Monday, October 13, 2008

மின்சார கனவுகள்


சென்ற வாரம் திருச்சிக்கு சென்ற போது அய்யோடா சாமி !! என்ன கொடுமை சார் ..
தினமும் 10 மணி நேர மின் தடை. அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை பின்பு நண்பகல் 12 மணி முதல் இரண்டு மணி வரை.. பின் மாலை 6 மணி முதல் 10 மணி வரை..

கொசுறாக அறிவிக்கபடாத நேரங்களில் மின் தடை ஹாய் சொல்லி விட்டு செல்லும்.. . WWFல் பங்கு பெறும் அளவிற்க்கு தகுதி படைத்த பயில்வான் கொசுக்களோடு தினமும் சண்டை.

ம்ம்.கடந்த ஜீன் மாதம் வரை தமிழ்நாட்டில் மின் தடையே இல்லை.

தமிழ்நாட்டில் மின் தடையே இல்லை என்று காலரை தூக்கி விட்டு உத்திரபிரதேச வாலாக்களிடம் பெருமிதம் பேசியது எல்லாம் இன்று கனவாக போனது :(

எல்லாம் அந்த காலம்

சரி ஒரு invertor யை வாங்கி வீட்டில் வைக்கலாம் என்றால் 4000க்கு கூட பெறாத 500 watts invertorயை 12,000 சொல்கிறார்கள்.. சரி பாட்டரி தனியாக வாங்கி assemble செய்யலாம் என்றால் ..சார் பெங்களூரல இதை விட பயங்கர பவர் கட்டாம்..அங்கேயே எல்லாம் தீர்ந்து போய்கிறது..இங்க ஸ்டாக் வரமாட்டேங்குது சார்.. நாங்க என்ன பண்றது..

பெங்களூரில் வசிக்கும் என்னிடமே இதை போல டார்ச் அடிப்பவர்களிடம் என்ன சொல்வது? காற்றுள்ள போதே தூற்றி கொள்.

பெங்களூரில் பவர் கட் என்பது எனக்கு தெரிந்த வரை இல்லை. இங்கு நிலைமை மோசமானால் கூட ஐடி நிறுவனங்களில் மின்சாரத்தை கை வைக்கிறார்கள். பொது மக்கள் கணக்கில் கை வைப்பது இல்லை.


என்ன தான் நடக்கிறது?? ஏன் இந்த மின்சார கோளாறு? எப்போது சரியாகும்??

  • தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க எந்த வித செயலிலில் அரசு எடுக்கவில்லை.
  • காற்றாலை மின்சாரம் தனியார்களால் தொடங்க பட்ட ஒன்று. இதனால் பெறப்படும் மின்சாரம் வானிலைக்கு ஏற்ப மாறுபடும். இதுவே போதும் என்று அரசு நினைத்து விட்டது போலும்
  • இலவச மின்சாரம் என்று வாரி கொடுத்தால் மின்சார பயண்பாடு அதிகரித்தது
  • மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தனால் மின்சார பயன்பாடு அதிகம் ஆனது
  • பல புதிய தொழிற்சாலைக்களுக்கு தடை இல்லாத மின்சாரம் கொடுப்பதால் கிடைக்கும் எதிர் வினை

இப்படி சொல்லி கொண்டே போகலாம். ,,,ஆனால் இந்த மின்சார தடை தீர வழி என்ன?

இன்னமும் அடுத்த ஒரு வருடம் கண்டிப்பாக மின்சார தடை இருக்கும். மேலும் மோசமாக ஆகலாம். ஆனால் குறைய வாய்ப்பில்லை..

இனி தற்போது வர இருக்கும் மழை காலங்களில் பம்பு செட்டால் செலவழிக்கபடும் மின்சாரம் குறையும் ..அதனால் மின் வெட்டு நிலைமை குறையலாம். ஆனால் கண்டிப்பாக மழை காலம் முடிந்த பின் மீண்டும் பிரம்மாணடமாக மீண்டும் உக்கிரமாக தலைகாட்டும்.

சரி தீர்வு தான் என்ன??

என்ன தான் கூவினாலும் அரசாங்கதிடம் உடனடி தீர்வு என்பது சத்தியமாக கிடையாது. மத்திய அரசிடம் இருந்து வாங்கலாம் என்றால் ஒரு யூணிட் 10 ரூபா என்பது தமிழ்நாடு அரசால் கண்டிப்பாக கட்டுபடியாகாது.10 ரூபாக்கு ஒரு யுணிட்டை வாங்கி அதை குறைந்த விலைக்கு விற்க்க என்ன மின்சார துறை கோமாளியா? இலவச டிவி கொடுத்தாலும் கொடுப்போம் ஆனால் இதை போல நட்டத்தை ஈடு செய்ய முடியாது என்பதே பதிலாக இருக்கும்..

கூடஙுகுளம் அனு மின் நிலையம் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. அதன் முதல் யூணிட்டின் கொள்ளவும 700 மெகா வாட். தமிழ் நாட்டின் பங்கு என்று 500 வாட் கிடைக்கும். அதை வைத்து நிலைமையை சீர் செய்ய தமிழ் நாடு அரசு முயர்ச்சிக்கலாம். ஆனால் அதை விட பற்றாகுறை மிக மிக அதிகம்..:(

இன்றைய நிலையில் 1000 மெகாவாட் வறை பற்றாகுறை. அரசு இதை வெளிப்படையாக அறிவிக்கைவில்லையே தவிர நடப்பது நிதர்சனம்...

