Wednesday, May 21, 2008

சூரிய சக்தி
இன்று தற்செயலாக times of indiaவின் bluishness பக்கங்களை புரட்டி கொண்டு இருந்த போது கண்ணில் பட்ட செய்தி

லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் சூரிய சக்தியால் மின்சாரம் தருவிக்கும் தொழில் நுட்பத்தில் அதிகமாக முதலீடு செய்ய போகிறது

நானும் பல நாள் சிந்தித்து இருக்கிறேன்

தெற்காசியாவில் 365 நாளும் பெரும்பாலான இடங்களில் காற்றும் சூரியனும் மின்சாரம் தருவிக்கும் அளவிற்க்கு இயற்க்கையின் கொடை அமைந்து இருக்கிறது
ஏன் இன்னமும் மரபு சாரா எரிபொருள் சக்தியில் இந்தியா பெரும் ஆர்வம் காட்டவில்லை??

தமிழ்நாட்டின் தென்பகுதியில் பயணம் செய்யும் போது பனை மரங்களுக்கு நடுவே காற்றாலை மின் உற்பத்தி செய்யும் டவர்கள் அமைந்து இருப்பதை காணலாம்
காற்றாலை வழியாக மின்சாரம் உற்பத்தி செய்வது மிக பழமையான கண்டுபிடிப்பு என்றாலும் இங்கு அது பிரபலமானது தனியார் நிறுவனங்கள் வந்த பின்னர் தான்.

suzlon energy போன்ற பன்னநாட்டு நிறுவனங்கள் இது பண்ம் கொழுழிக்கும் துறை என்று கண்டு கொண்ட பின்னர் அவர்கள் ஆதிக்கத்தை படு வேகமாக இந்த துறையில் நிலைநாட்டினர். இன்று தமிழ்நாட்டில் இருக்கும் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் காற்றாடிகளில் அரசுக்கு சொந்தமானது எவ்வளவு என்று கணக்கிட தொடங்கினால் கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சும்,

குறைந்த முதலீட்டில் எந்த வித இயற்க்கைக்கு மாசு விளைவிக்காத திட்டங்களில் அரசின் முதலீடு மிக சொற்பம் தான். தமிழ்நாட்டின் பல தொழிற்சாலைகள் தென் புகுதியில் காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் கிடைக்கும் மின்சாரைத்தை தமிழக அரசிடம் விற்று தங்கள் தொழிற்சாலைக்கு தேவைபடும் மின்சாரத்தை அரசிடம் இருந்து சலுகை விலையில் பெறுகிறார்கள்.

ஒரு அனு மின் நிலையமோ அல்லது அனல் மின்சார நிலையம் அமைக்கும் போது அந்த இடத்தில் வாழ்ந்து வரும் மக்களை கட்டாய குடி பெயர்ச்சி செய்ய வைக்கும் அரசு ,மேலும் அந்த நிலத்துக்காக எண்ண விலை கூட கொடுக்க தயாராக இருக்கும் அரசு ஏன் மரபு சாரா எரி சக்தியில் தன் கவனத்தை செலுத்த மறுப்பது என்பது புரியாத புதிர்.

நிலக்கரி அள்ள நெய்வேலியில் தங்கள் நிலங்களை விட்டு கொடுத்தோர் பல பேர் மேலும் நிலக்கரி அள்ள மேலும் தோண்ட தோண்ட தண்ணீரையும் வெளியேற்றி வருகிறது. இது வருங்காலத்தில் அந்த மாவட்டமே தார் பாலைவனம் போல ஆக போகிறது. மேலும் சுற்று புற மாவட்டங்க்ளின் நிலத்தடி நீர் ஆதாரத்தையும் கெடுக்க போகிறது.

எந்த வித கெடு வினையும் செய்யாத சூரிய சக்தியினால் மின்சாரம் தயாரித்தால்..

சூரிய சக்தியானால் மிகப் பெரும் மின்சார திட்டங்க்ளினால் தயாரிக்கபடும் ப்ல்லாயிரம் மேகவாட்டுகளை தயாரிக்க முடியாது..

