
என்னை போல ஒருவன் .
.இந்தியில் சென்ற ஆண்டு வந்த படங்களில் குறிப்பிடதக்க ஒன்று Wednesday..
அதை நமது ஆஸ்கர் நாயகன் கமலஹாசன் தமிழில் ரீ மேக் செய்கிறார். .
பட கதை விவாதம் அதான் discussion எப்படி தான் செய்வாரோ??
சுட்ட கதையாக இருந்தாலும் உல்டா செய்யும் போது உலக நாயகனின் special touch இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காதே..
என்னால் முடிந்தது கொஞ்சம் இலவச ஐடியாக்கள்
1. என்ன தான் ஆஸ்கர் ரேஞ்சுக்கு படம் எடுத்தாலும் பக்தி துதி பாடல்கள் கண்டிப்பா வேணும் ஆழ்வார்பேட்டை ஆண்டவா ஏற்கனவே போட்டாச்சு..இந்த தபா கோபாலபுரம் கோபாலான்னு புதுசா ஒரு பாட்டு போடுங்க. ’கோபாலபுரம் கோபாலா கலகசனை கொஞ்சம் பாருப்பா’ன்னு ஆர்ம்பிச்சா சூப்பரா இருக்கும்..
அப்படியே ஒரிஜினல் கோபாலபுரம் பெரியவர் ஆளுங்க கடுப்பாகி கோர்ட்ல கேஸ் போடுவாங்க..படத்துக்கு சரியான விளம்பரம்...அப்படியும் கேஸ் போடலாயா விடுங்க சாப்ட்வேர் ஆளுங்களை அமெரிக்க கை கூலின்னு திட்டறமாதிரி சீன் வைங்க . ..கண்டிப்பாக கேஸ் போடுவாங்க..
2. படம் கதை என்ன, ரொம்ப சிம்பிள் ஒரு வயசான ஆளு குண்டு வைக்கிறாரு..போலிஸ் கன்பியூஸ் ஆகுது. இதை மாத்தி யோசி பார்முலாபடி அதான் ஹேராம் தசாவதாரம் பார்முலா படி நீங்களே குண்டு வைக்கிறீங்க..அதை நீங்களே கண்டுபுடிறீங்க.. இரண்டு வேடம் ஆச்சு.. இரண்டு வேடத்துக்கும் ஒரே மாஸ்க்....
மூணாவது மாஸ்க் கிருஸ்து பிறப்புக்கு முன் இந்தியாவில் நடந்த உண்மை சம்பவம்ன்னு ஏதாச்சும் எடுத்து உடலாம்.. நடுவுல மானே தேனே பொன்மானே அபிராமி உதயம் தியேட்டர்ன்னு டயலாக்..தியேட்டர்ல எவனுக்கும் கதை புரிய கூடாது..புரியற மாதிரி இருந்தா உங்க இமேஜ் என்னாகும்..
உலக நாயகன் படம் நிஜமாகவே உலக தரம்ன்னு அதான் நமக்கு மட்டும்தான் புரியலன்னு அவனவன் தியேட்டர் வாசலில் தலைவா கலக்கீட்ட உலக தரம்ன்னு பில்டப் கொடுத்து கொடுத்து படத்தை ஓட வைச்சுருவாங்க.
3. ஆஸ்கர் உலக தரம் இல்லை அமெரிக்கா தரம் மட்டுமேன்னு ஏ ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் கிடைச்ச வயித்தெரிச்சல்ல ஏதோ பேசிட்டிங்க.. நீங்களும் ஹே ராம் படம் ஆஸ்கர் விருதுக்காகதானே எடுத்தீங்கன்னு எவனாச்சும் வேலை இல்லாதவன் கேள்வி கேக்க போறான்..
கேட்டா பதில் சொல்லியே ஆகனும்...படத்துல பஞ்ச் டயலாக் வைக்கிறோம்.. நானே விருது எனக்கு எதுக்கு விருந்துன்னு ஸ்கீரின்ல நீங்க சொன்னா க்ளாப்ஸ் ல தியேட்டரே அதிரும்..சில பேரு அதை காமேடின்னு நினைச்சு சிரிப்பாங்க விட்டு தொலைங்க நீங்க பார்க்காத தோல்வியா??
