பாவிகளை பலி கொடுப்பது மிக மிக மோசமான செயல்..

வருங்கால இந்தியா அமைதி பூக்காவாக மாற சில கருத்துகள்

மொழி சாதி மதம் போன்றவற்க்கு மிகவும் மரியாதை கொடுத்து பால் ஊட்டி சீராக்கும் அமைப்புகள் அனைத்தும் தடை செய்யபட வேண்டும். முடிந்தால் இதை ஆதரித்து சுயலாபம் அடையும் கொள்கை வேந்தர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்

சாதாரண கவுன்சிலர் தேர்தல் நடத்தும் போது சாதி மதம் பார்த்து வேட்பாளரை நிறுத்தும் கட்சிகள் இருக்கும் வரை இதை போல சம்பவங்களும் அதை பார்த்தும் கேட்டும் நமது சில நாள் தூக்கமும் பல பேரின் வாழ்க்கையும் கெட போவது நடந்து கொண்டே தான் இருக்க போகிறது..

திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

நாம் அடுத்தவரை கை காட்டும் முன் நாம் உண்மையாகவே சரியாக நடக்கிறோமோ என்று நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டும்..

இறுதியாக....

தீவிரவாதிகளின் தாக்குதலில் தன் உயிரை இழந்த இந்திய வீரர்களுக்கு என் வீர வணக்கம்


ஹேமந்த் கார்கரே, அசோக் காம்டே போன்ற நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு என் வீர வணக்கங்கள். இந்த நிமிடம் கூட தன் உயிரை பொருட்படுத்தாமல் அப்பாவிகளை காப்பாற்ற பொறுமையாக தாக்குதல் நடத்தும் இந்திய தேசத்தின் ரானுவ வீரர்களுக்கும் போலிசாருக்கும் என் நன்றிகள்...

இனியாவது சாதி மத சண்டையை விடுத்து இந்தியர்கள் என்ற ஒரே நினைப்பில் இந்த தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்போம்....

நாம் வாழும் இந்த நாடு நமக்கு மட்டும் சொந்தம் இல்லை, இனி நம்மை தொடர்ந்து வரும் தலைமுறைக்கும் சொந்தம்.

இதை உணர்ந்து நம் நாட்டை பாதுக்காப்போம்.. நம் மக்களை பாதுகாப்போம்..

இதை நாம் இன்றைய தினத்தில் செய்ய மறந்தால் வரலாறு நம்மை கண்டிப்பாக மன்னிக்காது..

இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்...இந்தியர்களாக வாழ்வோம் மடிவோம்...

14 comments:

வித்யா said...

\\தீவிரவாதிகளின் தாக்குதலில் தன் உயிரை இழந்த இந்திய வீரர்களுக்கு என் வீர வணக்கம்

ஹேமந்த் கார்கரே, அசோக் காம்டே போன்ற நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு என் வீர வணக்கங்கள்.\\

வழிமொழிகிறேன்.

வித்யா said...

சோறு தண்ணி மறந்துட்டு அவனவன் உசிர பணயம் வைச்சு நாட்ட காப்பாத்துறாங்க. இந்த அரசியல்வாதிகளின் பண, புகழ் போதைக்கு பலியாவது அப்பாவி பொது சனங்கள் தான்:(

Anonymous said...

Very Nice.

//சாதி மதங்களை இங்கு தயவு செய்து விட்டு விடவும்..இங்கு இழப்பது மனித உயிர்கள்.இதற்க்கு இந்து முஸ்லீம் கிருஸ்துவ பேதம் கிடையாது..//

Thanks Hariharan

prakash said...

You are proving once again that 'Public memory has short life'. Dont start the story just from Babri Masjid demolition. If we know the entire history of India, we can easily predict the root of all this. Leave all those terrorists from Pakistan or Bangladesh, where are our own Indian muslims who give asylum to this terrorism, why all critics shut their golden mouth when it comes to speak openly about Muslim terrorists, because there is no guaranty for their life if they do so! Atleast one big, serial bomb blast in a month, for the past 15 years somewhere in India. is this the way to show their protest against hindu exttremists?? BULL SHIT...

உதயன் said...

