ம்.. எத்தனை நாள் ஆச்சு இப்படி புது மாதிரியான கதை தளத்தில் சினிமா பார்த்து...
ப்ளைட் சீசன் டிக்கேட் எடுத்து பறந்து பறந்து கடத்தல் குருவிகள் தான் கதை களம்.. அப்புறம் அடிச்சு தூள் கிளப்பலாம் தானே..
குருவியாக சூர்யா அவரின் பாஸாக பிரபு..அப்புறம் போட்டி தலைவராக ஒரு சேட்..வியாபார சண்டை .. அருமையான 4 பாடல்களுக்கு அழகான தமன்னா..ஆப்பிரிககா சேஸிங்...கடத்தல் ..பழிவாங்கம்.. அம்மா செண்டிமெண் கஸ்ட்ம்ஸ்...
சூர்யா படம் முழுக்க சுறுசுறுப்பாக வருகிறார்..சண்டை காட்சிகளில் நல்ல முன்னேற்றம்.. காங்கோ நாட்டு சண்டை காட்சி அபாரம்...
படத்தின் இன்னோரு ஹீரோ ஹாரிஸ் ஜெயராஜ் ..அருமையான பாடல்கள் சிறப்பான பிண்ணணி இசை...
படத்தின் முதல் பாதி படு வேகம்..... ம் எல்லா புது ஐடியாவையும் போட்டு சூப்பரா எடுத்து இருக்காங்க.. கடத்தல் குருவிகள் உலகம் பேசும் படங்கள் குறைவு என்பதால் ப்ரேஷ்ஷான காட்சிகள்..
அதுவும் கடத்தல்கள் ஒவ்வோன்றும் சாதாரண அப்பாவியான நமக்கு ஜிலீர் ஜிலீர்ங்குது..
கூடவே லைட் காமேடி ..சரி டா நல்ல படம் தான்னு நினைச்சா..
இரண்டாம் பாதி தான்..
செண்டிமெண்ட்..க்ரைம்..எங்க போறதுன்னு தெரியாம சரி இரண்டு பக்கமும் வண்டியோட்ட சூப்பரா கொட்டாவி வருது...
எல்லா ஐடியாவையும் முதல் பாதியிலே மிச்சம் வைக்காம் எடுத்தாசே....
அப்புறம் க்ளைமேக்ஸ் வரும் போது திரும்ப பரபரப்பு..என்ன பண்றது அதுக்கள்ள படம் முடிஞ்சு போச்சே.. இரண்டாம் பாதியில் கத்திரி போட மறந்து போச்சு போல..
விஜய் ’ஒரு புதிய கீதை’ன்னு ஒரு டப்பா படத்துல சூப்பர் டூப்பர் உட்லாலங்கடி அதாவது எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் கேரக்டர் செய்து இருப்பார்.. சம்ம காமடியா இருக்கும்..
இந்த படத்தில் சூர்யாவிற்க்கும் அதே போல கேரக்டர்.. ஆனா சூர்யா சம்ம வெரைட்டி செய்து படத்தை தாங்கி நிறுத்துகிறார்..
அது என்ன டைட்டில் அயன்..படத்தில் சூர்யா அயன் பாக்ஸை தவிர எல்லாத்தையும் கடத்துகிறார்...வுட்டா நம்ம சட்டை பேண்ட்டை கூட கொடியில் இருந்து உருவி கடத்திடுவாங்க போல..
கடத்தல் பாஸாக பிரபு ..என்ன கொடுமை சார்..கல்யாண் ஜீவல்லர்ஸில் rate card காட்டுபவரா இவரு..
படத்தின் வில்லன் சம்ம வெயிட்தான்..
ஆனா வெயிட்டான கதாப்பாத்திரம் இல்லையே....
ஒவ்வோரு தபாவும் அவரு தோற்க்கும் போது டேய் என்னை perform செய்ய விடுங்கடான்னு அவரு மனசுக்குள்ள கத்தறது போல இருக்கு. ..
சன் டிவி காரங்களுக்கு கொண்டாட்டம்.. டப்பா பாடல்களை வைச்சே ஒப்பேத்தி வந்தவங்களுக்கு சும்மா திருப்பதி லட்டு போல சூப்பர் பாடல்கள்...
படதொகுப்பு..கேமரா எல்லாம் அருமை..அருமையோ அருமை..
ஆண்டனியின் படத்தொகுப்பு வேகம் படத்தை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறது.. கேமராமேன் பிரபுவின் ஆளுமை கனகச்சிதம்
இயக்குநர் கேவி ஆனந்த் திறமை பல இடங்களில் நன்றாக தெரிகிறது.. எழுத்தாளர்கள் ‘சு’’பா’ திரைக்கதையும் அருமை..
இரண்டாம் பாதியை கொஞ்சம் தட்டி சரி செய்து இருந்தால் படம் வெகு அருமையாக வந்து இருக்கும்...இப்பவும் மோசம் இல்லை.. சன் டிவியில் விளம்பரம் போடமல் கூட 100 நாள் ஓடும்..
கோடைக்கு ஏத்த சரியான தீனி..
