நாம் என்ன நினைகின்றமோ அதுவே நாம் ஆகிறோம், நம் எண்ணங்களே நம்மை அந்த பாதையில் அழைத்து செல்கிறது.
Saturday, April 25, 2009
பயணங்கள் முடிவதில்லை
புனே - பெங்களூர் பயணம்
..மும்பை - நாகர்கோவில் விரைவு வண்டி..
summer holidays நேரம் ..
வேற எந்த வண்டியிலும் டிக்கேட் கிடைக்கவில்லை..
இந்த வண்டி பெங்களூருக்கு கிருஷ்ணராஜபுரத்திலே ஹாய் சொல்லி விட்டு சேலம் பக்கம் சென்று விடும்..
மும்பை தாராவியோ அல்லது மொத்த திருநெல்வேலியே டிரையினுக்குள் புகுந்து விட்டது போல தோன்றியது.,,
இப்படி தான் அவன் பேச ஆரம்பித்தான்..
இன்னும் 10 வருடங்கள் பின் இந்தியா எப்படி இருக்கும்?
ஏன் அதுக்கு என்ன குறைச்சல் நல்லா இன்னமும் 20 கோடி 30 கோடி மக்கள் சுமையை ஏத்திகிட்டு ஹாயாக மும்பை peak hour sub urban train போல போகும்....
அவர்கள் பேசி கொண்டே சென்று விட்டார்கள்...
கூட்டம் எங்கும் பார்க்கினும் ஒரே மக்கள் கூட்டம்....
எதையும் கண்டுக்காம ஒரு பக்கம் ராம பஜனை மறுபக்கம் சீட்டாட்டம்.. கூட்டத்தோடு திருடர்கள்..எங்கேயும் சேராமல் நடுவில் மக்கள்..
அடுத்த ஸ்டேசன் எப்ப வரும் கொஞ்சம் மூச்சு விடலாம் என்று தவிக்கும் மக்கள்..கொஞ்சம் அசந்தால் நம்மை வண்டிக்கு அடியில் தள்ளி விட தவிக்கும் கூட்டம்...
நினைச்சு பார்க்கவே முடியல..
30,000 - இது ஒரு நாளைக்கு வேலை தேடி பீகாரில் இருந்து தில்லிக்கு வந்து சேரும் கூட்டம்..
25,000 இது உபி + பீகாரில் இருந்து மும்பைக்கு ஒரு நாளைக்கு வேலை தேடி புதிதாக வந்து சேரும் மக்கள் தொகை...
இவங்க வேலைக்கு சாப்பாட்டுக்கு என்ன வழி? தங்க இடம்??
ஏன் சொந்த ஊரை விட்டு பெருநகரை தேடி வருகிறார்கள்??
பீகாரில் தண்ணீருக்கு பஞ்சமில்லை.. ஏன் விளை நிலங்களுக்கும் பஞ்சமில்லை.. ஏன் பீகாரை விட்டு மக்கள் வெளி மாநிலங்களுக்கு படை எடுக்கிறார்கள்???
தில்லியில் கிண்டலுக்காக அடிக்கடி தூ பீகாரி கை க்யா?( நீ என்ன பீகாரியா) என்று சொல்வார்கள்..
புது தில்லியில் இருந்து எதோ ஒரு இடத்துக்கு ஆட்டோவில் சென்றேன்..
ஆட்டோவாலா என்னிடம் மதராஸி சாப்.மீட்டருக்கு மேல போட்டு கொடு என்று சொன்னான்.. நானும் ஏதும் புரியாமல் தூ பீகாரி கை க்யா என்று கேட்டேன்.. ஆட்டோவாலா எதுவும் என்னிடம் பேசவில்லை.. வண்டியை எடுத்து கொண்டு சென்று விட்டான்..
பின் சுற்றம் புறம் என எங்கும் விசாரித்ததில் எந்த பீகார் காரனும் தன்னை பீகாரி என்று சொல்லி கொள்ள பெருமை படுவதில்லை என்று தெரிந்தது.. அதற்க்கு காரணம் ஆயிரம் இருக்கலாம்..
