Friday, September 19, 2008

நானும் என் ரஜினியும்


இது அடிக்கடி ஏன் தினமும் நிகழ்வது..

ஏண்டா மச்சான் நிறைய இங்கலீஷ் படம் பார்க்கறே கூடவே இந்தி தமிழ்ன்னு கலந்து எல்லா படமும் பாக்குறே..இதுல நீ பார்க்காத நல்ல சினிமாவும் நல்ல நடிப்பையும் எதுவும் இல்லாத ரஜினி படத்தை எப்படிடா ரசிச்சு ரசிச்சு பல முறை பார்க்குறே??

இதை போல பேசுபவர்களிடம் பேசி என்ன பயனும் இல்லை..
கூடியவரை சிறிய சிரிப்பு அல்லது மவுனம்..  

ரஜினி கர்நாடாவுல தான் தன்னோட சொத்து எல்லாத்தையும் வாங்கி போட்டு இருக்காறாம்.. அவரு ஒரு கன்னட வெறியன்..

நீ எத்தனை வருசமா பெங்களூர்ல இருக்கே??

3 வருசமா?

உனக்கு கன்னடா தெரியுமா?

கன்னடா கொத்தில்லா

சரி நீ சம்பாதிக்கிறா காசை எல்லாம் எங்க அனுப்புற??

ஏன்?? எங்க ஊருக்கு தான்.. 

உங்க ஊருன்னா ..பெங்களூரா

சே சே திருநெல்வேலி..

சரி ரஜினி கர்நாடாகாவுல வாங்கின சொத்து விவரம் சொல்லு?

அது வந்து..

அப்புறம் பெரிசா பேசின??

முதல்ல நீ உருப்படியா இருப்பா.. பெங்களூர் வந்து இத்தனை வருசம் ஆகியும் கன்னடா தெரியாது.. சம்பாதிக்கும் பணம் எல்லாம் உன் வீட்டுக்கு அனுப்பி அங்க சொத்து வாங்கி போடலாம்.. ஆனா ரஜினி கர்நாடகாவில் சொத்து வாங்கினாரா இல்லை வாங்கலையான்னு தெரியாது.. ஆனா சும்மா தமிழ் விரோதி கன்னடா விரோதின்னு வாய்க்கு வந்தபடி பேசறது....


என் நெருக்கிய நண்பன் என்னிடம் பல முறை கேட்டு இருக்கிறான்.
அருண்.. எப்போதுமே யாரிடம் சண்டைக்கு போகாத நீ ஏன் ரஜினியை பத்தி யாராச்சும் ஏதாச்சும் சொன்னால் சண்டைக்கு போறே??

நம்மில் பலரின் முதல் காதல் அபத்தமாக தான் இருக்கும். அதற்க்காக என்றாவது நம் முதல் காதலை யாராவது தவறாக சொன்னால் தாங்க முடியுமா??

ரஜினி...

எனக்கே நினைவு தெரியாத வயது..  கும்பகோணம் செல்வம் தியேட்டருக்கு யாரோ என்னை அழைத்து சென்றார்கள்.. படம் நான் சிகப்பு மனிதன்.. ரஜினியை தலை கீழாக கட்டி அடிப்பார்கள். அப்போது அதை அந்த காட்சியை பார்த்து ரஜினியை அடிப்பதை பார்த்து அழ ஆரம்பித்த என்னை சமாளிகக் முடியாமல் திணறினார்களாம்..

ரஜினி அடிக்க ஆரம்பத்த பின் தான் நான் சமாதனம் ஆனேனாம் :)

எனக்கு அப்போது வயது 4 அல்லது 5 இருக்கலாம்..

வீட்டில் அம்மா வைத்து இருந்த தீக்குட்சியை களவாண்டு ஊர் முழுக்க கூடும் நடு திண்ணையில் உட்கார்ந்து ரஜினி ஸ்டைலில் சிகரட் ஊதுவது போல பாவனை காட்ட.. அன்றைக்கு தான் என் அம்மா என்னை முதலில் அடித்த ஞாபகம்..

