Saturday, November 8, 2008

தேனூர் சிவாஜி

12.11.08 மற்றவை

டித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...

பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.

`உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!' என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.

விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?

முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.

பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக்கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.

வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.

``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.

``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.

2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!

கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.

அப்புறம் பள்ளிக்கூடம்.

கல்விக்கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.

கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.

இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.

நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.

இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.

செந்தில்குமாரின் தாய் லீலாவோ, ``சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுதான் எங்களோட ஆசை. ஆனால், சம்பாதித்த காசை சேவைன்னு செலவு பண்ற பிள்ளைக்கு யார் பொண்ணு தர்றாங்க... அதுவுமில்லாம `உங்க புள்ளை நல்லாப் படிச்சுட்டு, நல்லா சம்பாதிக்கிறப்பவே ஏன் இப்படி ஆயிட்டார்'னு அபத்தமா பேசுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குதுங்க!'' என்று வேதனையோடு கண்கலங்கினார்..

- இரா.கார்த்திகேயன்


நன்றி குமுதம்

21 comments:

Anonymous said...

முன்னர் ஓரு வைத்தியர் இவ்வாறு சேவை செய்வது பற்றி அறிந்திருந்தேன் இப்போது இந்த தேசபக்தி கொண்ட ஒரு வாலிபன் நல்லது சேவை தொடரட்டும்

Anonymous said...

கல்வி கண்திறப்பதை விட பெரிய சேவை எதுவுமில்லை. அந்த சேவை செய்யும் இவருக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்

Vidhya Chandrasekaran said...

நேற்று தான் நானும் இந்த கட்டுரை படித்தேன். சேவை பண்ணனும்ன்னு தோணினதுக்கப்புறம் அவர் அந்த முடிவை செயல்படுத்த ரொம்பவே போராடிப்பார்ன்னு நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் தொடரட்டும் அவர் சேவை.

Vijayashankar said...

I liked that attitude!

Once a person takes care of his family, things can move on this direction.

I didnt find more info in Kumudam on this chap, where he worked in US etc.

ஸ்ரீதர்கண்ணன் said...

செந்தில் குமாருக்கு எனது வாழ்த்துக்கள் தொடரட்டும் அவர் சேவை.உங்களால் முடிந்தால் அவரது மின் அஞ்சல் முகவரியை தெரியபடுத்தவும்.

Anonymous said...

எனது வாழ்த்துக்கள், இவரை போல பணம் சம்பாதித்த அனைவரும் நினைத்தால் நமது நாடு கூடிய சீக்கிரம் முன்னேறும்

Arun Kumar said...

//Blogger Vidhya C said...

நேற்று தான் நானும் இந்த கட்டுரை படித்தேன். சேவை பண்ணனும்ன்னு தோணினதுக்கப்புறம் அவர் அந்த முடிவை செயல்படுத்த ரொம்பவே போராடிப்பார்ன்னு நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் தொடரட்டும் அவர் சேவை.//

கண்டிப்பாக நம்மால் இப்படி ஒரு முடிவை கண்டிப்பாக எடுக்க மனம் வராது. இவரை பாராட்ட போது என் மனம் மறு புறம் கூசவே செய்கிறது

Arun Kumar said...

//Blogger Vijay said...

I liked that attitude!

Once a person takes care of his family, things can move on this direction.

I didnt find more info in Kumudam on this chap, where he worked in US//

hi vijay,

i m already using my friends circle to get touch with him. i ll post more information about him as soon as possible

Arun Kumar said...

/ஸ்ரீதர்கண்ணன் said...

செந்தில் குமாருக்கு எனது வாழ்த்துக்கள் தொடரட்டும் அவர் சேவை.உங்களால் முடிந்தால் அவரது மின் அஞ்சல் முகவரியை தெரியபடுத்தவும்./
நன்றி ஸ்ரீதர்கண்ணன் , என் திருச்சி நண்பர்கள் வழியாக அவரை தொடர்பு கொள்ள முயர்ச்சி செய்கிறேன், கூடிய விரைவில் உங்களுக்கு மேல் விவரங்களை அனுப்புகிறேன்

Arun Kumar said...

//Mohan said...

எனது வாழ்த்துக்கள், இவரை போல பணம் சம்பாதித்த அனைவரும் நினைத்தால் நமது நாடு கூடிய சீக்கிரம் முன்னேறும்//

கண்டிப்பாக !!

