Saturday, October 4, 2008

சத்யமேவ ஜயகே
காந்தி ஜெயந்தி.. வழக்கம் போல இந்த வருடமும் ஒரு நாள் விடுமுறையோடு பை பை சொல்லி விட்டு சென்றது..

காந்திய சிந்தைனைகள் எல்லாம் மேற்பார்வையில் மிகவும் ராவாக இருக்கும். இது தான் நான் காந்தி தொடர்பாக எனக்கு தெரிந்த செய்தி. தம் அடிக்காதே தண்ணி அடிக்காதே கூடவே பொய் சொல்லாதே என்ன வாழ்கைடா கொடுமைடா சாமி,,

காந்தி இந்திய தந்தை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தார்..இது தான் அவரை பற்றி பள்ளிகூட வாழ்க்கையில் படித்தது. அதுவும் வரலாற்றில் மட்டும் வருவார். கூடவே முதலாம் உலக போர் இரண்டாம் உலக போர் பிரிட்டீஸ் மகாராணி எல்லாரும் வருவார்கள். இப்போதைய வரலாற்று பாட புத்தகத்தில் கருணாநிதி ஜெயலலிதா எல்லாரும் வருகிறார்கள் என்று ஒன்று விட்ட தம்பி சொன்னான்.. எனக்கு வரலாறுகளில் அவ்வளவு ஆர்வம் இல்லை..வரலாறு புத்தகத்தில் புகைபடம் தென்படும் பக்கங்களில் எல்லாம் எண்ணை வழியும் தலைமுடிகளில் பச்சை நிற ரப்பர் தேய்த்து அதை படங்களுக்கு மத்தியில் பதித்து புத்தகத்தின் மேல் உட்கார்ந்து அந்த ரப்பரின் மேல் அந்த புகைபடத்தை காப்பி எடுப்பதுதான் ஆர்வம் இருந்தது.

எனக்கும் இத்தனை ஆளுமைகளுக்கு மத்தியில் காந்தியை கண்டறிய தெரியவில்லை.காந்தியை இதுவரை என் ரப்பரில் காப்பி எடுத்து இருப்பேனே என்பது சந்தேகமே..
ரூபா நோட்டில் கூட அவர் இருக்கார்.. ஆனால் ரூபா நோட்டில் நமிதாவோ அல்லது திரிசா போட்டோ போட்டால் தானே படிப்போம்..அல்லது ரசிப்போம்,,வெளிநாடு செல்லும் போது அங்கு கிடைக்கும் வழவழப்பான அழுக்கு ஏறாத கரன்சியில் ஏதோ ராஜா அல்லது ராணி தொப்பி போட்டு சிரிக்கும் படங்களை தான் உலகில் மிக மிக அருமையான கரன்ஸி என்று கருதி வந்தேன்..என்னடா இந்த நாடு இப்படி தாத்தா போட்டோ எல்லாம் போட்டு நம் நாட்டை கேவலபடுத்துறாங்களே என்ற எண்ணம் தான் ஓங்கி ஒளித்தது..

யாரோ பேர் தெரியவில்லை என் காதில் ஓதி விட்டு சென்றது காந்தியால் இந்தியா பாக்கிஸ்தான் என்று இரண்டு பட்டது. இப்படி எல்லாம் ஒருமை செய்தி கேள்விபட்ட நான் நண்பர்கள் புடை சூழ சலே ரகோ முன்னா பாய் ( வசூல்ராஜா MBBS part 2) பார்த்த போது இந்த மனிதரிடம் ஏதோ இருக்கிறது ,,ஏதோ சொல்ல தெரியாத ஆளுமை இந்த மனிதரிடம் இருக்கிறது என்று புரிந்தது.. இந்தி படங்கள் என்றாலே சும்மா உட்டாலங்கடி வேலை தான் என்ற எண்ண்ம் கூடவே இருப்பதால் அதையும் சீக்கிரமே மறந்தேன்..

ஒரு சுப புண்ணிய நாளில் நானும் லண்டன் சென்றேன். வழக்கம் போல ஆன் சைட்டில் துட்டு அள்ளலாம் என்ற எண்ணம் தான்..வேலை லண்டலில் இல்லை அங்கு இருந்து இரண்டு புகைவண்டி பிடித்து ஏதோ குக்கிராமம் என்று சொல்லாமலும் நகரம் என்று இல்லாமல் எதோ ஒரு இடம். ஏதோ ஒரு ஹோட்டல்..

