Wednesday, May 20, 2009

நாட்டு நடப்பு - 20.05.2009


இந்த வருடமும் வழக்கம் போலவே மே மாதத்தில் பெங்களூரில் pre monsoon ஆரம்பித்து விட்டது, இனி தினமும் மாலை நேர மழை சில நாள் சாரல் மட்டும்..நனைந்து கொண்டே செல்வது எத்தனை சுகம் :)))))))))

*****************************

சர்வம்...
நல்ல கதை ...மோசமான திரைக்கதை...
நல்ல ஒளிப்பதிவு

அப்புறம் சொல்லி கொள்ளும் படியான சில காட்சிகள் சில பாடல்கள்..
அதுக்கு மேல..அவ்வ்வ்வ்வ்வ்
ஆர்யா வசனம் பேசும் போது இப்பவே ஓடி போய்டலாமான்னு பல தடவை தோணிச்சு.....

படம் எடுங்கப்பா வேணாங்கலே அதுக்காக இப்படி எல்லாம் டார்சர் செய்ய கூடாது ...முடியல

****************************************

பங்கு சந்தை எந்த வித பலமான காரணமும் இல்லாமல் மேலே செல்கிறது.. மன்மோகன் ஜெயித்தாரு ...சரி அதுக்காக 100 புள்ளி ஏறினால் நன்றாக இருக்கும்.. 2000 புள்ளி ஏறினால்...

எனக்கு என்னவோ இன்னும் ஒரு correction எப்ப வேண்டுமானலும் வரும் என்றே தோண்றுகிறது,

**********************************************

4 comments:

வால்பையன் said...

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி நிலையானதும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குஷி போல!

அதும் சிதம்பரம் ஜெயிச்சதும்!
தொறந்துருச்சுடா கஜானான்னு வந்துருப்பாங்க!

Vidhya Chandrasekaran said...

ஒரளவேனும் ஸ்டேபிள் கவர்மெண்ட் அமைவதால் தான் என்கிறார்கள்.

மழை - அவ்வ்வ்வ்வ்வ். வறுக்குது இங்க:(

Vijay said...

பெங்களூரில் இனிமேல் தினமும் மாலை மழையை எதிர்பார்க்கலாம். இரண்டு நாட்களாக மேகமூட்டமாக மப்பும் மந்தாரமாகவும் தான் வானமகள் காட்சியளிக்கிறாள்.

\\பங்கு சந்தை எந்த வித பலமான காரணமும் இல்லாமல் மேலே செல்கிறது.. \\
போன மாசம் நாலு ஷேர் வாங்கலியேன்னு வயித்தெறிச்சலா இருக்கா?

மேவி... said...

சர்வம் குறித்து உங்கள் கண்ணோட்டமும் என் கருத்துடன் ஒத்து போகிறது