Sunday, August 31, 2008

கண்டதும் கேட்டதும்



வர வர சன் மியூசிக் சானலை பார்க்கவே எரிச்சல் மூட்டுகிறது.

திவ்யா என்ற ஒரு நிகழ்ச்சி நடத்துனர் அநியாயத்துக்கு வால்த்துக்கள் என்று ழ விற்க்கு ல விற்க்கு வித்யாசம் இல்லாமல் பேசுவது படு முட்டாள்தனம்


'ழ ' சொல்ல வரவில்லை என்றால் அதற்கான முயர்ச்சியாவது எடுக்கலாம் .. அதை கூட சொல்லி தர தெரியாத நிர்வாகம்..

சென்ற வாரம் திருச்சிக்கு சென்று இருந்த போது சேனல் மாற்றி கொண்டு இருக்கும் நேரத்தில் “ கலைஞர் டிவியின் இசையருவி” சேனல் கண்ணில் பட்டது.. சன் மியூசிக்கின் க்ளோன் தான் ..அங்கிருந்து வந்த அதே ஆட்கள். இருந்தாலும் பல நல்ல பாடல்களை ஒளிப்பரப்பினார்கள்...

சன் மியூசிக்கை காலையில் நேரத்தில் தினமும் அதே பாடல்கள் தான். இரண்டு பாடல்களுக்கு இடையில் கணக்கில்லாத ஆடி ஆவணி தள்ளுபடி வாங்கிக்கோ போய்கோ என்ற சுரத்தில்லாத விளம்பரங்கள்..

சன் மியுசிக் இதே மாதிரி வண்டி ஓட்டி கொண்டு இருந்தால் பின்னால் வந்த வண்டிகள் எல்லாம் ஓவர் டேக் செய்து விட்டு போய்கொண்டே இருக்கும்..

நான் வைத்து இருக்கும் டாடா ஸ்கை யில் இசையருவி வருவதில்லை...விரைவில் வருகிறதாம்...:)

******************
மண்ணை இருள் சூழ்ந்த பின்்
இயற்கையின் அழகு மறைந்து விடுவதில்லை
சந்திர ஒளியில் தெரியாத அழகை
கண்கள் காண மறுப்பது
இயற்கையின் தவறா?
கண்களின் தவறா?



இயற்க்கை தான் எப்போதுமே பலசாலி என்று பல முறை மனிதகுலத்துக்கு சொல்லி வருகிறது.. மனிதான் கேட்க்க மறுத்து வருகிறான்..

சமீபத்திய பீகார் வெள்ளத்துக்கு காரணம் கோசி என்ற சூராவளி ஆறு தான். நேபாளித்தில் உருவாகி பீகாரில் கங்கையோடு சேரும் முன்னே ஓவ்வோரு வருடமும் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறது.



கடந்த 100 வருடங்களில் தன் பாதையை பல முறை மாற்றி கொள்கிறது.. இதுவரை மேற்க்கிலிருந்து கிழக்காக 250 கிலோ மீட்டர் தூரம் தன் பாதையை மாற்றி கொண்டு வருகிறது... பாதை மாற்றும் போது கூடவே செல்லும் இடங்களை எல்லாம் சூன்யமாக மாற்றி செல்கிறது.

திடீரென்று காவிரி மேட்டூர் வழியாக செல்லாமல் அப்படியே பாதை மாற்றி ஈரோடு - > கடலூர் என்று சென்றால் என்ன ஆகும்???

அதே கதை தான் அங்கும் நடக்கிறது..

நேபாளம் மிக சுலபமாக தண்ணீரை திறண்து விட்டு விடுகிறது.. இந்திய பகுதியில் கட்டுகடங்கா வேகத்தோடு பாயும் இந்த ஆறு கங்கையை சேறும் வரை செய்யும் நாசங்கள் கணக்கில் இல்லை..

ஏற்கனவே சோகமான பீகார் மாநிலம் இதனால் சர்வமும் நாசமாகி கிடக்கிறது..

இதை தடுக்க முடியாதா??

1955 ஆண்டில் இருந்து முயர்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால் கட்டபட்ட தடுப்பணைகள் அனைத்தும் இதன் வேகத்துக்கு எதிரே நிற்க்க முடியவில்லை. தடுப்பணை கட்டிய திசையில் செல்லாமல் தன் இழடத்துக்கு பாதை மாறி செல்கிறது..

*****************


பெங்களூரில் மழைகள் புதிது இல்லை.. மழை சென்ற வருடங்களை விட தற்போது குறைவு தான். ஆனால் ஒவ்வோரு மழைக்கும் சாலைகள் ஏரிகளாக ஆகி விடுகின்றன.

சென்ற வாரம் whitefield பகுதியில் புதிதாக கட்டபட்ட குடியிருப்பு வெள்ளத்தில் மாட்டியது.. காரணம் அங்கு இருந்த ஏரியை அப்படியே பட்டா போட்டு கான்க்ரீட் காடுகளாக ஆக்கி விட்டனர்..

இயற்க்கை பாதை மாறுவது ஒரு புறம் தெரிந்தே இயற்க்கை பாதையை அடைப்பது மறுபுறம்.. என்ன சொல்வது..

2 comments:

வால்பையன் said...

//திடீரென்று காவிரி மேட்டூர் வழியாக செல்லாமல் அப்படியே பாதை மாற்றி ஈரோடு - > கடலூர் என்று சென்றால் என்ன ஆகும்???//

ஏன் இந்த கொலைவெறி,
நான் இங்கே குப்பை கொட்டுறது உங்களுக்கு பிடிக்கலையா.

தென்னவன் said...

அருண் நல்ல கருத்துகளையும் பதிவுகளையும் பதிவு ச்ய்கிறார். சிலர் தாங்களும் ப்ளாக் ஆரம்பிக்கிறேன் என்று ஆரம்பித்துவிட்டு ஆபாச பதிவுகளை போடுகிறார்கள். :)

Well done Keep it up