முதல் நாள் வேளை.. எனக்கு என ஒதுக்கபட்ட இடத்தில் பொட்டியை தட்டிகிட்டு இருந்தேன்.. வேலை பார்க்க சென்று இருந்தது எனது க்ளையண்ட்க்காக..
என்னோட க்ளைய்ண்ட் நான் செய்வது சரி என்று சொன்னால் தான் எனக்கு இங்கு appraisal முதல் அனைத்து மண்டகபடியும் நடக்கும். எனவே க்ளையண்டை அனுசரித்து நடந்து கொள்வதே சால சிறந்தது என்று அலுவலக சீனியர்கள் சொல்லி இருந்தார்கள்..எனக்கு அந்த க்ளையண்டை பார்பதற்க்கு சந்தர்பம் கிடைத்தது..எனது நிறுவனம் பல இடங்களில் கிளைகள் வைத்து இருப்பதால் பல நாட்டு ஆட்கள் அந்த க்ளையேண்டோடு பரிச்சயம்

ஹலோ அருண்ண்ண்..
யெஸ் ஆண்டர்ஸன்.. glad to meet you..

so where are you from?
i am from india..

so you are from gandhi's country?

அண்டர்சன் முழு வெள்ளைகாரர் அவரின் காலை உணவு முதல் இரவு உணவு வரை ஊர்வன பறப்பன தவிர கூடவே சற்று ரம் மும் இருக்கும்..

அவர் என்னை காந்தி நாடா என்று கேட்டதில் ஏதோ உள்ள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது..இனம் புரியா ஏதோ ஒரு ஆளுமை..

அப்போது தான் காந்தி தொடர்பாக படிக்க தொடங்கினேன்..படித்தேன் படிதேன் இன்று வரை படித்து வருகிறேன்.

காந்தியின் கொள்களைகள் வெகு சிலபம். என்னை போன்ற மிடில் கிளாஸ் ஆசாமிகளுக்கு ஒத்து வருமா எனபதும் இலவசமாக வரும் கேள்வி..

காந்தி சொல்வது என்ன ரொம்ப சிம்பிள்

உனக்கு கெடுதல் செய்பவனுக்கும் நல்லவனாக இருந்து அவன் மன்சாட்சியை யோசிக்க வைத்து விடு..
வன்முறைக்கு இடம் கொடுக்காதே.. உனக்கு எவன் தீங்கு கொடுத்தாலும் நேர்மைக்காக அவன் எத்த்த்ணை அடி அடித்தாலும் வாங்கி கொள் கடைசியில் உண்மையே வெல்லும்..

மிகவும் எளிமையான ஆனால் கடுமையான பயிற்ச்சி..அவர் எழுத்துகளை படிக்க மிகவும் சுலபமாக இருக்கிறது ஆனால் அதை போல நடந்து கொள்ள மிக கடுமையான மன வலிமை வேண்டும்..

பல லட்ச்சகணக்காண மன வலிமை கொண்ட தொண்டர்களை கொண்டு இந்த தேசத்தை அடிமை வாழ்வில் விடுவித்து இருக்கிறார் என்றால்..

ஏன் காந்தி கொள்கைகள் இன்று யாராலும் காந்தி தேசத்தால் கடைபடிக்கபடாமல் போகிறது..காந்தி சொல்வதேல்லாம் தனி நபர் சீர் திருத்தமே. தனி நபர் சீர் திருத்தம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்..

எனக்குல் ஒரு சத்திய சோதனை எளிமையான சோதனை..நானும் செய்து பார்த்தேன்..

ஒரு வார விடுமுறையில்..

கூட்டம் அதிகமாக சிக்னலில் இல்லை.. சிவப்பு விளக்கு இருந்த போதும் வழக்கம் பொல மக்கள் அதை கடந்து சென்று கொண்டு இருந்தனர்..

நான் செல்ல மாட்டேன்.. விதிகளை மதிப்பேன்..

பின்னால் இருந்து பெரும் சத்தம்.. ஹாரன் கள் கூடவே வசவு வார்த்தைகளும்..

இல்லை நான் போக மாட்டேன்.. பச்சை விளக்கு எரியும் முன்னே போக மாட்டேன்.. இது எனக்கும் என் மன்சாட்சிக்கும் இடையே உள்ள போராட்டம்..

ஒருவர் மிகவும் பொருமை இழந்து என்னிடம் வந்தார்...

உன் வண்டியில் ஏதாச்சும் கோளாரா?

இல்லை
அப்புறம் ஏன் வழியை மறித்து கொண்டு இருக்கே தள்ளி போ

இல்லை பச்சை வரும் முன் நான் போக மாட்டேன்

வார்த்தை தடித்தது.. அவர் என்னை அடிக்க வந்தார்.. ஏன் அரைகுறையாக அடித்தே விட்டார்....

இல்லை நான் போக மாட்டேன்..

இல்லை நான் பச்சை விளக்கு வரும் முன் நான் போகவே மாட்டேன்..

