நாம் என்ன நினைகின்றமோ அதுவே நாம் ஆகிறோம், நம் எண்ணங்களே நம்மை அந்த பாதையில் அழைத்து செல்கிறது.
Thursday, November 27, 2008
மும்பை - தீவிரவாதம் - இந்தியர்கள்
என் இந்தியா என்ற தேசம் மிகவும் அருமையான நாடு
எல்லாரும் ஓர் குலம்
எல்லாரும் ஓர் இனம்
நாம் எல்லாரும் இந்திய மக்கள்
என்று பள்ளிகூட பிரார்த்தனைகளில் பாடிய பாடல்கள் மனதில் தோன்றி உடன் மறைந்து சென்றது.
இந்தியாவில் அனைத்து புறங்களிலும் நான் பயணம் செய்து உள்ளேன்.. பல மொழி பல கலாச்சாரம் வித விதமான உடை பல விதமான உணவு..
இத்தனை பெரிய நாடு மிகப்பெரிய கலாச்சாரம் பல மதங்கள் சாதிகள் என்று இந்தியா பிளவு படும் போது கூடவே பள்ளிகூடத்தில் சொல்லி கொடுத்த வேற்றுமையிலும் ஒற்றுமை காணமால் போகிறது
வெளிபடையாகவே பேசலாம்..
இந்தியாவிற்க்கு இதை போல குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணம் ஆனது பாபர் மசூதி இடிப்பு முதல் தான்.
மக்களுக்கு நல்லது செய்வோம் நாட்டுக்கு நல்லது செய்வோம் என்று அரசியல் செய்தவர்கள் அன்று முதல் மத பிரிவினை காட்ட ஆரமித்தது அதன் முதல் தான்.
அதற்க்கு முன்னர் இதை போல குண்டு வெடிப்புகள் அப்பாவி மக்கள் பாதிப்புகள் கேட்டு இருப்போமா? இப்படி கோடுரங்களை பார்த்து இருப்போமா?
பாக்கிஸ்தான் என்பது இன்று தனி தேசம்..
இன்று இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் நம்மோடு நம்மாக கலந்து மகிழ்ச்சி துண்பம் துக்கம் சந்தோசம் என அனுபவிக்க நினைக்கும் நம்மை போல சாதாரண மனிதர்கள் தான்.
இந்த குண்டு தீவிரவாத தாக்குதல்களுக்கு பின் உடனே இஸ்லாமியரை கை காட்டும் மனிதர்களே மாலேகான் குண்டு வெடிப்பின் பின் எங்கு போனீர்?
தீவிரவாதம் அடுத்த மனித உயிர்களை குடிக்கும் வெறி சாதி மத இன பேதம் அற்றது.
சாதி மதங்களை இங்கு தயவு செய்து விட்டு விடவும்..இங்கு இழப்பது மனித உயிர்கள்.இதற்க்கு இந்து முஸ்லீம் கிருஸ்துவ பேதம் கிடையாது..
கொஞ்சம் யோசித்து பார்த்தால் இதை போல தாக்குதல்கள் மதம் சாதி இனம் மொழி என்ற குறுகிய சிந்தனையில் வாழும் சில கேடு கெட்ட மனிதர்களால் வளர்க்கபடுகின்றன.
இன்றைய மும்பை தாக்குதல் நடை பெறும் போது பால் தாக்கரே + sons எங்கு இருந்தனர்? எங்கு ஓடி போனார்கள்? ராஜ் தாக்கரே தனது தொண்டர்களை வைத்து இந்த தீவிரவாதிகளிடம் இருந்து அப்பாவி மக்களை காபாற்ற முடியவில்லையா? எங்கே போனது அந்த வீரம்?
இதை வரை அப்பாவி மக்களை பகடை காயாக்கி விளையாண்ட போது இருந்து வீரம் இன்று ஏன் காணமால் போனது?
ஏன் நம் கண் முன்னே கூட இதை போல மொழி உணர்ச்சியை தூண்டி அப்பாவி மக்கள் வாழ்க்கையை துண்டாடாக்கிய வரலாறு கண் முண்ணே நடக்கிறது....
பிரபாகரன் என்ற பங்கரில் ஒளிந்து இருந்து அப்பாவி மக்களை பலி கொடுக்கும் ஆளுக்கும் ராஜ் தாக்கரேக்கும் எனக்கு பெரிதாக வேறுபாடு தெரியவில்லை...ஏன் இதை போல தீவிரவாதிகளுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு ஏதும் இல்லை...
வன்முறை என்பது இரு முனையும் கூரான கத்தி..
நமக்கு பிடித்த கருத்துகளாக்க வன்முறை செய்பவன் ஹீரோ என்பதும் நமக்கு பிடிக்காத கருத்துகளை கொண்டு இருப்பவனை துரோகி என்று சொல்வது அயோக்கியதனம்...அதுவும் அப்பாவிகளை பலி கொடுப்பது மிக மிக மோசமான செயல்..
வருங்கால இந்தியா அமைதி பூக்காவாக மாற சில கருத்துகள்
மொழி சாதி மதம் போன்றவற்க்கு மிகவும் மரியாதை கொடுத்து பால் ஊட்டி சீராக்கும் அமைப்புகள் அனைத்தும் தடை செய்யபட வேண்டும். முடிந்தால் இதை ஆதரித்து சுயலாபம் அடையும் கொள்கை வேந்தர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்
சாதாரண கவுன்சிலர் தேர்தல் நடத்தும் போது சாதி மதம் பார்த்து வேட்பாளரை நிறுத்தும் கட்சிகள் இருக்கும் வரை இதை போல சம்பவங்களும் அதை பார்த்தும் கேட்டும் நமது சில நாள் தூக்கமும் பல பேரின் வாழ்க்கையும் கெட போவது நடந்து கொண்டே தான் இருக்க போகிறது..
திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..
நாம் அடுத்தவரை கை காட்டும் முன் நாம் உண்மையாகவே சரியாக நடக்கிறோமோ என்று நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டும்..
இறுதியாக....
தீவிரவாதிகளின் தாக்குதலில் தன் உயிரை இழந்த இந்திய வீரர்களுக்கு என் வீர வணக்கம்
ஹேமந்த் கார்கரே, அசோக் காம்டே போன்ற நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு என் வீர வணக்கங்கள். இந்த நிமிடம் கூட தன் உயிரை பொருட்படுத்தாமல் அப்பாவிகளை காப்பாற்ற பொறுமையாக தாக்குதல் நடத்தும் இந்திய தேசத்தின் ரானுவ வீரர்களுக்கும் போலிசாருக்கும் என் நன்றிகள்...
இனியாவது சாதி மத சண்டையை விடுத்து இந்தியர்கள் என்ற ஒரே நினைப்பில் இந்த தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்போம்....
நாம் வாழும் இந்த நாடு நமக்கு மட்டும் சொந்தம் இல்லை, இனி நம்மை தொடர்ந்து வரும் தலைமுறைக்கும் சொந்தம்.
இதை உணர்ந்து நம் நாட்டை பாதுக்காப்போம்.. நம் மக்களை பாதுகாப்போம்..
இதை நாம் இன்றைய தினத்தில் செய்ய மறந்தால் வரலாறு நம்மை கண்டிப்பாக மன்னிக்காது..
இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்...இந்தியர்களாக வாழ்வோம் மடிவோம்...
Monday, November 17, 2008
ஆனந்த தாண்டவம் - பாடல்கள் எப்படி??

ஆனந்த தாண்டவம் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் “பிரிவோம் சந்திப்போம்” தொடரை தழுவி வரும் படம். நண்பன் அறையில் இருந்து புக்கை சுட்டு கொண்டு வந்து பல இரவுகள் விடாமல் படித்த புத்தகம்..
சேவல் படத்திற்க்கு பின் ஜி.வி.பிரகாஷ் குமாரின் அடுத்த படம்.
இந்த முறை படத்தின் பாடல்களை வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார்.
பட்டாம்பூச்சி
புல்லாங்குழலும் கீபோர்டும் கலந்து கட்டி அழகாக பாடல் தொடங்குகிறது. சாக்சபோன் தபலா என்ற பாடலின் ஒலி சேர்க்கை அருமையாக இருக்கிறது. பாடலில் மேற்கு இசையும் கூடவே இந்துஸ்தானி இசையும் அருமையாக கலந்து ஒலிக்கிறது. வைரமுத்து பாடல் வரிகள் மேலும் பாடலுக்கு அழகு,/
கல்லில் ஆடும் தீவே.
புல்லாங்குழலின் இசையோடு தொடங்குகிறது. மெலடி பாடல் என்று எதிர்பார்த்தால் பீட் ஏறி கொண்டே போகிறது. அமெரிக்க பிண்ணணியில் வரும் பாடல் போல...கிடார், டிரம்ஸ் நல்ல நேர்க்கை.. வைரமுத்து வின் பாடல் வரிகள் அருமை. “ நான் என்றால் தனிமை நீ என்றால் வெறுமை நாம் இருவரும் சேர்ந்தால் இனிமை.”. இன்னும் பல முறை கேட்டால் தான் பாடலின் முழுவதும் புரியும் ..!!
பூவினை திறந்து கொண்டு
எலக்டிக் கிடார் வயலின் இசையோடு மிக அழகாக தொடங்கும் மெலடி...மிகவும் அழகான மென்மையான பாடல்.. மெலடிக்கான இசையில் இரைச்சல் சற்று அதிகமாக இருக்கிறதோ..ஸ்ரேயா கோஷல் , சீனிவாஸ் இருவரின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
மேகம் போல
சங்கர் மகாதேவனின் குரலில் சோகமான பாடல். புல்லாங்குழல், கிடார், டிரம்ஸை வைத்து அழகாக பிரகாழ் விளையாடி இருக்கிறார். வைரமுத்துவின் பாடல் வரிகளும் அருமை. சங்கர் மகாதேவன் வரிகளை சிதைக்காமல் நன்றாக பாடி இருக்கிறார் அவருக்கே உரித்தான ஹை பிச்சில்
கணா காண்கிறேன்
பாடல் ஆரம்பத்தில் எங்கேயோ கேட்டது போல தோன்றியது. இவரின் மாமா ரஹ்மான் இசை அமைட்த்த ஸ்டார் படத்தில் இருந்து அப்படியே ட்யூனை உருவி இருக்கிறார்.
“தோம் கருவில் இருந்தோம்
கவலையின்றி கண்மூடி கிடந்தோம்”
பாடல் வேறு விதத்தில் வேறு பிண்ணியில் மீண்டும் உருவாகி இருக்கிறது. இருந்தாலும் பாடல கேட்க்க நன்றாக தான் இருக்கிறது,
ஜீ.வி.பிரகாஷ்குமார் வெயில் படத்திற்க்கு பின் இதுவரை வந்த படங்கள் கை கொடுக்கவில்லை. ஆனந்த தாண்டம் பட்த்தின் பாடல்கள் வித்யாசமாகவே இருக்கிறது. மீண்டும் கேட்க்க கேட்க்க நன்றாக இருக்கிறது. ம் படத்தில் எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்...
