Friday, July 3, 2009

கொஞ்சம் புலம்பல்...




விகடன்....

இந்த விகடன் இதழ்களோடு எத்தனை பசுமையான நினைவுகள்..
வீட்டில் விகடன் வரும் நாள் அன்று சண்டை தொடங்கி விடும். யார் முதலில் படிப்பது அதுவும் 3D சித்திரங்கள் வந்த நாட்களில் யார் முதலில் கண்டு பிடிப்பது என ஜாலியான சண்டையே நடக்கும்.

குடும்பங்களில் வழக்கமாக நிகழும் இறுக்கமான நிகழ்வுகளை நெகிழ வைப்பதில் விகடனுக்கு நிகர் விகடனே..

வைர விழா நாவல் போட்டி முதல் பல ரெகுலர் போட்டிகள் வாசகர்களை விகடனோடு எப்போதும் முன் நிறுத்தி இருந்தன. விகடன் படித்தால் கிடைக்கும் Feel good என்ற மன நிலை யாரையும் புண்படுத்தாத எழுத்துகள் சுஜாதா போன்றவர்கள் தொடர்கள்..

அதிலும் நாவல் போட்டியில் வெற்றி பெற்ற கதையான கொலை வேகம் கதை இன்றைக்கும் என் favorite.

புதுமை என்றால் அது விகடன் தான்

மடிசார் மாமி என்ற தொடரில் வரைபடங்களுக்கு பதில் ஸ்ரீவித்யாவை kinetic honda வண்டியில் வைத்து புகைபடம் எடுத்தே தொடர்கதை ஓட்டத்துக்கு புது வடிவம் கொடுத்தார்கள். இது சாம்பிள் தான்..

இப்படி எத்தனை எத்தனை புதுமைகள்..


விகடன் வெள்ளி கிழமையும் குமுதம் சனிக்கிழமை அன்றும் வெளிவரும்.. சனி ஞாயிறுகளில் இந்த இதழகளை படிக்கவே விடுமுறை விட்டது போல தோன்றும்.


ஆனால் இன்று விகடன் இதழ் மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான தரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நடுநிலைமை feel good போன்ற மேட்டர்கள் என்றோ காற்றில் பறக்க விடபட்டு விட்டன.

கடந்த சில வருடங்களில் விகடனின் தரம் ரொம்பவே படாது பாடு படுகிறது

பாய்ஸ் திரை விமர்சனம்.. ரொம்ப ரொம்பவே கேவலபடித்தி இருந்தார்கள்..
நியூ திரை விமர்சனம்.. படத்தை விகடனார் ரொம்பவும் ரசித்து எழுதி கூடவே செல்ல குட்டும் வைத்து இருந்தார்கள்..

பாய்ஸ் படம் அப்படி ஒன்றும் மோசமான படமாக எனக்கு தெரியவில்லை.. ஆனால் நியூ படம் ஆபாச காட்சிகளுக்காக பின்னர் நீதிமன்றதால் தடை செய்யபட்ட படம்.. ..மக்கள் மனதை படிப்பது என்பது இது தானா??

இதை போல வால்மீகி சிவா மனசுல சக்தி போன்ற மொக்கை படங்களுக்கு சன் டிவி பாணியில் விளம்பரம் கொடுத்து சூப்பரோ சூப்பர் படம் என்று விமர்சனம் வேறு..

வாசன் தன் சொந்த படங்களை விளம்பரத்துகாக கூட விகடனை பயன்படுத்தியது இல்லை என்று எங்கோ படித்த ஞாபகம்..

தனி மனிதனுக்கு பிடிக்கவில்லை பிரச்சனை என்றால் அதை பத்திரிக்கைகளில் வைத்து பஞ்சாயத்து செய்வது வாசகர்களை எரிச்சல் மூட்டவே செய்யும்...

திமுகவையும் அதன் தலைவர்களையும் பிடிக்கவில்லை என்றால் அதை வாசகர்களிடம் திணிக்க கூடாது. சமீபத்திய பாரளுமன்ற தேர்கல் கணிப்புகள் என்று இவர்கள் ஜீவியில் கொடுத்த கணிப்புகளே இதற்க்கு சாட்சி...