இந்தி தசாவதாரம் 5 நாளில் தியேட்டரை விட்டு பறந்து ஓடிய போது அவங்களுக்கு ரசனை இல்லைன்னு நமக்கு நாமே திட்டத்தின் படி தயாரிப்பாளருக்கு நாமம் போடலையா ..லூஸ்ல விடுங்க ஜி..
4. வழக்கம் போல உங்க பட செண்டிமெண்ட் படி சம்பந்தம் இல்லாம நாத்திகம் பெரியாரு இப்படி எல்லாம் டயலாக் வைங்க...வழக்கம் போல படம் வெளியே வருவதற்க்கு முன்னரே ஆளு வைச்சு கோர்ட்ல கேசு போட்ட வைங்க..படம் சூப்பர் டூப்பர் ஹிட்
5. தசாவதாரம் Angels and Demonsல் சுட்ட கதையானாலும் சூப்பரா உட்டாலங்கடி பண்ணி எவனும் கண்டு புடிக்க முடியாதபடி செஞ்சீங்க..எப்படி முடியும்..எவனுக்கும் படத்துல ஒன்னும் புரியல..சரி முத தடவ தான் படம் புரியல..இரண்டாம் தடவை பார்த்தாலவது புரியும்ன்னு தியேட்டருக்கு வருவான்..ரீப்பீட் ஆடியன்ஸ் படம் சூப்பர் ஹிட்...
6. மோகன்லால் போன்ற ஆளுங்க நிஜமாகவே நல்லா நடிப்பாங்க..நடிக்கற மாதிரி ஓவர் ஆக்டிங் போடமாட்டங்க.. ரொம்ப ரொம்ப டேஞ்சரு.. ஹே ராம்ல ஷாருக்கான் மேட்டரை எப்படி டீல் செஞ்சீங்களே அதே போல மோகன்லாலை டீல் செய்யுங்க..
7. Wednesday படத்துல பாட்டே இல்லை.. உங்க படத்துல பாட்டு இல்லைன்னா குருதி புனலுக்கு ஆன கதி தான் இதுக்கும்..வைரமுத்து வாலி ரெண்டு பேரையும் கோபாலபுரம் அழைச்சுட்டு போங்க..அங்க அவங்க ரெண்டு பேரையும் கோபாலபுரம் பெரியவரை வாழ்த்தி கவிதை எழுது சொல்லுங்க.. உலகில் பிறந்த அத்தனை கவிஞர்களும் தோத்துடுவாங்க..
அப்படியே அந்த கவிதையை உல்டா பண்ணி அங்கங்க உலக நாயகனே காலத்தை வென்றவனே செவாய் கிரகத்தில் குரங்கு பிடித்தவனேன்னு வார்த்தைகளை மாத்தி போட்டு ஒரு குத்து பாட்டை போடுங்க.. கே எஸ் ரவிக்குமார் முதல் பல பேரு வலிப்பு டான்ஸ் ஆட ரெடியா இருக்காங்க..
8. மறக்காம உங்க ரெகுலர் மேட்டர்களான தாடி சந்தான பாரத்திக்குக்கு ஒரு ரேப் சீன், நீங்க ஏதாச்சும் ஏதாச்சும் தூணில் இடித்து விழுவற சீன், நீங்க அழுது கிட்டே சிரிக்கற சீன், இதை எல்லாம் வைச்சுடுங்க..என்ன சின்ன குழந்தைங்க அம்மா வீட்டுக்கு போலாம்மான்னு அழுவும்..
அவங்களை சரி பண்ண ஒரு மாஸ்க் கேரக்டர் வைச்சு காமேடின்னு நினைச்சு நீங்களே ஏதாச்சும் டயலாக் பேசுங்க.. காமேடின்னா மெட்ராஸ் பாசையில் பேசுவது தானே..
9.கடைசியா படம் பார்த்துட்டு வந்து எவனாவது கடுப்பாகி ப்ளாக்குல விமர்சனம் எழுதினா உங்க பார்முலா படி என்ன சொல்றீங்கன்னு புரியாம திட்டுங்க.. எல்லாரும் அப்பீட்டு ஆயிடுவாங்க.. நீங்க தான் உலக நாயகன் நீங்க தான் உலகத்தில் சிறந்த நடிகர் எவனாலும் அடிச்சுக்க முடியாது..