Saturday, November 15, 2008
வாரணம் ஆயிரம் - விமர்சனம்

வாரணம் ஆயிரம் = ஆட்டோகிராப் + தவமாய் தவமிருந்து + அழகி
ஆனால் தமிழில் இது வரை இப்படி எந்த படத்திலும் வாரணம் ஆயிரத்தில் சொன்னது போல முழுமையான திரைகதை சொல்லி இருக்கிறார்களா??
அதுவும் ஒரு குடும்பத்தின் இரு தலைமுறையின் கதைகளை எந்த வித நெருடலும் இல்லாமல் ??
வாரணம் ஆயிரம் -- தமிழில் இது வரை இப்படி ஒரு கதை திரைகதையோடு முழுமையான படம் வந்து இருக்குமா?
ஆயிரம் யானைகள் பலத்தோடு சூர்யா ...............
’நேருக்கு நேரி’ல் பார்த்த சூர்யாவா பிதாமகனில் இப்படி கலக்கினார் என்று இதுவரை சொன்னோம்??!!
இனி பிதாமகனில் நடிப்பில் ஒரு படியை தாண்டிய சூர்யா போல்வால்ட் ஜம்பில் பல சிகரங்களை தாண்டி இருக்கிறார்..
சூர்யா சான்ஸே இல்லை... 15 வயது முதல் 30 வயதை தொடும் ஒரு பாத்திரம்.. 20 முதல் 60 தொடும் அடுத்த கதாபாத்திரம்.. எவ்வளவு கனசக்சிதமாக செய்து இருக்கிறார்.. அதுவும் முதல் பாதியில் காதல் காட்சிகளில் வாவ் சும்மா கலக்கி இருக்கிறார்...

காட்சிக்கு காட்சி எத்தனை வித்யாசம்..எத்தனை வித வித மான உறுத்தாத அதே நகைசுவை கலந்த இதமான நடிப்பு..
எத்தனை விதமான நடிப்பு வித்யாசங்கள்....
கூடவே தன் உடலை காட்சிக்கு ஏற்றவாறு எப்படி எல்லாம் மாற்றி இருக்கிறார்.. அதுவும் தன் வயதை பாதியாக குறைத்து 15 வயது டீன் ஏஜ் மாணவனாக சூர்யா ...இது வரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத முயர்ச்சி.. வெகு அழகாக எந்த வித உறுத்தலும் இல்லாமல் அப்படியே ஸ்கூல் போகும் பையன் போல இருக்கீங்க..
ஜோதிகா மேடம் சாருக்கு இன்னும் 108 நாளைக்கு தினமும் திருஷ்டி சுத்தி போடுங்க....
இது வரை தமிழ் சினிமாவில் சொல்லபடாத கதை...ஒரு குடும்பத்தின் இரு தலைமுறையை எந்த வித ஜோடிப்பும் இல்லாமல் அழகான திரைகதையில் சொல்லி இருக்கிறார்கள்.

அதுவும் முதல் பாதி ஜெட் வேகம் கூடவே வெகு அழகான காதல் கதை.... அழகான சமீரா ரெட்டி.. அழகான அமெரிக்கா....கூடவே அழகான அருமையான பாடல்கள். ரத்தினவேலின் ஒளிப்பதிவு..மிக மிக அருமை.. எடிட்டர் ஆண்டணியும் மிகவும் கடின உழைப்பு உழைத்து இருக்கிறார்.
ஹாரீஸ் சார் அது என்ன கெளதம் படத்துக்கு மட்டும் சூப்பர் ஹிட் பாட்டுகளாக போட்டு கொடுக்கிறீங்க.. பாடல்கள் கேட்க்க மட்டும் அல்ல பார்க்கவும் மிக நிறைவு.

தாமரை + ஹாரீஸ் + கெளதம் கூட்டணியில் இன்னும் ஓர் மகுடம்..
சிம்ரன், ரம்யா @ திவ்யா என எல்லாரும் மிக அருமையாக நடித்து இருக்கிறார்கள். இவர்களில் ஸ்கோர் செய்வது சமீரா ரெட்டிதான்..
கெளதம் சார் நீங்க என்னை போல திருச்சி மூகாம்பிகை பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்..நம்ம பசங்களை போல நீங்களும் நம்ம காலேஜை இன்னமும் மறக்கவில்லை.. ரொம்ப நன்றி சார்..
தில்லியில் வரும் காட்சிகளில் விஜய்காந்த் படங்களில் வருவது போல இந்தி ஆட்களிடம் தமிழில் பேசும் அபத்தம் இல்லை மாறாக மொழி தெரியாமல் இருந்தாலும் காட்சிகளை நெருடல் இல்லாமல் ரசிக்க வைத்து இருக்கிறார்கள்..
கூடவே கதை நகரும் எல்லா இடங்களிலும் நாம் படத்தை மட்டும் ரசிக்கிறோம்..
தல அஜித் இந்த படத்தை பார்த்து விட்டு ஏண்டா கெளதம் மேனன் படத்தை மிஸ் செய்தோம் என்று நொந்து போய் இருப்பார்..
வாரணம் ஆயிரம் உண்மையான ஆயிரம் யானைகள் பலத்தோடு...