ராணுவ பாதுகாப்புடன் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் தான் இன்றைய குண்டு வெடிப்புகளின் ஆரம்ப புள்ளி. அதன் பிறகு தான் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரண விஷயமானது. இன்னும் அதற்குரிய குற்றவாளியை தண்டிக்க அரசியல் சாசன சட்டம் தயங்குவது ஏன்? மசூதி இடிப்பின் முக்கிய குற்றவாளி வரும் தேர்தலில் பிரதம வேட்பாளர். பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எதுவாக இருப்பினும் ஏற்றுக்கொள்ள இசுலாமியர்கள் தயாராக இருந்தாலும் இந்துத்துவா தயாராக இல்லை. அவர்களுக்கு "இந்து கூட்டு மனசாட்சி" படி தான் தீர்ப்பு வேண்டுமாம்.
அடுத்து.. மும்பை தொடர் குண்டு வெடிப்பு. இதை யார் செய்தார்கள், யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பதெல்லாம் ஊருக்கே தெரியும். அடுத்து கோவை தொடர் குண்டு வெடிப்பு.. இதையும் யார் செய்தார்களோ அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால்.. கடந்த பத்தாண்டுகளில் வெடித்த குண்டுகள் எத்தனையோ, வெடித்தவுடன் சிலரை கைதும் செய்கிறார்கள், ஆனால் அவர்கள் குற்றவாளிகளா, நிரபராதிகளா இதுவரை தெரியவில்லை. ஏனென்றால் நீதிமன்றம் மேற்கூரிய இரண்டு குண்டு வெடிப்புகள் தவிர வேறு எதற்கும் யாரையும் தண்டித்ததாக நினைவில்லை. இருந்தால் தயை கூர்ந்து நினைவுபடுத்துங்கள். மேலேகன் குண்டு வெடிப்புகளில் சம்பத்தப்பட்டவர்களின் விவரங்கள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில், நேர்மையாக செயல்பட்ட அதிகாரி கார்கரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆதாயம் அடையப்போவது கற்பனை இயக்கமான "டெக்கன் முஜாகிதீன்" அல்ல. இனி ஏ.டி.எஸ் ஸில் ஒரு இந்துத்துவ அதிகாரி தலைமை ஏற்பார். இனி பாருங்கள்.. திரைக்கதை வசனத்தோடு தினசரிகளில்..

Anonymous said...

குண்டு வெடிப்புக்களுக்குக்காரணம் தீவிரவாதத்தை போதிக்கும் மதமும் அந்த மதத்தை போற்றிப்பாதுகாத்து வரும் போலி செக்யூலர் அரசியல்வியாதிகளும் தான்.பாப்ரி மஸ்ஜித் நடந்து 16 வருடங்கள் கடந்து விட்டன. இனியும் எத்தனை வருடங்கள் தான் அதையே கூறிக்கொண்டிருப்பீர்கள்.

செக்யூலர் வியாதிகள் அஃப்சல் குரு போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதினாலும் அவர்களை தண்டிக்காமல் ஜெயிலில் வைத்து சிக்கன் பிரியாணி போட்டு போற்றிக்கொண்டும் இருப்பதனால் தான் இவை நடக்கின்றன..

இந்தியாவில் போலீசும் இன்ன பிற செக்யூரிட்டி ஏஜன்சியில் வேலை பார்ப்பவர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் அவர்களுக்கு தேவையான உறுதுணையும் அரசு நல்குமென்ற உறுதியும், அவர்களை நேர்மையாக நடவடிக்கை எடுக்க விடவும் செய்யும் என்ற நம்பிக்கையும் இருந்தால் இந்த எல்லா குண்டு வெடிப்புக்களின் பின்புலத்திலும் இருப்பவர்கள் கண்டு பிடிக்கப்படுவார்கள். இவர்கள் யாரென்பது எல்லாவருக்கும் தெரியும். சிறுபான்மையினரின் ஓட்டை வாங்குவதற்காக அவர்களின் பாதத்தை நக்குவதற்கும் தயாராக உள்ள அரசியல் வாதிகள் உள்ள வரை இந்தத் தீவிரவாதிகள் இவற்றைச் செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

இவ்வளவு நடந்த பின்னும் நாட்டின் முதன் மந்திரி கொடுத்த பிரசங்கத்தைக் கண்டிருப்பீர்கள். எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் ஒரு பிரசங்கம். நாட்டில் யார் செத்தால் என்ன, எனக்கு வோட்டு இனி விழாதே என்ற கவலை தான் தெரிந்தது.. இப்படி ஒரு கேடு கெட்ட ஒருவரை முதன் மந்திரியாகக் கொண்டதினால் தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கின்றன..

எதற்கெடுத்தாலும் பாப்ரி மஸ்ஜிதை காரணம் காட்டிவிட்டு கண்ணை மூடிக்கொள்வதை விட்டு கண் திறந்து உண்மையை உள்ளபடி எழுதுங்கள்.

