Wednesday, February 4, 2009

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
கூட்டமாக ஒரு ப்ளாட்டை ஆக்கிரமித்து இருக்கும் பேச்சிலர்களை வீடு தேடி சென்று பார்பது புது அனுபவமாக இருக்கும்.


ரீபோக் ஷூ , ரேபான் க்ளாஸ் போட்டு இருக்கும் ஆட்கள் கிழிந்த சலவை செய்யாத சாக்ஸ்தான் போட்டு இருப்பத்தை துப்பறியும் புலிகள் இல்லாமலே கண்டுபிடித்து விடலாம்..

நானும் சாப்ட்வேர் இன்ஜினியருதான் என்று சொல்லி கொள்ள ஒரு உடைந்த கம்பூட்டரு கூடவே கம்பெனி லாப்டாப்...

பிறந்ததிலிருந்து சலவை பாக்கியம் கிடைக்காத தலையணை உறைகள்.. படுக்கை விரிப்புகள் .. தினமும் எப்படிதான் குப்பை மேட்டில் படுத்து தூங்கி காலையில் ஹார்லிக்ஸ் பேபி போல வராங்களோன்னு நானும் பல நாள் வேலை வெட்டி இல்லாம R & D செய்து இருக்கேன்..


சனி ஞாயிறுகளில் இதை போல ஆட்கள் வீட்டிற்க்கு சென்றால் நிறைய வெட்டி கதை பேசலாம் ஜாலியாக பொழுது போகும்.

இப்படிதான் சில மாதம் கும்பல்ல ஒருத்தரு அப்பதான் Accentureல் புதுசா ஜாயின் செய்து இருந்தாரு.. கூடவே அவருக்கு ரெண்டு டப்பா நிறைய business card கொடுத்து இருத்தாங்க...

அவரும் அதை கர்மசிரத்தையாக வீட்டிற்க்கு வரும் எல்லாருக்கும் விநியோகம் செய்து கொண்டு இருப்பார்.


I work for Accentureன்னு அவரு சொல்லும் போது அவரை முகத்தை பார்க்க வேண்டுமே.. ஏதோ Accentureக்கு வேலை பார்க்கவே பூலோகத்தில் அவதாரம் எடுத்தவர் போல லுக் வேற விடுவாரு.

யாராவது Accentureயை விட சிறிய நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களை கண்டால் போது சாரை பிடிக்க முடியாது.. சில நேரம் டயலாக் வேற வரும்..

நான் Accenture என்ற பெரிய்ய்ய்ய்ய கம்பேனில வேலை பார்க்கிறேன்.. நீங்க....

ஏதோ Accenture CEOவே இவர்கிட்ட தான் ரிப்போர்ட் செய்வது போல நினைப்பு வேற. விடுமுறை நாள்ன்னா தொல்லை தாங்க முடியாது.. இவங்க கிட்ட வேற சட்டையே இருக்காது போல..

நானும் Accentureல் chair keyboard எல்லாத்தையும்தேய்து இருக்கும் அனுபவம் இருப்பதனால் நமக்கு தெரியாம போச்சேன்னு Feel வேற பட்டு இருக்கேன்..

கம்பெனி ஓசில கொடுத்த t shirtடை போட்டுகிட்டு அலைவாங்க..

.சீன் வேற தாங்க முடியாது ..

ஏதோ ஆன் சைட் ஆளுங்க இவனுங்க இல்லாம Projectயை முடிக்கவே முடியாது போல பேச்சு..


அதுவும் ஆன் சைட் போய்ட்டு வந்த பின்னாடி பசங்களை பிடிகக்வே முடியாது.

மறக்காம அந்த நாட்டில் இருந்து ஒரு காமேரா + shoe வாங்கி வந்துருவாங்க..

அப்புறம் செடி கொடி இலை பூ தார் ரோடு மேகம் அருவி பூச்சி கொசு ன்னு எதையும் விடாம ஒரே போட்டோ மயம்தான்..

அப்புறம் American Accentல் மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்தற மாதிரி எப்ப பார்த்தாலும் cool cool தான்..


தினமும் காலையில் சீக்கிரமே எழுந்து கழுத்தில் கம்பெனி அட்டை மாட்டி கம்பெனி பஸ்ஸில் ஹிண்டுவோ அல்லது ஏதோ ஒரு ஆங்கில பத்திரிக்கை படிக்காம இவங்கலால் இருக்கவே முடியாத்துன்னு நானும் பல நாள் நினைச்சு இருக்கேன்...