Thursday, November 13, 2008
நடந்ததும் தொடர்ந்து நடப்பதும்
இந்த சண்டைகள் தற்போது தமிழ்நாட்டின் தலைநகரத்தில் கூடவே காமேராக்கள் முன்னால் நடந்தால் நாமும் நிறைய பேசுகிறோம்.. இன்னும் சில தினங்கள் போனால் மறந்து விட்டு அடுத்த வேலை பார்க்க சென்று விடுவோம்.
இதை போல மாணவர்களுக்குள் கேவலமான சாதி பிரிவினைகள் சாதி சண்டைகள் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான அரசு கல்லூரிகளில் இருக்கிறது தொடர்ந்து வளர்க்கபடுகிறது....
******************************************************************
அப்போது எனக்கு 15 வயது , பத்தாம் வகுப்பு முடித்து திருச்சி அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படிக்கிறேன். அங்கும் இதே போல ஒரு சாதி சண்டை.. சாதி சண்டைக்கு காரணம் மாணவர்களை தூண்டி விட்டு பின்னால் தங்களின் சுயநலங்களை பகடை காயாக செயல்பட்ட இரு பேராசிரியர்கள்.
இரு பேராசிரியர்கள் கல்லூரியில் எப்படி கமிசன் அடிக்கலாம் எப்படி நான் உன்னை ஜெயிக்கிறேன் என்ற கோதாவில் மாணவர்களை தூண்டி விட்டு கடைசியில் ஒரு கெட்ட நாளில் அரிவாள் கொண்டு சண்டை போட்டு பின் தங்களின் வாழ்க்கையை வீணாக்கி கொண்டார்கள்.
அரசு கல்லூரியில் அதுவும் பொறியியல் தொடர்பான கல்லூரிகளில் அங்கு வேலை பார்பவர்கள் சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.
என் வாழ்க்கையில் கதிர் அறுக்கும் அரிவாள்கள் கூட ஆட்களை வெட்ட பயன்படும் என் நேரடியாக பார்த்த பருவம் அது. பல நாட்க்கள் கல்லூரி காலம் குறிப்பிடபடாமல் மூடிய நேரம். கல்லூரி மூடினால் கூடவே ஹாஸ்டலையும் மூடி விடுவார்கள்,,, எனக்கு அன்று வாழ்க்கையில் கிடைத்த மூன்று வேளை சாப்படுகள் சொல்லி கொள்ளாமல் நிறுத்தபடும்.
நான் அங்கு படித்த மூன்று வருடங்களும் இதே கதை தான்.. சண்டை போட புது புது மாணவர்கள் அடிபடவும் புது புது ஆட்கள்.. ஆனால் பலன் அடைந்தது என்னவோ அதே இருவர் மட்டும் தான்..
பொதுவாக அரசு கல்லூரிகளில் படிக்க வருபவர்கள் ஏழை மாணவர்களாக தான் இருப்பார்கள். நானும் கூட அப்போது அப்படி தான். என் கூட படித்தவர்கள் 99% அப்படிதான். முக்கா பேண்ட் என்று காதில் அடிக்கடி வார்த்தைகள் வந்து சேரும்.. ஏன் என்னோடு அன்று படித்த பல பேர் அன்று முக்கா பேண்ட் தான்....
அன்று என்னோடு படித்த பல பேர் மிகவும் பின் தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள்
அப்பா அம்மா தன் பையனாவது முன்னேறட்டும் என்று கழ்டபட்டு அனுப்பிய காசில் தூண்டிவிட பட்டு சாதி சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள்.
இந்த நிலை நான் படித்த இடத்தில் மட்டும் அல்ல சற்று அருகில் இருந்த திருச்சி கைலாசபுரம் அரசினர் கல்லூரி, திருச்சி ஈ வே ரா கல்லூரி, திருச்சி லா கல்லூரி என அரசால் நடத்தபடும் அனைத்து கல்லூரிகளும் இதே நிலை தான்..
பொதுமக்களுக்கோ வேறு ஒரு பிரச்சனை.. இந்த கல்லூரிகள் இருக்கும் இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாணவர்களால் பொது மக்களுக்கு எவ்வளவு பாதிப்பு தர முடியுமோ அத்துணையும் தரபடும்.
பொது மக்களை பொருத்தவரை இந்த கல்லூரிகளில் நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் வழக்க்கம் போல ஒன்று தான்.
சென்னையில் கூட அரசு கல்லூரி மாணவர்கள் தினமும் பேருந்துகளில் பொதுமக்களுக்கு கொடுக்கும் தொல்லைகள் பல பல.. நந்தனம் அரசு கல்லூரி ஒன்று போதுமே !!
ஏன் தனியார் கல்லூரி மாணவர்கள் இதை போல நடப்பதில்லை??
காரணம் ரொம்ப சிம்பிள்.. படிக்கும் மாணவர்கள் இடத்தில் சாதிகள் அரசியல் கட்சிகள் கிட்ட வரவே கூடாது..அரசியல் கட்சிகளும் சாதி கட்சிகளும் மாணவர்களை தூண்டி விட்டு குளிர் காய்வது தமிழ் நாட்டில் அனைத்து அரசு கல்லூரிகளும் நடக்கிறது.
இது உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம்..
இதை தடுக்க உங்களுக்கும் ஏன் எனக்கும் தடுக்க வழி முறைகள் தெரியும்.. ஆனால் எதுவும் நடக்க போவதில்லை.. காரணம் ..
