Tuesday, January 27, 2009

நாட்டு நடப்பு


ஸ்லம் டாக் மில்லியனர் -

சாதாரணமாக இதை போல படங்களை போஸ்டரில் கூட பார்க்க மாட்டேன்.
ஏ ஆர் ரகுமான் பின் ஆஸ்கர் கனவுகள் அலுவலகத்தில் அரட்டையில் கேட்டது இணையத்தில் படித்தது என பல சக்திகள் இந்த படத்தை பார்க்க தூண்டியது.

மும்பை சேரி வாழ்க்கையை படமாக காட்டியதில் சில மிகை இருந்தாலும் பலவும் உண்மையே. மும்பையில் ஒவ்வோரு முறை விமானம் தரையிரங்கும் போது இரு பக்கமும் நெருக்கமான கூடுகளை போல சேரிகளும் ஆஸ்படாஸ் கூரை வேய்ந்த குடிசைகளுமே இரு புறமும் தென்படும்.

மாகிம் தாராவி என மும்பையில் சேரிக்களுக்கு பஞ்சமில்லை. தனி தேசம் தனி வாழ்க்கை..

இந்த சேரி மக்களின் வாழ்க்கையை இது வரை நான் எந்த இந்திய படத்திலும் பார்த்தது இல்லை.


இந்தியாவின் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை இதை விட சிறப்பாக காட்ட முடியாது.

- ஜெய் ஹோ

_*_

பொருளாதார மந்த நிலையால் பெங்களூரில் வீடு வாடகை முதல் புது வீடு விலை வரை எல்லாம் மலிவாகி விட்டது என டைம்ஸ் ஆப் இந்தியா முதல் சிக்னலில் பேப்பர் விற்பவர் வரை அனைவரும் கூவி கூவி சொல்றாங்க..

விசாரித்து பார்த்தால் 10,000 வாடகை வேண்டாம் ,,9,500 மட்டும் போதுமாம்..
double bedroom apartment கூட விலை குறைப்பும் இதே கதை தான்.. பெரிதாக விலை குறைந்தது போல தெரியவில்லை.. ஆனால் விலை குறைப்பு ஏற்பட்டது போல ஒரு hype அவ்வளவுதான்..

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் உண்மையான தாக்கம் இது வரை இந்தியாவில் அவ்வளவாக உணரபடவில்லை என்பதே நிஜம்.

இனி வரும் மாதங்களில் கூட பெரிதாக மாற்றம் இருக்காது என்றே நினைக்கிறேன்..

_*_


விகடன் இதழ் + அதன் இணை இதழ்களின் தரம் படு கேவலமாக சென்று கொண்டு இருக்கிறது. முன்பு ஆனந்த விகடனை படித்தால் சில புதிய விழயங்களை கற்று கொள்ளலாம் ஆனால் இப்போதோ அதை படித்தால் இருப்பதும் கழண்டு விடுமோ என்ற பயமாக இருக்கிறது.. மருதன் என்பவர் எழுதும் பாஸ்போர்ட் என்ற கட்டுரைகள்.. தமிழில் பிளாக் எழுதுகிறேன் என்று சாதி சண்டை போடும் எழுத்துகளே மேல் என இவர் எழுதுவதை படிக்கும் போது தோன்றுகிறது..

ஜீவி ..எப்பவுமே உடான்ஸ் தான்.. இப்ப இலங்கை பிரச்சனை வேற.. சில வாரமாகவே பிரபாகரன் புகழ் பாடல்தான்...கூடவே அவரின் மகன் கதை வேறு!!

இனி வீரப்பன்(ர்) , நொச்சி குப்பம் வீரமணி ஆட்டோ சங்கர் போன்ற மறைந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை விகடன் தொடராக வெளியிடலாம்..

அதை எழுத வெல்டிங் சங்கர் போன்ற எழுத்தாளர்களை எழுத சொல்லாம்..

இதை எல்லாம் பரவாயில்லை ஏதோ டைம் பாஸ் என்று பொறுத்து கொள்ளலாம்..

. தேவை இல்லாமல் இந்தியா ராணுவத்தை வம்புக்கு இழுத்து இந்திய விமான படையையும் கேவலமாக எழுதி இருக்கிறது விகடன்.

தமிழ் வெறியை தூண்டி விடுவது ஏதோ தமிழர்கள் மட்டும் தான் உலகில் அனைத்து பேராலும் அடிமை படுத்தபடுவதை போல மாயையை ஏற்படுத்துவது போல சில்லறை வேலைகளை அரசியல்வாதிகள் தான் செய்து கொண்டு இருந்தார்கள்.

