Saturday, August 29, 2009

ஊர் வம்பு -1


யார் வம்புக்கும் போகாம இருந்தா வம்பு நம்மை தேடி வராது

இதேல்லாம் சும்மா டூப்பு.


என்ன நேரமோ காலமோ தெரியலை வம்பு தேடி தேடி ஆளை கொல்லுது.

பொதுவாக நான் இந்தியன் ஆயில் நிறுவனங்களில் தான் பைக்கிற்க்கு பெட்ரோல் ஆகாரம் கொடுப்பது வழக்கம்.


நான் வைத்து இருக்கும் citi bank debit cardகளில் வேறு நிறுவன பங்குகளில் இதே debit card பயன்படுத்தினால் 10 ரூபா கொசுறாக சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் account statementகளில் ஞேஎன்று எட்டி பார்க்கும்..

இந்த கொசுறு எதுக்கு என்று சண்டை போட்டு முடிவு இது வரை இல்லை.

சரி indian oil நிலையதிலேயே பெட்ரோல் போடலாம் என்று அரைமனதாக முடிவு செய்து ஒரே பங்கையே உபயோகித்து வருகிறேன். எல்லாம் நல்லா தான் இருந்தது..

சில நாட்களாக பைக்கில் கணிசமாக மைலேஜ் குறைந்து கொண்டே வந்தது.. ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுத்த வண்டி 40 35 என குறைந்து கொண்டே வந்தது. ஓட்டும் முறையில் ஏதும் மாற்றம் இல்லை.. hose போட்டு பெட்ரோலை உறியவும் வாய்ப்பு இல்லை.. என்னமோ நடக்குது.. பொருமையாக யோசித்து பார்த்தில் பெட்ரோல் போடும் போதே லம்பாக தில்லு முல்லு செய்தே பெட்ரோல் போடுவது பிடிபட்டது.

பெட்ரோல் போட்டு கொண்டு இருக்கும் போதே சார் cardஆ cashஆ , சார் சீக்கிரம் கார்டு கொடுங்க.. பின் நம்பர் கேட்க்குது என எப்படியாவது கவனத்தை திசை திருப்பி தில்லாங்கடி செய்வது தெரிந்தது. ஏற்கனவே அனுபவம் பெற்ற நண்பர்கள் ஆலோசனையோடு பெட்ரோல் நிரப்பும் போது அந்த h1n1 வைரசே வந்தாலும் திரும்ப மாட்டேன் என உறுதி பூண்டு ஜெயித்து விட்டேன்..

ஆனால் இந்த முறை புது மாதிரியான தில்லுமுல்லு.. பெட்ரோல் போடும் போதே மின்சாரம் போய் விடும் ..அல்லது எந்திரத்தில் ஏதாச்சும் கோளாறு ஆகும்.. உடனே ஒரு சூப்பர்மேன் போல ஒருவர் வருவார் ...பட்டனை தட்டுவார்.. மீண்டும் பெட்ரோல் வரும்..

சார் 300 ரூபாக்கு பெட்ரோல் போட சொன்னீஙக கரண்ட் போவதற்க்கு முன்னால் 80 ரூபாவிற்க்கு பெட்ரோல் போட்டாச்சு பாலன்ஸ் 220 ருபாவிற்க்கு போடனும் மீட்டரை பாருங்க.. 80விற்க்கு பெட்ரோல் போடாங்களா இல்லையா மீட்டர் ஓடிச்சா இல்லையா ..??
இந்த முறையும் நல்லா ஏமாந்து சோனகிரியா 300 ரூபா பெட்ரோலில் 80 ரூபா கோவிந்தா கோவிந்தா..

இந்த முறை விட கூடாது..

ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேரையாவது இவர்கள் ஏமாற்றுவார்கள், ஒருத்தருக்கு 50 ரூபா என்றால் நாள் ஒன்றிக்கு 5000 ருபா வேலை பார்க்கும் 5 பேருக்கும் லாபம் பிரிக்கபடும்..

இணையத்தில் நோண்டிய போது இந்தியன் ஆயில் விஜிலென்ஸ் நம்பர் கிடைத்தது.. இந்தமுறையும் விட கூடாது..

சார் இதே பிரச்சனை தான் சார், அளவு சரியா இருககான்னு நாங்க அடிக்கடி சோதனை நடத்துறோம் அதனலால் லிட்டர் அளவை இப்ப யாரும் மாத்துறது இல்லை.. அதுக்கு பதிலா பெட்ரோல் போடமலே பெட்ரோல் போட்ட மாதிரி ப்ராடு பண்றாங்க ..எந்த ஏரியா பங்க சார்..??

கூடவே விஜிலென்ஸ் அதிகாரி வந்தார்..என் பைக்கில் இருக்கும் மொத்த பெட்ரோல் அளவு குறிக்கபட்டது.. சார் நீங்க வழக்கம் போலவே பெட்ரோல் போடுங்க.. தில்லுமுல்லு ஏதாச்சும் செய்தாலும் கண்டுக்காம பெட்ரோல் போட்டு முடியும் வரை wait பண்ணுங்க..

வந்துட்டான்யா வந்துடான்யான்னு என்னை பார்த்ததும் பெட்ரோல் போடுபவற்க்கு ரொம்ப குழியாக இருந்து இருக்கும் போல. 150 ரூபாவிற்க்கு பெட்ரோல் போடுங்க.

