
இது அடிக்கடி ஏன் தினமும் நிகழ்வது..
ஏண்டா மச்சான் நிறைய இங்கலீஷ் படம் பார்க்கறே கூடவே இந்தி தமிழ்ன்னு கலந்து எல்லா படமும் பாக்குறே..இதுல நீ பார்க்காத நல்ல சினிமாவும் நல்ல நடிப்பையும் எதுவும் இல்லாத ரஜினி படத்தை எப்படிடா ரசிச்சு ரசிச்சு பல முறை பார்க்குறே??
இதை போல பேசுபவர்களிடம் பேசி என்ன பயனும் இல்லை..
கூடியவரை சிறிய சிரிப்பு அல்லது மவுனம்..
ரஜினி கர்நாடாவுல தான் தன்னோட சொத்து எல்லாத்தையும் வாங்கி போட்டு இருக்காறாம்.. அவரு ஒரு கன்னட வெறியன்..
நீ எத்தனை வருசமா பெங்களூர்ல இருக்கே??
3 வருசமா?
உனக்கு கன்னடா தெரியுமா?
கன்னடா கொத்தில்லா
சரி நீ சம்பாதிக்கிறா காசை எல்லாம் எங்க அனுப்புற??
ஏன்?? எங்க ஊருக்கு தான்..
உங்க ஊருன்னா ..பெங்களூரா
சே சே திருநெல்வேலி..
சரி ரஜினி கர்நாடாகாவுல வாங்கின சொத்து விவரம் சொல்லு?
அது வந்து..
அப்புறம் பெரிசா பேசின??
முதல்ல நீ உருப்படியா இருப்பா.. பெங்களூர் வந்து இத்தனை வருசம் ஆகியும் கன்னடா தெரியாது.. சம்பாதிக்கும் பணம் எல்லாம் உன் வீட்டுக்கு அனுப்பி அங்க சொத்து வாங்கி போடலாம்.. ஆனா ரஜினி கர்நாடகாவில் சொத்து வாங்கினாரா இல்லை வாங்கலையான்னு தெரியாது.. ஆனா சும்மா தமிழ் விரோதி கன்னடா விரோதின்னு வாய்க்கு வந்தபடி பேசறது....
என் நெருக்கிய நண்பன் என்னிடம் பல முறை கேட்டு இருக்கிறான்.
அருண்.. எப்போதுமே யாரிடம் சண்டைக்கு போகாத நீ ஏன் ரஜினியை பத்தி யாராச்சும் ஏதாச்சும் சொன்னால் சண்டைக்கு போறே??
நம்மில் பலரின் முதல் காதல் அபத்தமாக தான் இருக்கும். அதற்க்காக என்றாவது நம் முதல் காதலை யாராவது தவறாக சொன்னால் தாங்க முடியுமா??
ரஜினி...
எனக்கே நினைவு தெரியாத வயது.. கும்பகோணம் செல்வம் தியேட்டருக்கு யாரோ என்னை அழைத்து சென்றார்கள்.. படம் நான் சிகப்பு மனிதன்.. ரஜினியை தலை கீழாக கட்டி அடிப்பார்கள். அப்போது அதை அந்த காட்சியை பார்த்து ரஜினியை அடிப்பதை பார்த்து அழ ஆரம்பித்த என்னை சமாளிகக் முடியாமல் திணறினார்களாம்..
ரஜினி அடிக்க ஆரம்பத்த பின் தான் நான் சமாதனம் ஆனேனாம் :)
எனக்கு அப்போது வயது 4 அல்லது 5 இருக்கலாம்..
வீட்டில் அம்மா வைத்து இருந்த தீக்குட்சியை களவாண்டு ஊர் முழுக்க கூடும் நடு திண்ணையில் உட்கார்ந்து ரஜினி ஸ்டைலில் சிகரட் ஊதுவது போல பாவனை காட்ட.. அன்றைக்கு தான் என் அம்மா என்னை முதலில் அடித்த ஞாபகம்..
அப்போது எங்கள் ஊரில் எந்த படமும் ரிலீஸ் ஆகாது. ஆனால் படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் வீடியோ காசேட் வந்து விடும். யாராவது வீட்டில் வீடியோ காசேட் எடுத்து படம் போடுகிறார்கள் என்றால் ஊரே அவர்கள் வீட்டில் தான்.