இப்ப ஜீவி முறை போலும்..

9 comments:

வால்பையன் said...

கலந்து கட்டி அடிச்சிருக்கிங்க!

ஸ்லம்டாக் மில்லியனர், இந்தியாவில், மும்பையில் ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட படம். ஆனால் அது மொத்த இந்தியாவையும் பிரதிபலிப்பது போல் காட்டப்பட்டுள்ளது தவறு. படத்தின் திரைக்கதைக்கு வேண்டுமானால் சலூட் கொடுக்கலாம்.

வெளிநாட்டவர் எடுக்கும் இந்திய படங்கள் அனைத்தும் இந்தியாவை கேவலமாக தான் சித்தரிக்கின்றன.

Vidhya Chandrasekaran said...

எல்லா விஷயத்தையும் நல்லா அலசிருக்கீங்க:)
அதுவும் அந்த வாடகை மேட்டர் சூப்பர்.

தேவன் மாயம் said...

இந்த படம் பற்றி
பலவேறு
கருத்துகள்
வந்துள்ளன.
எனினும்
ஏழ்மையை
வைத்து
எடுத்த படம்
என்பதே வருத்தம்..

Anonymous said...

Hi, i have to give a little longer comment on Ananda Vikatan. When I was studying in school, i used to read Vikatan and Kumudam in the public library. Among the people literally a fight will happen to pick up the Vikatan. Once I could afford to buy, at any cost I used to buy Vikatan and read but unfortunately I stopped buying it as I felt it does not worth the money.

Arun Kumar said...

நன்றி விஜி.
நான் எந்த திரட்டி அல்லது புக்மார்க்கிங் தளத்திலும் இணைய விரும்பவில்லை.

வருகைக்கு நன்றி

//viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி//

Arun Kumar said...

வால்பையன் said...

கலந்து கட்டி அடிச்சிருக்கிங்க!

ஸ்லம்டாக் மில்லியனர், இந்தியாவில், மும்பையில் ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட படம். ஆனால் அது மொத்த இந்தியாவையும் பிரதிபலிப்பது போல் காட்டப்பட்டுள்ளது தவறு. படத்தின் திரைக்கதைக்கு வேண்டுமானால் சலூட் கொடுக்கலாம்.

வெளிநாட்டவர் எடுக்கும் இந்திய படங்கள் அனைத்தும் இந்தியாவை கேவலமாக தான் சித்தரிக்கின்றன./

நன்றி வால்பையன்..

ஒட்டு மொத்த இந்தியாவையும் பிரதிபலிக்கவில்லை.. பொதுவாக இந்தி சினிமாவில் அதுவும் மும்பையை அடிப்படையாக வரும் படங்களில் மும்பை வாழ் மக்கள் ஏதோ செல்வ செழிப்பில் வாழ்வது போலதான் காட்டுகிறார்கள்.

ஆனால் உண்மை வேறு.

உண்மை கசக்கதான் செய்யும்.

Arun Kumar said...

// வித்யா said...

எல்லா விஷயத்தையும் நல்லா அலசிருக்கீங்க:)
அதுவும் அந்த வாடகை மேட்டர் சூப்பர்.

//

ஜீனியர் லேடி சுஜாதாவே சொல்லிட்டாங்க :))

ரொம்ப நன்றி வித்யா

Arun Kumar said...

//Blogger thevanmayam said...

இந்த படம் பற்றி
பலவேறு
கருத்துகள்
வந்துள்ளன.
எனினும்
ஏழ்மையை
வைத்து
எடுத்த படம்
என்பதே வருத்தம்.//

வருகைக்கு நன்றி தேவன் மாயம்

ஏழ்மையை வைத்து மட்டும் சொல்லபடவில்லை

இந்தியாவின் மத சண்டைகள், பழக்க வழக்கம் கலாச்சாரம் என மறுபக்கத்தையும் வெளிபடையாக சொல்லி இருக்கிறார்கள்

Arun Kumar said...

// Anonymous said...

Hi, i have to give a little longer comment on Ananda Vikatan. When I was studying in school, i used to read Vikatan and Kumudam in the public library. Among the people literally a fight will happen to pick up the Vikatan. Once I could afford to buy, at any cost I used to buy Vikatan and read but unfortunately I stopped buying it as I felt it does not worth the money.//

நீங்கள் சொல்வதும் சரியே..
vikatan is not worth for 15 Rs

சுஜாதா முதல் பல அருமையான எழுத்தாளர்கள் கலந்து கட்டி பிரகாசித்த விகடன் இன்று இப்படி விணாகிறதே என்ற ஆதங்கம் தான்.