சூரிய சக்தியின் வழி மின்சாரமே நம் இந்திய நாட்டுக்கு ஏற்றது . அனு மின்சாரம் இன்றைய அவசர வளர்ச்சிக்கு தேவை..கூடவே நாம் கச்சா எண்ணெய் என்ற எரிபொருளை விட்டு விலக வேண்டிய காலம் நெருங்கி கொண்டே வருகிறது..
இன்றைய சூரிய வழி மின் பொருட்க்கள் விலை அதிகமாகவே இருக்கிறது. வருடத்தில் 365 நாட்களும் தடையில்லா சூரிய ஒளி பின் அடிக்கடி தடை படும் மின்சாரமும் நிறைந்த தமிழ்நாட்டுக்கு இன்றைய சூழ்நிலையில் ஏற்றது.. சூரிய ஒளியால் இயங்கும் emergency light.
இதை டாடா நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. விலை 4,500 INR
உபயோகிப்பது மிக எளிது.. நம் வீட்டில் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் இதன் சார்ஜ் பேனலை வைத்து விட்டால் போதும்..
என் பெற்றோருக்கு தீபாவளி பரிசாக இந்த தயாரிப்பை தர போகிறேன்.
உபரி செய்தி,,
பெங்களூரில் இயங்கும் முக்கால்வாசி சிக்னல்கள் சூரிய ஒளியினாலே இயக்கபடுகின்றன. கர்நாடக மாநில அரசு அனைத்து சிகனலுக்கும் சூரிய ஒளியை பயன்படித்தி இயக்கபடும் சிக்னல்களையே பொருத்த சொல்லி இருக்கிறது
6 comments:
தமிழ்நாடு முழுவதும் தெருவிளக்குகளை சோலார் விளக்குகளாக மாற்றினாலே ஏகப்பட்ட மின்சாரத்தை சேமிக்கலாம்
நல்ல பதிவு
அவசியம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம்.
நல்ல விஷயம் தான். ஆனால் மழை காலங்களில் பிரச்சனை வரும்.
//வால்பையன் said...
தமிழ்நாடு முழுவதும் தெருவிளக்குகளை சோலார் விளக்குகளாக மாற்றினாலே ஏகப்பட்ட மின்சாரத்தை சேமிக்கலாம்
//
நன்றி.
தெருவிளக்குகளை சோலார் விளக்குகளாக ஆக்குவது எளிமையான காரியமமே அரசு மனது வைத்தால் கண்டிப்பாக நடக்கும்
//அவசியம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம்.//
நன்றி
//Blogger Vidhya C said...
நல்ல விஷயம் தான். ஆனால் மழை காலங்களில் பிரச்சனை வரும்.//
இல்லை. சூரிய ஒளி மின்சாரத்துக்கு தேவை குறைந்தது 10’c .தமிழ்நாடு முழுமைக்கும் 365 நாளும் அந்த அளவிற்க்கு சூரிய வெப்பம் எப்போதும் இருக்கிறது.
வருகைக்கு நன்றி
Post a Comment