இருந்தாலும் ' தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம் 'என்ற வீர வசனங்கள் ஒலிக்கும் இடத்தில் இருந்து வந்ததால் எனக்கு அவர்கள் செய்கை இன்று வரை பிடிபடவில்லை..
பிரச்சனைகள இல்லாத இடங்களே இல்லை..காவிரி , பாலாறு முல்லை பெரியாறு என தமிழகத்தில் தீர்க்கவே வேண்டாம் எப்போது வேண்டுமானுலும் தூசி தட்டி நாலு பஸ்ஸை எரிக்கலாம் ..உண்ணாவிரதம் இருக்கலாம் தீக்குளிக்கலாம் என்று எப்போதும் கையிருப்பில் இருக்கும் பிரச்சனைகள்..
காவிரி பிரச்சனைக்கு மூல காரணம் - பெருகி வரும் மக்கள் தொகை , உணவு உற்பத்தி அதிகரிக்க கர்நாடகாவில் விளை நிலங்கள் அதிகமாக தண்ணீர் தேவை அதிகரித்தது..
கர்நாடகாவிலும் தமிழ் நாட்டிலும் பல வருடமாக சில பேரு ( காவிரி நதி நீர் குடும்பம் ) சில கோடி செலவு செய்தால்...கர்நாடகாவிலும் தமிழ்நாட்டின் காவிரி நீர் பிடிப்பு இடங்களிலும் நிறைய மழை பொழிய வைக்கலாம்.. தண்ணீர் பிரச்சனை தீரும் என்று கரடி போல கத்தி கொண்டு வருகிறார்கள்..எவனும் கண்டுகிறதே இல்லை..
பிரச்சனை வந்தால் முத்துகுமார் போல மூளை சலவை செய்யபட்ட முட்டாள்கள் தீக்குளிக்க அதை பார்த்து இன்னும் சில பேர் தீக்குளிக்க.... மேடையில் பெரிசா மைக் போட்டு கத்துவார்கள்.. கன்னட வெறியர்களே ...கர்நாடகாவில் அட்ரஸே இல்லாமல் இருக்கும் வட்டாள் நாகராஜ் போன்றவர்களை சூடா பேட்டி எடுத்து ஜீவி விகடன் போடும்.. அப்புறம் கேட்கனுமா?
இங்கே அனைவரையும் அரவணைச்சு மக்களுக்கு நல்லது செயய் தலைவர்கள் இல்லை.. வெறுப்புணர்ச்சியை வைச்சும் மட்டும் அரசியல் செய்யும் ஆட்கள் அதை போலவே மக்களும்..
யாரோ ரெண்டு மலையாளியை பிடிக்கவில்லை என்றவுடன் மலையாளிகளே மோசம் என்று அவர்கள் பரம்பரையை இழுத்து விளையாடும் மக்கள்...
இந்தி பேசுபவர்கள் எல்லாம் வெறியர்கள் என்ற நினைப்பில் தாங்கள் தான் தமிழ் வெறியை முதுகில் சுமக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம்..
மஹாராஷ்டிரா குஜ்ராத்களில் நெடுஞ்சாலைகளில் தார் சாலை போடுவதும் தமிழர்களே..அங்க குப்பை அள்ளறதும் கட்டிட வேலை செய்றதும் தமிழர்களே.
தமிழ்நாட்டில் இருந்து ஏன் கூலி வேலை செய்ய மக்கள் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள் என்ன பிரச்சனை ..தீர்க்க யாருக்கும் நேரம் இல்லை..
இங்க எல்லாம் கூலி வேலை மலையாளியை பார்க்க முடியாது. ..
பிச்சை எடுக்குற மலையாளியை பார்க்க முடியாது பிச்சை எடுக்குற சர்தார்ஜியை பார்க்க முடியாது..