அப்போது எங்கள் ஊரில் எந்த படமும் ரிலீஸ் ஆகாது. ஆனால் படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் வீடியோ காசேட் வந்து விடும். யாராவது வீட்டில் வீடியோ காசேட் எடுத்து படம் போடுகிறார்கள் என்றால் ஊரே அவர்கள் வீட்டில் தான்.

மாவீரன் படம்.. முதல் நாள் ..வீடியோ காசட்டில் பார்த்தது...பின் மிஸ்டர் பாரத்தில் ரஜினி கள்ளு கடையில் சும்மா பம்பரமாக அடித்து நொறுக்குவது.. இதுவும் என்னை விட்டு நீங்கவில்லை..

வீடியோ காசட் வாடைக்கு வாங்கு வீடு பணக்கார வீடு.. தம்பிக்கு எந்த ஊரு காசட் போட்ட போது அன்று நான் தூக்கி விட்டேன்.. படத்தை பார்க்கவில்லை ..அடுத்த நாள் காலை நான் அழுத அழுகைக்கு பயந்து அந்த வீட்டம்மா எனக்காக மற்றும் ஒரு முறை எனக்கே என்க்காக மற்றும் ஒரு முறை அந்த படத்தை விசிஆரில் காட்டினார்கள்... அப்போது எனக்கு உலகை வென்ற சந்தோசம்.. பள்ளி நண்பர்களுக்கு கதை சொல்வது பெரிய ஒரு சாதனை..

எங்கள் தெருவில் முக்கனி நறபணி மன்றம் என்று ஒரு சிறு படிப்பகம் இருந்தது..
நானும் அங்கு படிகக் போவேன்.. தினதந்தியில் வேலைகாரன் வெற்றிகரமான 60வது நாள் என்ற அந்த விளம்பரத்தை படிக்க மட்டும்..

அப்போது எனக்கு பள்ளிபாடமான திருக்குறள் எல்லாம் வராது.. ஆனால் ரஜினியில் நூறாவது படம் தொடங்கி வரிசை எல்லாம் ரொம்ப இயல்பாக வரும்..

அன்று தொடங்கிய அந்த இனம் புரியாத நட்புதான் இன்று வரை என்னை இழுத்து செல்கிறது.. என் வீட்டிலே அடிக்கடி சண்டை வரும்.. சிலோன் ரேடியோவில் ரஜின் பட பாட்டு வரும் போது யாராவது ரேடியாவை திருகினால் உடனே என் ஆயுதம் அழுகை தான்.. வீட்டுக்கு கடைசி பிள்ளை என்பதால் ரஜினி பட பாட்டு வரும் போது நான் இருக்கும் போது அலைவரிசையை மாற்ற மாட்டார்கள்...

அப்புறம் நான் ஐந்தாவதோ ஆறாவதோ அல்லது  ஏழாவதோ படிக்கும் போது வந்த படம் அண்ணாமலை.. 

மன்னார்குடி சாமி தியேட்டர்.. எங்க ஊரில் புதிதாக திறந்த தியேட்டர்..முதல் படம் அண்ணாமலை.. கரகாட்டம் ஒயில்லாட்டம் பொய்கால் குதிரை எல்லாம் போட்டு  அண்ணாமலை படம் போட்டார்கள்..

எங்கள் ஊரில் அண்ணாமலை 55 நாள் ஓடியது.. எங்கள் ஊரில் அது பெரிய சாதனை.. நானே அந்த தியேட்டரில் நண்பர்களோடு ஒரு முறை குடும்பத்தோடு ஒரு முறை பார்த்தேன்,

பின் எஜமான்.. எங்கள் ஊரில் முதல் ரிலிஸ் படம்.. முதல் நாள் முதல் காட்சி.. சாமி தியேட்டர் உரிமையாளர் மகன் என் வகுப்பு தோழன்.. அவன் உபயத்தால்..


திருச்சிக்கு வந்த பின் ரஜினியின் படங்களை தியேட்டரில் பார்த்தேன்...என்பதை விட தரிசித்தேன் என்று சொல்வதே சரியாக இருக்கும்..

