வீணா போன நெய் ரொட்டிக்கு 500 ரூபா சொல்லி எத்தனை பேர் பர்ஸை பதம் பார்த்து இருப்பாங்க..
தீ விபத்தில் யாருக்கும் காயம் கூட இல்லை. தீ அணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் நன்றாக இருந்ததால் எல்லாரும் happy.. என்ன PVR ல் பாதி படத்தோடு எல்லாரையும் திரும்ப அனுப்பி விட்டார்களாம். முழு படமும் பார்க்க முடியவில்லையாம்..
இது இன்றைய நிலை.. சனி கிழமைகளில் நடக்கவே முடியாத அளவிற்க்கு பரபரப்பாக இருக்கும் போரம் இன்றைக்கு பொது வேலை நிறுத்தம் செய்த்தது போல இருந்தது..
எல்லாம் அக்னி பகவான் திருவிளையாடல் தான்.
landmarkல் இன்றைக்கு தான் மிதிபடாமல் பெரிய Qவில் நிற்க்காமல் எல்லா சிடியையும் புரட்டி பார்த்துட்டு அப்படியே வெளியே வரமுடிந்தது :)
*- *
பொதுவாக கர்நாடகா பதிவெண் வண்டிகளில் சிலவற்றில் கர்நாடகா மாநில கொடி இருக்கும்.. இன்றைக்கு முதல் முறையாக ஒரு தில்லி பதிவு வண்டியில் கர்நாடகா கொடி இருந்ததை பார்த்தேன்.. பெஙளூரில் கர்நாடகா கொடி இல்லை என்றால் காரை உடைத்து விடுவார்கள் என்று யாராவது புரளி கிளப்பி இருப்பாங்களோ !!
4 comments:
i was present in the food court when the incident had happened.luckily the mall was not crowded that day.the worst part is they had given the red alert and people were rushing to get out of the area adnd the security persons in the gate were busy collecting the parking fees. it was terrible!
//i was present in the food court when the incident had happened.luckily the mall was not crowded that day.the worst part is they had given the red alert and people were rushing to get out of the area adnd the security persons in the gate were busy collecting the parking fees. it was terrible!//
hi thanks for sharing the information.
forum மாலில் பைக் பார்க்கிங் மினிமம் 15 ரூபாவாக ஆக்கி விட்டார்கள்.
அதை விட கொடுமை.. இரு வாரங்களுக்கு முன்னர் வரை monday to sundayக்கு அருகில் BMTC பார்க்கிங் ஏரியா இருந்தது..
இப்ப அதுவும் இல்லை.. நோ பார்கிங் போர்ட்தான் இருக்கு,
வர வர போரம் போகவே வெறுப்பாக இருக்கு :))
போன தடவை பெங்களூர் வந்தபோது போரம் போனேன். கடைகளின் எண்ணிக்கை என்னமோ கம்மிதான். ஆனால் food court நல்ல வெரைட்டி:)
புட்கோர்ட் போரம்மில் தானே இருகிறது!
அந்த காம்ப்ளக்ஸில் ஒருமுறை பேண்ட் எடுத்திருக்கிறேன். ந்ல்லாமே அநியாயவிலை தான்!
உயிரிழப்பு இல்லாதவரை சந்தோசம்
Post a Comment