இணையத்தில் மித்த படித்தவர்களே மித்த அறிவாளிகளே சாதி சண்டை பார்பானியம் பித்தளையம் என்று வெட்டி சாதி சண்டைகள் செய்யும் போது 20 வயதை கூட கடக்காத இன்னமும் உண்மையான சமூகத்தை பார்க்காத அந்த மாணவர்கள் என்ன தான் செய்ய முடியும்??
Monday, November 10, 2008
மழை வருது குடை கொண்டுவா :)
மழை கால இரவுகள்

தூரத்தில் வரும் வாகன ஒளி பிம்பத்தில் சிதறும் ஒளி
எங்கு செல்கிறோம் என்று தெரியாத
தெருவோர நாய்களின் அவசர ஓட்டங்கள்
தூக்கம் தொலைந்த வேதனையில் நடைமேடை வாசிகள்
சாலை குழிகளில் ஓடி களைத்த ஆட்டோக்கள்
மீந்துபோன இட்லியோடு ரோட்டுகடைகள்
குல்பிஐஸ் வியாபாரம் இல்லாமல் அவர்களும்
இது ஏதும் தெரியாமல் மின்சாரம் இல்லை என் புலம்பும் நானும்
Sunday, November 9, 2008
மொழி அரசியல்
சன் டிவி கே டிவி கலைஞர் டிவிகளில் மொக்கை படங்கள் போட்டு பார்வையாளர்களை பரவச 'படுத்தியதால்’ இந்தி சானல்களில் மேய்ந்தேன்.
சன் டிவிகாரங்களே உங்களுக்கும் விஜயகாந்துக்கும் இப்ப ரொம்பவே ராசி போல.. அதுக்காக படு மொக்கை படங்களை போட்டு torture பண்ணாதீங்க முடியலை..

2001 ம் ஆண்டு வெளி வந்த Gadar படம் இன்று வரை இந்தியில் வெளிவந்த படங்களில் வசூல் சாதனையில் சாதனை படைத்த படம்.
1947 பிரிவினையின் போது ஏற்படும் ஒரு காதல் கதை. படத்தின் ஹீரோ சன்னி தியோல் நம்ம விஜய்காந்த போல எல்லாரையும் அடுத்து துவைத்து கடைசியில் இவர் மட்டும் பிழைக்கும் ரகம் :)
பல இந்தி படங்களில் இந்தியா பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளும் கதையில் இருந்தால் உடனே நம் நாடு ‘இந்துஸ்தான்’ என்றும் கூடவே பாக்கிஸ்தான் படு மோசமான நாடு என்றும் திரைக்கதை இருக்கும். இந்த படமும் இதற்க்கு விதிவிலக்கில்லை...
இந்தியா என்பது செகுலர் நாடு, இந்தியாவில் பாக்கிஸ்தானில் வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களை விட இந்தியாவில் தான் அவர்கள் எண்ணிக்கை அதிகம் .
பின் ஏன் இந்துஸ்தான் என்று சொல்கிறார்களோ தெரியவில்லை..??
*****************************************************************************************
ஒரு முறை உத்திர பிரதேசத்தில் லக்னோவில் புறநகர் பகுதியில் சில நாள் தங்க நேரிட்டது.
இரவு பத்து மணி இருக்கும்.. அது குளிர்காலம்..
ரோட்டோரத்தில் இருக்கும் ஒரு பெட்டி சூடாக டீ கேட்டேன்.. எனக்கு தெரிந்த இந்தியில்..
என்னை விட வயதில் சிறியவனாக இருந்த பொட்டி கடை வியாபாரியிடம் இருந்து வந்த பதில் ” இந்துஸ்தானில் பிறந்தவனாக இருந்தால் முதலில் இந்தி ஒழுங்காக பேச கற்று கொள்”
அவனிடன் என்ன சொல்வது ?? என்ன வாக்குவாதம் செய்வது?? அந்த சிறுவனின் கனவான இந்துஸ்தான் எனபது வெறும் இந்துக்கள் மட்டும் வாழும் நாடு அங்கு அனைவரும் இந்தி தான் பேசுவார்கள்”..
அவன் எல்லை என்னவாக இருக்கும்??
லக்னோ ஒரு பெரிய கிராமம்.
லக்னோவை விட்டு தன் வாழ்நாளில் எங்குமே சென்று இருக்க மாட்டான்.
அவனை போல அறியாமையில் இருப்பவனிடம் புரியவைப்பதற்க்கு பதிலாக சர்க்கஸ் சிங்களிடம் நம் தலையை கொடுக்கலாம்..
அந்த கடையில் கிடைத்த டீ போல இது வரை நான் வேறு எங்கும் ருசித்ததில்லை :) . நல்ல திறமையை வைத்து கொண்டு கூடவே மொழி என்ற சிறிய வட்டத்தில் தூங்கி கொண்டு இருக்கிறான் என்றே தோன்றியது.
இங்கு இந்தி அரக்கி ஒழிக என்று சொல்பவர்க்கும் அந்த சிறுவனுக்கு வித்யாசம் எனக்கு ஏதும் தெரியவில்லை
*******************************************************************************************
இதை போல மொழி அரசியல்கள் தோன்றும் ஒரு சிறு வட்டத்தில் மட்டுமே நாமும் இருந்தால் ஜலதோழம் போல தொற்றி கொண்டு விடும்.
அடுத்த மொழி பேசுபவர்கள் நம் எதிரியாக தெரியலாம், ரத்த கொதிப்பு எல்லாம் இலவசமாக கிடைக்கும்.
சிகிச்சை ஏதும் இல்லை..