.பெட்ரோல் hose controllerயை அழுத்தியது போல இருந்தது.. 50 ரூபாவை மீட்டர் காட்டியது.. மிசின் struck ஆனது.. பின் reset செய்து 100 ருபாவிற்க்கு பெட்ரோல் போடப்பட்டது.. அதன் பின் அத்தனையும் சங்கர் படத்தில் வருவது போலவே இருந்தது... ..1

50 ரூபாவிற்க்கு 3 லிட்டர் பெட்ரோல் போட்டு இருக்கனும்.. ஏற்கனவே பைக்கில் இருந்த 2 லிட்டர் சேர்த்து இப்போ 5 லிட்டர் பெட்ரோல் இருக்கனும்.. ஆனால் கணக்கில் வந்ததோ 4 லிட்டர்..

கையும் களவுமாக பிடிபட்டார்கள்,,,,,
விஜிலென்ஸ் அதிகாரி ..ஓனரை கூப்பிடு ..
அவரு இல்லை சார்..
பெட்ரோல் போடுறதை நிறுத்து...
பின்னால் குறைந்தது 20 பேர் கண்டிப்பாக இருப்பார்கள்..

டேய் ப்ராடு பண்றதை நிறுத்தவே மாட்டீங்களா.. சத்தம் பெரிதானது.. பின்னால் இருந்த கூட்டமும் சேதி தெரிந்து கூட்டம் பெரிதானது..

கேஸ் போடுங்க சார்.. பங்கை இழுத்து மூடுங்க சார்..எனக்கும் இதே பிரச்சனை தான் சார்..பின்னால் இருந்து பல குரல்கள்..

இப்போ விஜிலென்ஸ் அதிகாரி..முதல்ல இவருக்கு சுட்ட பெட்ரோலை திரும்ப கொடு.
பெட்ரோல் மீண்டும் போடப்பட்டது...

பெட்ரோல் போடும் பையனை பார்த்தேன் 17 வயது இருக்கலாம்..கூடவே அவரின் சக பணியாளர்கள்.. யாருக்கும் வயது இருபதை தாண்டாது..

சார் இதுல ஒரு கை எழுத்து போடுங்க. *** *** பங்கில் இந்த நாள் இத்தனை மணி அளவில் முறைகேடு நடந்ததை கண்டு பிடித்தோம். அதற்க்கு சாட்சியாக அருண் குமார் என்ப்படும் இந்த நபர்.. இந்திய அத்யாவச பொருட்கள் சட்டபடி... பின்னர் நிறைய எழுதி இருந்தது..

நான் அவரிடம்...சரி சார் இனிமே இப்படி நடக்காதா?? பங்க் ஓனர்கள் முதல் அனைவரும் தண்டிக்கபடுவார்களா?

அது பெரிய பார்மாலிட்டி சார்.. நாங்க இவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பனும்.. அதுக்கு இவங்க பதில் அனுப்பனும்... அப்புறம் நாங்க ஆதாரத்தை எங்க மேலதிகாரிக்கு அனுப்பனும்.. பார்க்கலாம் சார்..

கண்டிப்பாக பங்க் உரிமம் தடை அல்லது வேலை ஆட்கள் பணி நீக்கம் என ஏதும் நடக்க போவதில்லை என்று தெரிந்தது..

சரி..இப்படி பிரச்சனை செய்து என்ன தான் லாபம்??

தப்பு செய்தா கண்டிப்பாக பிடிபடுவோம்.. பிடிபட்டால் மானம் போகும், பங்க் பெயர் கெட்டு போகும் வியாபாரம் பாதிக்கும் என பயம் கண்டிப்பாக அவர்களுக்கு வரும்.. வரவேண்டும்.. அது வரை திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. அவர்களை இப்படி செய்து தான் திருந்த வைக்க முடியும்..

5 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

கனவு கண்டுகிட்டே எழுதினது:

/தப்பு செய்தா கண்டிப்பாக பிடிபடுவோம்.. பிடிபட்டால் மானம் போகும், பங்க் பெயர் கெட்டு போகும் வியாபாரம் பாதிக்கும் என பயம் கண்டிப்பாக அவர்களுக்கு வரும்../

பெரும்பகுதிபெட்ரோல் பங்க்குகள் நடத்துறது 'அரசியல்வியாதிகள்' அல்லது அவர்கள் ஆசி பெற்ற அடிப்பொடிகள் தான்! இவர்களுக்கு மானமும் கிடையாது, பிடிபட்டால் பெர்கேட்டுப் போகுமே என்ற கவலையும் கெடையாது!

விழித்திடுங்கள் நுகர்வோரே விழித்திடுங்கள்னு ரேடியோ, டிவியில காதுக்குப் பக்கத்துல கொசு ரீங்காரம் செய்கிற சத்தம் அப்பப்பக் கேட்டாலும், இவங்க பார்வையில நாம எல்லாம் வெறும் கொசு தான்!

வித்யா said...

அடக்கடவுளே.

வால்பையன் said...

பிடிபட்டால் அவர்களது உரிமை பறிக்கப்படும்!
ஆயில் கம்பெனி அவர்களுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கும்!
ஈரோட்டில் ஒரு பங்க் இப்படி தான் மூடினார்கள்!

Vijay said...

பெங்களூரில் எந்த பங்கில் இந்தத் தில்லுமுல்லு நடக்கிறது என்று சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

Arun Kumar said...

வருகைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி
வருகைக்கு நன்றி வித்யா
வருகைக்கு நன்றி வால்பையன்
வருகைக்கு நன்றி விஜய்

விஜய்.. கோரமங்களா 4th block NGV கேட்க்கு எதிரே இருக்கும் பெட்ரோல் பங்க்