Sunday, December 14, 2008

பொம்மலாட்டம் - திரை விமர்சனம்



பொம்மலாட்டம்

பாரதிராஜா படங்களில் எனக்கு என்றும் பெரிய ஆர்வம் என்றும் இருந்ததில்லை.. அண்ணன் தங்கை செண்டிமெண்ட் அல்லது மதுரை தமிழில் கண்டபடி திட்டி கொண்டு அடித்து கொண்டும் பேசும் மொழிகள் எனக்கு பரிச்சயம் இல்லை .

கல்லூரி காலங்களில் தாஜ்மகால் என்ற அப்பத்தமான படம் பார்த்த விளைவோ தெரியவில்லை. ..

சினிமா எனபது டீம் ஒர்க். இதில் இயக்குநர் இமயங்களும் சிகரங்களும் எங்கு இருந்து முளைத்தார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இந்த படம் மிக மிக வித்யாசமான படம்..

பாராதிராஜா ஆரம்ப காலங்களில் எடுத்த திரில்லர்களை மீண்டும் ஒரு முறை மிகவும் அருமையாக புது புது சமாசாரங்களோடு கொடுத்து இருக்கிறார்.

கதை மிக எளிமையாக ..

நானா படேகர் பிரபலமான இயக்குநர் கூடவே வித்யாசமான மனிதரும் கூட.சினிமா இயக்குநர்களுக்கே உரிய அவரின் மனைவியாக ரஞ்சிதா..

சிபிஐ ஆபிசராக அர்ஜீன்..அவரின் காதலியாக காஜல் அகர்வால்.

தமிழ் பதிப்புகாக விவேக் + மணிவண்ணன்

நானாவின் படத்தின் பட பிடிப்புகளில் சில கொலைகள் நிகழ்கின்றது.. அதை விசாரிக்கும் அதிகாரியாக அர்ஜீன்.

கடைசியில் முடிச்சுகள் அவிழ்கின்றன.. கொலையாளி யார் என்று யாராலும் ஊகிக்க முடியாத க்ளைமேக்ஸ்.

வாவ் சூப்பர் கதை.,கண்டிப்பாக யாராலும் எதிர்பார்க்க முடியாத ஒரு முடிச்சு.

திரைகதை சில இடங்களில் சொதப்பினாலும் பல இடங்களில் பாரதிராஜா நம்மை படத்தோடு ஒன்றி போக வைத்து இருப்பதில் ஜெயித்து இருக்கிறார்.

என் இனிய தமிழ் மக்களே என்று தங்க ப்ரேஸ்லேட் வாட்ச் மோதிரம் கூடவே பாரதிராஜா முதல் காட்சியில் காட்சி தருவதை இன்னமும் எத்தனை நாள் தான் தமிழ் சமூகம் பொறுத்து கொண்டு இருக்குமோ தெரியவில்லை.. :)

படத்தின் உண்மையான கதாநாயகன் நானா படேகர் தான். மிகவும் அற்புதமான அலட்டி கொள்ளாத நடிப்பு. அவரின் அலட்சியமான சிரிப்புகள் முக பாவனைகள் கூடவே நிறைவான நடிப்பு.. ம் இந்த படத்தை நானா படேகருக்காவே பல முறை பார்க்கலாம்.

நானா , தமிழில் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும்.

அர்ஜீன் நடிப்பில் பிரகாசிக்க வேலை இல்லை படத்தில் ஆக்சனுக்கும் வழி இல்லை கொடுத்த காரியத்தை செய்து விட்டு போகிறார்.

காஜல் அகர்வால் ரஞ்சிதா கூடவே அந்த நடிகை எல்லாரும் பாத்திரத்தில் கச்சிதம்..

பாடல்கள் இசை ஹிமேஷ் ரேழ்மைய்யா.. பாடல்கள் ஏதோ வந்து போகிறது.,,

ஒளிப்பதிவு - கண்ணன்.. கலக்கல்

விவேக் சில நிமிடங்களே வந்தாலும் காமேடியில் கலக்குகிறார்.. மணிவன்னனும் அதே.

இந்தி படத்தின் பதிப்பு என்பதால் இந்தி வாசனை சற்று தூக்கலாக இருந்தாலும் உறுத்தவில்லை.

குத்து பாட்டு அடிதடி மசாலாக்கள் இல்லாமல் ஒரு நல்ல திரில்லர் பார்க்க வேண்டுமா.. இந்த படம் மினிமம் கியாரண்டி.

பொம்மலாட்டம்- ஆட்டம் இல்லாத நடனம்

7 comments:

Anonymous said...

nalla vimarsanam

வால்பையன் said...

இந்த படத்தின் கதை தாய்லாந்து படத்திலிருந்து திருடியதாமே!

எப்படியோ படம் நல்லாருக்குல்ல!
பார்த்துடலாம்.

Vidhya Chandrasekaran said...

அப்ப படத்த பார்க்கலம்னு சொல்றீங்க:)

Arun Kumar said...

//nalla vimarsanam//

thanks buddie

Arun Kumar said...

//Blogger வால்பையன் said...

இந்த படத்தின் கதை தாய்லாந்து படத்திலிருந்து திருடியதாமே!

எப்படியோ படம் நல்லாருக்குல்ல!
பார்த்துடலாம்.//

நமக்கு எல்லாம் தாய்லாந்து படம் பார்க்க வசதி இல்லை. எப்படியோ நல்ல கதையாக இருந்தால் அதை அப்படியே சுடாமல் தமிழ் படுத்துவதில் தவறு இருக்கிறதா?

Arun Kumar said...

//வித்யா said...

அப்ப படத்த பார்க்கலம்னு சொல்றீங்க:)//

கண்டிபபாக பார்க்கலாம் :) நல்ல திரில்லர் படம் இது

ers said...

நெல்லைத்தமிழ் இணையத்தின் சோதனை திரட்டியில் தங்கள் பதிவையும் இணைக்கலாமே...

முகவரி
http://india.nellaitamil.com/