வெகு நாள் ரணமாகி அடுத்துவர் மனத்தையும் காயபடுத்தி கடைசியில் வெறுப்புணர்ச்சியை மட்டும் பயிர் செய்த வெற்றியோடு மூர்ச்சை ஆகலாம்
**********************************************************************************
எல்லா இடங்களில் வெறுப்புணர்ச்சி கொண்டவர்களும் + சுய தன்னபிக்கை கொண்டர்வர்களும் இருக்கிறார்கள்..
வெறுப்புணர்சிகள் தனி மனிதனை கோள் மூட்டுவதில் இருந்து தொடங்கி சாதி மொழி இனம் மதம் என குறுகிய சிந்தனைகளை பேசி மனதின் வலிமையை குறைப்பதே குறிக்கோளாக வைத்தே அமைகிறது.
இதை போல பேசுபவர்களிடம் இருந்து ஒதுங்கி நின்றால் வாழ்க்கையில் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் என யாகவா முனிவர் ஆவி சொல்கிறது.
*************************************************************************************
Saturday, November 8, 2008
தேனூர் சிவாஜி

12.11.08 மற்றவை |
படித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்... பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சி `உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!' என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார். விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்? முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர். வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார். ``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார். ``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன். 2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு! கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன். அப்புறம் பள்ளிக்கூடம். கல்விக்கூடத்தை இயந்திரம இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம். நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார். செந்தில்குமாரின் தாய் லீலாவோ, ``சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுதான் எங்களோட ஆசை. ஆனால், சம்பாதித்த காசை சேவைன்னு செலவு பண்ற பிள்ளைக்கு யார் பொண்ணு தர்றாங்க... அதுவுமில்லாம `உங்க புள்ளை நல்லாப் படிச்சுட்டு, நல்லா சம்பாதிக்கிறப்பவே ஏன் இப்படி ஆயிட்டார்'னு அபத்தமா பேசுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குதுங்க!'' என்று வேதனையோடு கண்கலங்கினார்.. - இரா.கார்த்திகேயன் நன்றி குமுதம் |
Monday, November 3, 2008
சினிமா சினிமா தமிழ் சினிமா
சென்ற வருடங்களில் இதே காலகட்டத்தில் வந்த படங்களை விட நன்றாகவே இருப்பதாக தோன்றுகிறது. கதை சொல்லும் போக்கில் இருந்து பல இடங்களில் தமிழ் சினிமா மிகவும் முன்னேறி இருக்கிறது.
இருந்தாலும் படம் 30 நாளை தாண்டினால் சூப்பர் ஹிட்டாம் :))
திருச்சி ரம்பா தியேட்டரில் மூட்டை பூச்சியின் வீடுகளாகி போன சீட்டில் உட்கார்ந்து மூன்று மணி நேரம் படம் பார்க்க 60 ரூபாயாம் :) .. ஏஸி என்பது படம் ஆரம்பிக்கும் போது போட்டது போல தோன்றும்...பின் 60 ரூபா கொடுத்ததுக்கு இதுவே அதிகம் என்று ஏஸியை அணைத்து விடுவார்கள்.
பராமரிப்பு செலவு என்று டிக்கேட் செலவில் வாங்கி கொள்கிறார்கள்.. ஆனால் என்ன பராமரிப்பு செய்கிறார்கள் என்று ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.. இப்படி எல்லாம் பகல் கொள்ளை அடித்தால் ஏன் திருட்டு டிவிடி தொழில் வளராது?
பிராமிட் சாய்மீரா நிறுவனம் பல தியேட்டர்களை லீசுக்கு எடுத்த போது சரி இனியாவது நிலைமை மாறுமா என்று நினைத்தது தவறாகி போனது,
இன்றைக்கு பிராமிட் சாய்மீரா நிலை மிக மிக பரிதாபம் . என்றைக்கு மொத்தமாக இழுத்து மூடுவார்கள் என்று தெரியவில்லை.
ரிலையன்ஸ் அட்லப்ஸ் தமிழகத்தில் பல தியேட்டர்களை விலைக்கு வாங்கி அதை நன்றாக பராமரிக்கவும் செய்கிறார்கள். கண்டிப்பாக இவர்கள் சினிமா பார்க்கு ஆர்வத்தை மீண்டும் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்
தமிழக மக்களுக்கு தியேட்டர் சென்று படத்தை பார்க்கும் ஆர்வம் இன்று வரை குறையவில்லை.. என்னதான் திருட்டு டிவிடி தொல்லை இருந்தாலும் சினிமா தியேட்டர்கள் நல்ல சேவையை கொடுத்தால் பல பேர் டிவிடியில் கேவலமான பிரிண்ட்டை பார்பதை விட்டு விடுவார்கள்..
தியேட்டரில் சினிமா பார்பதே நிஜமான சினிமா பார்த்த உணர்வை கொடுக்கும்.
Singh the King சமீபத்தில் வந்த ஹிந்தி படம்.. அப்படி ஒன்றும் பிரமாதமான படம் கிடையாது. இதோ நேற்று landmarkல் புது பட டிவிடிகளை அலசும் போது கிடைத்தது.
இந்தி பட உலகம் எவ்வளவோ மாறி விட்டது. மும்பை தில்லி போன்ற பெரு நகரங்களில் அதிக பட்ச தியேட்டர்களில் படத்தை ரிலிஸ் செய்து லாபம் சம்பாதித்து பின் படம் வந்த 50 அல்லது 100 நாட்களில் டிவிடியில் கொடுத்து விடுகிறார்கள். விலையும் கையை கடிப்பதில்லை..
