
இந்தியில் சென்ற வருடம் வெளியான “ a Wednesday " படம் தமிழ் சாயம் பூசி வெளி ஆகி இருக்கிறது.
இந்தியில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்தபடம் தமிழில் எப்படி வந்து இருக்கிறது ??
ரொம்ப ரொம்ப சாதாரண கதை ..
அதுவும் சில கதாபாத்திரங்களை மட்டும் சுற்றி வரும் கதை..
சென்னை நகரில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்து போலிஸை மிரட்டும் சாதாரண கமலஹாசன்,
போலிஸ் அதிகாரியாக மோகன்லால்..பின்னர் படத்தில் எனக்கு தெரிந்த ஒரே முகம் லட்சுமி மட்டுமே..
4 மணி நேரங்களில் நடக்கும் சம்பவங்கள், குண்டு வெடித்ததா? ஏன் குண்டு வைத்தார்??
எப்படி சொல்லி இருக்கிறார்கள்..??
நம்மவர் கெட்டப்பில் கமல் ...
பென்ஸ் காரில் சனிக்கிழமைஆபிஸுக்கு வரும் CEO போல இருக்கிறார். ட்ரிம் செய்யபட்ட தாடி ஒரு காஸ்ட்லியான கண்ணாடி வேறு.. common man என கண்கள் நம்ப மறுக்கிறது. உன்னை போல ஒருவன் ரேசன் கடை வரிசையில் கடைசியாக நிற்பவன் என வசனம் பேசும் போது சம்ம காமேடி.
இந்தியில் நஸ்ருதின் ஷா எப்படி அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை உடை நடை பாவனைகளில் தயார் செய்து கொண்டு நடித்தார் என்பதை கமல் கவனிக்கவில்லை போலும். ஒரு நடுத்தர வர்க மனிதனின் கலக குரல் போல் இல்லாமல் corporate company board meetingல் பேசுவதை போல இருக்கிறது..
எல்லா இடத்திலும் அடிபட்ட ஒரு சாதாரண இந்திய குடிமகன் வேடத்திற்க்கு ..சாரி கமல்ஜி உங்களுக்கு சற்றும் பொருத்தமாக இல்லை.
மோகன்லால்..
விறைப்பான காவல் அதிகாரியாக...முகத்தில் பதட்டம் தெரிய படம் முழுக்க மலையாள தமிழில் பேசுகிறார். எதுவும் ஒட்டவில்லை.
மேலும் பல புது முகங்கள் படத்தில் இருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.
இசை
படத்தில் பாடல்கள் இல்லை.. இதை போன்ற கதைக்கு பிண்ணனி இசை வலிமையான பிண்ணனி இசை தேவை..சென்ற வாரம் வந்த ஈரம் படத்தில் தமனின் பிண்ணனி இசை மிகசிறந்த உதாரணம்..
பிண்ணனி இசை மகா சொதப்பல். கதையில் ஒட்டவே இல்லை. சுருதி மேடம் பிண்ணனி இசை என்றால் தெரிந்து கொள்ள இளையராஜா படங்களை பார்க்கவும்..முடியவில்லை என்றால் சென்ற வாரம் வெளி வந்த ஈரம் படத்தையாவது பார்த்து தெரிந்து கொள்ளவும்.
படத்தில் வசனம் சில இடங்களில் எழுந்து உட்கார வைக்கிறது.
வழக்கம் போல கதையில் ஒட்டாத தேவையே இல்லாத கடவுளை பற்றிய விவாதங்கள்.. இந்த முறை கலைஞர் கருணாநிதியின் மிமிக்கிரி குரலில் ..
விறுவிறுப்பான காட்சி அமைக்க நினைத்து எடுத்து இருக்கிறார்கள், கூடவே கமலை மட்டுமே நம்பி படத்தை எடுத்து இருக்கிறார்கள்.
இந்தியில் கடைசி 15 நிமிட காட்சிகள் வசனங்கள் படத்தை பலமாக உச்சத்திற்க்கு கொண்டு சென்று விடும். இங்கே வசனங்களில் அழுத்தம் இல்லை.. முக்கியமாக படத்தை தமிழ் நாட்டு சூழலில் சொல்வதில் பல மாக சறுக்கி இருக்கிறார்கள். சொல்ல வந்த கருத்துகள் மிகவும் சிறப்பானதாக இருந்தாலும் சொன்ன விதத்தில் மனதில் எதுவும் பதியவில்லை..
