Monday, November 10, 2008

மழை கால இரவுகள்



காற்றும் கூடவே மழையின் சலசலப்பும்
தூரத்தில் வரும் வாகன ஒளி பிம்பத்தில் சிதறும் ஒளி

எங்கு செல்கிறோம் என்று தெரியாத
தெருவோர நாய்களின் அவசர ஓட்டங்கள்

தூக்கம் தொலைந்த வேதனையில் நடைமேடை வாசிகள்
சாலை குழிகளில் ஓடி களைத்த ஆட்டோக்கள்

மீந்துபோன இட்லியோடு ரோட்டுகடைகள்
குல்பிஐஸ் வியாபாரம் இல்லாமல் அவர்களும்

இது ஏதும் தெரியாமல் மின்சாரம் இல்லை என் புலம்பும் நானும்

2 comments:

Vidhya Chandrasekaran said...

ஹை கவுஜ கவுஜ:)

ச.பிரேம்குமார் said...

அருண், நீங்க கவிதை கூட எழுதுவீங்களா???

நல்லா இருக்குங்க :)