கூட புதுசா Alto வாங்கிய என் அப்பாவி நண்பன்.
. மேல்கோட்டை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான இடம். 'தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா'ன்னு சூப்பர் ஸ்டார் சல்யூட் அடிப்பாரே அந்த இடம் தான்.. ரொம்ப ரீஜண்டா ஆனந்த தாண்டவம் படத்தில் ' கனா காண்கிறேன் கண்ணா ' பாடலும் இங்கு தான் படமாக்கபட்டது.

ரொம்ப ரொம்ப அருமையான அழகான இடம்.காவிரி கரையில் அமைதியாக ரிலாக்ஸ் செய்ய ஏற்ற இடம். வைழ்ணவ ஆலயம்.. தல வரலாறு சோழ மன்னனோடு ஏற்பட்ட தகராற்றில் ராமானுஜர் 14 வருடங்கள் வனவாசம் இங்கே தான். அவரால் ஏற்படுத்தபட்ட பூஜை நியதிகள் இன்னமும் இந்த ஆலயத்தில் தொடர்கிறது.. குமுதம் பக்தி தொடர்சியாக படிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆலயம்.
தமிழ் படங்களின் ஆஸ்தான பஞ்சாயத்து செய்யும் இடம்....இப்போ பருவ மழை காலம் ..இரண்டு தூண்களுக்கும் நடுவே ஒரு கயிற்று கட்டிலை கட்டி நிம்மதியாக தூங்கலாம்..
my dear tourism department..இந்த கோரிக்கையை கொஞசம் கவனிக்கவும்..
மேல்கோட்டை எங்கே இருக்கிறது..
மைசூர் தும்கூர் சாலையில்..மைசூரில் இருந்து 50 கிலோ மீட்டர் முதல் வழி இல்லையென்றால் பெங்களூர் மைசூர் சாலையில் வலது பக்கம் மாண்டியா வழியாகவும் கன்னடா மாத்தாட தெரிந்தால் சவுரியமாக போகலாம்..
வெறும் கோவில் மட்டும் தானா??
காவிரி ஆற்றில் மீன் பிடிக்க தெரிந்தால் அல்லது மீன் பிடிக்க தெரிந்த மாதிரியாவது சீன் போடலாம்.. பருவ மழை காலத்தில் பயணம் செய்தால் எங்கு காணினும் பச்சை நிறமே.
போகும் வழியில் கண்ணில் பட்ட காட்சிகள்...
forum mall ல் சுற்று சூழல் பாதுகாப்பு தினத்திற்க்காக பேப்பர் கோப்பைகளை வைத்தே ஒரு பெரிய்ய்ய அழகான பட்டாம் பூச்சி செய்து பார்வைக்கு வைத்து இருந்தார்கள்.. நம்ம பொது ஜனம் பக்கத்துல இருக்கும் மெக் டொனால்ஸில் ப்ளாஸ்டிக் பேப்பரில் பர்க்கர் take away வாங்கி இதை பார்த்து கொண்டே ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
5 comments:
:))
வாவ், இவ்வளவு ரம்மியமான் இடமா? கண்டிப்பா போயிடணும். :-)
நிறைய சினிமாக்களில் பார்த்தது போல் நினைவு!
நன்றி வித்யா
நன்றி விஜய்
நன்றி வால்பையன்
விஜய்..கண்டிப்பாக போய் வந்தவுடன் இடம் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்
வால் சார்
மணி ரத்னம் படங்களில் இந்த இடம் அடிக்கடி வரும்
ராக்கம்மா கைய தட்டு ( தளபதி) முதல் குரு வில் வெண்மேகம் பாடல் வரை இதே இடம் தான்
//தமிழ் படங்களின் ஆஸ்தான பஞ்சாயத்து செய்யும் இடம்//
Rajni - Shobana meet pannuvaanga (THALAPATHY)......
I still remember the BGM by Maestro Ilayaraja during that scene, the nice FLUTE sound ......
Post a Comment