Monday, November 3, 2008

சினிமா சினிமா தமிழ் சினிமா

சில வருடங்களாக நலல் தமிழபடங்களே 30 நாளை தாண்டினால் பெரிய சாதனையாக கருதுகிறார்கள். நான் சமீபத்தில் பார்த்த சரோஜா, ஏகன்,பொய் சொல்ல போறோம் மற்றும் காதலில் விழுந்தேன் போன்ற படங்கள் என் பார்வையில் நன்றாகவே இருந்தாக தெரிகிறது. ,,ஒவ்வோரு படங்களும் மற்றவைகளை விட வித்யாசமாகவே தோன்றுகிறது.

சென்ற வருடங்களில் இதே காலகட்டத்தில் வந்த படங்களை விட நன்றாகவே இருப்பதாக தோன்றுகிறது. கதை சொல்லும் போக்கில் இருந்து பல இடங்களில் தமிழ் சினிமா மிகவும் முன்னேறி இருக்கிறது.


இருந்தாலும் படம் 30 நாளை தாண்டினால் சூப்பர் ஹிட்டாம் :))

திருச்சி ரம்பா தியேட்டரில் மூட்டை பூச்சியின் வீடுகளாகி போன சீட்டில் உட்கார்ந்து மூன்று மணி நேரம் படம் பார்க்க 60 ரூபாயாம் :) .. ஏஸி என்பது படம் ஆரம்பிக்கும் போது போட்டது போல தோன்றும்...பின் 60 ரூபா கொடுத்ததுக்கு இதுவே அதிகம் என்று ஏஸியை அணைத்து விடுவார்கள்.

பராமரிப்பு செலவு என்று டிக்கேட் செலவில் வாங்கி கொள்கிறார்கள்.. ஆனால் என்ன பராமரிப்பு செய்கிறார்கள் என்று ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.. இப்படி எல்லாம் பகல் கொள்ளை அடித்தால் ஏன் திருட்டு டிவிடி தொழில் வளராது?


பிராமிட் சாய்மீரா நிறுவனம் பல தியேட்டர்களை லீசுக்கு எடுத்த போது சரி இனியாவது நிலைமை மாறுமா என்று நினைத்தது தவறாகி போனது,

இன்றைக்கு பிராமிட் சாய்மீரா நிலை மிக மிக பரிதாபம் . என்றைக்கு மொத்தமாக இழுத்து மூடுவார்கள் என்று தெரியவில்லை.

ரிலையன்ஸ் அட்லப்ஸ் தமிழகத்தில் பல தியேட்டர்களை விலைக்கு வாங்கி அதை நன்றாக பராமரிக்கவும் செய்கிறார்கள். கண்டிப்பாக இவர்கள் சினிமா பார்க்கு ஆர்வத்தை மீண்டும் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்

தமிழக மக்களுக்கு தியேட்டர் சென்று படத்தை பார்க்கும் ஆர்வம் இன்று வரை குறையவில்லை.. என்னதான் திருட்டு டிவிடி தொல்லை இருந்தாலும் சினிமா தியேட்டர்கள் நல்ல சேவையை கொடுத்தால் பல பேர் டிவிடியில் கேவலமான பிரிண்ட்டை பார்பதை விட்டு விடுவார்கள்..

தியேட்டரில் சினிமா பார்பதே நிஜமான சினிமா பார்த்த உணர்வை கொடுக்கும்.

Singh the King சமீபத்தில் வந்த ஹிந்தி படம்.. அப்படி ஒன்றும் பிரமாதமான படம் கிடையாது. இதோ நேற்று landmarkல் புது பட டிவிடிகளை அலசும் போது கிடைத்தது.

இந்தி பட உலகம் எவ்வளவோ மாறி விட்டது. மும்பை தில்லி போன்ற பெரு நகரங்களில் அதிக பட்ச தியேட்டர்களில் படத்தை ரிலிஸ் செய்து லாபம் சம்பாதித்து பின் படம் வந்த 50 அல்லது 100 நாட்களில் டிவிடியில் கொடுத்து விடுகிறார்கள். விலையும் கையை கடிப்பதில்லை..

பின் சில நாட்களில் டிவியிலும் வந்து விடுகிறது. தயாரிப்பாளர் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவருக்கும் லாபம்.

இந்த திருட்டு டிவிடியை ஒழிக்க இதை போல தமிழ் பட உலகும் செயல்பட வேண்டும். கேவலமான தியேட்டர்களில் திரையிடுவது பின் 3 வருடம் கழித்து டிவிடி + டிவியில் வெளியிடுவது என்ற கொள்கையை மாற்ற வேண்டும்..

