
காலையில் சன் மியூசிக் இசையருவி சேனல்களை ரிமோட் துணையோடு பொறுமையோடு மாற்றி மாற்றி பார்த்ததில் புரிந்தவை..
சன் மியூசிகில் அயன் பாடல் வந்தால் அங்கே உடனே வாரணம் ஆயிரம்
இப்படியே வேட்டையாடு விளையாடு Vs தசவாதாரம் , சிவாஜி vs குசேலன் , போக்கிரி Vs வில்லு என தமிழ் பேசும் உலகுக்கு நல்ல கலை சேவை செய்கிறார்கள். வாழ்க வாழ்க
-*-
விஜய் டிவியில் விருது கொடுக்கும் நிகழ்ச்சி நல்ல விஷயம் தானே , கமல் சாருக்கு ஏகப்பட்ட விருதுகள் சும்மா அள்ளி கொடுத்தாங்க. எனக்கே டவுட்டு பார்பது கலைஞர் டிவியா இல்லை விஜய் டிவியா கனவா நிஜமா..!!??எல்லாம் சரிதான் கமல் சாருக்கு தசாவதாரம் சிறந்த கதையாசிரியர் விருது கொடுத்தாங்க.. கமல் சார் பக்கா ஜெண்டில்மேன் ..அந்த விருதை மறக்காம Angles and demon's எழுதிய Dan Brownக்கு அனுப்பி வைச்சுடுவாரு.. உலக நாயகன்னா சும்மாவா....
-*-
சென்ற வாரம் திருச்சிக்கு ஒரு நாள் அவசர பயணம்.. திரும்பி வர KPN travelsல் திருச்சி -> பெங்களூர் மதிய நேர வோல்வோ பஸ்ஸில் புக செய்து திரும்பினேன்..எல்லாம் நல்லா தான் இருந்தது. நாமக்கலை தாண்டுவதற்க்குள் 10 தடவை பஸ்ஸை நிறுத்தி ஏதோ செஞ்சாங்க. அப்பவே புத்திக்கு உரைச்சு இருக்கனும்.. இல்லையே .
. பஸ்ஸுல ஏசியே வேலை செய்யலே ..மதிய நேர கொடுமையான வெயில் வேற.. டிரைவர்கிட்ட சொன்னா சார் சேலம் போனவுடன் பஸ்ஸை மாத்திடலாம் சார்ன்னாரு..
மோசமான பயணம். மூட்டைபூச்சி கூட்டணி இன்னக்கு சம்ம வேட்டைன்னு புகுந்து விளையாடுது..
சேலம்த்திலும் பஸ் மாற்றபடவில்லை..புகார் கொடுக்க போன் செய்தால் அதேல்லாம் அப்படி தான் சார் என்று பதில்.. பொறுத்து பார்த்து முடியாமல் எல்லா பயணிகளும் சேலம் தாண்டியவுடன் தொப்பூர் காட்டில் வண்டியை நிறுத்தி வேற வண்டியை கொண்டு வர சொன்னோம்.. இதோ அனுப்பறேன்னு சொன்னாங்க..
வரும் ஆனா வராது கதை தான்..8 மணி ஆச்சு.. பெங்களூருக்கு 9 மணிக்கு போய் சேர வண்டி ...தர்மபுரியை கூட இன்னும் தாண்டலை..
அதே வண்டியில் பயணம் தொடர்ந்தது.. நடு ராத்திரியில் பெங்களூர் வந்து சேர்ந்து அல்லாடியது தனி கதை..
சில வருடங்கள் முன் வரை KPN travels நிறுவனத்தின் சேவை அற்புதமாக இருந்தது. என்ன ஆச்சுன்னு தெரியலை ,இப்பவேல்லாம் அவங்க வண்டியல போவதற்க்கு பதில் பேசாம TVS50யை வாடகைக்கு வைச்சு ஊர் போய் சேரலாம்ன்னு தான் தோணுது. கே பின் என் பேருந்துகளில் அவஸ்தை படுவது இது எனக்கு முதல் முறை இல்லை..
மரியாதையே என்ன வென்று தெரியாமல் பேசும் டிரைவர் க்ளீனர்கள், மூட்டை பூச்சி பண்ணையாக இருக்கு பஸ் ஸீட்டுகள் , பராமரிப்பே இல்லாத பேருந்துகள்..
விகடனில் சில வருடங்கள் முன்னர் கே பி என் உரிமையாளர் , தமிழ் நாட்டில் ப்ளைட் சர்வீஸ் விரைவில் ஆரம்பிப்போம் என்று சொல்லி இருந்தார்.. இதே ரேஞ்சில் போனால் ப்ளைட் என்ன ராக்கேட் சர்வீஸ் கூட ஆரம்பிக்கல்லாம்...
-*-

குடும்பத்தார் பட காமேடி சீன் களை பார்த்து கொண்டு இருந்தேன்.
.சிங்கம் புலி என்ற இயக்குநர் கலக்கி இருந்தார்.
. அவர் தொடர்பாக இணையத்தை நோண்டிய போது கிடைத்த லிங்க்.. ஒரிஜினல் சிங்கம் புலி.. Liger http://www.liger.org/
நீங்களும் பாருங்க interesting ஆக இருக்கும்