ஒரு முறை லட்ச தீவுகள் ஒரு தீவான அகதீ சென்று இருந்த போது அந்த தீவில் ஒரு இடத்தில் சூரிய ஒளியால் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தும் ஓடுகளை பார்த்தேன்.
மழை நாட்களை தவிர மற்ற நாட்களில் அந்த தீவு மக்கள் மின்சாரத்தை சூரிய ஒளியால் தான் பெறுகிறார்கள். மழை நாட்களில் ராட்சத ஜெனரெட்டர்கள் வைத்து டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்கிறார்கள்..

இதே முறையை இந்தியா முழுவதும் அறிமுக படுத்தலாம்

சூரிய ஒளி தகடுகள் விலை மிக அதிகம் மேலும் மிக அதிக நிலப்பரப்பை ஆக்கிரமிக்க கூடியது.
இதை சரி செய்ய VLSI எனப்படும் very large scale integration தொழிநுட்பட்த்தை பயன்படுத்த வேண்டும்

மிக அதிக அளவில் ஒரே நேரத்தில் தயார் செய்யபடும் பொருட்கள் விலை குறைவாகவும் காலம் செல்ல செல்ல அளவில் மிக சிறியதாக ஆகி விடும்
உதாரணம் நம் கண்ணியில் உபயோகபடுத்த படும் processor.

இதற்க்கு முதலில் மிக அதிக முதலீடு தேவை

அரசு மனது வைத்தால் முதலீடு செய்தால் பெட்ரோலிய பொருட்களாக்க செலவு செய்யும் அந்நிய செல்வாணி பெருமளவில் குறையும்
பெடரோல் டீசல் விலையை வைத்து ஏறும் விலைவாசி கட்டுபடுத்தபடும்..இது ஒரு நீண்டகால திட்டம்..

அரசு மனது வைத்தால் கண்டிப்பாக வெற்றி அடைய வைக்க முடியும்

வீட்டுக்கு வீடு மாடியில் ஒரு சூரிய ஒளி மின்சார மாற்றி இருந்தால் எப்படி இருக்கும்?? மின்சார கட்டணத்தை பார்த்து பயம் கொள்ள தேவை இல்லை.
இலவச மின்சாரம் கொடுப்பதை விட சூரிய மின்சார மாற்றியை விவசாயிகளுக்கு கொடுக்கலாம், மின்சார விரயம் பெருமளவில் குறையும்

மின்சார மாற்றியினால் சார்ஜ் ஏற்றபட்ட பேட்டரியால் ஓடும் வாகனங்கள் செய்யல்லாம்
இதன் காரணமாக பெட்ரோலிய எர்பொருள்க்காக அடுட்த நாடுகளை கை ஏந்தும் நிலை மாறும்

சற்று பெரிய அளவவில் சிந்தித்தால்

வெளிநாட்டுக்காக மின்சார பேட்டரிகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாட்டின் நிலை உயரும்.
பேட்டரிகளின் செல்களை சுழற்ச்சி செய்வதால் அதன் விலை உயர்வதையும் கட்டுபாட்டில் வைத்த்து கொள்ள முடியும்

இன்னமும் சொல்லி கொண்டே போகலாம்..

என் இந்த கற்பனைகள் இன்னும் பத்து வருடங்களில் கண்டிப்பாக நிறைவேறும் என்று ஆசைபடும் ஒரு சராசாரி இணந்தியன்


2 comments:

தென்னவன் said...

Will the chemicals used in solar cells cause pollution ?
I think best one is Wind Power. We have to put wind powered fans to generate power. may be all allong the sea coast. to generate power and Hydro electric power also suites. More over we have to move slowly to Working from morning 7:00 to 6:00 . After 6:00 all business establisments should be closed except essential services. This will result in power saving. But wee need political will power to do that and it may never happen in Indian and we will continue to suffer

SI

Anonymous said...

தமிழ் ஒருங்கிணைப்பியல் அருஞ்சொற்பொருள்/TAMIL VLSI GLOSSARY
www.geocities.com/tamildictionary/vlsi/