உன்னை போல ஒருவன் - இந்தி டப்பிங் சீரியல் பார்க்கிற உணர்வு.
32 comments:
super review
another flop to kamal
வயிற்றெரிச்சல் விமர்சனம், படம் சூப்பர் ஹிட் என சகலரும் சொல்கின்றார்கள். நிச்சயமாக இந்த விமர்சனம் எழுதியவர் ரசனை இல்லாதவர்.
உலக நாயகன் தெய்வ பிறவி கமல் படத்தை ரசிக்க தெரியாதவன் சுத்த மடையனாக இருக்க மட்டுமே சாத்தியம்
அதெப்படி ஐயா இப்படி கண்மூடித்தனமான ரசிகர்களா இருக்கீங்க? இந்த விமர்சனத்துல தொண்ணூறு சதவீதம் உண்மைய தான் சொல்லிருக்காங்க. ஹிந்தி படத்த முதல்ல பார்த்துட்டு அப்புறம் இந்த படத்த பாருங்க. அப்பறம் தெரியும் வித்தியாசம். புலிய பாத்து பூனை சூடு போட்டுகிட்ட கத தான். கமல் மிகச்சிறந்த நடிகர் தான், ஆனால் நஸ்ருதீன் ஷாவின் இயல்பு கமலிடம் இல்லை.
//
உன்னை போல ஒருவன் - இந்தி டப்பிங் சீரியல் பார்க்கிற உணர்வு.//
இந்த படத்துல ரஜினி நடிச்சிருந்தா என்ன சொல்லியிருப்பிங்க தல!
//தெய்வ பிறவி கமல் //
இன்னும் கோவில் கட்டலையா!
பூசாரி
அருமையான படம்.
Those who saw 'A Wednesday', will defnitely not like 'unnai-p-pol oruvan'. Kamal is not reflecting the common man
U dont have cinema knowledge thats why u comment like this. in tamil we call suriyani paarthu naai kuraitha kaithai - the same thing u doing.
The Movie is very good! Everybody says that movie is blockbuster!
Your review clearly shows your stomach fire :)
தலைவரு கந்தசாமிய சூப்பர் படம்னு சொன்னவர்ல .. இவருக்கு எப்படி இந்த படம் பிடிக்கும் ..
//உன்னை போல ஒருவன் - இந்தி டப்பிங் சீரியல் பார்க்கிற உணர்வு.//
வெளங்கிரும் .. இவர பொருத்தவர குசேலன் தான் அருமையான ரீமேக் போலருக்கு ...
Unnaipol Oru Oruvan Openings
Kamal Haasan-Mohan Lal starrer ‘Unnai Pol Oruvan’ is all set to hit the screens this weekend. The plans over online opened up yesterday and today directly in theatre counters. But unfortunately, it wasn’t much a grand scenario to witness that there weren’t much gala and the tickets are slowly getting sold up.
On the dot, it’s all because of the fact that everyone have watched the ‘A Wednesday’ across all the centres. Even when the trailers were screened at theatres, there weren’t much big welcome from the audiences.
Maybe, the film would go for a slow pick-up through word of mouth.
http://www.kollywoodtoday.com/news/unnai-pol-oruvan-witnesses-mediocre-opening/
@super review
another flop to kamal@
thanks your comments about the review
@வயிற்றெரிச்சல் விமர்சனம், படம் சூப்பர் ஹிட் என சகலரும் சொல்கின்றார்கள். நிச்சயமாக இந்த விமர்சனம் எழுதியவர் ரசனை இல்லாதவர்.@
எல்லாரும் என்றால் யார், கமல் ரசிகர்களா?? சாதாரண படம் பார்க்கும் ஆட்களை கேட்டு பாருங்க பாஸ்.
