Saturday, November 1, 2008

இலங்கை தமிழர்கள் உரிமை காக்க ரஜினி பேச்சு - வீடியோ




அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை ராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும்.அதுதான் அந்நாட்டுக்கும் நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்தும் இந்த போராட்டம் உணர்வு பூர்வமானது; உணர்ச்சிபூர்வமானது. இலங்கைத் தமிழர்களுக்காக திரையுலகம் நடத்தும் 3ஆவது போராட்டம். இது இலங்கையின் காதுகளுக்கு எட்ட வேண்டும்.

இங்கே பேச சில கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாகச் சொன்னார்கள். கட்டுப்பாடு இருந்தால் தான் மனம் சொன்னதை கேட்கும். அப்போது தான் எதையும் சாதிக்க முடியும். வெற்றி கிடைக்கும்.

இலங்கைத் தமிழர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்களின் பேச்சே சங்கீதம் போல் இருக்கும். பழகுவதற்கு அவர்கள் இனிமையானவர்கள். அத்தகையவர்கள் இன்று சொந்த மண்ணில் அடித்து கொல்லப்படுகிறார்கள்.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களுக்கு எதிராக நடத்தும் இந்த போரில் இலங்கை ராணுவத்துக்கு இன்று வரை வெற்றி கிட்டவில்லை. அவர்கள் ஆண் பிள்ளைகள்தானா என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அல்லது நிறுத்த வைக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கும் நல்லது. இல்லை என்றால் உறவினர்களை பறி கொடுத்த தமிழர்களும்இ மண்ணில் உதிரம் சிந்திய பெண்கள்இ குழந்தைகளின் ஆன்மாவும் அவர்களை சும்மா விடாது.

யுத்தத்தில் அழிக்கப்படுபவர்கள் புதைக்கப்படவில்லை; அங்கே விதைக்கப்படுகிறார்கள். இத்தகைய கொடுமை தொடர்ந்து நடந்தால் இலங்கை என்றுமே உருப்படாது. இலங்கையில் மட்டுமல்லஇ எந்த நாட்டிலும், எந்த மண்ணிலும் அப்பாவி குழந்தைகள் பெண்கள், முதியோர்கள் தாக்கப்படக் கூடாது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்களுக்கான ரூ. 10 லட்சத்தை அளிப்பதாக அறிவித்தார்

2 comments:

Anonymous said...

kamal pasalaya?

Anonymous said...

thanks for posting it.He spoke the truth .