அதுவும் தனிபட்ட ஆசிரியர் குழுவின் ஆட்களின் கொள்கை நிலைபாட்டிற்க்காக குப்பைகளை படிக்க வேண்டும் என்று வாசகர்களின் தலை எழுத்து இல்லை..

விகடனை படித்தால் பொது அறிவு வளரும் என்ற நிலை போய் இருப்பதும் ஒன்றும் இல்லாமல் போகும் என்ற நிலைதான் இன்று.

மருதன் எழுதும் கட்டுரைகள் இந்த ரகம் தான். இவரின் சீனா சார்பு எழுத்துகள் ...வீட்டில் சாப்பாடு இல்லை என்றால் கூட அமெரிக்கா தான் காரணம் போன்ற கருத்துகள் விகடன் போன்ற இதழில் வருவது வாசகர்களின் துரதிஷ்டம்..

இவர் ஒரு முறை அமெரிக்க கல்வி முறை தொடர்பாக வழக்கம் போல தப்பும் தவறுமாக எழுதி இருந்தார்..இதை கூட சரி பார்க்காமல் வெளியிடுகிறார்கள்.

இப்படி தான் திபேத் மக்கள் சீனா ஆதிக்கதில் மிகவும் சவுரியமாக இருக்கிறார்கள் என்று எழுதி தனக்கு தானே சந்தோஷபட்டு கொண்டார்.. இதையேல்லாம் கூட சரி பார்க்க மாட்டார்களா??

இணையத்தில் சில நிமிடங்கள் தேடினால் பல உண்மைகள் வெளிப்படும் இந்த காலத்தில் இதை போல ஆட்கள் இப்படி எழுதினால் வாசகர்களை என்ன முட்டாளாக நினைத்து விட்டார்களா??

இலங்கை பிரச்சனையை வைத்து உணர்சியை தூண்ட நினைத்தார்களோ என்னவோ சென்ற சில மாதங்களில் வந்த இவர்களின் கட்டுரைகளை இன்று படித்தால் தெரியும் எவ்வளவு உட்டாலங்கடி என்று..


சுஜாதா போன்ற பல ஆளுமைகள் ஆண்ட விகடன் இதழ் இன்று இணைய சந்தாவிற்க்காக ஈழம் பிரபாகரன் என்று ஜல்லி அடிப்பது மகா எரிச்சலை தருகிறது.. இந்த பிரச்சனையில் உண்மையை எழுதினால் வாசகர்களுக்கு மிக பயன் அளிக்கும் ...

2004 ம் வருடம் மழை பொய்த்து பஞ்சம் வந்த போது விகடன் வாசகர்களிடம் நிதி திரட்டி கூடவே கணிசமான தன் நிதியை வைத்து தஞ்சை மாவட்ட விவாசாயிகளின் வீட்டில் தற்கொலைகளை தடுத்தது.

அன்றைய விகடன் மாறாமல் இருந்து இருந்தால் இன்று இலங்கையில் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு எப்போதோ நிதி திரட்டி கொடுத்து இருக்கும்.


பெரியார் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தற்காக வழக்கு தொடர்ந்தவர் மீது ஆஸிட் அடித்த மேலும் அதை பெருமையாக சொல்லிய ஒருவரின் பேட்டி கவர் ஸ்டோரியில் வேறு...


இப்படி அடுக்கி கொண்டே போகலாம்..

என்னதான் ஆயிரம் இதழகள் வந்தாலும் வீட்டின் சகல மூலைக்குக்கும் செல்லும் இதழ என்றால் எங்கள் வீட்டில் விகடன் தான்.

இன்று விகடன் இதழை வாங்கும் இடத்திலே புரட்டி விட்டு குப்பை தொட்டியில் எறியும் மன நிலை தான் தோன்றுகிறது.

என்னவோ தெரியவில்லை விகடன் குடும்பத்தோடு குடும்பமாக இருந்த இதழ் இன்று இப்படி கெட்டு சீரழிய கண்டு பொறுக்கவில்லை..


