Friday, January 16, 2009

அவன நிறத்த சொல்லு ...

வர வர உண்ணாவிரதம் எல்லாம் மாட்னி ஷோ பார்பது போல ரொம்ப சுலபமாக போச்சு.. காந்தி பயன்படுத்திய மிக பெரிய ஆயுதத்தை ரொம்ப ரொம்ப கேவலபடுத்துகிறார்கள்.

உண்ணாவிரதம் என்பது அடுத்தவரை மிரட்டியோ அல்லது தான் நினைத்தது நடக்க வேண்டும் என்று பிளாக் மெயில் செய்யும் ஒரு வழி முறை அல்ல.

தான் நினைத்த காரியத்தை சாதிக்க ஆயிரம் வழிககள் இருக்கின்றன.

அரசியல்வாதிகளே தயவு செய்து உண்ணாவிரதம் போன்ற சாத்வீக முறைகளை கேவலடுத்தாதீர்கள்...

அஹிம்சை சாத்வீகம் எல்லாம் முதலில் நம்மில் இருந்தே தொடங்க வேண்டும்.

அஹிம்சை போராட்டம் மட்டும் அல்ல வாழ்க்கை முறையும் கூட..

காந்தியின் போராட்டத்துக்கு வெற்றி தன் வாழ்க்கையாக மட்டும் அல்ல பல பேரின் வாழ்க்கையாக மாற்றி காட்டினார்.

மேலும் எந்த ஒரு சாத்வீக போராட்டத்துக்கும் நியாமான காரணம் இருக்க வேண்டும்.

தவறான காரியங்களை எந்த வித போராட்டமும் நியாயபடித்தி விடாது..

கண்ணில் பட்ட மாற்று தமிழ் இயக்கதினர்களை எல்லாம் கொன்று குவித்த திலீபன் அன்று instant அஹிம்சை வாதி ஆனார் இன்று 'அடங்க மறு' என மேடைகளில் துடிக்கும் திருமாவளவன் அஹிம்சாவாதி ஆகி விட்டார்..

உலகம் ரொம்பதான் மாறி போச்சு...

80களின் கடைசியில் இந்தியாவே தலையிடாதே..
20 வருடம் கழித்து இந்தியாவே தலையிடு..

2004ல் தலைவரே பொறுத்தது போதும் போரை உடனே தொடங்கு...
2009ல் இந்தியா பொறுத்தது போதும் போரை உடனே நிறுத்து..

என்ன இந்தியா உங்க பேச்சுக்கு எல்லாம் ஆடி கொண்டு இருக்கும் தலையாட்டி பொம்மையா? இல்லை இந்திய நாட்டுக்கு இவங்களுக்கு பஞ்சாயத்து செய்வதை தவிர வேற வேலையே இல்லையா?

என்ன இவங்க சொன்னது போல நடக்கவில்லை என்றால் வழக்கம் போல இந்திய ரானுவத்தையும் இந்திய தலைவர்களையும் திட்டி விட்டு போவார்கள்.

அப்படியே லூஸ்ல விடனும்..

________________________________________________

3400 கோடி - இது 1987 -89ல் இந்திய அரசு இலங்கையில் அமைதி படை + இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதியில் தேர்தல் நடத்த + தமிழர் பகுதியில் அடிப்படை கட்டுமாணம் வளப்படுத்த செலவழித்த தொகை...

இன்றைய மதிப்பில் இது 10,000 கோடி ,,இந்த பணம் இருந்தால் atleast தென் இந்திய நதிகளையாவது இணைத்து இந்த நதீ நீர் அரசியலை ஒழித்து இருக்கலாம்

ஒரு வேளை சாப்பிடும் பல கோடி இந்தியர்களுக்கு வாழ்க்கையில் பல நாள் 3 வேளை சாப்பிட வைத்து இருக்கலாம்.. இப்படி பல சொல்லி கொண்டு போகலாம்..

1400 - இது அமைதிபடையில் உயிர் இழந்த ரானுவவீரர்களின் எண்ணிக்கை..

1400 குடும்பங்கள் சிதைந்து போனது.. இதில் சோகமானது -- அமைதிபடையில் இறந்தவர்களுக்கு சண்டையில் இறந்தால் அவர்கள் குடும்பத்திற்க்கு கிடைக்கும் உதவிகள் ஏதும் கிடையாது.. காரணம்...அமைதி படை போர் categoryயில் வராதாம்..

கிடைத்தது - கற்பனையான செய்திகளும் ஒப்பாரிகளும்..

பட்டது போதும்.. சிங்களவர்களும் நாங்களும் சகோதரர்கள்.. இந்தியர்கள் வந்தேறிகள்..எங்கள் விசயத்தில் தலையிட வேண்டாம் என்று கேவலபட்டது போதும்....

4 comments:

Sethu Raman said...

சமீபத்திய அரசியல்வாதிகளும், சினிமாகாரர்களும்
நடத்தும் உண்ணாவிரதம் வெறும் கேலிக்கூத்துதான்.
காலை ஆறுமணிக்குள் வயிறு புடைக்கத் தின்றுவிட்டு
உண்ணாவிரதமாம்!! ஏன் இவர்களெல்லாம் அந்த
மாவீரன் பிரபாகரனை, தமிழர் நலன் கருதி, ஆயுதத்தைக்
கீழே போடச்சொல்லவில்லை! இது நடந்தால் உடனே
போர் நிற்குமே, தமிழர்கள் மகிழ்வார்களே!! இன்னமும்
சொல்லப்போனால், 1984ல் இருந்து, இதுவரை இந்த
மாவீரனால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கெல்லாம்
எப்போதாவது இவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கலளா?
அல்லது உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்களா??

வால்பையன் said...

பிரனாப் முகர்ஜி போனா எல்லாத்தையுமே நிறுத்திருவாரு, ஆனா பாவம் போகத்தான் ப்ளைட் டிக்கெட் கிடைக்கலையாமா?

நம்ம தமிழின தலைவர் தான் கடலில் தூக்கி போட்டால் கட்டுமரமாவேன் டீவீயில கிராபிக்ஸ்லாம் காட்டுராரே அவரையே தூக்கி போட்டு அனுப்ப வேண்டியது தான்

Vidhya Chandrasekaran said...

ஜால்ரா தட்ட ஆள் இருக்கிற வரைக்கும் இந்த சீப் பப்ளிசிட்டிக்கு அலையும் அரசியல்வாதிகளின் ஆட்டம் ஓவராகத்தான் இருக்கும்.

Vijay said...

உலகில் எந்த மூலையில் யார் மீதும் வன்முறை நியாயமாகாது. இஸ்ரேல் காஜா மீது தாக்குதல் நடத்துகிறது. அதைத் தட்டிக் கேட்க ஆளில்லை. பாகிஸ்தான் காஷ்மீரத்தில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது. ஏன் மும்பை பயங்கரவாதம் நடந்த போது கூட இந்தத் திருமாவவளவன் வாய் திறக்க வில்லை. விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவ வீரர்கள் தாக்கும் போது மட்டும், தமிழர்கள் கொல்லப் ப்அடுகிறார்கள் என்று சாமியாடுகிறார்களே, இந்த அரசியல் வாதிகளின் hypocrism'த்தனத்தை என்ன்வென்று சொல்ல.