நேற்று சன் தொலைகாட்சி பின் இன்ன காட்சிகள் பார்த்த அடி தடி சாதி சண்டைகள் பலருக்கு புதிதாக இருக்கலாம். எனக்கு ஏனோ எற்கனவே பார்த்தவைகளை மீண்டும் ஒரு முறை பார்த்தது போலதான் இருந்தது.
இந்த சண்டைகள் தற்போது தமிழ்நாட்டின் தலைநகரத்தில் கூடவே காமேராக்கள் முன்னால் நடந்தால் நாமும் நிறைய பேசுகிறோம்.. இன்னும் சில தினங்கள் போனால் மறந்து விட்டு அடுத்த வேலை பார்க்க சென்று விடுவோம்.
இதை போல மாணவர்களுக்குள் கேவலமான சாதி பிரிவினைகள் சாதி சண்டைகள் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான அரசு கல்லூரிகளில் இருக்கிறது தொடர்ந்து வளர்க்கபடுகிறது....
******************************************************************
அப்போது எனக்கு 15 வயது , பத்தாம் வகுப்பு முடித்து திருச்சி அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படிக்கிறேன். அங்கும் இதே போல ஒரு சாதி சண்டை.. சாதி சண்டைக்கு காரணம் மாணவர்களை தூண்டி விட்டு பின்னால் தங்களின் சுயநலங்களை பகடை காயாக செயல்பட்ட இரு பேராசிரியர்கள்.
இரு பேராசிரியர்கள் கல்லூரியில் எப்படி கமிசன் அடிக்கலாம் எப்படி நான் உன்னை ஜெயிக்கிறேன் என்ற கோதாவில் மாணவர்களை தூண்டி விட்டு கடைசியில் ஒரு கெட்ட நாளில் அரிவாள் கொண்டு சண்டை போட்டு பின் தங்களின் வாழ்க்கையை வீணாக்கி கொண்டார்கள்.
அரசு கல்லூரியில் அதுவும் பொறியியல் தொடர்பான கல்லூரிகளில் அங்கு வேலை பார்பவர்கள் சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.
என் வாழ்க்கையில் கதிர் அறுக்கும் அரிவாள்கள் கூட ஆட்களை வெட்ட பயன்படும் என் நேரடியாக பார்த்த பருவம் அது. பல நாட்க்கள் கல்லூரி காலம் குறிப்பிடபடாமல் மூடிய நேரம். கல்லூரி மூடினால் கூடவே ஹாஸ்டலையும் மூடி விடுவார்கள்,,, எனக்கு அன்று வாழ்க்கையில் கிடைத்த மூன்று வேளை சாப்படுகள் சொல்லி கொள்ளாமல் நிறுத்தபடும்.
நான் அங்கு படித்த மூன்று வருடங்களும் இதே கதை தான்.. சண்டை போட புது புது மாணவர்கள் அடிபடவும் புது புது ஆட்கள்.. ஆனால் பலன் அடைந்தது என்னவோ அதே இருவர் மட்டும் தான்..
பொதுவாக அரசு கல்லூரிகளில் படிக்க வருபவர்கள் ஏழை மாணவர்களாக தான் இருப்பார்கள். நானும் கூட அப்போது அப்படி தான். என் கூட படித்தவர்கள் 99% அப்படிதான். முக்கா பேண்ட் என்று காதில் அடிக்கடி வார்த்தைகள் வந்து சேரும்.. ஏன் என்னோடு அன்று படித்த பல பேர் அன்று முக்கா பேண்ட் தான்....
அன்று என்னோடு படித்த பல பேர் மிகவும் பின் தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள்
அப்பா அம்மா தன் பையனாவது முன்னேறட்டும் என்று கழ்டபட்டு அனுப்பிய காசில் தூண்டிவிட பட்டு சாதி சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள்.
இந்த நிலை நான் படித்த இடத்தில் மட்டும் அல்ல சற்று அருகில் இருந்த திருச்சி கைலாசபுரம் அரசினர் கல்லூரி, திருச்சி ஈ வே ரா கல்லூரி, திருச்சி லா கல்லூரி என அரசால் நடத்தபடும் அனைத்து கல்லூரிகளும் இதே நிலை தான்..
பொதுமக்களுக்கோ வேறு ஒரு பிரச்சனை.. இந்த கல்லூரிகள் இருக்கும் இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாணவர்களால் பொது மக்களுக்கு எவ்வளவு பாதிப்பு தர முடியுமோ அத்துணையும் தரபடும்.