படத்தின் முதல் பாதி..சூர்யா..இசை ..பாடல்கள்..கதை தளம்ன்னு அடிச்சு தூள் கிளப்பி இருக்காங்க... பல நல்ல மேட்டர்களும் இருக்கு..
ஒரு முறை பார்க்கலாம்...நிறைய நேரமும் பணமும் இருந்தால் பல முறை ரசிக்கலாம்...
15 comments:
எனகு பிடித்த சூர்யா படத்த பாக்கலாம்னு சொன்னதுக்காக... ஓட்டும் போட்டாச்சு.. பின்னூட்டமும் போட்டாச்சு
கே.வி.ஆனந்த் அவர்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் "சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன்" (சுபா) கை வண்ணம் ஆச்சே. படம் சூப்பராத்தான் இருக்கும்.
நன்றாக உள்ளது அண்ணா உங்கள் விமர்சனம். நானும் இதே படத்தின் விமர்சனம் எழுதியுள்ளேன் கொஞ்சம் பாருங்க அண்ணா
padam supera irukku boss...
ஆஹா,சூர்யா படத்தை சொதப்பிட்டாங்களா?? ஆனா வில்லு படதுக்கு இந்த படம் பார்க்கலாம்னு நினைக்கிறேன். இன்னும் போகலை. அடுத்த வாரம் தான் பார்க்கணும்.
/விஜய்
நண்பர்களுடன் சேர்ந்து படத்தைப் பார்த்ததால் எந்த குறையும் தெரியவில்லை.
(எங்க படத்த பார்க்க விட்டதானே)
அன்புடன்
ஜகதீஸ்வரன்.
http://jagadeesktp.blogspot.com/
நண்பர்களுடன் சேர்ந்து படத்தைப் பார்த்ததால் எந்த குறையும் தெரியவில்லை.
(எங்க படத்த பார்க்க விட்டதானே)
அன்புடன்
ஜகதீஸ்வரன்.
http://jagadeesktp.blogspot.com/
//எனகு பிடித்த சூர்யா படத்த பாக்கலாம்னு சொன்னதுக்காக... ஓட்டும் போட்டாச்சு.. பின்னூட்டமும் போட்டாச்சு//
நன்றி கடைகுட்டி
//Blogger R.Gopi said...
கே.வி.ஆனந்த் அவர்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் "சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன்" (சுபா) கை வண்ணம் ஆச்சே. படம் சூப்பராத்தான் இருக்கும்.//
வருகைக்கு நன்றி கோபி. படம் நன்றாகதான் இருக்கிறது..ஆனா சூப்பரோ சூப்பர் இல்லை
//நன்றாக உள்ளது அண்ணா உங்கள் விமர்சனம். நானும் இதே படத்தின் விமர்சனம் எழுதியுள்ளேன் கொஞ்சம் பாருங்க அண்ணா//
வருகைக்கு நன்றி அன்பு.உங்கள் விமர்சனத்தை கண்டிப்பாக படிக்கிறேன்
//venkatesh said...
padam supera irukku boss...//
வருகைக்கு நன்றி வெங்கடேஷ்
//Blogger விஜய் said...
ஆஹா,சூர்யா படத்தை சொதப்பிட்டாங்களா?? ஆனா வில்லு படதுக்கு இந்த படம் பார்க்கலாம்னு நினைக்கிறேன். இன்னும் போகலை. அடுத்த வாரம் தான் பார்க்கணும்.
/விஜய்//
வாங்க தலைவா.. படம் நம்மூர்ல 20 தியேட்டர்ல ஓடுது.. பொறுமையா அடுத்த வாரம் போங்க.. நிம்மத்தியா எந்த சத்தமும் இல்லாம பார்க்கலாம்
//நண்பர்களுடன் சேர்ந்து படத்தைப் பார்த்ததால் எந்த குறையும் தெரியவில்லை.
(எங்க படத்த பார்க்க விட்டதானே)//
நன்றி ஜெகதீஸ்வரன்..
நண்பர்களோடு படம் பார்க்கும் சுகமே தனிதான்..
நானும் என் நண்பர்களோடு தான் பார்த்தேன்..ஆனா என்னவோ தெரியல மாப்பளாங்க எல்லாம் படத்தோடு ஒண்றி போயி சவுண்டு விடாம அமைதியா இருந்தாங்க
இனிமேல் தான் பார்க்கனும் பாஸ். ஆனா படுமொக்கைன்னு அண்ணன் சொன்னாரு. அதான் யோசிக்கிறேன்.
//செண்டிமெண்ட்..க்ரைம்..எங்க போறதுன்னு தெரியாம சரி இரண்டு பக்கமும் வண்டியோட்ட சூப்பரா கொட்டாவி வருது...//
தமிழ்படம்னாலே இப்படி தானே!
மார்ட்டின் லாரன்ஸும், வில் ஸ்மிதும் நடித்த பேட்பாய்ஸில் இப்படி ஒரு சூழ்நிலை வரும்.
செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் ஆனால் சரியாக பயணித்திருப்பார்கள்!
Post a Comment