மாவீரன் படம்.. முதல் நாள் ..வீடியோ காசட்டில் பார்த்தது...பின் மிஸ்டர் பாரத்தில் ரஜினி கள்ளு கடையில் சும்மா பம்பரமாக அடித்து நொறுக்குவது.. இதுவும் என்னை விட்டு நீங்கவில்லை..
வீடியோ காசட் வாடைக்கு வாங்கு வீடு பணக்கார வீடு.. தம்பிக்கு எந்த ஊரு காசட் போட்ட போது அன்று நான் தூக்கி விட்டேன்.. படத்தை பார்க்கவில்லை ..அடுத்த நாள் காலை நான் அழுத அழுகைக்கு பயந்து அந்த வீட்டம்மா எனக்காக மற்றும் ஒரு முறை எனக்கே என்க்காக மற்றும் ஒரு முறை அந்த படத்தை விசிஆரில் காட்டினார்கள்... அப்போது எனக்கு உலகை வென்ற சந்தோசம்.. பள்ளி நண்பர்களுக்கு கதை சொல்வது பெரிய ஒரு சாதனை..
எங்கள் தெருவில் முக்கனி நறபணி மன்றம் என்று ஒரு சிறு படிப்பகம் இருந்தது..
நானும் அங்கு படிகக் போவேன்.. தினதந்தியில் வேலைகாரன் வெற்றிகரமான 60வது நாள் என்ற அந்த விளம்பரத்தை படிக்க மட்டும்..
அப்போது எனக்கு பள்ளிபாடமான திருக்குறள் எல்லாம் வராது.. ஆனால் ரஜினியில் நூறாவது படம் தொடங்கி வரிசை எல்லாம் ரொம்ப இயல்பாக வரும்..
அன்று தொடங்கிய அந்த இனம் புரியாத நட்புதான் இன்று வரை என்னை இழுத்து செல்கிறது.. என் வீட்டிலே அடிக்கடி சண்டை வரும்.. சிலோன் ரேடியோவில் ரஜின் பட பாட்டு வரும் போது யாராவது ரேடியாவை திருகினால் உடனே என் ஆயுதம் அழுகை தான்.. வீட்டுக்கு கடைசி பிள்ளை என்பதால் ரஜினி பட பாட்டு வரும் போது நான் இருக்கும் போது அலைவரிசையை மாற்ற மாட்டார்கள்...
அப்புறம் நான் ஐந்தாவதோ ஆறாவதோ அல்லது ஏழாவதோ படிக்கும் போது வந்த படம் அண்ணாமலை..
மன்னார்குடி சாமி தியேட்டர்.. எங்க ஊரில் புதிதாக திறந்த தியேட்டர்..முதல் படம் அண்ணாமலை.. கரகாட்டம் ஒயில்லாட்டம் பொய்கால் குதிரை எல்லாம் போட்டு அண்ணாமலை படம் போட்டார்கள்..
எங்கள் ஊரில் அண்ணாமலை 55 நாள் ஓடியது.. எங்கள் ஊரில் அது பெரிய சாதனை.. நானே அந்த தியேட்டரில் நண்பர்களோடு ஒரு முறை குடும்பத்தோடு ஒரு முறை பார்த்தேன்,
பின் எஜமான்.. எங்கள் ஊரில் முதல் ரிலிஸ் படம்.. முதல் நாள் முதல் காட்சி.. சாமி தியேட்டர் உரிமையாளர் மகன் என் வகுப்பு தோழன்.. அவன் உபயத்தால்..
திருச்சிக்கு வந்த பின் ரஜினியின் படங்களை தியேட்டரில் பார்த்தேன்...என்பதை விட தரிசித்தேன் என்று சொல்வதே சரியாக இருக்கும்..
பாட்சா முதல் பாபா வரை,,
பின் மும்பையில் இருந்த போது சந்தரமுகி..ரஜினி அவ்வளவுதான் என்று பல பேர் சொல்லி வந்த காலம் அது..