பாட்சா முதல் பாபா வரை,,

பின் மும்பையில் இருந்த போது சந்தரமுகி..ரஜினி அவ்வளவுதான் என்று பல பேர் சொல்லி வந்த காலம் அது..

மாட்டுங்க அரோராவில் ரஜினி தோன்றும் முதல் காட்சியில் எழுந்த கை தட்டல்களும் விசில்களும் தலைவா என்ற குரல்களும் வந்த போது தோன்றியது “நீ விழ்வது திரும்ப முழு சக்தியோடு எழுந்த நிற்கவே”


அப்பொது தொடங்கிய முதல் நாள் முதல் காட்சி இன்று வரை குசேலன் வரை தொடர்கிறது..

சிவாஜி படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்க்கே நினைவில்லை.. பெங்களூர் நடராஜ் மற்றும் பிவிஆரில் 100 நாள் வரை பின் பிவிஆரில் மட்டும் 175 நாள் வரை..  அந்த சாதனையை தசாவாரத்தினால் கூட முறியடிக்க முடியவில்லை.. பெங்களூரில் தசாவதாரம் ஓடியது 25 நாள் மட்டுமே..

அப்போது சனிகிழமைகளில் நண்பர்களோடு சேர்ந்து கெட்ட ஆட்டம் போட்டு 

சிவாஜி பார்த்தது எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்..

என்னவோ தெரியவில்லை.. ரஜினி என் வாழ்வோடு பிண்ணி பிணைந்த ஒரு உணர்வு.. 

சென்ற வாரம் கே டிவியில் படையப்பா போட்ட போது கூட என்னை மறந்து ரஜினி வரும் முதல் காட்சியில் விசில் அடித்தேன்..

ரஜினி படங்களை பார்க்கும் போது என்னையும் அறியாமல் என் குழந்தை பருவ வாழ்க்கை நினைவுக்கு வருகிறது .. ரஜினி என்று சொல்லும் போதே எனக்கு தெரியாமல் என்னுள் பட்டாம்பூச்சி பறக்கிறது..

யோசித்து பார்த்தால் அனைவரும் குழந்தையாகவே இருக்க விரும்புகிறோம்.. அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கும்...குழைந்த பருவ ஆசைகள்..


எனக்கு அது ரஜினியாக இருக்கிறது...

ரஜினியை நேரில் கண்ட போது..

அப்போ நான் சென்னைக்கு புதுசு.. முதல் வேலை.. 

தமிழ்நாடு காவல்துறைக்கு மெட்டல் டிடக்டர்கள் கொடுக்கும் வேலை :)

அந்நாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் நிறுவபடு இருந்த மெட்டல் டிடக்கர்களை பராமரிப்பு சோதனை செய்ய சென்ற போது.. ரஜினி வீட்டின் வாசலில் என்னையும் அறியாமல் நின்றேன்.. எத்தனை நேரம் நின்றேன் என்று எனக்கே தெரியாது.. ரஜினியும் வந்தார்.. 

ஏதோ என்னும் ஒரு இணம் புரியா உணர்ச்சி... அப்படியே பார்த்து கொண்டே இருக்கிறேன்.. ஏதும் பேச தோன்றவில்லை.. ..அவரும் மின்னல் போல வந்து காரில் சென்று விட்டார்.. கடவுளை நேரில் பார்த்த உணர்ச்சி..

அடுத்த ஒருவாரம் மிதப்பாகவே திரிந்து கொண்டு இருந்தேன்.

அன்று ஏதாச்சும் பேசி இருக்கலாம் என்று இன்று வரை நினைக்கிறேன்....பெங்களூரில் அவர் வ்ழக்கமாக தங்கும் சாம்ராஜ்பேட்டை இல்லமும் இந்திரா நகர் ப்ளாட்டும் நன்றாக பரிச்சயம் தான்.. ஆனால் நேரில் என்று இன்று வரை பார்க்க தோன்றவில்லை.

