Monday, October 13, 2008

தஞ்சாவூர் பெரிய கோவில்


இது வாசல் கோபுறம்.மிக கம்பீரமாக நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் கோபுரம்.


இது கோபுரத்தின் உள்ளே காணப்படும் தற்கால தமிழனின் கண்டுபிடிப்பு. இலவசமாக தண்ணீர் கொடுத்தாலும் டம்ளரை கட்டி வைப்பது தமிழரின் தற்கால மரபு.


கோவிலின் வெளிப்புற தோற்ற்ம்


8 ம் நூற்றாண்டின் தமிழ் வழக்கில் ராஜராஜன் சொல்லி விட்டு போன செய்திகள். அன்றே documentation உக்தி அறிந்த ராஜராஜன்..
இதை போல பல எழுத்துகளை கோவிலில் மட்டும் அல்ல தஞ்சாவூரில் பல இடங்களில் பார்க்கலாம்.


நிழல் எங்கு விழுகிறது என்று தெரியாமல் அமைக்கபட்ட கோபுரம். பார்க்க கண் கோடி வேண்டும்


அபிஷேக நீர் வெளியே செல்லும் பாதையில் கூட ஏதோ ஒரு கலை அமைப்பு, அந்த குண்டு சிலையை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது??ராஜராஜன் தனது தளபதிகளின் சிலைகளையும் கோவிலில் வைத்து இருக்கிறான். இது அவனின் தளபதிகளில் ஒருவராம்


இந்த நந்தி பின் வந்த மன்னர்களால் கோவிலில் புதிகாக குடி பெயர்ந்தது. இவ்வளவு பெரிய கோவில்..பெரிய கோபுரம் பெரிய லிங்கம் ஆனால் ஏன் சிறிய நந்தி என்று யோசித்து ஒரே கல்லில் வார்த்த நந்தியை இங்கு அமைத்தனர். இந்த நந்தி வளர்கின்றது அதை தடுக்க முதுகில் ஆணி அடிக்கின்றனர் என்ற வதந்திகளும் கூடவே உண்டு


இதுவும் தமிழர்களின் கலாச்சாரம். காலத்தால் அழியாத இடம் என்றால் உடனே இவர்களும் தங்களின் பெயர் முகவரி மொபல் எண் போன்றவைகளை கரியால் பதித்து செல்வர். :)

..

இது ராஜராஜன் அமைத்த நந்தி..பெரிய நந்தியை சற்று ஏக்கமாக பார்க்கிறதோ??
கோவிலின் வெளிப்புற தோற்றம்கோவிலை சுற்றி வரும் அகழி.. அந்நாளில் தஞ்சை நகரில் வரும் மழை நீரை இந்த அகழிக்கு வரும் படி அமைத்து இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் தஞ்சாவூர் நகரின் குப்பைகள் மட்டும் இங்கு தவறாது வந்து சேர்கின்றன.

11 comments:

Vidhya C said...

எப்போ போனீங்க??
classic construction. மூலவரின் பிரமாண்டம் பிரமிப்புக்குரியது.

Vidhya C said...

ஹையா என் கமெண்ட் தான் first:)

Anonymous said...

//கோவிலை சுற்றி வரும் அகழி.. அந்நாளில் தஞ்சை நகரில் வரும் மழை நீரை இந்த அகழிக்கு வரும் படி அமைத்து இருந்தார்கள்.//

தயவு செய்து

பழய படி இங்கு மழை நீரை சேமிப்பதற்கு
யாராவது உதவுங்களேன்.

நன்றி.

Anonymous said...

தச்சைப் பெரிய கோவிலின் அழகோ அழகுதான்.

பேபி நந்தியும் அழகாக இருக்கிறார்.

Arun as Butterfly said...

//எப்போ போனீங்க??
classic construction. மூலவரின் பிரமாண்டம் பிரமிப்புக்குரியது//

ஒரு வாரம் தொடர்சியாக விடுமுறை !! ஊர் சுத்தி பார்க்க கிளம்பிட்டேன். நீங்க எங்கேயும் போகவில்லையா?

Arun as Butterfly said...

//தயவு செய்து

பழய படி இங்கு மழை நீரை சேமிப்பதற்கு
யாராவது உதவுங்களேன்.

நன்றி.//

நண்பரே தஞ்சை என்ஸ்னோரா அமைப்பு தற்போது கோவிலை சுற்றி இருக்கும் தெருக்களின் ராஜராஜன் காலத்து களிமண் குழாய்களை தூர் அமைத்து கொண்டு இருக்கிறார்கள். சீக்கிரமே நல்லது நடக்கும் என்று நம்புவோம் :)

surya said...

நல்ல பதிவு...

வாழ்த்துக்கள்

சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com

வால்பையன் said...

படங்கள் அருமை
பிக்காசாவில்
சில வேலைகளும் செய்திருக்கலாம்

Priya Suresh said...

Dear All, Pl. visit : varalaaru.com if anybody is really interseted to know more about this temple.

A wonderful site for Tamil - History lovers.

Vaanathin Keezhe... said...

மிக மிக அருமை... மிக வித்தியாசமான, ஆர்வத்தைத் தூண்டிய படைப்பு. Fantastic Arun...

பின்னோக்கி said...

போன வார குமுதத்துல, ராஜ ராஜ சோழனின், சமாதி பற்றி எழுதியிருந்தார்கள். இவ்வளவு பெரிய கோவில் கட்டியவனுக்கு, அவமானம்.