பல பேரு இதை போல பிராண்டு பெருமை பிடித்து பிராண்டி அலைவதை சில மாதங்கள் முன்பு வரை அடிக்கடி பார்த்து இருக்கிறேன்..

ஆந்திராவில் இருந்து IBM Accentureக்கு நேராக ஏதாச்சும் Train விடுறாங்களோ தெரியலை..

எங்க கேட்டாலும் 'பாகுன்ன்னாரா' தான் கேட்க்கும்..


ஆன் சைட்ல என்ன தான் Client placeல் டொங்கு இடத்தில் வேலை பார்த்தாலும் Breanchல் வாயை கட்டி வயித்தை கட்டி சேர்த்த காசை weekendல் வெளியே போய் அடுத்தவனோட கார் முன்னாடி ஏதோ சொந்த கார் மாதிரி உரிமையாக போட்டோ எடுத்து கொள்வது சாப்ட்வேர் ஆட்களின் மரபு..


அதை இந்தியாவில் இருக்கும் டீம் ஆட்களிடம் மறக்காம உடனே அனுப்பிட்டு அவனுங்க வயித்தெரிச்சலை தூண்டி விடனும்..
அதுவும் ஒரு ethics..


சரி போட்டோ எடுக்கும் போது கூடவா நல்ல T Shirt போட்ட்டுக கூடாது.. அங்கேயும் அதே கம்பெனி பெயர் போட்ட T Shirt..தான்.

.
அப்புறம் தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க போட்டோ ஒன்று கண்டிப்பாக இருக்கும்.. போனை காதில் வைத்து கொண்டு பேசுவதை போல நடிக்கும் போட்டோ தான்..இவனுங்க ஐ போன் வாங்கினா கூட அதில் கூட பேசுவதை போல நடிக்கும் போஸை மட்டும் விட மாட்டேஙறாங்க..

Infy நாராயணமூர்த்தி ஒருமுறை சொன்னாரு.. வேலை பார்க்கும் கம்பெனியை நேசிக்காதே உன் வேலையை நேசி என்று..

கேட்டாதானே.

.
6 மாசம் முன்னாடி Accentureல் புது பிராஜக்ட்டில் ஆன் சைட் கிடைக்கவில்லை என்றதும் உடனே சத்யத்துக்கு நண்பர் வேலை மாறினார்.. ..

சென்ற ஞாயிறு அவரை மீண்டும் அதே பேச்சிலர் வீட்டில் பார்த்தேன்.. என்னை பார்த்தவுடன் ஏதோ Times of indiaவில் முக்கியமான செய்தியை படிப்பது போல கண்டு கொள்ளாமல் இருந்தார்..

.
கொஞ்ச நேரம் கழித்து பேப்பர் என் கைக்கு வந்தது என் கண்ணில் இந்த ஜோக் தான் உடனே தெரிந்தது..

“உண்மையான காதல் என்றால் என்ன?

boy friend சத்யத்தில் வேலை பார்பது தெரிந்தும் கழட்டி விடாமல் இருப்பது”....

நீதி சொல்லும் மேட்டர் என்பதால் கடைசியாக ஒரு மெசேஜ் சொல்லபடுகிறது..

Accentureல் மட்டும் இல்லை எங்கு வேலை பார்த்தாலும் software code என்பது copy paste முறையில் மட்டுமே செய்யபடுகிறது.. வேறு எந்த முறையில் செய்யபட்டாலும் கம்பெனி அதற்க்கு பொறுப்பாகாது

15 comments:

வித்யா said...

\\“உண்மையான காதல் என்றால் என்ன?
boy friend சத்யத்தில் வேலை பார்பது தெரிந்தும் கழட்டி விடாமல் இருப்பது”....\\
ROTFL:))))))சான்ஸே இல்ல அருண். 10.30 மணிக்கு லேப்டாப்ப பார்த்து சிரிச்சுக்கிட்டிருக்கிற என்னை ரகு பயமா பார்க்குறாரு.

வித்யா said...

\\அப்புறம் செடி கொடி இலை பூ தார் ரோடு மேகம் அருவி பூச்சி கொசு ன்னு எதையும் விடாம ஒரே போட்டோ மயம்தான்..\\

நாரயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா நாரயணா:)

விஜய் said...