கெட்டதோ நல்லதோ ரஜினி என்ற சக்தி இன்னமும் என்னுள் இருப்பதால் தான்.. சாதாரண மிடில் க்ளாஸ் போர்வையோடு வந்த என்னை அவர் உழைப்பின் கீழ வந்த அந்த் உணர்ச்சியே என்னை இன்னமும் வரை போராட தூண்டி செல்லும் சக்தி.. அது என் உயிர் இருக்கும் வரை என்னோடு கலந்து இருக்கும்.

19 comments:

Raja said...

நிரைய பேருடைய பிளாஷ் பேக் இதாகத் தான் இருக்கும். வீட்டில் இன்று வரை எனக்கு எதாவது பிடிக்கலைனா ரஜினி பேர சொல்லியே சமாளிச்சுருவாங்க. அருமையான பதிவு.

Vaanathin Keezhe... said...

என்னையே ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டதாய் உணர்கிறேன்... அருமையான பதிவு நண்பா!

Anonymous said...

ya ... Excellent post man ... Really you released the rajinikanth fan's thoughts ..

Anonymous said...

ஒரே பதிவில் அனைவரது கருத்துகளையும் (ரஜினி ரசிகர் ) கூறிய விதம் அருமை அருமை....25 வயதுக்கு பிறகும் மனதில் ஒரு கவலை என்றால் , தலைவர் பாட்டு கேட்டால் , எல்லாமே பறந்து விடும்

Unknown said...

Wow ... a very good post. And a very good narration.

Intha postukku oru punch dialogue -"Rajini is the secret of my energy" :)

Anonymous said...

WHEREVER WE GOES
THOUGHTS OF RAJNI WILL BE THERE.
SUCH A FEEL COULD BE ENJOYED BY OUR FANS ONLY.
ANBUARAN

Anonymous said...

Rajini is all about Positive Energy! Fantastic naration Arun.

Arun Kumar said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி,,

ராஜா,வானத்தின் கீழே,மணிகண்டன், சரத், அன்புரன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

GANAPATHY said...

நானும் ரஜினியும் அப்படியே என் வாழ்க்கையின் பிரதிபலிப்பு நான் என்னை தொலைத்தது வேலைக்கரனில் .

உண்மைத்தமிழன் said...

தம்பி..

உள்ளதை உள்ளபடியே உள்ளன்போடு உனது தலைவனைப் பற்றிய எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளாய்..

இந்த ஒரு உணர்வு எங்கிருந்து, எப்படி வந்து நம் மனதில் கால் ஊன்றுகிறது என்பதனை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஏதோ பூர்வஜென்ம பந்தம் என்று காரணம் கண்டுபிடிக்க முடியாமல் சொல்வார்கள். இதையே நானும் சொல்லிக் கொள்கிறேன்..

இது போன்ற நினைவுகள் அவரவர்க்கு அவசியம் தேவைதான்.. உனது தலைவனைப் போல் நீயும் பெருமைப்படத்தக்க வகையில் வாழ்க்கையில் உயர வாழ்த்துகிறேன்..

Anonymous said...

