Wednesday, September 17, 2008

கண்டதும் கேட்டதும் 17-09-2008



இன்று மதியம் ஒரு வேலையாக எம் ஜி ரோடு செல்ல வேண்டி இருந்தது.  செல்லும் வழியில் ஐசிஐசிஐ ஏடிஎம் ல் வரலாறு காணாத கட்டு கடங்காத கூட்டம்.  சரி இன்னிக்கு 1ம் தேதி இல்லையே ... ஐசிஐசிஐ ஏடிம்ல் 500 ரூபா கேட்டா 1000 ரூபா தருதான்னு குழப்பம். பஸ்ல கர்சீப் வசதி இல்லன்னா செருப்பு கூட போட்டு சீட் பிடிக்கும் நம்மாளுங்க என்ன இவ்வளவு பெரிய வரிசையில் ரொம்ப ஒழுங்க நிக்கறாங்கன்னு பார்த்தேன்.. அப்பால தான் தெரிஞ்சது.. அங்க ரெண்டு போலிஸ் காரஙக நிக்கறாங்க..  

காதில் விழுந்த செய்தி ஐசிஐசிஐ பாங்கு அம்போவாம்.. நம்ம பணம் எல்லாம் கோவிந்தாவாம்.. அடச்சீ கேண்பசங்க நேரத்தை வீணாக்கி விட்டோம் என்று என்னை நானே திட்டி விட்டு வேலையை பார்க்க சென்றேன்.

ஐசிஐசிஐ வங்கி கோவிந்தா ஆகா வாய்பே இல்லை..
திவாலான லேமேன் பிரதர்ஸில் ஐசிஐசிஐ போட்ட பணம் 250 கோடி.. ஐசிஐசிஐயின் ஒரு வருட் லாபம் 1000 கோடியை தாண்டும். ( அந்த லாபம் எல்லாம் சம்ம ப்ராடு வேலையால வருகிறது என்பது வேறு செய்தி :))

அத்தோடு இது அமெரிக்கா இல்லை.. அங்க தான் மஞ்ச கடிதாசி கொடுத்துட்டு எஸ்கேப் ஆகலாம். இங்கன அப்படி எல்லாம் எஸ் ஆக முடியாது. ரிசர்வ் பேங்க் நம் ஒவ்வோரு ஆட்களின் முதலீட்டுக்கு உத்திரவாதம் தருகிறது. என்ன வங்கி திவால் ஆனா போட்ட பணம் வட்டியோடு கிடைக்க சில மாதங்கள் தாமதம் ஆகலாம்... ஏறகனவே திவால் ஆன சில வங்கிகளில் போட்ட பணத்தை இது வரை பத்து பைசா சேதாரம் இல்லாமல் மக்களுக்கு கிடைக்க செய்து இருக்கிறது ரிசர்வ் வங்கி. 
இப்படி ஐசிஐசிஐ திவால்ன்னு புரளி கிளப்பும் ஆட்களுக்கு என்ன ஆசை.. ஒரே நாளில் பல பேர் முதலீடுகளை திரும்ப வாங்குவதால் எப்படியாவது திவால் 
ஆகாதா என்ற ஏக்கம் தான்..

என்னதான் அமெரிக்கா டாப்பு தான் என்றாலும் இங்கே ஒரே நாளில் நடுதெருவுக்கு அடித்து விடப்படும் அவலவங்கள் குறைவு தான்.. :)

அதுக்காக பைனான்ஸ் கம்பனியில் போட்ட பணம் எல்லாம் திரும்ப கிடைக்குமா என்றால் ??? பேஜாரா போச்சுப்பா..

****************************************************************************************

ஏற்கன்வே நடக்கும் என்று பலரால் ஆர்வமுடம் எதிர்பார்க்க பட்டது தான்.
IT SLOW DOWN.............

அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி நமக்கு சற்று தாமதமாக தெரிகிறது..
சென்ற ஆறு மாதங்களாக அமெரிக்காவில் ஏகப்பட்ட காபி ஷாப்புகள் மூட்ப்பட்டன. காரணம் பண புழக்கம் இல்லாத காரணத்தினால் ஈ கொசு ஓட்ட வேண்டிய கட்டாயத்தினால் அப்படியே கடையை மூடி விட்டு போய் விட்டனர்.

சாதாரண காபி ஷாப்புக்கே இவ்வளவு பிரச்சனை என்றால் .
காபி குடிக்க கூட சிக்கன நிலை மக்களுக்கு வர வேண்டிய நிலை என்றால்...

பொருளாதார ஏற்ற தாழ்வுகள் அனைத்து நாட்டுக்கும் சர்வ சாதாரணம்.. ஏற்றமும் இறக்கமும் நடைமுறையில் சாதாரண ஒன்று.. ஆனால் இறக்கத்தில் அடிபடுவது சாதாரண மக்களே...


விப்ரோ முதல் ரோட்டு முக்கு கடை ஐடி கம்பெனி வரை இது வரை வெளியே சொல்லாமல் அவ்வப்போது ஆட்களை வெளியே அனுப்பி கொண்டு இருந்தார்கள். காரணம்.. அமெரிக்க பொருளாதாரம் அடிபடும் போது அதை சார்ந்து இயங்கும் இந்திய நிறுவனங்களும் ..நேரடி mncகளும்  தங்களின் நட்டத்தை குறைக்க இப்படி செய்வது வழக்கம் தான்..

