நாம் என்ன நினைகின்றமோ அதுவே நாம் ஆகிறோம், நம் எண்ணங்களே நம்மை அந்த பாதையில் அழைத்து செல்கிறது.
Sunday, January 11, 2009
சமீபத்தில் பார்த்த சினிமா
சமீபத்தில் பார்த்த தமிழ் படம் ..அபியும் நானும்.
ஒரு நிறைவான தமிழ் படம். அழகான கதைக்கு நல்ல நடிகர்கள் கூடவே நகைசுவை தோரணங்கள். Feel good என்ற உணர்வை ஏற்படுத்தும் தமிழ் படங்கள் மிக மிக குறைவு. Life is beautifull என்ற நேர் எண்ணங்களை நம் மனதில் விதைப்பது மிக கடினம்.. இந்த படத்தை பார்த்து வந்த சில மணி நேரம் வரை அந்த அலைகள் என்னை தொடர்ந்து வருவது போலவே இருந்தது,.
சென்ற வருடம்(2008) வந்து தமிழ் சினிமாக்களில் நல்ல படங்கள் என்ற பல சொல்லாம் ஆனால் மிக சிறந்த படம் என்று எதையும் சொல்ல தோன்றவில்லை.
சுப்ரமணியபுரம் என்ற வன்முறை மொழியை பேசும் படம் போற்றபடுவது அச்சுறுத்துகிறது.
இந்தியில் சென்ற வருடம் பல நல்ல படங்கள் வந்து இருந்தன.
குறிப்பாக Wednesday,mumbai meri jaan..
இரண்டு படங்களுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. மும்பை ரயில் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து சமூகத்தின் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அலசும் படங்கள்.
நாம் வாழும் சமூகத்தில் தினமும் நம் அடிக்கடி நேருக்கு நேர் சந்திக்கும் மனிதர்களை பற்றி பேசும் படம்.
இதில் Wednesday படத்தின் முடிவு வித்யாசமாக இருந்தாலும் அந்த படம் பேசியவை அனைத்தும் உண்மையே. நம்மூரில் செல்லமாக அழைக்கபடும் ஒரு பெரிசு ( நஸ் ரீதின் ஷா ) தீவிரவாததையும் மக்களை பாதுக்காக்க தவறிய காவல்துறையும் ஒரு புதன்கிழமை அன்று அலைகழைத்து பாடம் சொல்லி தருவதே படத்தின் கதை. அனுபம் கேர் Vs நஸ் ரூதின் ஷா இருவரின் மிக சிறப்பான நடிப்பில் வந்த அருமையான படம்
mumbai meri jaan .. மும்பை ரயில் குண்டு வெடிப்பில் நேரடியாக மறைமுகமாக பாதிக்கபட்ட ஐந்து பேரை சுற்றி பிண்ணப்பட்ட கதை..
* மாதவன் ஒரு கண்ணி பொறியாளராக
* இர்பான் கான் மும்பையில் சைக்களில் டீ விற்க்கும் ஒரு தமிழனாக
* சோகா அலிகான் பரபரப்பு செய்தி சொல்லும் ஒரு ரிப்போர்டாராக
* பரேஷ் ராவல் வயதான காவல் அதிகாரியாக
* கே கே மேனன் ஒரு இந்துதுவ ஆதரவாளராக
அற்புதமான நடிப்பு தெளிவான திரைக்கதை இதற்க்கு மேலும் உண்மையும் பேசும் கதை. படத்தின் முடிவு Feel good என்ற பட்டாம்பூச்சிகளை மேலும் மேலும் பறக்க விடுகிறது.
இந்த இருபடத்தின் டிவிடிகள் சல்லிசாக மோசர்பியர் டிவிடிகளில் கிடைக்கிறது. இந்தி மாலும் நஹி என்று எஸ்கேப் ஆக வேண்டாம்.சப் டைட்டில் இலவசமாக கொடுக்கிறார்கள் :).. நேரம் கிடைத்தால் இந்த இரண்டு படங்களையும் பார்க்க தவறாதீர்கள்..
அப்புறம் இந்தி கஜினி .. தமிழ் கஜினிக்கும் இந்தி கஜினிக்கும் ஆறு வித்யாசங்கள் கூட கண்டு பிடிக்க முடியாது போல.:) .. படம் 3 மணி நேரம் போனதே தெரியவில்லை. திரைகதை பிணைப்பு அருமை.
இந்தி கஜினி ரிலீசுக்கு 10 நாள் முன்னாடியே பல பேரு ( வட இந்தியர்கள் ) landmarkல் தமிழ் கஜினி டிவிடியை தேடி பிடித்து வாங்கி கொண்டு இருந்தனர். ம்ம் இந்தி கஜினி விளம்பரங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு.
flash news :
2009ல் கூட தமிழ் சினிமா மாறுவது போல தெரியவில்லை... . வருங்கால முதல்வர் விஜய்யின் வில்லு பார்வையாளர்களை எல்லாம் அம்பு விட்டு கொல்லுதாம்..
ஏண்டாப்பா அந்த படத்துக்கு போனோம்.. பேசாம குருவி படத்தை திருட்டி டிவிடியில் இன்னும் ஒரு முறை பார்த்து இருக்கலாம்னான்.
நல்லவேளை நாளை இரவு காட்சிக்கு டிக்கேட் புக் செய்யலாம் என்று இருந்த என்னை காப்பாறிய என் நண்பனுக்கு மிக்க நன்றி :)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//சுப்ரமணியபுரம் என்ற வன்முறை மொழியை பேசும் படம் போற்றபடுவது அச்சுறுத்துகிறது.//
என்ன தலை ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்தனையில இருக்கோம்!
நீங்கள் சொன்ன படங்களையும் பார்க்க முயற்சிக்கிறேன்!
(இங்கே ஹிந்தி படங்கள் வராது, சீடீயில் தான் பார்க்கனும்)
Post a Comment