அந்த (எதோ ஒரு ஈன பத்திரிகையில் வாந்தியெடுத்துகொண்டிருக்கும்) மதன் என்கிறவன் ரஜினியைபற்றி சொன்னது புகழ்ச்சி இல்லை அவன் கூறியது இகழ்ச்சி...அதாவது அவன் சொன்னது "சூப்பர் ஸ்டார் என்பது ரஜினி மட்டும்தான்" என்பது அவனைப்பொறுத்தவரை அந்த பட்டம் ரஜினி ஒரு KING OF BOX OFFICE என்பதால் இல்லை என்கிற தொனியில் கூறியிருக்கிறான் என்பதே உண்மை..இதை புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! அவன் ஒரு "மைக்‍‍‍‍ ‍‍மோகன் போட்டியாளனின்(கமலா ஆசன்)" அடிவருடி... அந்த கமலா ஆசன் கூட ஒரு பேட்டியில எனக்கும் ரஜினிக்கும் போட்டியில்லை பொறாமையில்லை ஏன்னா நான் வாலி பால் விளையாடறேன் அவர் புட் பால் விளையாடுகிறார் பிறகு எப்படி எங்களுக்குள் போட்டி என்றான். இதிலுள்ள உள்குத்து எங்களுக்கும் தெரியும் கவட்டகாலனே கமலா ஆசனெ உன்னால 25 வருட தோல்வி/வயித்தெரிச்சல அடக்க முடியவில்லை என்பது எங்களுக்கும் தெரியும்... உன்னால மைக் மோகனிடம் சுமார் பதினைந்து ஆண்டுகள் முக்கி முக்கி போட்டிபோடத்தான் முடிந்தது!!! ரஜினியின் சக்தி! ரஜினியின் Mass Reach! Screen presence!!, Humanity, Integrity, Humbleness, Power, etc பக்கத்தில கூட வரமுடியவில்லை.... அடேய் ராமராஜன் படம் நல்லா ஒடிய காலத்தில கூட உன் ஒலகத்தரம் ஒடவில்லையடா ! ஹா ஹா... பொடா பொயி பொழப்ப பாரு..

R.Gopi said...

Boss

What an excellent post this is from youuuuuuuuuuuuuuu.

Whenever i heard the word RAJNI, i can feel a positive vibe within me.

Do post more positive news like thissssssssss.

Anonymous said...

Really I cried after reading ur blog.
It is a replica of my feelings.

Anonymous said...

I Have Post this article on orkut's Superstar Rajinikanth Forum.

Anonymous said...

Good post!

Naan Sigappu Manithan was released and screened in Vijaya theatre, not in Selvam.

லெனின் பொன்னுசாமி said...

Nalla pathivu arun.

logica madakkiddinga...:) nalla ezuthungka..

rajini oru actor. avaridam athai maddumee rasiththaal pirassanai illai. makkal karpanai athikam senjsukkirangka. athan pirassanaiyee..

வால்பையன் said...

ரஜினியின் பர்சுனால் தெரியாமல் பேசுவது தவறு தான்.
ஆனாலும் அவருடைய பணத்தால் தமிழகத்துக்கு ஏதாவது பலன் உண்டா?
குறைந்த பட்சம் தமிழில் படங்களாவது தயாரிக்கிறாரா?
போன்ற கேள்விகள் சிலரிடம் எழும்புகிறது!

Arun Kumar said...

// வால்பையன் said...
ரஜினியின் பர்சுனால் தெரியாமல் பேசுவது தவறு தான்.
ஆனாலும் அவருடைய பணத்தால் தமிழகத்துக்கு ஏதாவது பலன் உண்டா?
குறைந்த பட்சம் தமிழில் படங்களாவது தயாரிக்கிறாரா?
போன்ற கேள்விகள் சிலரிடம் எழும்புகிறது//

வள்ளி என்பது அவரின் சொந்த படம்.. அந்த படத்தில் பணி புரிந்தது யார்?? மேலும் திரைபட தொழிலாளர் வேலை நிறுத்தால் வேலை இல்லாமல் இருந்த தொழிலாளர்களுக்கு தன்னால் முடிந்தவரை அந்த படம் மூலம் உதவி செய்தார்.

அருணாச்சலம்,படையப்பா...அவரின் சொந்த தயாரிப்பு...பங்குதாரர்கள் யார்??

இந்த கட்டுரையை படிக்கவும்

http://rajinifans.com/detailview.php?title=773

Arun Kumar said...

// பூக்குட்டி said...
Nalla pathivu arun.

logica madakkiddinga...:) nalla ezuthungka..

rajini oru actor. avaridam athai maddumee rasiththaal pirassanai illai. makkal karpanai athikam senjsukkirangka. athan pirassanaiyee..//

மக்களை ஏமாற்றுவது தமிழ் பத்திரிக்கைகளே..ரஜினி பேரை போட்டால் விற்பனை அதிகமாகும் என்று செய்கிறார்கள்

வருகைக்கு நன்றி பூக்குட்டி