என் ரசனை தொடர்பான கருத்துக்கு மிக்க நன்றி
@உலக நாயகன் தெய்வ பிறவி கமல் படத்தை ரசிக்க தெரியாதவன் சுத்த மடையனாக இருக்க மட்டுமே சாத்தியம்@
ரொம்ப ரொம்ப நன்றி
@அதெப்படி ஐயா இப்படி கண்மூடித்தனமான ரசிகர்களா இருக்கீங்க? இந்த விமர்சனத்துல தொண்ணூறு சதவீதம் உண்மைய தான் சொல்லிருக்காங்க. ஹிந்தி படத்த முதல்ல பார்த்துட்டு அப்புறம் இந்த படத்த பாருங்க. அப்பறம் தெரியும் வித்தியாசம். புலிய பாத்து பூனை சூடு போட்டுகிட்ட கத தான். கமல் மிகச்சிறந்த நடிகர் தான், ஆனால் நஸ்ருதீன் ஷாவின் இயல்பு கமலிடம் இல்லை.@
நான் நினைத்தை நீங்களும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்
கமலை ஏதும் சொன்னால் அடித்து போட்டு புரட்ட பெரிய கூட்டமே இருக்கிறது )
//இந்த படத்துல ரஜினி நடிச்சிருந்தா என்ன சொல்லியிருப்பிங்க தல!//
வாங்க வால் சார், ரஜினி நடித்து சொதப்பீருந்தாலும் இதையே தான் சொல்லி இருப்பேன்
//Those who saw 'A Wednesday', will defnitely not like 'unnai-p-pol oruvan'. Kamal is not reflecting the common man//
thanks boss, i too feel the same
//U dont have cinema knowledge thats why u comment like this. in tamil we call suriyani paarthu naai kuraitha kaithai - the same thing u doing.//
hhey common, cool down.
this movie is really not worth to watch. please dont try to deviate the fact
@The Movie is very good! Everybody says that movie is blockbuster!
Your review clearly shows your stomach fire :)@
dont come to conclusion that everybody says.. who are they ? none other than kamal fans.
let wait for neutral reviews then you will realize ...
//வெளங்கிரும் .. இவர பொருத்தவர குசேலன் தான் அருமையான ரீமேக் போலருக்கு //
வாங்க கந்தசாமி அடிக்கடி வாங்க
உன்னை போல் ஒருவன் படத்தை பார்த்துட்டு நான் சொல்வது சரியா தவறான்னு சொல்லுங்க
Could you please tell us how a common man should be...
பாவம் இந்த தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் நிஜ ஹீரோக்களை போற்ற தெரியாமல் சினிமாவில் நடித்தால் தெய்வ பிறவியா?
In fact a common poor man can't do what Nashruthin shah is doing... Only a common man from Upper middle class(like kamal did) can do all the stuff. To make a RDX bomb, have a laptop, lot of SIM cards and hi-fi technologies he is using can't be used by a common man like Nashruthin Shah. thats the reason why Kamal improved the role's richness!
அது எப்படி சார், சாதரண ஒரு மனிதனுக்கு வெடிகுண்டு தயாரிக்க, தகவல் தொடர்பு தொழில் நுட்பங்கள், ஒரு ஜீப் எல்லாம் கிடைக்கும். அதனால் கமலின் தோற்றம் பேசும் தோரணை corporate head போல இருந்தாலும் சரியாக பொருந்துகிறது.
சின்ன சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நல்ல முயற்சி. உங்கள் விமர்சனத்தில் நடுநிலை கண்டிப்பாக இல்லை.
http://www.newkerala.com/nkfullnews-1-115019.html - Please go thru the above link.....
If it is a flop, then it is a flop because of the audience not because of the actors.
whoever says that this movie is not upto the mark or a worst story or abt the performance, we are not used to these kind of bomb blast and kamal has said the samething in the movie, that tamilnadu is amaidhi poonga and we are not bothered to feel the pain of the other state.
one of the best movie in Hindi and
Personally I feel the best part of the movie is Music. Great Job Shruthy ! !
Only thing is there is no need for Mohanlal or Kamalhasan to do this movie. Its a mistake from Rajkamal Movies.
No need for kamal to prove to be the best actor to those who expect him to copy நஸ்ருதீன் ஷா ! !