//கல்வி கண்திறப்பதை விட பெரிய சேவை எதுவுமில்லை. அந்த சேவை செய்யும் இவருக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்//

எனக்கு இதே எண்ணம் தோன்றியது வருகைக்கு நன்றி

//முன்னர் ஓரு வைத்தியர் இவ்வாறு சேவை செய்வது பற்றி அறிந்திருந்தேன் இப்போது இந்த தேசபக்தி கொண்ட ஒரு வாலிபன் நல்லது சேவை தொடரட்டும்//

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி
அந்த இளைஞன் தொடர்பாக விரைவில் மேல் விவரங்கள் பதிகிறேன்

நன்றி

Anonymous said...

More details about this article (copy & paste the following links in the browser)

http://www.payir.org/Home.html

http://ashauflorida.wikispaces.com/file/view/Ram's+2007+TripReport.pdf

http://picasaweb.google.com/payirindia/ThenurVillageHospitalInauguration#

http://payirtalk.blogspot.com/2007/07/payir-newsletter-no-4.html

Anonymous said...

செந்தில் குமாருக்கு எனது வாழ்த்துக்கள் விகடனில் வந்த இன்னொரு சமூக சேவை முயற்சியை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...சாரலின் உறுப்பினன் என்பதில் பெருமையும் அடைகிறேன்..

விகடன் கட்டுரை:
''மகிழ்ச்சி வெள்ளம், குதூகலக் குற்றாலம்னெல்லாம் நம்ம உற்சாகத்தைப் பகிர்ந்துக்க என்னென்னவோ எழுதுவோம், பேசுவோம். ஆனா, பிறந்ததில் இருந்து சந்தோஷத்தோட சாரல்கூட படாதவங்களைப் பத்தி எப்பவாவது யோசிச்சிருக்கோமா?'' சின்னப் பெண்ணாகத் தெரிந்த அலேக்யாவிடம் இருந்து இத்தனை பெரிய கேள்வி!

ஜாலி, கேலி, அரட்டை, டேட்டிங் இத்யாதிகளுக்கான இணைய ஸ்பாட் ஆர்குட். ஆனால், இந்த சோஷியல் நெட் வொர்க்கிங் வெப்சைட்டை சமூக நலனுக்காகப் பயன்படுத்தி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் அலேக்யா.

''வாழ்க்கையில் சந்தோஷ மழைக்காக ஏங்கிக்கிடப்பவர்களுக்கு எங்களோட சின்ன உதவி சாரலாக இது இருக்கட்டுமேன்னுதான் 'சாரல்' என்கிற பேரையே என் கம்யூனிட்டிக்கு வெச்சேன்!'' என்கிறார் அலேக்யா.

ஆர்குட்டில் 'ஒபாமா'வில் ஆரம்பித்து 'ஓசி டீ' வரைக்கும் பலப் பல விஷயங்களுக்கு 'கம்யூனிட்டி'கள் எனப்படும் ரசிகர் வட்டங்கள் இருக்கும். அதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். அதுபோன்ற அரட்டை கம்யூனிட்டிகளுக்கு மத்தியில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக அலேக்யா உருவாக்கிய சாரல் கம்யூனிட்டியில் இப்போ 4,495 உறுப்பினர்கள்!