பின் சில நாட்களில் டிவியிலும் வந்து விடுகிறது. தயாரிப்பாளர் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவருக்கும் லாபம்.
இந்த திருட்டு டிவிடியை ஒழிக்க இதை போல தமிழ் பட உலகும் செயல்பட வேண்டும். கேவலமான தியேட்டர்களில் திரையிடுவது பின் 3 வருடம் கழித்து டிவிடி + டிவியில் வெளியிடுவது என்ற கொள்கையை மாற்ற வேண்டும்..
பெங்களூரில் என் வீட்டுக்கு அருகே இருக்கும் பாலாஜி தியேட்டரில் தமிழ் படம் மட்டும் தான் திரையிடுவார்கள். கொடுக்கும் 50 ரூபாவிற்க்கு நல்ல சேவையை தருவார்கள். மூட்டை பூச்சி இல்லாத சீட்டுகள், ஏசி கூடவே நல்ல தரமான டிடிஎஸ்..
நான் அடிக்கடி படம் பார்பது பிவிஆர் அல்லது ஐநாக்ஸ் .. ஆன் லைனில் டிக்கேட் வாங்க முடிவதால் அங்கு தான் அடிக்கடி செல்வேன்,கொடுக்கும் பணத்திற்க்கு ஏற்ற மிகவும் தரமான சேவை...படம் பிடிக்க வில்லை என்றாலும் அந்த தியேட்டருக்கு மீண்டும் ஒரு முறை செல்ல தூண்டும் அளவிற்க்கு சேவை..
சென்னையில் நீயூ என்ற ஒரு கேவலமான படத்தை 4 வருடங்களுக்கு முன்னர் என் நண்பணோடு குரோம்பேட்டை வெற்றி என்ற படு கேவமான தியேட்டரில் பார்க்க ஒரு டிக்கேட்டுக்கு 100 ருபா கொடுத்தேன்..
ஏன் 100 ரூபா என்றால் த்தோடா என்று வர குண்டர்கள் வேறு..
தமிழ் சினிமாவை அழிக்க இவர்களே போதும்...
ம் என்னறைக்கு தான் தமிழ் படவுலகம் மாற போகுதே :)
Sunday, November 2, 2008
பிடித்த விளையாட்டுக்கள்
நான் சிறுவயதில் வசித்த ஊர் கிராமமும் அல்லாது நகரமும் இல்லாத ஒரு இரண்டும் கெட்ட ஊர். பெயர் மன்னார்குடி. தஞ்சை மாவட்டதுகே இருக்கும் அனைத்து தனி சிறப்புகளையும் கொண்டது..
எங்கள் ஊரில் விளையாட்டுகள் மாறி கொண்டே இருக்கும்.. பம்பரம், பலிங்கி ( கோலி), கிட்டி புல்லு, சொக்கை பாணை கூடவே ஒளிஞ்சு புடிச்சு ( ஐஸ் பாய்ஸ்)..
ஐஸ் பாய்ஸ் விளையாட்டு ஏப்ரல் மே மாதத்தில் தான் விளையாடுவோம். நிறைய புது நண்பர்கள் அந்த சமயத்தில் கிடைப்பார்கள். விடுமுறைக்கு சென்னை மும்பை இருந்து வரும் பல தற்காலிக நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள் பேசி கொள்ளும் ஆங்கிலம் எங்களை எல்லாம் வியப்பூட்டும். கூடவே பொறாமையாக இருக்கும். ஐஸ் பாய்ஸ் விளையாட்டில் அவர்களை பழிக்கு பழி வாங்கி விடுவோம்..
ஐஸ் பாய்ஸ் விளையாடும் போது எல்லைகள் உண்டு. இந்த எல்லை வரை தான் ஒளிந்து கொள்ள வேண்டும்.. வழக்கமாக நாங்கள் ஒளியும் இடங்கள் வீடுகளின் கதவின் மறைவில். முதலில் பிடிபட்டால் நாம அடுத்த ஆட்டத்தில் அனைவரையும் தேடி அலைய வேண்டும்.
புதுசா எங்க ஆட்டத்தில் யாராவது வந்தால் அவர்களை நொந்த போக வைத்து விடுவோம். வைக்கோல் போரில் ஒளிந்து கொண்டால் கடைசி வரை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. தேடி கொண்டே இருக்க வேண்டியது..
ஜீன் மாதம் வந்தால் அந்த தற்காலிக நண்பகளும் காணாமல் போய் விடுவார்கள், பிறகு ...
இருக்கவே இருக்கு பலிங்கி அடிப்பது..
பலிங்கி விளையாடுவது மிகவும் சிரமான ஒன்று. எல்லாம் குட்டீஸ் பலிங்களையும் சேர்த்து உருட்ட வேண்டும்.. பின் குறி பார்த்து ஏதாச்சும் பலிங்கையை அடித்து விட்டால் நமது பலிங்கு எதிரி வசம்.
அழகாக தடிமான சோட்டா புட்டி உடை அனிந்த கோலி...அதை குறி பார்த்து அடிக்கும் போது நங் என்ற சத்தம் கேட்ட்க்கும். என்னதான் வேகமாக அடித்தாலும் உடையாது. கைகளின் நடு விரலை சற்று சொடுக்கி குறி பார்த்து அடிப்பது மிக பெரிய கலை. ஒரு பலிங்கி 10 காசு என்று வித்தது. கோலி சோடாவின் தொண்டையில் மிதக்கும் அந்த ஜந்துவுக்கு எத்தனை மரியாதை..
