Thursday, May 15, 2008

நாகரீகம்




கடந்த ஒரு மாதமாக என் வீட்டு வாசலில் அதிகாலையில் வீசப்படும் பேப்பர் அடிக்கடி மாயமாகி போனது. பேப்பர் போடும் பையனும் தவற விடுபவன் இல்லை

காலை செய்திகளை படிக்காமல் உச்சா போவதில் இருந்து ஷூவுக்கு சாக்ஸ் தேடுவது வரை பிரச்சனையாகி போனது.

சரி இன்று விட்டு விட கூடாது அந்த களவாளியை கண்டு பிடித்து இந்த மிகப்பெரிய குற்றத்தை துப்பறிய வேண்டும் என்று நேற்று இரவே முடிவு செய்து விட்டேன்

சரி பேப்பர் திருடி அவர்களுக்கு என்னதான் கிடைத்து விட போகிறது
டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற தினசரிகளில் பெஙகளூர் டைம்ஸ் தவிர அனைத்து பக்கங்களும் குப்பை தான். ஜெய்பூர் குண்டு வெடிப்பு புகைபடங்களுக்கு பக்கத்தில் பீரித்தா ஜிந்தா கிரிக்கட் பார்க்கும் புகைபடத்தையும் முதல் பக்கத்தில் போடும் மிகத்தரமான பத்திரிக்கை. ஒரு மாத குப்பையை எடைக்கு போட்டாலும் 20 ரூபாய்க்கு மேல் கிடைக்காது.
அதை வைத்து அரை பாக்கேட் கிங்ஸ் கூட வாங்க முடிவதில்லை.

சரி பார்த்து விடுவோம்..காலையில் 5 மணிக்கு வழக்கமாக அடிக்கும் அலாரத்தை வழக்கம் போல நிறுத்தி விட்டு தூங்காமல் வேட்டைக்கு தயாரானேன். மனசுக்குள் லகக்க லக்க லகக்க லல்ல் என்று மூன்று முறை சொல்லி பார்தது கொண்டேன்.

வீட்டின் வாசல் விளைக்க அனைத்து விட்டு மாடி படியின் பக்க வாட்டில் அரை தூக்கத்தில் சாய்ந்து கொண்டேன்.

இன்னமும் பேப்பர் வரவில்லை.. இல்லை தெரு முனையிலே அந்த கள்வாணி பேப்பர் பையனை மிரட்டி பேப்பரை பிடிங்கி இருப்பானோ இருக்காது அது மாதிரி செய்பவன் என்றால் அதுவும் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்பவன் என்றால் நிச்சயமாக பெங்களூர் டைம்ஸ் 3ம் பக்க பார்ட்டி போட்டோககுகளுக்கு கண்டிப்பாக அடிமையாக இருப்பான்..அப்ப நிறைய பார்ட்டிகளுக்கு போவானோ??

வினாடிகள் எண்ணி எண்ணி கடக்கிறது

இதே போல தினமும் காலையில் சுறுசுறுப்பாக எழுந்தால் என்ன எழுந்தால் கண்டிப்பாக எழுந்து இருக்க போவதில்லை.. சரி ஏன் இந்த ரிஸ்க்கு பேப்பர் பையனை பேப்பர் போட சொல்லி நிறுத்தி விட்டு வெளியே கடையில் சென்று வாங்கி கொள்ளாலாமே..

நம்ம ஞாபக மறதி ரொம்ப பிரசித்தம் காலை பேப்பரை மாலை ஆறு மணிக்கு போய் கேட்டால் எங்க கிடைக்கும்

மாடிபடிகளில் தட தட சத்தம்.. பேப்பர் பையன் வந்து விட்டான்.. பேப்பருக்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல் 360' சுருட்டி கசக்கு வேகமாக வீட்டு வாசலில் எறிந்து விட்டு சென்றான்.. ம் இவனுக்கு டைம்ஸ் ஆப் இந்தியாவின் மதிப்பு தெரிந்து இருக்கிறது.

ஆபரேசன் ஆரம்பம்.. எந்த நேரமும் களவாணி வரலாம்..
யோவ் சீக்கிரம் வாய்யா உன் மேட்டரை முடிச்சுட்டு அடுத்தாப்ல ஜிம்முக்கு போவனும், தம் அடிக்கனும், லேட்டா போனா thread mill கிடைக்காது சீக்கிரம் வாய்யா.

மேல் மாடியில் இருந்து இருட்டில் ஒரு உருவம்..பக்கத்து வீட்டு ISRO சார் வீட்டு பேப்பரை அவசர அவசரமாக லவட்டி விட்டு கொண்டு ஓடியது..என் வீட்டு பேப்பரை தொடவே இல்லை...இவனாத்தான் இருக்கணும்..தினமும் சிப்ட் வைத்து வீடு மாத்தி பேப்பரை சுட்டு போறான்..

வேகமாக சென்று அவனை மறித்தேன்
நாக்கு நுனி வரை வந்து விட்ட ஆங்கில கெட்ட வார்த்தை அப்படியே U turn அடித்து
பின் வாங்கி சென்றது

கடந்த ஒரு வருடமாக வெற்றி கரமாக வேலை தேடி வரும் 3ம் மாடி சுதீப் .. அமெரிக்க டாலர் சதியோ அல்லது எந்த இந்திய ரூபாய் சதியோ fresherகளை தற்போது எந்த நிறுவனமும் விரும்புவதில்லை..

யேய் ஏண்றே தும்கோன் யைசா காம் கர்தேகோ? (ஏன் இந்த மாதிரி வேலை பண்றே)
மாப் கரே சார் மேரா பாஸ் ரோஜ் பேப்பர் கரிதினேகேளியே பைசா நிஹி ஹை ( மன்னிச்சுங்க சார் , என்னிகிட்ட தினமும் பேப்பர் வாங்க காசு இல்லை)..without news paper it would be difficult for me to search for jobs..

அச்சா hereafter dont do like this, i will read the paper only after 8. use my news paper and dont forgot post it again before 8.

அப்படியே அவனை விட்டு வந்தேன்..

சரி அவன்கிட்ட காசு இல்லை வேலை தேடறான் அதுக்காக பேப்பர் வேண்டும்.. எல்லாம் சரி தான் இத்தனை நாள் அவன் எல்லார்கிட்டயும் ஆட்டையை போட்டதுக்கு ஏன் நான் அவனை ஒன்னுமே சொல்லலை செய்யலை

ஓ நாகரீகம் decency இதான்ப்பா இந்த நாகரீத்தை எவன் தான் எனக்குள் விதைச்சானோ ..

1 comment:

தென்னவன் said...

அந்த பையனுக்கு ஏதாவது கால் சென்ட்ரில் வேலை வாங்கி குடுங்க அருண்