அப்ப என்ன தான் செய்வது?

அனு மின்சார நிலையங்களே தற்போது கை கொடுக்கும் நண்பனாக இருக்கிறான்..

அமெரிக்காவுடன் அனு மின்சார திட்டதினால் பொதுமக்களுக்கான அனு உலை ரானுவத்துகான அனு உலை என்று அரசு பிரித்து இருக்கிறது.

அதன்படி கல்பாக்கம் அனு மின் நிலையம் ரானுவ உலையாக அடையாள்ம் காட்டபட்டுள்ளது. கல்பாக்கத்தில் இருக்கும் அனு உளைகளின் கீழ் 1500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால் இன்று வரை யுரேனியம் பற்றாகுறையால் உற்பத்தி 200 மெகாவாட்டை அதை தாண்டுவதில்லை..

இனி அனு ஒப்பந்தால் கல்பாக்கத்துக்கும் யுரேனியம் கிடைக்கும்..அது தனது முழு கொள்ளவு உற்பத்தியை எட்டும். அதே நேரத்தில் இது ரானுவ உலை என்பதால் கூடவே உற்பத்தி குறைந்தால் யாரும் எதுவும் கேட்க்க முடியாது.

இன்றைய நிலை வரை ஒப்பந்தம் போட பட்டு இருக்கிறதே தவிர இன்னமும் யுரேனியம் வாங்க டெண்டர் வழங்கும் நிலைக்கு வரவில்லை. அது அடுத்த வருட பட்ஜெட்டில் ஏற்று கொள்ளபட்டு பின் என்றோ பயன்பாட்டுக்கு வரும்..

கூடங்குளத்தில் ரழ்யாவின் துணையோடு மேலும் பல அனு உலைகள் அமைக்கபடும். அதற்க்கான ஒப்பந்தம் வரும் நவம்பரில் இந்தியாவிற்க்கு வரும் ரஷ்யா பிரதமரோடு போட பட இருக்கிறது.

2013 இறுதியில கூடங்களும் 5000 மேகா வாட் மின்சாரம் கொடுக்கும் கேந்திரமாக மாறி விடும்.

அமெரிக்காவின் GE துணையோடு 40 மாதங்களில் தமிழ்நாட்டில் தென் புறத்தில் மேலும் ஒரு அனு மின் நிலையம் அமைக்கபடலாம்..அதற்க்கான ஒப்பந்தம் அடுத்த வருட பட்ஜெட்டுக்கு பின் தான் முடிவு செய்யபடும்..

தமிழ்நாடு அரசு மேலும் பல திட்டஙளை தீட்டலாம்.. அனல் மின்சாரத்துக்கு நிலக்கரியே கிடைக்காத போதும் அனல் மின்சாரத்துக்கு தனியார் துணையோடு ஒப்பந்தம் போடலாம்.

இது அனைத்தும் உடனே நடக்க போவதில்லை...

கண்டிப்பாக அடுத்த ஒரு வருடம் வரை இந்த மின்சார தட்டுபாடு தவிர்க்க முடியாதது.

உற்பத்தியை அதிகரிக்கும் போக்கு தற்போது தான் காணபடுகிறது. உற்பத்தி சீரடைய இன்னும் சில வருடங்களை தமிழ்நாடு தாண்ட வேண்டும். ..

தற்போதாவது அரசு சில போர்கால நடவடிக்களை எடுக்க வேண்டும்..

இலவச மின்சாரம் என்ற பெயரில் அநியாயத்துக்கு மின்சாரத்தை வீண் படுத்து செயல்களை நிலமை கட்டுக்குள் வரும் வரையாவது தடுக்க வேண்டும்
சாலையில் வைக்கபடும் மின்சார பலகைகளுக்கு மின்சாரம் தருவதை நிறுத்த வேண்டும்

உடன்பிறப்புகளோ அல்லது ரத்ததின் ரத்தங்களோ சும்மா அப்பாலிக்கா கொக்கி போட்டு மின்சாரம் திருடுவதை கண்டிப்பாக தடுத்து நிறுத்த வேண்டும்..

இதை எதுவும் செய்யாமல் இருந்தால்....

கொசுகடியோடும்,,கை விசிறியோடும் வாழ வாழ்த்துக்கள்..

6 comments:

Anonymous said...

lot of information , only god can save tamilnadu

Raghavan said...

To my knowledge, the free electricity for farmers those who are having less 3 acres of land. I don't think the pumpsets for the farmers are going to consume more electricity. This shortage is the poor planning of the administrators and officials in the Department. Every body behind the money and not for the people. Who every comes to the power in 2011 will also face the electricity shortage, if proper steps were not taken immediately (eg. getting the money on time from the consumers, stealing of electricity to be prevented,etc.)

Vidhya C said...

hell lot of problems with this power cut. Even i purchased a inverter for 11000. But banglore-la naan irundha 5 days terrific power cuts boss..

surya said...

தெளிவான் சிந்தனை..

வாழ்த்துக்கள்

சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com

வால்பையன் said...

நல்ல பதிவு!

Vidhya C said...

அண்ணாத்தே தொடர்பதிவிற்கு உங்களை கூப்பிட்டுருக்கேன். டைம் கிடைத்தால் வந்து பாருங்களேன்.