ஒரு நாள் என் பலிங்கி எல்லாம் இழந்து வீட்டிற்க்கு சென்று என்ன காரணம் என்று சொல்ல முடியாமல் அழுதது இன்று வரை மறக்க முடியவில்லை..
கிட்டிபுல்லு.. கிரிக்கேட் விளையாட்டின் முன்னோடி??
தேர்ந்து எடுத்த வேப்ப மர கிளையை ஒடித்து கிட்டியாக கிட்டி புல்லை செயய அப்போது எங்களிடம் தனி நிபுணர் குழுவே இருந்தது..
கிட்டி புல் தெரிவுல் விளையாடும் போது வேகமாக ஒரு முறை அடித்து ரோட்டில் சென்ற அப்பாவியின் தலையை பதம் பார்த்தது. அதன் முதல் இது வன்முறை விளையாட்டு என்று தடை செய்யபட்டது
ஆனால் அதை விட வன்முறை விளையாட்டை நாங்கள் தீபாவளி முதல் கார்த்திகை வரை விளையாடுவோம்..
சொக்கபாணம் என்று ஊரில் அதிகமாகி போன குப்பைகளை தென்னை மட்டை துனை கொண்டு எரிப்பார்கள்... தீபாவளிக்கு வாங்கி மீதமான வெடிகளை அப்படியே சைலண்டாக அந்த சொக்கபாணையில் போட்டு விடுவோம்.. சில வெடிகள் வெடிக்கும்.. புஸ்ஸாக சில வெடிகள் பறக்கும்..
யார் போட்ட வெடி வெடித்தது என்று பெரிய பட்டிமறனமே நடக்கும்.... கடைசியில் கார்த்திகை நாள் வரும் போது எங்களின் சொந்த த்யாரிப்பு வெடிகளையும் சேர்த்து விடுவோம்.
நாங்கள் அன்று விளையாடிய விளையாட்டுகள் இன்று வரை மறக்க முடியவில்லை...
இந்த விளையாட்டை தொடர நான் அழைப்பது
வால் பையன்
டோண்டு ராகவன்
Saturday, November 1, 2008
இலங்கை தமிழர்கள் உரிமை காக்க ரஜினி பேச்சு - வீடியோ
அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை ராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும்.அதுதான் அந்நாட்டுக்கும் நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்தும் இந்த போராட்டம் உணர்வு பூர்வமானது; உணர்ச்சிபூர்வமானது. இலங்கைத் தமிழர்களுக்காக திரையுலகம் நடத்தும் 3ஆவது போராட்டம். இது இலங்கையின் காதுகளுக்கு எட்ட வேண்டும்.
இங்கே பேச சில கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாகச் சொன்னார்கள். கட்டுப்பாடு இருந்தால் தான் மனம் சொன்னதை கேட்கும். அப்போது தான் எதையும் சாதிக்க முடியும். வெற்றி கிடைக்கும்.
இலங்கைத் தமிழர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்களின் பேச்சே சங்கீதம் போல் இருக்கும். பழகுவதற்கு அவர்கள் இனிமையானவர்கள். அத்தகையவர்கள் இன்று சொந்த மண்ணில் அடித்து கொல்லப்படுகிறார்கள்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களுக்கு எதிராக நடத்தும் இந்த போரில் இலங்கை ராணுவத்துக்கு இன்று வரை வெற்றி கிட்டவில்லை. அவர்கள் ஆண் பிள்ளைகள்தானா என்ற சந்தேகம் எழுகிறது.
தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அல்லது நிறுத்த வைக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கும் நல்லது. இல்லை என்றால் உறவினர்களை பறி கொடுத்த தமிழர்களும்இ மண்ணில் உதிரம் சிந்திய பெண்கள்இ குழந்தைகளின் ஆன்மாவும் அவர்களை சும்மா விடாது.
யுத்தத்தில் அழிக்கப்படுபவர்கள் புதைக்கப்படவில்லை; அங்கே விதைக்கப்படுகிறார்கள். இத்தகைய கொடுமை தொடர்ந்து நடந்தால் இலங்கை என்றுமே உருப்படாது. இலங்கையில் மட்டுமல்லஇ எந்த நாட்டிலும், எந்த மண்ணிலும் அப்பாவி குழந்தைகள் பெண்கள், முதியோர்கள் தாக்கப்படக் கூடாது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்களுக்கான ரூ. 10 லட்சத்தை அளிப்பதாக அறிவித்தார்
இலங்கை தமிழர்கள் துயர் தீர பிராதிப்போம்

சூப்பர் ஸ்டார் ரஜினி இலங்கை தமிழர்களுக்காக திரட்டபடும் நிதிக்காக 10 லட்சம் கொடுத்து இருக்கிறார்.
கமல் 5 லட்சம் கொடுத்தார்.
சிறு சிறு நடிகர்களும் தங்களால் முடிந்த தொகையை கொடுத்து இருக்கிறார்கள்.
நானும் என் பங்குக்கு என்னால் முடிந்த 20,000 ரூபாயைதமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
நம்மால் முடிந்த வரை இலங்கை தமிழர்கள் துயர் தீர உதவுவோம். தீவிரவாதம் போர் போன்ற மனித குலத்துக்கு எதிரான அபதங்களை அழிய பிராத்திப்போம்.
இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் மீண்டும் அமைதி விரைவில் திரும்ப வேண்டும்.