மாட்டுங்க அரோராவில் ரஜினி தோன்றும் முதல் காட்சியில் எழுந்த கை தட்டல்களும் விசில்களும் தலைவா என்ற குரல்களும் வந்த போது தோன்றியது “நீ விழ்வது திரும்ப முழு சக்தியோடு எழுந்த நிற்கவே”
அப்பொது தொடங்கிய முதல் நாள் முதல் காட்சி இன்று வரை குசேலன் வரை தொடர்கிறது..
சிவாஜி படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்க்கே நினைவில்லை.. பெங்களூர் நடராஜ் மற்றும் பிவிஆரில் 100 நாள் வரை பின் பிவிஆரில் மட்டும் 175 நாள் வரை.. அந்த சாதனையை தசாவாரத்தினால் கூட முறியடிக்க முடியவில்லை.. பெங்களூரில் தசாவதாரம் ஓடியது 25 நாள் மட்டுமே..
அப்போது சனிகிழமைகளில் நண்பர்களோடு சேர்ந்து கெட்ட ஆட்டம் போட்டு
சிவாஜி பார்த்தது எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்..
என்னவோ தெரியவில்லை.. ரஜினி என் வாழ்வோடு பிண்ணி பிணைந்த ஒரு உணர்வு..
சென்ற வாரம் கே டிவியில் படையப்பா போட்ட போது கூட என்னை மறந்து ரஜினி வரும் முதல் காட்சியில் விசில் அடித்தேன்..
ரஜினி படங்களை பார்க்கும் போது என்னையும் அறியாமல் என் குழந்தை பருவ வாழ்க்கை நினைவுக்கு வருகிறது .. ரஜினி என்று சொல்லும் போதே எனக்கு தெரியாமல் என்னுள் பட்டாம்பூச்சி பறக்கிறது..
யோசித்து பார்த்தால் அனைவரும் குழந்தையாகவே இருக்க விரும்புகிறோம்.. அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கும்...குழைந்த பருவ ஆசைகள்..
எனக்கு அது ரஜினியாக இருக்கிறது...
ரஜினியை நேரில் கண்ட போது..
அப்போ நான் சென்னைக்கு புதுசு.. முதல் வேலை..
தமிழ்நாடு காவல்துறைக்கு மெட்டல் டிடக்டர்கள் கொடுக்கும் வேலை :)
அந்நாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் நிறுவபடு இருந்த மெட்டல் டிடக்கர்களை பராமரிப்பு சோதனை செய்ய சென்ற போது.. ரஜினி வீட்டின் வாசலில் என்னையும் அறியாமல் நின்றேன்.. எத்தனை நேரம் நின்றேன் என்று எனக்கே தெரியாது.. ரஜினியும் வந்தார்..
ஏதோ என்னும் ஒரு இணம் புரியா உணர்ச்சி... அப்படியே பார்த்து கொண்டே இருக்கிறேன்.. ஏதும் பேச தோன்றவில்லை.. ..அவரும் மின்னல் போல வந்து காரில் சென்று விட்டார்.. கடவுளை நேரில் பார்த்த உணர்ச்சி..
அடுத்த ஒருவாரம் மிதப்பாகவே திரிந்து கொண்டு இருந்தேன்.
அன்று ஏதாச்சும் பேசி இருக்கலாம் என்று இன்று வரை நினைக்கிறேன்....பெங்களூரில் அவர் வ்ழக்கமாக தங்கும் சாம்ராஜ்பேட்டை இல்லமும் இந்திரா நகர் ப்ளாட்டும் நன்றாக பரிச்சயம் தான்.. ஆனால் நேரில் என்று இன்று வரை பார்க்க தோன்றவில்லை.
கெட்டதோ நல்லதோ ரஜினி என்ற சக்தி இன்னமும் என்னுள் இருப்பதால் தான்.. சாதாரண மிடில் க்ளாஸ் போர்வையோடு வந்த என்னை அவர் உழைப்பின் கீழ வந்த அந்த் உணர்ச்சியே என்னை இன்னமும் வரை போராட தூண்டி செல்லும் சக்தி.. அது என் உயிர் இருக்கும் வரை என்னோடு கலந்து இருக்கும்.