15 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆமாம் நண்பா. 15 ரூபாய் waste. முதலில் விகடன் வந்ததுமே வாங்கிடுவேன். இப்பெல்லாம் தோணினால் தான் வாங்குறது. அவ்வளவு குப்பை ஆயிடுச்சு. என்ன பண்ணலாம் நு தெரியல. 15 வருடப் பழக்கம். வாங்காமலும் இருக்க முடியல.

Vidhya Chandrasekaran said...

ம்ம். வாங்காம இருக்க முடியல. ஆனா இப்போ ஸ்டாண்டர்டு ரொம்பவே கம்மியாயிடுச்சு.

Arun Kumar said...

ரமேஷ் ..15 ரூபாய் விகடன் சுத்த குப்பை. என்ன செய்வது??

வருகைக்கு நன்றி

வித்யா
ஆமாங்க விகடன் தரம் ரொம்பவே அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. பேசமாம விகடனை அப்பவே சன் டிவி குருப்புக்கு விற்று இருக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் ஹோஸ்டேல் ல இருக்கும்போது பஸ் ஏறி சிட்டிக்கு பொய் விகடன் வாங்குவோம். ஹோஸ்டேல் ல யார் முதல்ல படிக்கிறதுன்னு சண்டையே நடக்கும். இப்ப போரடிக்குது.

Cable சங்கர் said...

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்.. நண்பா..

நட்புடன் ஜமால் said...

புதுமை என்றால் அது விகடன் தான்\\

உண்மை தான்

அந்த புதுமை எங்குமே இல்லை இப்போ

விகடனிலும் ...

Chennaivaasi said...

Hi Arun,

Nice blog. I am visiting your blog for the first time. BTW, I totally agree with your comments. Of late, there are lot of factual errors in Vikatan that too outrageous mistakes. To name a few,

Delhi Metro E. Sreedharan was mentioned as Tamilian whereas he is a Malayali.

A wrong picture was first published as Charles Anthony sometime in Feb/Mar time frame.

When Satyam scam was exposed, they provided some funny details like s/w ppl. bill clients for their food etc.,

Even the value of the Hyd. metro details were given wrongly. This is to name a few...

Quality - Ivarthaan ungal Hero is one such? I am not sure what sort of ethics they would have when they go to the same heroes for interview or call sheet for their company.

R.Gopi said...

விகடனோட தரம் எல்லாம் போய், ரொம்ப நாள் ஆகிறது சார்.....

இப்போது, நக்கீரன் போன்ற குப்பைகளுடன் போட்டி போட்டு கொண்டு இருக்கிறது.....

அதுவும் அவர்கள் தயாரிப்பில் வந்த படங்களுக்கு கொடுக்கிற பில்ட்-அப், மற்றும் மார்க், ............. இவங்கள யாருமே இனிமே காப்பாத்த முடியாது......

வால்பையன் said...

வியாபாரிகள் சிலநேரம் இம்மாதிரி சறுக்குவதும் உண்டு!

rama said...

I fully agree with your comments.I still continue to read Vikatan because of old habit.
The glorification of leftist nonentities by Marudhan is totally ridiculous.Some of the information they give about US and West European countries is completely false and unchecked.The Sri Lankan garbage they put out is hilarious to read.

Arun Kumar said...

நன்றி கேபிள் சார்
நன்றி ஜமால்

Arun Kumar said...

Hi chennaiVasi
i agree with your comments.
the vikatan should their tactics and should do the changes in their ideas

otherwise they are only one going to losse

Arun Kumar said...

கோபி வால்பையன் ரமா
பின்னோட்டத்துக்கும் வருகைக்கும் நன்றி

priya suresh said...

unmai unmai unmai.. vikatan -i ninaithu naan azhaadha naalae illai

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம்..நான் எங்கள் வீட்டில் 30 வருடங்களாக வாங்கி வந்த விகடனை ஒருவருடமாக நிறுத்தி விட்டேன். வாரம் 15 ரூபாய் மிச்சம்.