''எங்க குடும்பத்தில் பிறந்த நாள், திருமண நாள் மாதிரி சந்தோஷங்களை ஆதரவற்றோர் இல்லங்களில்தான் கொண்டாடுவோம். ஆர்குட்டில் யார் வேண்டுமானாலும் கம்யூனிட்டி ஆரம்பிக்கலாம்னு வாய்ப்பு கிடைச்சப்போ, என் சின்னக் கனவான சாரலை ஆரம்பிச்சேன். இது போன்ற கம்யூனிட்டியில் சேர ஆர்வம் காட்டுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. ஆனா, ஆரம்பிச்சதுமே ஆயிரக்கணக்கில் ஹிட் அடிச்சிருச்சு சாரல். இப்போ அதில் இருந்து 60 உறுப்பினர்கள் சேர்ந்து, 'சாரல்' என்கிற ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பைத் தொடங்கியிருக்கோம். ஒன்றரை வருஷங்களா ஈரமான இதயங்களின் இணைய இல்லமா இருக்கு சாரல்!'' என்று பூரிக்கும் அலேக்யாவின் வயது இருபத்து நாலு. இன்ஜினீயரிங் முடித்துவிட்டு எம்.பி.ஏ., படிப்பதற்காககக் காத்திருக்கிறார்.
''ஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாத்தணும்னு ஆர்வமா இல்லங்கள் ஆரம்பிக்கிறவங்க கையில் காசு இருக்கிற வரை சமாளிச்சுடுவாங்க. அப்படி முடியாதபோது ஒழுகுகிற கூரை, ரெண்டு வேளை சாப்பாடுனு அந்த குழந்தைங்களுக்கு இன்னமும் சோகம் சேர்ந்துடும். அப்படி நிதி வசதி இல்லாம திண்டாடுகிற இல்லங்கள்தான் சாரலின் இலக்கு. இப்போதைக்கு நான்கு இல்லங்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டுக் கொடுத்திருக்கோம். இரண்டு இல்லங்களைச் சேர்ந்த 85 குழந்தைகளுக்கு இந்த வருடத்திலிருந்து படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டு இருக்கோம்.

சாரல் கம்யூனிட்டியின் உறுப்பினர்கள் அனைவரும் படிக்கிற, வேலை பார்க்கிற இளைஞர்கள்தான். உசிலம்பட்டிப் பக்கம் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளைக் கட்டாயமா வேலைக்கு அனுப்புறாங்கன்னு கேள்விப்பட்டோம். அந்தப் பெற்றோர்களுக்குக் குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் கொடுத்துவிட்டு, குழந்தைகளைப் பள்ளிக்குஅனுப்பும்படி கேட்கப்போறோம். இன்னொரு சந்தோஷமான விஷயம், அப்துல் கலாமுடைய 'இந்தியா விஷன் 2020' திட்டத்தில் சாரலும் இணைந்து செயல்பட பரிந்துரை செய்யப்பட்டு பரிசீலனையில் இருக்கு. அவங்களோட இணையும் வாய்ப்பு கிடைச்சா, இன்னும் எங்கள் பணி வேகமா நிறையப் பேரைப் போய்ச் சேரும். நல்ல நோக்கமும் நண்பர்களும்தான் 'சாரல்' உருவானதற்குக் காரணம். இன்னும் நிறைய வேலைகள் காத்திருக்கு எங்களுக்கு... இல்ல நமக்கு!'' என்று என்னைப் பார்த்துச் சிரிக்கிறது அந்தக் கனிவான ஓவியம். அலேக்யா என்றால் ஓவியா என்று அர்த்தம்!

Orkut Community Link:
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=3346339

maathiyosi said...

could you please any one let me know the contact details of senthil kumar(email id or phone no)...

இளங்குமரன் said...

http://www.orkut.com/Main#Profile.aspx?uid=646496240620658019

ஆர்குட்டின் இந்தப் பக்கத்தைப் பாருங்கள். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர் மாதம் 250 ரூபாய் சம்பளம் வாங்கும்போது தொடங்கிய சேவை...

Sathish said...

Senthil.. You are the real man.

I like your attitude.
It isn't a normal thing, to leave a job and concentrate to develop the villages.

Really you are great !!

All the best.
More and more youngsters will join in your service.

Anonymous said...

Hi Thenur Shivaji,

I would like to help you in some way.Please let us know in some ways like opening a new blog or web site so that we can understand your current needs and achievments .every one is ready to help you .

Indian,
Aish

maathiyosi said...

again from maathiyhose.....

hope senthil kumar should have seen this blogger and comments

we need his contact details then we all can help to him in some other way.

below my personal id...amvinoth143@gmail.com

hope some one will give his contact details soon or senthil will contact.....

we can do help along with my collegues

Unknown said...

Heavenly commitment he has taken.. Hearty congrats...
Please send his contact detail

umarcl@gmail.com

Best Wishes

butterfly Surya said...

Wow. Great. SK

வாழ்த்துக்கள்..

நெகிழ்ச்சியுடன்

சூர்யா

Muthu Arumugam said...

I am very happy to see you all appreciating his effort. It's hard to imagine in a life of selfishness and self-centric life style.

I hope this email id will be used for good purposes. senthil@payir.org

Muthu

Unknown said...

ennai kavarntha nanpar...this is karnan.G ungalil oruvan