ஒரு வழியாக ப்ச்சை வந்தது.. எதிர் திசையில் இருந்து சிகப்பு விளக்கு எரிந்த போதும் அவசரமாக கடந்து வந்த ஒரு வாகனம்.. என்னை வசவு வார்த்தையில் திட்டு விட்டு சென்றது..

இல்லை என்னால் முடியாது.. நான் நேர்மையை கடை பிடிப்பேன்..

கடை பிடிப்பேன்...

தினமும் அதே செய்கை.. இல்லை நான் தளர விட போவதில்லை..எந்த அநியாமும் உன் மனதுக்கு பட்டதோ அதை எதிர்த்து நில்..

தினமும் எனக்கு பல பிரச்சனைகள்.. இல்லை நான் விட போவதில்லை.. இந்த விதிகளை தினமும் கடைபிடிக்க தொடங்கினேன்
விதிகளை மதிப்பேன்...தினமும் யாரோ ஒருவர் என் குடும்பங்களை இழுத்து திட்டு விட்டு செல்வார்..


டேய் அப்படியே செட்ல கட் அடிச்சு போகலாம்..

இல்லை நான் விதிகளை மதிப்பேன்..

தொடர்சியாக என் மவுன போராட்டம்.. தினமும் நான் வரும் வேளையில் இன்று அந்த சிக்னல் சண்டைகள் இல்லை.. யாரும் விதிகளை மீறுவதில்லை..என்னை திட்டுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.. எனக்கு பல கேல்யான பட்ட பெயர்களுக்கும் வந்தது..ஆனால பல பேர் நிஜமாகவே சாலை விதிகளை கடை பிடிக்க அரமித்தனர்..

இன்று சிக்னலில் என் பின்னால் நிற்க்க்ம் யாரும் என்னிடம் சண்டை பொடுவதில்லை..மாறாக பொறுமையாக நிற்க்கிறார்கள்..என்னிடம் சண்டை போட்டவர்களும் சினேகமாக சிரித்து விட்டு செல்கிறார்கள்..

எனக்கு நம்பிக்கை வந்தது.. கண்டிப்பாக இந்த சமுதாயம் கண்டிப்பாக மாறும்..நமக்கு வேண்டியது பொறுமையும் கூடவே மனம் தளராத போராட்டமும் தான்..

சத்யமேவ ஜயதே

6 comments:

rajesh said...

very good post buddy

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பீ..

அருமை.. அருமை.. அருமை..

எதையும் சொன்னால் புரியாது. அனுபவித்தால்தான் புரியும். அஹிம்சையும் அவ்வழிதான்.

உனது எடுத்துக்காட்டு பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும்.

உனது எழுத்தாளுமையைப் பாராட்டுகிறேன்.. விறுவிறுவெனப் போகிறது..

இப்படிப்பட்ட எழுத்துக்கள் கிணற்றுக்குள் போடப்பட்ட கல் போல் இருக்கக் கூடாது.. நிறைய இடங்களில் வெளிப்படுதல் வேண்டும். புரிந்து கொள்..

வாழ்க வளமுடன்

dondu(#11168674346665545885) said...

நல்ல பதிவு. எனது இப்பதிவும் உங்கள் கருத்துக்களையே வேறுவிதமாகக் கூறுகின்றன. பார்க்க: http://dondu.blogspot.com/2007/09/blog-post_29.html

மற்றப்படி சிக்னலில் சிவப்பு விளக்குக்கு நிற்பதில் ஒரே ஒரு ரிஸ்க் உள்ளது. பினாத்தல் சுரேஷ் அம்மாதிரி நின்று அவர் பின்னால் வந்த, சிக்னலில் நிற்க விரும்பாத டெம்போக்காரரால் மோதி தூக்கியெறியப்பட்டார். ஜாக்கிரதை.

பார்க்க: http://penathal.blogspot.com/2008/09/13-sep-08.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

அருமையான பதிவு நண்பரே!
இனிவரும் தலைமுறைக்கு காந்தியை எப்படி அறிமுகபடுத்த போகிறோம் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது

Anonymous said...

உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்!
வெற்றிக்கு நல் வாழ்த்துகள்!!


உங்கள் உறுதி நிறைந்த உள்ளம்
என்றும் நிலைத்திருக்கட்டும்

உறுதியின் பின்னே உயர்வு என்பதை
அனைவருக்கும் புரிய வையுங்கள்.:)

Arun as Butterfly said...

//Anonymous rajesh said...

very good post buddy//

நன்றி ராஜேஷ்

நன்றி உண்மை தமிழன் அண்ணன், டோண்டு சார், வால் பையன் மற்றும் அன்ப்பான அனானிக்கும்

ஒரு வாரமாக இணையத்தில் நேரம் செலவழிக்க முடியாத நிலை. தாமதுக்கு மன்னிக்கவும்