என்னதான் ஆயிரம் குற்றங்கள் சொன்னாலும் திருச்சிக்கு கீழ் இருக்கும் தமிழ்நாட்டில் வாழ்வதே தனி சுகம் தான்.
அன்பான மக்கள், கனிவான பேச்சு நல்ல உணவு.. எல்லாம் அனுபவிக்க கொடுத்து வைக்கனும்..
மதுரை கோவிலில் சுட்டப்ட்ட புகைபடங்கள்



பொற்றாமரை குளக்கரையில் அழகான ஓவியங்கள்..யார் வரைந்தது எப்போ வரைந்தது என கேட்க்க பயமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் போலி guide மயமே.. ABCD..Z வரை தெரிந்தால் போதும் உடனே guide ஆகி விடுகிறார்கள்.


பள்ளியில் படிக்கும் போது இதே போல பொற்றாமரை குள படிக்கட்டில் உட்கார்ந்து தாமரையை தேடி கொண்டு இருந்தோம்.. ..இந்த பசங்களை பார்க்க பொறாமையாக இருந்தது..
5 comments:
நல்லா எண்ஜாய் பண்ணீங்களா?
அப்புறம் உணவுகளைப் பற்றியும் ஒரு பதிவப் போடறது:)
//என்னதான் ஆயிரம் குற்றங்கள் சொன்னாலும் திருச்சிக்கு கீழ் இருக்கும் தமிழ்நாட்டில் வாழ்வதே தனி சுகம் தான்.//
திருச்சிக்கு சைடுவாக்குல இருக்குற ஈரோட்டுல வாழ்றத பத்தி என்ன நினைகிறிங்க!
:)
//பள்ளியில் படிக்கும் போது இதே போல பொற்றாமரை குள படிக்கட்டில் உட்கார்ந்து தாமரையை தேடி கொண்டு இருந்தோம்.. ..இந்த பசங்களை பார்க்க பொறாமையாக இருந்தது.. //
அப்போதெல்லாம் இங்கே ஒரு சுரங்கம் இருப்பதாகவும், அது ஒன்று திருமலைநாயக்கர் மகாலுக்கும், ஒன்று திருப்பரங்குன்றத்துக்கு செல்லுவதாகவும் கதை கட்டி விடுவார்கள்
படங்கள் அனைத்தும் அற்புதம் :-)
\\என்னதான் ஆயிரம் குற்றங்கள் சொன்னாலும் திருச்சிக்கு கீழ் இருக்கும் தமிழ்நாட்டில் வாழ்வதே தனி சுகம் தான்.\\
அப்படியென்னப்பா குற்றங்கள் :-)
தென் தமிழ்நாடு வட தமிழ்நாடு போல் தொழில் முறை வளற்சி காணாவிட்டாலும், பசுமை பொங்கும் இடங்கள். செழிப்போ செழிப்பான நிலங்கள். தரிசு நிலத்தில் கூட கடலை (நிஜ கடலை) சாகுபடி செய்கிறார்கள்.
அதிலும் மதுரை இட்லிகடைகள், ஆஹா, வாயில் போட்டாலே இட்லி கரைந்து விடும்.
என்ன ஏடாகூடமாக ஏதாவது பேசினால், அரிவாள் தான் :-)
தம்பீ..
இப்பவே மதுரை கோவிலை பார்க்கணும்போல இருக்கு..
பார்த்து பல வருஷமாச்சு..!
போயிட்டு வந்து படம் போட்டுக் காட்டினதுக்கு நன்றிகள்..!
Post a Comment