இன்னும் ஐடியா ஏதாச்சும் வேணும்ண்ணா உங்க ஹேராம் குணா ஆளவந்தான் போன்ற காவியங்களை நீங்களே பாருங்க...
22 comments:
kamalahassan madiri oru kalaiyai nesikum kaliganai parpathu arithu.
eluthum pothu nagaichuvai endralum sila varamurai irukkirathu nabare. tayavu seythu pirar manam noha hit vanga vendum enpatharkaga eluthateergal
its very disgusting one...
varavan poravan ellam en sir software pathi illukkiranga
ஒரு நல்லா கலைஞனை இப்படி அருவருக்க தகுந்த போல விமர்சனம் செய்து பிரபலம் ஆவது நன்றாக இல்லை.. நல்லா வோட்டு வாங்கியாச்சா..94084827
Super Satire. Kalakkal. Hattss off.
//இந்த தபா கோபாலபுரம் கோபாலான்னு புதுசா ஒரு பாட்டு போடுங்க. //
அது செட்டாவது!
பரமக்குடி பரதேசி ஸாரி பரமேஷா ஒகேவா!
//வழக்கம் போல படம் வெளியே வருவதற்க்கு முன்னரே ஆளு வைச்சு கோர்ட்ல கேசு போட்ட வைங்க.//
ராமதாஸுகிட்ட பேசி, படத்துல சிகரெட் பிடிக்கிற காட்சி இருக்குன்னு சொன்னா இலவச விளம்பரம் கிடைக்குமே
யோவ்.. கமலை பத்தி பேச நீ யாருயா..
உனக்கு கமல்ஜியய் பத்தி என்ன தெரியும்....
உன்னை மாதிரி ரசனை கேட்ட ஜென்மங்களால் தான் தமிழ் சினிமா இந்த நிலையில் உள்ளது....
Thala
Kalakkal........ andha photo enga pudicheenga... SAGIKKALA...... Andavar romba thatha aayittarey??
Ungala thittaradhukku neraiya peru queuela varuvaanga, wait........
Nalla irundhadhu........
Note : The so called FANS who are angry / sad now are writing / scolding RAJNI to their maximum when they get chance..... Neenga sonnadhu avvalavu onnum mosam illai
@kamalahassan madiri oru kalaiyai nesikum kaliganai parpathu arithu.
eluthum pothu nagaichuvai endralum sila varamurai irukkirathu nabare. tayavu seythu pirar manam noha hit vanga vendum enpatharkaga eluthateerga@
பத்மநாபன் வருகைக்கு நன்றி.
தங்கள் மனதை புண்படித்தி இருந்தால் வருந்துகிறேன்
//Blogger suresh said...
its very disgusting one...
varavan poravan ellam en sir software pathi illukkirang//
அண்ணே கூல் டவுன்
நானும் சாப்ட்வேர் ஆளுதான்.
B@logger suresh said...
its very disgusting one...
varavan poravan ellam en sir software pathi illukkirang@
அன்பே சிவம் படத்தில் உலகநாயகன் மாதவனை அமெரிக்க கைகூலி என்று சொல்வார்..
@sadan said...
ஒரு நல்லா கலைஞனை இப்படி அருவருக்க தகுந்த போல விமர்சனம் செய்து பிரபலம் ஆவது நன்றாக இல்லை.. நல்லா வோட்டு வாங்கியாச்சா..94084827@
கமலை ஏதும் சொல்ல கூடாது .. கிண்டல் செய்தால் கூட தவறு அப்படிதானே..லூஸ்ல விடுங்க சார்..
Blogger Rajaraman said...
Super Satire. Kalakkal. Hattss off.
நன்றி ராஜாராமன்
//அது செட்டாவது!
பரமக்குடி பரதேசி ஸாரி பரமேஷா ஒகேவா!
ராமதாஸுகிட்ட பேசி, படத்துல சிகரெட் பிடிக்கிற காட்சி இருக்குன்னு சொன்னா இலவச விளம்பரம் கிடைக்குமே//
வால் சார் சூப்பரு சூப்பரப்பு.