Murugesan said...

///மொழி சாதி மதம் போன்றவற்க்கு மிகவும் மரியாதை கொடுத்து பால் ஊட்டி சீராக்கும் அமைப்புகள் அனைத்தும் தடை செய்யபட வேண்டும். முடிந்தால் இதை ஆதரித்து சுயலாபம் அடையும் கொள்கை வேந்தர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்///
வழிமொழிகிறேன்...

Anonymous said...

Terrorists, if hanged immediately without any court hearing, then only these sorts of bastardly acts of killing the public by demanding the release of Terrorists will not arise.

ஆட்காட்டி said...

எல்லாரும் எங்க இருக்குறீங்க?

வால்பையன் said...

அந்த நாய்களுக்கு என்ன தான் வேணுமாம்,

Anonymous said...

ராணுவ பாதுகாப்புடன் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் தான் இன்றைய குண்டு வெடிப்புகளின் ஆரம்ப புள்ளி. அதன் பிறகு தான் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரண விஷயமானது. இன்னும் அதற்குரிய குற்றவாளியை தண்டிக்க அரசியல் சாசன சட்டம் தயங்குவது ஏன்? மசூதி இடிப்பின் முக்கிய குற்றவாளி வரும் தேர்தலில் பிரதம வேட்பாளர். பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எதுவாக இருப்பினும் ஏற்றுக்கொள்ள இசுலாமியர்கள் தயாராக இருந்தாலும் இந்துத்துவா தயாராக இல்லை. அவர்களுக்கு "இந்து கூட்டு மனசாட்சி" படி தான் தீர்ப்பு வேண்டுமாம்.
அடுத்து.. மும்பை தொடர் குண்டு வெடிப்பு. இதை யார் செய்தார்கள், யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பதெல்லாம் ஊருக்கே தெரியும். அடுத்து கோவை தொடர் குண்டு வெடிப்பு.. இதையும் யார் செய்தார்களோ அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால்.. கடந்த பத்தாண்டுகளில் வெடித்த குண்டுகள் எத்தனையோ, வெடித்தவுடன் சிலரை கைதும் செய்கிறார்கள், ஆனால் அவர்கள் குற்றவாளிகளா, நிரபராதிகளா இதுவரை தெரியவில்லை. ஏனென்றால் நீதிமன்றம் மேற்கூரிய இரண்டு குண்டு வெடிப்புகள் தவிர வேறு எதற்கும் யாரையும் தண்டித்ததாக நினைவில்லை. இருந்தால் தயை கூர்ந்து நினைவுபடுத்துங்கள். மேலேகன் குண்டு வெடிப்புகளில் சம்பத்தப்பட்டவர்களின் விவரங்கள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில், நேர்மையாக செயல்பட்ட அதிகாரி கார்கரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆதாயம் அடையப்போவது கற்பனை இயக்கமான "டெக்கன் முஜாகிதீன்" அல்ல. இனி ஏ.டி.எஸ் ஸில் ஒரு இந்துத்துவ அதிகாரி தலைமை ஏற்பார். இனி பாருங்கள்.. திரைக்கதை வசனத்தோடு தினசரிகளில்..

தென்னவன் said...

Babri Masid was demolished in early1990's. But kashmir problem started bfore that. Dont blame hindus.Hindus are innocent. When proviked even innocents will fight back.

Have you all seen national Geographic Channel. Some time even Buffalos join to attack the Lion. Blame the lion not buffalos. Hindus are like Buffalos

Anonymous said...

என்ன உளறி வச்சிருக்கே ! இஸ்லாமியர்களுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம். எல்லாரும் பாகிஸ்தான் தான் செஞ்சசுதுன்றாங்க ! ஒரு பேப்பர்-லயாவது இது மாதிரி நியுஸ் வந்திருக்கா ! ஒரு விஷயம் சரியா உனக்கு புரியலை-ன்னா பதிவு போடாதே ! நீ போடலைன்னா கூரை இடிந்து விழுந்திடாது. -சாந்தனு மிதுள ராவ்.

Anonymous said...

நீ எல்லாம் பதிவு போடலைன்னு யார் தம்பி அழுதா ! என்ன வெட்டியா எழுதி வச்சிருக்கே ! போ போய பெயரிலி ன்னு ஒருத்தன் இருக்கான்,. அவன் கூட உட்காந்துகோ ! அவனும் ஒன்னை மாதிரி கயா மியா ன்னு எழுதறவன் தான்
சேது கண்ணுமணி