பொது மக்களை பொருத்தவரை இந்த கல்லூரிகளில் நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் வழக்க்கம் போல ஒன்று தான்.
சென்னையில் கூட அரசு கல்லூரி மாணவர்கள் தினமும் பேருந்துகளில் பொதுமக்களுக்கு கொடுக்கும் தொல்லைகள் பல பல.. நந்தனம் அரசு கல்லூரி ஒன்று போதுமே !!
ஏன் தனியார் கல்லூரி மாணவர்கள் இதை போல நடப்பதில்லை??
காரணம் ரொம்ப சிம்பிள்.. படிக்கும் மாணவர்கள் இடத்தில் சாதிகள் அரசியல் கட்சிகள் கிட்ட வரவே கூடாது..அரசியல் கட்சிகளும் சாதி கட்சிகளும் மாணவர்களை தூண்டி விட்டு குளிர் காய்வது தமிழ் நாட்டில் அனைத்து அரசு கல்லூரிகளும் நடக்கிறது.
இது உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம்..
இதை தடுக்க உங்களுக்கும் ஏன் எனக்கும் தடுக்க வழி முறைகள் தெரியும்.. ஆனால் எதுவும் நடக்க போவதில்லை.. காரணம் ..
இணையத்தில் மித்த படித்தவர்களே மித்த அறிவாளிகளே சாதி சண்டை பார்பானியம் பித்தளையம் என்று வெட்டி சாதி சண்டைகள் செய்யும் போது 20 வயதை கூட கடக்காத இன்னமும் உண்மையான சமூகத்தை பார்க்காத அந்த மாணவர்கள் என்ன தான் செய்ய முடியும்??
17 comments:
உண்மை தான்!
அரசு கல்லூரிகளிகளில் மட்டும் ஏன் நடக்கிறது என்பது சரியான கேள்வி.
இன்னொன்று!
இப்பிரச்சனையின் மூலக்காரணம் அம்பேத்தார் பெயர் போஸ்டரில் விட்டு போனதாம்.
சாதிய கொடுமைகளை, கடவுள் பெயரால் நடக்கும் மூடபழக்கங்களை எதிர்த்து போராடிய தலைவர்கள் எந்த புகழையும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அவர்களை கொண்டாடுவது சாதிய கொடுமைகளுக்கு சமமாக நான் கருதுகிறேன்.
படிக்க வந்தானுகளா! சாதிய காப்பாத்த வந்தானுகளா
sadi sundaikku karranmea uyar sadi manopavam thaney,, pappanniyam erukkaravaraikkum sadi sandai erukkum,,,,,,,,,,,,,,
பாவம் இவர்களுக்கு (Law college students) Practical class கிடையாது இல்லையா ? Chemistry & Physics, Computer சயின்ஸ் வகுப்புகளுக்கு Practical class உண்டு ! இவர்கள் எல்லாம் criminal lawyer க்கு படிப்பவர்கள் . எனவே அடி தடி , வெட்டு , குத்து போன்றவைகளை practical ஆக தெரிந்து கொண்டால்தானே நாளை இவர்கள் திறமையாக வாதாட முடியும். எனவே பிரக்டிகல் கிளாசை அவர்களே ஏற்ப்பாடு செய்துள்ளார்களோ ?
ஆனாலும் இந்த பிரக்டிகல் கிளாஸ் கண்டிக்க வேண்டிய ஒன்று . இல்லையெனில் நாளை மற்ற கல்லுரிகளுக்கும் இது பரவும்
//ஏன் தனியார் கல்லூரி மாணவர்கள் இதை போல நடப்பதில்லை//
யோசிக்க வேண்டிய ஒன்று...
பலரை சிந்திக்க வைக்கும் பதிவு. பாராட்டுக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
i too a student...but i feel shame for this riot..communal riot..are they going to design new india..? fools..but says we r the future of india..i think every one looked the photo of the injured guy in hospital..near by him his mother was standing..what would she dreamed on her son.?..but no one including injured thinks abt their family.wen will they turn good.never ....did ambedkar or devar done these things.they acheived through hard ,right works.they never hurted any one..even in words..
i too a student...but i feel shame for this riot..communal riot..are they going to design new india..? fools..but says we r the future of india..i think every one looked the photo of the injured guy in hospital..near by him his mother was standing..what would she dreamed on her son.?..but no one including injured thinks abt their family.