பார்த்து உங்க ப்ளாக்கை வந்து தேடி திட்டிவிட்டு போவாங்க. உசாரு :))))))))))
//யோவ்.. கமலை பத்தி பேச நீ யாருயா..//
என் பேரு அருண் குமார்.. பெயரை பார்க்கவில்லையா?
//உனக்கு கமல்ஜியய் பத்தி என்ன தெரியும்....//
இத்தனை எழுதி இருக்கேனே தெரியாமாதான் எழுதி இருக்கேனே .. என்ன கொடுமை சார்
//உன்னை மாதிரி ரசனை கேட்ட ஜென்மங்களால் தான் தமிழ் சினிமா இந்த நிலையில் உள்ளது..//
ஆமாம் சார் கவலை படாதீங்க.. உலகநாயகன் கூடிய விரலைவில் ஆளவந்தான் பார்ட் 2 எடுத்து
தமிழ் சினிமாவை வாழ் வைப்பார்.
//
Blogger R.Gopi said...
Thala
Kalakkal........ andha photo enga pudicheenga... SAGIKKALA...... Andavar romba thatha aayittarey??
Ungala thittaradhukku neraiya peru queuela varuvaanga, wait........
Nalla irundhadhu........
Note : The so called FANS who are angry / sad now are writing / scolding RAJNI to their maximum when they get chance..... Neenga sonnadhu avvalavu onnum mosam illa//
நன்றி தலைவா!!
ஏதோ கமல்னாலே அறிவு ஜீவி பில்டப் கொடுத்து ஏத்தி வைச்சுருக்காங்க.. கூடவே கொசுறு ரஜினியை திட்டுறது..
அறிவு ஜீவி சார்களே
நான் பிளாக் எழுதுவதே ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை.எனக்கு ஹிட்ஸ் மேல் ஆசைஇல்லை.. நான் எந்த திரட்டியிலும் சேரவில்லை சாரே..
தயவு செய்து பார்த்து திட்டுங்க.. கமேண்ட் மாடரேசன் போட வைக்காதீங்க..முடியல எத்தனை கமேண்ட் தான் நீக்குவது...
//ஆமாம் சார் கவலை படாதீங்க.. உலகநாயகன் கூடிய விரலைவில் ஆளவந்தான் பார்ட் 2 எடுத்து
தமிழ் சினிமாவை வாழ் வைப்பார்.//
*******
Yappaaaaaaaaaaa .... Indha velaiyaattukku naan varala........
Superb satire. Hats off to you.
But I have confidence in Kamal's ability to help his producer to attempt suicide without anybody's help. After all, he is called Uloga (or is it Ullaasa?) Nayagan for nothing. So, most probably, your suggestions will not be heard by him.
BTB, when you have time please visit my blog where I too have written a post on Kamal. My blog is KURATTAI ARANGAM at the following URL viz.,
hereisarun.blogspot.com
Arun
@Superb satire. Hats off to you.
But I have confidence in Kamal's ability to help his producer to attempt suicide without anybody's help. After all, he is called Uloga (or is it Ullaasa?) Nayagan for nothing. So, most probably, your suggestions will not be heard by him.
BTB, when you have time please visit my blog where I too have written a post on Kamal. My blog is KURATTAI ARANGAM at the following URL viz.,
hereisarun.blogspot.com@
Hi Arun, i am a regular visitor to kuratti arangam, how come i would miss a blog from a hard core super star follower?
thanks for ur comments and keep visiting.:)
Arun
kamal vaalka ):
Guys,
There is no point in explaining about Kamal to this blogger. For the kind of craps that is dished out by Asith, Visai, Rasini, Visal, etc. Kamal Haasan is far ahead. The funny thing in this post is that those things are done in different movies by Kamal. He does not do the same thing twice. So the blogger has got his statistics totally wrong.
And criticism on Kamal's take on Oscar as "this grape tastes sour" is baseless. Infact it is a welcome move by Kamal. Kamal has an audience that he needs to satisfy in various angles. Not like other actors who are just expected to do masala movies with punch dialogues and dubakoor fights. If he keeps on trying to satisfy the Oscar jury, which consists of just 75 members, what about the audience here?
Indian cinema is progressing well and Kamal would be one of the champions in the restructuring of the taste of audience. He has been a spoilsport for the masala movie heroes even at this age.
Post a Comment