மலையாளி எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர் மக்களை மதிக்கிறாங்க அவங்க கலாசாரத்தை கிண்டல் கேலி செய்வதில்லை.. கூடவே அவங்க மொழியையும் கத்துகிறாங்க...எந்த ஊரில் இருந்தாலும் பிரச்சனையில் சிக்காமல் இருக்காங்க..
இப்படி அவர்களிடம் இருந்து கத்து கொள்ள நிறைய இருக்கும் போது ...சாதி சண்டை மொழி சண்டை என்று படித்தவர்களே வெறுப்பு தேடி அலையும் போது ‘தமிழன் என்பதில் என்ன பெருமிதம் வேண்டி கிடைக்கிறது??...
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
\\பிச்சை எடுக்குற மலையாளியை பார்க்க முடியாது பிச்சை எடுக்குற சர்தார்ஜியை பார்க்க முடியாது..
மலையாளி எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர் மக்களை மதிக்கிறாங்க அவங்க கலாசாரத்தை கிண்டல் கேலி செய்வதில்லை.. கூடவே அவங்க மொழியையும் கத்துகிறாங்க...எந்த ஊரில் இருந்தாலும் பிரச்சனையில் சிக்காமல் இருக்காங்க..
இப்படி அவர்களிடம் இருந்து கத்து கொள்ள நிறைய இருக்கும் போது ...சாதி சண்டை மொழி சண்டை என்று படித்தவர்களே வெறுப்பு தேடி அலையும் போது ‘தமிழன் என்பதில் என்ன பெருமிதம் வேண்டி கிடைக்கிறது?\\
மிகச் சரியான கருத்து...
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க!!!
சும்மா தமிழன் தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன் தான் பெருமை?? மொழி என்பது நம் மனதில் தோன்றுவதை இன்னொருவனுக்குப் புரிய வைக்கும் ஒரு ஊடகம். அவ்வளவு தான். இதில் எது சிறந்தது என்ற பட்டி மன்றம் கூட நடத்துவார்கள், நம் மக்கள் :-)
அந்த ட்ரையின்லயா போனிங்க!
எனக்கும் தமிழன் என்று சொல்வதில் பெருமை இல்லை. ஆனால் என் தாய்மொழி தமிழ் என்பது பெருமைதான். தனக்குள் அடித்துக்கொள்வதும், நம்பிக்கை துரோகம் செய்வதும், தன் நாட்டிலேயே பிறந்த சக மனிதனை தனித்தும்,இழித்தும் வைப்பது, வெட்டி கௌரவம் பார்ப்பது மட்டுமே இவன் பிறவி குணங்கள். மாட்டை தோற்கடித்து வீரம் என்று தானே புகழ்வதும் எந்த ஊரிர்க்கு சென்றாலும் உதை வாங்கி அழுவதும் புலம்புவதும் அடுத்த குணங்கள்.
வேலை தேடி பேரு நகரங்களுக்கு செல்லும் கூட்டம் நாளுக்கு நாள் பெருகுகிறது. ஏனெனில் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையை விட்டு விட்டு வெகு தூரம் வந்துவிட்டோம்.
ஒரு முறை நான் வட இந்தியா சென்ற வண்டியில் ஒரு நாள் முழுவதும் பதின் வயது சிறுவர்கள் இருவர், ஊற வைத்த மூக்குக் கடலையை ஒவ்வொரு வேலையும் சாப்பிட்டுக் கொண்டு வந்தனர். என்னால் பொறுக்க முடியவில்லை.
நான் அவர்களிடம் சென்று சில சப்பாத்திகளைக் கொடுத்தேன். முதலில் வாங்க மறுத்தனர். பிறகு வாங்கிக்கொண்டனர். பல நாட்கள் என்னால் அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை. எவ்வளவு பேர் அந்த மாதிரி ஒவ்வொரு நாளும் பயணம் செய்கிறார்களோ.
நீங்க ஏதாவது மலையாளி பெண்ணை காதலிக்கிறீர்களா.
Post a Comment