பெங்களூரில் என் வீட்டுக்கு அருகே இருக்கும் பாலாஜி தியேட்டரில் தமிழ் படம் மட்டும் தான் திரையிடுவார்கள். கொடுக்கும் 50 ரூபாவிற்க்கு நல்ல சேவையை தருவார்கள். மூட்டை பூச்சி இல்லாத சீட்டுகள், ஏசி கூடவே நல்ல தரமான டிடிஎஸ்..

நான் அடிக்கடி படம் பார்பது பிவிஆர் அல்லது ஐநாக்ஸ் .. ஆன் லைனில் டிக்கேட் வாங்க முடிவதால் அங்கு தான் அடிக்கடி செல்வேன்,கொடுக்கும் பணத்திற்க்கு ஏற்ற மிகவும் தரமான சேவை...படம் பிடிக்க வில்லை என்றாலும் அந்த தியேட்டருக்கு மீண்டும் ஒரு முறை செல்ல தூண்டும் அளவிற்க்கு சேவை..



சென்னையில் நீயூ என்ற ஒரு கேவலமான படத்தை 4 வருடங்களுக்கு முன்னர் என் நண்பணோடு குரோம்பேட்டை வெற்றி என்ற படு கேவமான தியேட்டரில் பார்க்க ஒரு டிக்கேட்டுக்கு 100 ருபா கொடுத்தேன்..

ஏன் 100 ரூபா என்றால் த்தோடா என்று வர குண்டர்கள் வேறு..

தமிழ் சினிமாவை அழிக்க இவர்களே போதும்...

ம் என்னறைக்கு தான் தமிழ் படவுலகம் மாற போகுதே :)

7 comments:

வால்பையன் said...

//இருந்தாலும் படம் 30 நாளை தாண்டினால் சூப்பர் ஹிட்டாம் :))//

சூப்பர் ஹிட்டல்ல
தயாரிப்பாளர்கள் பிழைத்து கொண்டார்கள் என்று வேண்டுமானால்
சொல்லலாம்

Anonymous said...

//பிராமிட் சாய்மீரா நிலை மிக மிக பரிதாபம் . என்றைக்கு மொத்தமாக இழுத்து மூடுவார்கள் என்று தெரியவில்லை//

ஹூம். சொன்னா கேட்டா தானே. 'சிங்கத்த' உள்ளே விடாதீங்கப்பா. ஆமை புகுந்த வீடும், சிங்கம் புகுந்த இடமும் உருப்புட்டதா சரித்திரம், பூகோளம் எதுவும் இல்லைன்னு சொன்னோமில்ல? ஆனானப்பட்ட பிரமிட் சாய்மீராவயே சாச்சுப்புட்டோமில்ல? யாரு நாங்க, சிங்கமுல்ல?!

Vidhya Chandrasekaran said...

நான் கூட சரோஜா படம் PVR-ல தான் பார்த்தேன். ஆனா டிக்கெட் விலை????!!

Anonymous said...

//
சூப்பர் ஹிட்டல்ல
தயாரிப்பாளர்கள் பிழைத்து கொண்டார்கள் என்று வேண்டுமானால்
சொல்லலாம்//

தயாரிப்பாளர் பிழைத்து கொண்டார்கள் அதுவும் உண்மை தான்.. ஆனால் தரமில்லாத இடத்தில் படங்களை திரையிட்டு படம் பார்க்க வரும் ஆட்களை வதைக்கிறார்களே :

Anonymous said...

//ஹூம். சொன்னா கேட்டா தானே. 'சிங்கத்த' உள்ளே விடாதீங்கப்பா. ஆமை புகுந்த வீடும், சிங்கம் புகுந்த இடமும் உருப்புட்டதா சரித்திரம், பூகோளம் எதுவும் இல்லைன்னு சொன்னோமில்ல? ஆனானப்பட்ட பிரமிட் சாய்மீராவயே சாச்சுப்புட்டோமில்ல? யாரு நாங்க, சிங்கமுல்ல?!//

:)))

Anonymous said...

//நான் கூட சரோஜா படம் PVR-ல தான் பார்த்தேன். ஆனா டிக்கெட் விலை????!!//

வாரநாட்களில் பார்த்தால் 80 ரூபாய் வார இறுதியில் பார்த்தால் 120 ரூபாய்.

ரஜ்னி கமல் படம் என்றால் விலை மாறும்.

ச.பிரேம்குமார் said...

நானும் 'பாலாஜி'யில் படம் பார்த்திருக்கிறேன். அருமையான திரையரங்கு. இரண்டு வருடத்திற்கு முன்பு பார்த்த போது '30' ரூபாய் தான்...

PVR is my favourite theatre... But the ticket price...?!!!!$^$^$
ஸ்ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணைக் கட்டுதே