பாஸ் பின்னி பெடலெடுத்திருக்கீங்க. ரொம்பவே ரசித்தேன்.

இப்போ அக்சென்சர், ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால் விப்ரோ, இன்ஃபி, டி.சி.எஸ். இப்போ அந்த கம்பெனிகள்’ல வேலை பார்க்கறேன்னு சொல்லா, பெங்களூர் நாய் கூட மதிக்காது.

வால்பையன் said...

//“உண்மையான காதல் என்றால் என்ன?
boy friend சத்யத்தில் வேலை பார்பது தெரிந்தும் கழட்டி விடாமல் இருப்பது”...//

ஹா ஹா ஹா
சரியான சிரிப்பு தலைவா!
கட்டுரையும் கலக்கலா வந்துருக்கு!

Arun Kumar said...

பார்த்து சிரிங்க .. :))

வருகைக்கு நன்றி வித்யா

//நாரயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா நாரயணா:)//

ஏன் போட்டோக்கு போஸ் கொடுக்க மாட்டேங்குதா?

Arun Kumar said...

//பாஸ் பின்னி பெடலெடுத்திருக்கீங்க. ரொம்பவே ரசித்தேன்.

இப்போ அக்சென்சர், ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால் விப்ரோ, இன்ஃபி, டி.சி.எஸ். இப்போ அந்த கம்பெனிகள்’ல வேலை பார்க்கறேன்னு சொல்லா, பெங்களூர் நாய் கூட மதிக்காது.//

நன்றி விஜய்
இப்ப மட்டும் என்னவாம்..

ஆனா கதை மட்டும் மாறுது
லேப் ஆப் செய்யாத கம்பெனி எல்லாம் லாஸ்ல போகும்ன்னு கதை விட்டு அலையறாங்க

Arun Kumar said...

//ஹா ஹா ஹா
சரியான சிரிப்பு தலைவா!
கட்டுரையும் கலக்கலா வந்துருக்கு!//

ரொம்ப நன்றி தலைவா :)

observer said...

வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html

மலர் said...

American Accentல் மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்தற மாதிரி எப்ப பார்த்தாலும் cool cool தான்..

இந்த cool- க்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பது இப்பதானே தெறியுது

ஆனா இந்த t- shirt ரொம்ப ரொம்ப உண்மைங்க அதுவும் us லே இருந்து இந்தியாக்கு எடுத்துட்டு போயி விடர ரவுசுக்கு அளவே இல்லை அய்யே அய்யோ.

chinnappaiyan said...

சூப்பரா இருக்கு பதிவு...

நல்லா சிரிச்சேன்.... :-))))

ராம்சுரேஷ் said...

Cool.. (அப்ப நானும் மாரியாத்தாளுக்கு கூல் ஊத்தலாமா)

சாஃப்ட்வேர் ஆட்களின் பந்தா/அலட்டலை புட்டு புட்டு வைத்து இருக்கிறீர்கள். கலக்கல்.

வண்ணத்துபூச்சியார் said...

நல்லாயிருக்கு நண்பா. கலக்குற..

வாழ்த்துக்கள்.

நீண்ட நாள் முன் ஆன்சைட் பத்தி ஒரு பதிவு ரொம்ப ரசிச்சேன். இதுவும் சூப்பர்.

மணிகண்டன் said...

கலக்கலா எழுதறீங்க அருண்.

விடாம சிரிச்சேன்.. எங்க போகனும்னாலும் ஒரு பெர்முடா போட்டு கிட்டு வர்ற மேட்டர மிஸ் பண்ணிட்டீங்க.

ஒரு காசு said...

அடப்பாவிகளா, இப்படியெல்லமா நடக்குது ?

ஸ்ரீதர்கண்ணன் said...

அப்புறம் செடி கொடி இலை பூ தார் ரோடு மேகம் அருவி பூச்சி கொசு ன்னு எதையும் விடாம ஒரே போட்டோ மயம்தான்..

அப்புறம் American Accentல் மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்தற மாதிரி எப்ப பார்த்தாலும் cool cool தான்..

ஆந்திராவில் இருந்து IBM Accentureக்கு நேராக ஏதாச்சும் Train விடுறாங்களோ தெரியலை..

எங்க கேட்டாலும் 'பாகுன்ன்னாரா' தான் கேட்க்கும்..


Superuuuuuuuuu :))))))))))))))))