யோசிக்க வைக்கும் பதிவு. நான் படிச்ச காலேஜ்ல மாஸ் பங்க் பண்ணாலே ஆப்பு தான். போலீஸ் சும்மா இருந்தாலும் வேடிக்கை பார்த்தான்னு சொல்ல வேண்டியது. அடிச்சா, மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள் என்று போராட வேண்டியது. என்ன கொடுமை சார் இது??
/// படித்த இடத்தில் மட்டும் அல்ல சற்று அருகில் இருந்த திருச்சி கைலாசபுரம் அரசினர் கல்லூரி, திருச்சி ஈ வே ரா கல்லூரி, திருச்சி லா கல்லூரி என அரசால் நடத்தபடும் அனைத்து கல்லூரிகளும் இதே நிலை தான்..///
திருச்சி ஈ வே ரா கல்லூரி?
It is run by Dravidar Kazakam which is against caste politics.
So, what you are saying is a lie.
//உண்மை தான்!
அரசு கல்லூரிகளிகளில் மட்டும் ஏன் நடக்கிறது என்பது சரியான கேள்வி.
இன்னொன்று!
இப்பிரச்சனையின் மூலக்காரணம் அம்பேத்தார் பெயர் போஸ்டரில் விட்டு போனதாம்.
சாதிய கொடுமைகளை, கடவுள் பெயரால் நடக்கும் மூடபழக்கங்களை எதிர்த்து போராடிய தலைவர்கள் எந்த புகழையும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அவர்களை கொண்டாடுவது சாதிய கொடுமைகளுக்கு சமமாக நான் கருதுகிறேன்.
படிக்க வந்தானுகளா! சாதிய காப்பாத்த வந்தானுகளா//
நன்றி வால்பையன் சார்
//Anonymous Anonymous said...
பாவம் இவர்களுக்கு (Law college students) Practical class கிடையாது இல்லையா ? Chemistry & Physics, Computer சயின்ஸ் வகுப்புகளுக்கு Practical class உண்டு ! இவர்கள் எல்லாம் criminal lawyer க்கு படிப்பவர்கள் . எனவே அடி தடி , வெட்டு , குத்து போன்றவைகளை practical ஆக தெரிந்து கொண்டால்தானே நாளை இவர்கள் திறமையாக வாதாட முடியும். எனவே பிரக்டிகல் கிளாசை அவர்களே ஏற்ப்பாடு செய்துள்ளார்களோ ?
ஆனாலும் இந்த பிரக்டிகல் கிளாஸ் கண்டிக்க வேண்டிய ஒன்று . இல்லையெனில் நாளை மற்ற கல்லுரிகளுக்கும் இது பரவும்//
கருத்துக்கு நன்றி.
nold Edwin said...
//ஏன் தனியார் கல்லூரி மாணவர்கள் இதை போல நடப்பதில்லை//
யோசிக்க வேண்டிய ஒன்று...
November 13, 2008 10:39 PM
Delete
Blogger dondu(#11168674346665545885) said...
பலரை சிந்திக்க வைக்கும் பதிவு. பாராட்டுக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
thanks Arnold and dondu sir
i// too a student...but i feel shame for this riot..communal riot..are they going to design new india..? fools..but says we r the future of india..i think every one looked the photo of the injured guy in hospital..near by him his mother was standing..what would she dreamed on her son.?..but no one including injured thinks abt their family.wen will they turn good.never ....did ambedkar or devar done these things.they acheived through hard ,right works.they never hurted any one..//
thanks for your comments
//Blogger Vidhya C said...
யோசிக்க வைக்கும் பதிவு. நான் படிச்ச காலேஜ்ல மாஸ் பங்க் பண்ணாலே ஆப்பு தான். போலீஸ் சும்மா இருந்தாலும் வேடிக்கை பார்த்தான்னு சொல்ல வேண்டியது. அடிச்சா, மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள் என்று போராட வேண்டியது. என்ன கொடுமை சார் இது//
இந்த நாடே இதை போல நிலைக்கு தள்ளபட்டு இருக்கிறது. :(
//It is run by Dravidar Kazakam which is against caste politics.
So, what you are saying is a lie.//
trichy EVR arts college is run by tamilnadu government. moreover dravidar kazakam is not involved this government colleges
சுயமான சிந்தனை. மாணவ சமூகம் படித்துப் பயனடையவேண்டும்.
எதற்கெடுத்தாலும் பார்ப்பனீயம் பார்ப்பனப்பயல்கள் என்று ரீல் விட்டுக்கொண்டு துட்டு அடிக்கும் சுயநலவாதிகளைத் தோலுரித்துக் காட்ட முன்வரவேண்டும்.
Hey arun r u 1993-96 GPT student
Post a Comment