
சும்மா ஜாலியா 2 மணி நேரம் டைம் பாஸ் ஆகணுமா, இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்
புது விதமான இசை, அசத்தலான ஒளிப்பதிவு வேகமான திரைகதை வைச்சு நல்லாவே எடுத்து இருக்காங்க..
இந்த படத்தின் பாடல்கள் வந்து ரொம்ப ரொம்ப நாள் ஆச்சு..
ஹிப் ஹிப் ஹுரே ,பெங்களூர் பார்ட்டி வி ஜேகளின் மனதை கவர்ந்த பாடல் .. பல இடங்களில் இந்த பாடல் கேட்டு இருக்கிறேன்...ம் சும்மா சொல்ல கூடாது ...அருமையான பாடல்.. பாடலுக்கான நடனமும் அருமை..
மனசெல்லாம் பாடலும் மனதை பிழியும் மெலோடி,, சிம்பு பாடுவது தான் கொஞ்சம் உறுத்தல்..
குளிர் பிரதேச ரெஷிடென்ஷியல் ஸ்கூலில் நடக்கும் கதை.. ராக்கிங்..நட்பு கொஞ்சம் செண்டிமெண்ட், லூசு ஹீரோயின் , ரிவென் ஜ் ...அதுக்குல்ல 2 மணி நேரம் ஆச்சு.. க்ளைமேக்ஸ் கொஞ்சம் சொதப்பல்... அதை விட்டு தொலைங்க.. படம் நல்ல interesting ஆக இருந்துச்சு..
படத்தில் 90% புது முகங்களின் ஆதிக்கம் தான்..
ஹிரோ சஞ்சீவ் ஸ்மார்டாக இருக்கிறார்.. அப்புறம் சயித் நிதீஷ் கார்திக் ரியா ம் ஓகே ஓகே..
படத்தை நிஜமாகவே தாங்குவது பாபோ சசி.. இசையும் இவரே.. கோடம்பாக்கத்தில் இனி இவரை அடிக்கடி பார்க்கலாம் அல்லது கேட்க்கலாம்.
படம் ஊட்டி ஏற்காடு அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் சென்னையில் எடுத்து இருக்காங்க..
படம் முழுக்க பசுமையின் ஆதிக்கம்.. கொஞ்சம் க்ராபிக்ஸ் நகாசு வேலையும் செஞ்சு இருக்காங்க.
எழுதி இயக்கியது ”அழகிய அசுரா” பாடிய ‘அனிதாஉதீப்’ ... சோதனை முயற்ச்சி போல..
கேமரா ஒர்க் அருமை... குளிர் மழை காலங்களுக்கே நம்மை அழைத்து செல்கிறார்..என்ன தியேட்டரிலும் எனக்கும் அதே குளிர் கால பீலிங்க்சு...ஒரே குளிர் தாங்க முடியல.. மொத்தமே 10 பேர் தான் தியேட்டரில்....
இதுல இண்டர்வல் கார்டு போட்ட போது இரண்டு பேரு சூப்பர் சம்ம சீன்னு கைதட்டி விட்டு ஓடி போய்டாங்க..
பக்கத்து ஸ்கீரினில் மாசிலாமணி ஹவுஸ் புல். :))) ...
8 comments:
//கேமரா ஒர்க் அருமை... குளிர் மழை காலங்களுக்கே நம்மை அழைத்து செல்கிறார்..என்ன தியேட்டரிலும் எனக்கும் அதே குளிர் கால பீலிங்க்சு...ஒரே குளிர் தாங்க முடியல.. மொத்தமே 10 பேர் தான் தியேட்டரில்....//
ha ha ha ha superrrrrrrr
solliyachulla, oru thadava paathuduvom (DVD la)....
நைஸ்..
பார்க்கனும்..
இந்த படம் எங்க ஊருக்கு வரவேயில்லையே!
@ha ha ha ha superrrrrrrr
solliyachulla, oru thadava paathuduvom (DVD la)...@
நன்றி கோபி
படத்தின் கேமரா ஒர்க் நன்றாக இருக்கு , டிவியில் பார்த்தால் எப்படி வரும் என்று தெரியவில்லை :
@Cable Sankar said...
நைஸ்..@
வருகைக்கு நன்றி கேபிள் சார், பெரிய ஜாம்பவானான நீங்க நைஸ் என்று சொன்னது பெருமையாக இருக்கு
@வித்யா said...
பார்க்கனும்.@
வருகைக்கு நன்றி. கண்டிப்பாக பாருங்க..
@வால்பையன் said...
இந்த படம் எங்க ஊருக்கு வரவேயில்லையே!2
வால் சார் , படம் மெட்ரோ நகரங்களை குறி வைத்து மட்டும் தான் ரிலிஸ் செய்து இருக்கிறார்கள்
Post a Comment