Sunday, November 9, 2008

மொழி அரசியல்

இன்று zee movies சானலில் 1001 முறையாக Gadar: Ek Prem Katha படம் ஒளிபரப்பினார்கள். ஏற்கனவே பல முறை பார்த்த படம் தான்..

சன் டிவி கே டிவி கலைஞர் டிவிகளில் மொக்கை படங்கள் போட்டு பார்வையாளர்களை பரவச 'படுத்தியதால்’ இந்தி சானல்களில் மேய்ந்தேன்.


சன் டிவிகாரங்களே உங்களுக்கும் விஜயகாந்துக்கும் இப்ப ரொம்பவே ராசி போல.. அதுக்காக படு மொக்கை படங்களை போட்டு torture பண்ணாதீங்க முடியலை..

2001 ம் ஆண்டு வெளி வந்த Gadar படம் இன்று வரை இந்தியில் வெளிவந்த படங்களில் வசூல் சாதனையில் சாதனை படைத்த படம்.

1947 பிரிவினையின் போது ஏற்படும் ஒரு காதல் கதை. படத்தின் ஹீரோ சன்னி தியோல் நம்ம விஜய்காந்த போல எல்லாரையும் அடுத்து துவைத்து கடைசியில் இவர் மட்டும் பிழைக்கும் ரகம் :)

பல இந்தி படங்களில் இந்தியா பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளும் கதையில் இருந்தால் உடனே நம் நாடு ‘இந்துஸ்தான்’ என்றும் கூடவே பாக்கிஸ்தான் படு மோசமான நாடு என்றும் திரைக்கதை இருக்கும். இந்த படமும் இதற்க்கு விதிவிலக்கில்லை...


இந்தியா என்பது செகுலர் நாடு, இந்தியாவில் பாக்கிஸ்தானில் வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களை விட இந்தியாவில் தான் அவர்கள் எண்ணிக்கை அதிகம் .

பின் ஏன் இந்துஸ்தான் என்று சொல்கிறார்களோ தெரியவில்லை..??


*****************************************************************************************

ஒரு முறை உத்திர பிரதேசத்தில் லக்னோவில் புறநகர் பகுதியில் சில நாள் தங்க நேரிட்டது.

இரவு பத்து மணி இருக்கும்.. அது குளிர்காலம்..

ரோட்டோரத்தில் இருக்கும் ஒரு பெட்டி சூடாக டீ கேட்டேன்.. எனக்கு தெரிந்த இந்தியில்..
என்னை விட வயதில் சிறியவனாக இருந்த பொட்டி கடை வியாபாரியிடம் இருந்து வந்த பதில் ” இந்துஸ்தானில் பிறந்தவனாக இருந்தால் முதலில் இந்தி ஒழுங்காக பேச கற்று கொள்”


அவனிடன் என்ன சொல்வது ?? என்ன வாக்குவாதம் செய்வது?? அந்த சிறுவனின் கனவான இந்துஸ்தான் எனபது வெறும் இந்துக்கள் மட்டும் வாழும் நாடு அங்கு அனைவரும் இந்தி தான் பேசுவார்கள்”..

அவன் எல்லை என்னவாக இருக்கும்??
லக்னோ ஒரு பெரிய கிராமம்.
லக்னோவை விட்டு தன் வாழ்நாளில் எங்குமே சென்று இருக்க மாட்டான்.

அவனை போல அறியாமையில் இருப்பவனிடம் புரியவைப்பதற்க்கு பதிலாக சர்க்கஸ் சிங்களிடம் நம் தலையை கொடுக்கலாம்..

அந்த கடையில் கிடைத்த டீ போல இது வரை நான் வேறு எங்கும் ருசித்ததில்லை :) . நல்ல திறமையை வைத்து கொண்டு கூடவே மொழி என்ற சிறிய வட்டத்தில் தூங்கி கொண்டு இருக்கிறான் என்றே தோன்றியது.

இங்கு இந்தி அரக்கி ஒழிக என்று சொல்பவர்க்கும் அந்த சிறுவனுக்கு வித்யாசம் எனக்கு ஏதும் தெரியவில்லை




*******************************************************************************************

இதை போல மொழி அரசியல்கள் தோன்றும் ஒரு சிறு வட்டத்தில் மட்டுமே நாமும் இருந்தால் ஜலதோழம் போல தொற்றி கொண்டு விடும்.

அடுத்த மொழி பேசுபவர்கள் நம் எதிரியாக தெரியலாம், ரத்த கொதிப்பு எல்லாம் இலவசமாக கிடைக்கும்.
சிகிச்சை ஏதும் இல்லை..
வெகு நாள் ரணமாகி அடுத்துவர் மனத்தையும் காயபடுத்தி கடைசியில் வெறுப்புணர்ச்சியை மட்டும் பயிர் செய்த வெற்றியோடு மூர்ச்சை ஆகலாம்



**********************************************************************************

எல்லா இடங்களில் வெறுப்புணர்ச்சி கொண்டவர்களும் + சுய தன்னபிக்கை கொண்டர்வர்களும் இருக்கிறார்கள்..

வெறுப்புணர்சிகள் தனி மனிதனை கோள் மூட்டுவதில் இருந்து தொடங்கி சாதி மொழி இனம் மதம் என குறுகிய சிந்தனைகளை பேசி மனதின் வலிமையை குறைப்பதே குறிக்கோளாக வைத்தே அமைகிறது.

இதை போல பேசுபவர்களிடம் இருந்து ஒதுங்கி நின்றால் வாழ்க்கையில் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் என யாகவா முனிவர் ஆவி சொல்கிறது
.


*************************************************************************************

4 comments:

வால்பையன் said...

நீங்கள் சொல்லும் அந்த படம் 1942-a love story போல இருக்குமா?
எனக்கு ரொம்ப பிடித்த படம் அது

Anonymous said...

நல்ல பதிவுகள்... குறிப்பாக அந்த லக்னோ அனுபவமும் அதன் தொடர்ச்சியான எண்ண அலைகளும் அருமை.

Arun Kumar said...

//Blogger வால்பையன் said...

நீங்கள் சொல்லும் அந்த படம் 1942-a love story போல இருக்குமா?
எனக்கு ரொம்ப பிடித்த படம் அது//

இல்லை தலைவா..
1947 விடுதலைக்கு பின் பிரிவினையில் நடக்கும் கதை. ஒரு பாக்கிஸ்தானை சேர்ந்த பெரும்புள்ளியின் மகளுக்கும் சாதாரண சீக்கியருக்கும் நடக்கும் காதலே கதை

Arun Kumar said...

//Anonymous envazhi said...

நல்ல பதிவுகள்... குறிப்பாக அந்த லக்னோ அனுபவமும் அதன் தொடர்ச்சியான எண்ண அலைகளும் அருமை//

நன்றி வினோ