See this movie as உன்னைப்போல் ஒருவன் not as "A Wednesday'
To be Honest - வயிற்றெரிச்சல் விமர்சனம், படம் ஹிட்டா இல்லையா என்பது விரைவில் தெரிய வரும்- ஆனால் விமர்சனம் மிகவும் மட்டம்.
கந்தசாமியின் விமர்சனம் படித்துவிட்டு - மறுபடியும் சந்திப்போம்.
Please Read the comments....
If your are not able to comment properly, please read other blogs and do the comment.
Common Man ku Edhu pidikkadhu... Because it says the truth.
அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்றுகூட தெரியத சாமனியனுக்கு இந்த படம் சமர்பணம் என்று கமல் சொல்லவில்லையே ! ! ! அதற்காக சந்தோசபட்டுக் கொள் ! !
நிஜத்தில் ரஜினி ரசிகர்கள் போல் கமல் ரசிகர்கல் இல்லை அதனால் தான் உங்கள் பதில்களும் இன்னும் ப்ரசுராமகிரது
First time i am visiting your site for this movie review.......பின் கந்தசாமி review பார்தேன் மிக்க அதிர்ச்சி.......உங்கள் "உன்னை போல் ஒருவன்"விமர்சனம் நடுநிலையானது இல்லை.....sorry
oru muttal in vemarchanam vera enna sola
Ihave seen the movie in Tamil and Hindi.
If you want to compare the versions you are a fool because the concept itself totally changed.
In Hindi, he will say abt the bomb blast where as in tamil he said about the terror happened to a pregnant sister and he will talk about the bomb blasts.
Before giving any comments about a great movie, please see it twice, thrice
Highly idiotic review by you.
Visit the site to see the comments.
http://thatstamil.oneindia.in/movies/review/2009/09/19-unnaipol-oruvan-review.html
Blog Readers - please dont read this blog.
Please watch one good movie not for kamal atleast we will get some good thoughts about the terror and the pain of terrorism.
Kamalin Pugazh ungal blog-al sindaindhu vidadhu aanaal kamal-ai vimarsippadhaal ungallukku pugazh illai.
Vaazhga nalla thirai padangal...
Ozhiga Pullurivigalin vimarsanagal.
4 fights, 4 songs virasamana kaatchigal konda ka ka sorry nondasamy padathai vida edhu 1000 madangu nalla padam.
Paarthavargal purindhu solluvaargal.
அடுத்தவர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்துகிறவர்கள் & திருமண பந்தம் தேவை இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் கமலை கண்டிப்பாக பாராட்டுவார்கள்... உங்களை சொல்ல வில்லை அய்யா...
நல்ல விமர்சனம் பாராட்டுக்கள்
நானும் தான் wednesday பாத்தேன் பொய் நல்லா பாரு இரண்டு படத்தையும்
படம் எதிர்பார்த்த அளவு இல்லை...
சிங்கப்பூரில் இந்த படத்திற்கு வரவேற்பு இல்லையென்றும், லீவு நாளில் கூட 50% சதவீதமே அரங்கு நிரம்பியதென்றும் என் நண்பன் கூறினார்...
நான் துபாயில் பார்த்தேன்... ரம்ஜான் லீவு என்பதால் திரையரங்கம் ஹவுஸ்ஃபுல்...
படம் சுமார்.... விறுவிறுப்பு குறைவு....
vanakam..
saare, umakku kamal meethu yethavathu kovama?? illai.., yetho commercial padam matiri irukum nu yethir paatingalo?? inthe padathil innoru hero music than. music is 1st class. ilaiyaraja style vere. rahman style vere. athu matiri shruti style vere. music nallathan irukku. shruti hv done good job. inthe matiri padathuku ellam, ilaiyeraja sir kitte poi, "la..la..la.." nu music pode solla mudiyathu. karanam, suit agathu..ama, neenge enge sangitham padichinge??
Arun,
Good review.You nailed the common man stuff.seriously think kamal is not fit to even hold a candle for nasrudeen.you would think that kamal fans are knowledgeable and open minded.But unfortunately they are not, they are as fanatic as rajini fans.Kamal fan's unfortunately , dont look of acting nuances or subtle changes.Every thing has to be loud, large and boisterous that is acting for them.Can't help it.
Post a Comment