Wednesday, April 22, 2009

தேர்தல் வியாபாரம்


ஐந்து வருடம் கடந்து இருக்கலாம்..
ரஜினி ஒரு பிரஸ்மீட்டில் பிஜேபிக்கு தான் என் ஆதரவு..பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்பு நடக்கும் பாலாறும் தேனாறும் ஒன்றாக கலக்கும் என்று சொல்லி விட்டு போனார்.

உடனே முத்தமிழர் அறிஞருக்கு கோபம் பொத்துகிட்டு வந்தது. இதோ பார் என்னோட காங்கிரஸ் கூட்டணியில் கூட இப்படி சொல்லி இருங்கான்ஙன்னு ஏதோ ஒரு துண்டு சீட்டை எடுத்து காட்டினார். முரசொலியில் ஜக்குபாய் மக்குபாய் ஆனது.


யாரும் இபபோது மறந்தும் கூட நதி நீர் இணைப்பு பற்றி மூச்சுகூட விடுவதில்லை.
ஏற்கனவே தண்ணியே இல்லாத காவேரியில் இருந்து ராமநாதபுரம் வரை கமிசன் அடிக்க கால்வாய் கட்டுவதில் காட்டும் ஆர்வம் கூட நதி நீர் இணைப்பில் சுத்தமாக தானே கேள்வி நானே பதில்களில் கூட இல்லை. என்ன நதி நீர் பிரச்சனை எல்லாம் தீர்ந்து போச்ச்சா?

தேர்தல் நேரத்தில் கூட பிரபாகரன் என் ஸ்கூல் மேட்டு நானும் அவரும் ஒரே பொட்டி கடையில் தான் ஒளிந்து நின்று திருட்டு தம் அடித்தோம் என்ற ரேன்சில் தான் பிராசாரமே நடக்கிறது.



தேர்தல் நேரத்தில் ஒரு பந்த் வேற,, அதுவும் அரசே நடத்தும் பந்த்...ஒரு நாள் வேலைக்கு போகாமல் இருந்தால் முழு நாள் பட்டினி என்ற நிலையில் தான் தமிழ்நாட்டில் இன்னும் அரைவாசி மக்கள் இருக்கிறார்கள். இவர்கள வாழ்க்கை நிலையை உயர்த்த யாரும் உண்ணாவிரதம் தீக்குளிப்பு சரி அது கூட வேணாம் டீ கூட குடுக்கறது இல்லை..


தன் வூட்டுக்கு பக்கதுல் சாப்பாட்டுக்கு வழியில்லாம கழ்டபடற மக்களுக்கு ஏதுவும் செய்ய தெரியாத ஆளுங்க எல்லாம் அடுத்த நாட்டுக்கு சவால் உடறதை பார்த்தா சிரிப்பா இருக்கு

நாட்டு மக்களுக்கு என்ன செய்வேன் என்று யாரும் ஏதுவும் சொல்வதாக தெரியவில்லை.. இவங்க பீலிங்க்ஸை எல்லாம் பார்த்தா ஒரு நாளைக்கு பத்து சிவாஜி கணேசன் படம் பார்த்த திருப்தி...



டீவி பொட்டி தரேன் கேஸ் ஸ்ட்வ் தரேன் எலக்சனுக்கு முத நாளு கரன்சியால் அடிக்கிறேன்னு எல்லாம் ஒரே பார்முலாதான்..

இவங்களை திருத்த முடியாது..

ஒரு நல்ல நாட்டுக்கு முக்கிய தேவை நல்ல தலைவர்கள்.
இந்த தேர்தலில் சரத்பாபு, டிராபிக் ராமசாமி போன்ற தன்னலம் இல்லாத தனி நபர்கள் போட்டி இடுவது ஆறுதலாக இருக்கிறது.

இவர்களுக்கு டிபாசிட் கூட கிடைக்க வேண்டாம்.. குறைந்தது 1% வாக்கு வாங்கினால் கூட போதும்.. மாற்றங்கள் ஒரே நாளில் இன்ஸண்ட் காபி போல வந்து விடாது.. நம்மிடம் தான் ஆரம்பிக்க வேண்டும்..
நீங்க சென்னையில் வசிப்பவராக இருந்தால் உங்கள் தொகுதியில் டிராபிக் ராமசாமி அல்லது சரத்பாபு பொட்டி இட்டால் 49ஓ போடும் மூடில் இருந்தால்...இவங்களுக்கு ஓட்டு போட கன்சிடர் செய்யலாமே..

5 comments:

வால்பையன் said...

//உங்கள் தொகுதியில் டிராபிக் ராமசாமி அல்லது சரத்பாபு பொட்டி இட்டால் 49ஓ போடும் மூடில் இருந்தால்...இவங்களுக்கு ஓட்டு போட கன்சிடர் செய்யலாமே.. //

கன்சிடரெல்லாம் வேண்டாம்!
கட்சி காரனுவ ஓட்டே இவங்களுக்கு தான்!

விஜயகாந்த் மேல ஒரு பயம் வந்ததற்கு காரணம் மக்களின் மாற்று கண்ணோட்டம் தான்! அதை முழுமையாக நிறுபித்தால் இப்போதிருக்கும் அரசியல் வியாதிகள் குறையும்!

Vidhya Chandrasekaran said...

நல்ல பதிவு.

Arun Kumar said...

விஜய்காந்த் அப்படி ஒன்றும் மாற்றம்வருவார் என்று தோன்றவில்லை. இருந்தாலும் இந்த அதிமுக திமுக கூட்டம் கொட்டம் அடங்கினால் அது ரொம்பவே நல்லது

வருகைக்கு நன்றி வால் :)
மிக்க நன்றி வித்யா :)

விக்னேஷ்வரி said...

மிக முக்கியமான நல்ல பதிவு.

Tech Shankar said...


Politicians' Drama 2009