சென்ற வாரம் சத்யம் நிறுவனம் வெளிடையாக ஆட்களை அனுப்புவதை அறிவித்தது.. கூடவே இன்று ஐபிஎம்மும் விப்ரோவும் சேர்ந்து கொண்டன..

ஏற்கனவே ஒரு முறை 2001ல் இந்திய ஐடி நிறுவனம் இதை போல சரிவை கண்ட  அனுபவத்தால் இந்த முறை பெரிய சலசலப்பு இல்லை. என்ன அன்றைக்கு 2000 பேர் வேலை இழந்தால் இன்று 20000 பேர் வேலை இழக்கிறார்கள்.

ஐடி தொழிலால் எவ்வளவு லாபமோ அதை போல நட்டமும் உண்டு. அதை உணராது அவசர கதியில் ஜாவா தெரியும் sap தெரியும் என்று வந்தவர்கள் இன்று ...இஞ்சி தின்ற குரங்கு போல என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள்....





அமெரிக்கா பொருளாதாரம் வீழ்ந்தால் என்ன .. ஐரோப்பா பொருளாதாரம் கை கொடுக்கும் என்று நினைத்தால் அது பெரும் தவறு. இன்று வரை ஐரோப்பா பொருளாதாரத்தில் இந்திய ஐடி  உற்பத்தியின் பங்கு  வெகு குறைவு தான்.

உள்நாட்டில் ஐடி உற்பத்தி??

பெங்களூர் தெருக்களில் தரை கடைக்களில் விற்க்கபடும் திருட்டு டிவிடி அல்லது திருட்டு கண்ணி சாப்ட்வேர்களை வாங்கும் நம்மை போன்ற ஆட்கள் இருக்கும் வரை இங்கு ஏது வளர்ச்சி..

என்ன இதனால் பல நண்மைகள் நடக்க வாய்ப்பு உண்டு

சாப்ட்வேர் துறை இன்னமும் செம்மை படுத்தபடும்.. அதிக சம்பளம் அதிக ஆடம்பரம் போன்ற தேவை இல்லாத ஆடம்பரங்களும் கட்டுபடுத்த படலாம்..

சென்னை பெங்களூர் பூனே போன்ற இடங்களில் விலை வாசி ஏறி போச்சு என்னும் ஒப்பாரிகள் மட்டுபடலாம். கூடவே ஐடி துறையும் மெக்கானிக்கல் துறை போல சாதாரண ஒரு பொறியல் துறை போல பாவிக்கபலாம்.நான் ஐடியில் வேலை பார்க்கிறேன் போன்ற பந்தாக்கள் காணாமல் போகலாம்..

ஐடி ,பயோ போன்ற துறைகள் லாபம் வந்தால் நடத்தலாம் என்பது உலக நியதி..நட்டம் வந்தால் கடையை மூடி சாத்து...


அமெரிக்கா தான் வாழ்க்கை என்று சென்ற ஐடி,பயோ ஆட்கள் பல பேர் இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்பபடுவார்கள். நான் அமெரிக்கா நான் பல் துலக்க கூட கோக் தான் use செய்வேன் என்ற பல வெட்டி சீன் ஆட்க்கள் காலப்போக்கில் உப்பு நீரில் கூட பல் துலக்குவேன் என்று மாறி போவார்கள்.

திரும்ப 

என்ன ஒரே நன்மை .. வேலையை விட்டு அனுப்ப படும் ஆட்க்கள் இரண்டு அல்லது மூன்று மாத சம்பளதோடு அனுப்பபடுகிறார்கள்..

அமெரிக்கா போல அப்படியே e mail படிச்சுட்டு நடையை கட்டுன்னு இங்க இருக்க முடியாது.. இந்திய சட்டங்கள் அப்படி..

வேலையை வுட்டு அனுப்பினா நான் என்ன செய்வேன்?

இரண்டு மாதத்துக்கு மேல சம்பளம் இல்லாம பெங்களூரில் குப்பை கொட்ட முடியாது. அப்படியே தஞ்சாவூர் பக்கம் இருக்கும் குடும்ப நிலத்தில் விவசாயி விவாசயின்னு ஏர் உழுவலாம்.. இல்லன்னா அப்படியே நான் படித்த மின்னனு துறையில் ஏதாச்சு வேலை கிடைக்குமான்னு துண்டு போட்டு வைக்க வேண்டியது தான்..

தத்துவம் நம்பர் 1999

மாற்றம் என்பது இல்லை என்றால் வாழ்க்கையில் எதுவே யாருக்கும் நிலைக்காது :)




2 comments:

Vidhya Chandrasekaran said...

IT slowdownன் ஒரே பெனிபிட் இந்த onsite பார்ட்டிகளின் அலப்பரை குறையும்:)

வால்பையன் said...

மிக அருமையான பதிவு நண்பரே!
கருத்துகளும் பொதுவானது